June 15, 2007

பிரதீபா பாட்டில்: தலைமகளாகும் திருமகள்!



பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!



என ஆனந்த கும்மியடித்த மகாகவி பாரதியின் கனவு 60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் நனவாகிறது. இந்தியத் தலைமகளாய் - குடியரசின் தலைவராய் உயரப் போகிறார் பிரதீபா பாட்டில்.

115 கோடி மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் செம்மையான அரசியல் கடமையாற்றும் மகத்தான பொறுப்புக்கு திருமதி பிரதீபா பாட்டிலை தேர்வு செய்ததற்கு எதைச் சொல்லி பாராட்டினாலும் தகும்!

அவரது அரசியல் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செம்மையான அரசியல் கடமையை கடந்த 50 ஆண்டுகாலமாக ஆற்றி வருகிறார்.

சட்டமன்ற உறுப்பினர். மாநில அமைச்சர். லோக் சபா உறுப்பினர். ராஜ்ய சபா உறுப்பினர். மாநில கவர்னர் என பல பொறுப்புகளை செம்மையாக ஆற்றியவர். கரைபடாத கரத்திற்கு சொந்தக்காரர். இதைவிட முக்கியமானது தமிழகத்தில் ஜயலலிதா கொண்டுவந்த மதமாற்ற தடைச் சட்டத்தைப்போல ராஜஸ்தானில் சங்பரிவாரம் கொண்டுவந்த மதமாற்ற தடைச் சட்டத்தை மிகத் துணிச்சலாக திருப்பி அனுப்பிய பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர். சட்டப்படிப்பு படித்தவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார் பிரதீபா பாட்டில்.

இந்திய அரசியல் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் சுழ்நிலையில் பக்குவமான - நீண்ட அரசியல் அனுபவம் பெற்ற - மதச்சார்பின்மை கோட்பாட்டை உறுதியாக உயர்த்திப் பிடிக்கும் பாரதி கனவு கண்ட ஒரு பெண் இந்திய குடியரசின் தலைமகளாய் பொறுப்பு ஏற்பதை நெஞ்சார வரவேற்போம்! வாழ்த்துவோம்!!

1 comment:

Anonymous said...

ஏனுங்க அந்தம்மா பார்பனராமே பரவாயில்லையா?.....