இந்திய அரசு குறித்து நம்முடைய அரசியல் சட்டத்தின் முன்னுரையில் இறையாண்மைவாய்ந்த சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்று பொறித்துள்ளது. இத்தகைய மகத்தான கொள்கை உறுதி கொண்ட நாட்டின் அரசியல் கடமையாற்றும் உயர்ந்த பொறுப்புதான் ஜனாதிபதி என்ற மகுடம்.இத்தகைய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் அரசியலில் தேர்ச்சி மதச்சார்பற்ற கொள்கையில் உறுதி தன்னலமற்ற பொதுச் சேவை அரசியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். நெருக்கடியான காலகட்டங்களில் பாரபட்சமின்றி நிதானமாக கடமையாற்றுபவராக இருக்க வேண்டும்.
இத்தகைய உயர்ந்த பொறுப்பு வகித்தவர்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை தவிர வேறு யாரும் ஒரு முறைக்கு மேல் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர். வெங்கட்ராமன் பதவி வகித்த காலங்களில் ஜனாதிபதி பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்ற கடும் விமர்சனத்திற்கு ஆளானது. மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக இந்தப் பதவியில் இருப்பவர் செயல்பட ஆரம்பித்தால் ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு செயல்டும் பொம்மலாட்ட பொம்மையாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. எனவே இந்தப் பதவியில் இருப்பவர் வில் பவுர் (ஆண்மையுள்ளவராக) செயல்பட வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமின் ஐந்தாண்டு செயல்பாட்டை விமர்சன ரீதியாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அவர் உபயோகப்படுத்தும் அரசியல் கமெண்ட்டுகளை நிச்சயமாக விமர்சிக்க வேண்டும். அதில் ஒன்று சமீபத்தில் அவர் இரு கட்சி ஆட்சிமுறை வேண்டும் என்று வலியுறுத்தினார். இது ஏற்கனவே நடப்பில் உள்ள ஆட்சி முறையை கடுமையாக விமர்சிப்பதாகும். இப்படி பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்ட முடியும். இன்றைக்கு மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ள ஜயலலிதா தலைமையிலான அணி ஜனாதிபதி தேர்தலில் யு.பி.ஏ.இடதுசாரி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திருமதி பிரதீபாவின் தேர்வு குறித்து அது ஒரு ஜோக் என்று ஜயலலிதா விமர்சித்தார். இந்தியாவின் ஜனாதிபதியாக விப்ரோ முதலாளி நாராயணமூர்த்யை தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னவர்தான் கலாம் உண்மையில் யார் ஜோக்கர் என்ற கேள்வி இங்கே எழுகிறது. சரி இந்த விசயத்திற்குள் நாம் தற்போது செல்ல வேண்டாம் என நினைக்கிறேன்.
பா.ஜ.க. தன்னு
டைய எதிர்கால அரசியல் குள்ளநரித்தனத்தை பைரோன் சிங் செகாவாத் மூலம் நிறைவேற்றிக் கொள்ள கண்ட கனவில் மண் விழுந்ததால் தற்போது சுயேச்சை வேட்பாளராக பைரோன் சிங் செகாவாத்தை களம் இறக்கியுள்ளது. எப்படியாவது புறக்கடை வழியாக தங்களது ஏஜண்டை அப்பதவியில் அமர்த்த துடிக்கிறது பா.ஜ.க. அரசியலை அரசயில் ரீதியாக எதிர்கொள்ளும் திராணியற்ற வேலையில்தான் இறங்கியுள்ளது பா.ஜ.க.. பா.ஜ.க. வேட்பாளர் என்றால் என்.டி.ஏ.க்கு உள்ளோயே ஆதரவு இல்லாத நிலை வருமோ என்ற பயமே இதற்கு காரணம்.
திருமதி பிரதீபா பாட்டிலை தேர்வு செய்தது குறித்து முன்கூட்டியே ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்று புலம்பும் வாஜ்பாய். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அப்துல் கலாமை ஒருமித்த கருத்தின் அடிப்படையிலா தேர்ந்தெடுத்தார்? இடதுசாரிகள் கே.ஆர். நாராயணனை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கலாம் என்று முன்மொழிந்த போது அதனை சங்பரிவார அரசியல் கண்கொண்டு நிராகரித்தவர்கள் தானே இவர்கள்.
மேலும் தற்போது புதிய யூ.என்.பி.ஏ. தனது வேட்பாளர் இவர்தான் என்று கூறுவதற்கு பதிலாக அப்பீல் விடுவது இவர்களிடையே அரசியல் ரீதியாக முடிவெடுக்க முடியாத அரசியல் தோல்வியைத்தானே வெளிப்படுத்துகிறது. ஜயலலிதா ஜனாதிபதி பதவியை அரசியலாக்க கூடாது என்று அரசியல் ஆக்க கூடாது என்று அரசியல் பேசுவது வேடிக்கையானது.
யூ.பி.ஏ. - இடது வேட்பாளரான திருமதி பிரதீபா பாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தன்னை பொது வாழ்வில் இணைத்துக் கொண்டு சிறந்த அரசியல் சேவை புரிந்திருக்கிறார். மூன்று முறை எம்.எல்.ஏ. மாநில அமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் மக்களவை . மாநிலங்களவை எம்.பி. மாநிலங்களவை துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இதுவரை தான் நின்ற எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவாதவர் இது மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் முதுகெலும்போடு சங்பரிவாரம் ராஜஸ்தானில் கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை கையெழுத்துப் போடாமல் திருப்பி அனுப்பியவர். இந்தப் பின்னணியில் பா.ஜ.க. எப்படி இவருக்கு ஆதரவு தரும். இதற்குள் அரசியல் இல்லை என்று சொன்னால் யாராவது நம்ப முடியுமா?
மென்மையான இந்துத்துவ கொள்கையை கடைப்பிடிக்கும் ஜயலலிதாதானே இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னோடி. இவர் கூறுகிறார் திருமதி பிரதீபா பாட்டீலின் தேர்வு குறித்த ஜோக் என்று! பல்வேறு ஊழல் மற்றும் ஆக்கிரமிப்பு வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜயலலிதா மூன்றாவது அணிக்கு தலைமை தாங்குவதுதான் வேடிக்கையானது.
இறுதியாக சுதந்திர இந்தியாவில் சிறந்த அரசியல் பாரம்பரியம் கொண்டவர் என்ற பெருமையோடு ஒரு பெண் என்ற அந்தஸ்தோடு ஜனாதிபதி என்ற மகுடத்தை அலங்கரிக்கும் பிரதீபா எதிர்கால இந்தியாவின் வழிகாட்டியாக அரசியல் நம்பிக்கை நட்சித்திரமாக திகழ்வார் சரித்திரம் அவர் பக்கம் நிற்கும். மக்கள் அவர் பக்கம் நிற்பர் இது காலத்தின் கட்டாயம்!
ஜயலலிதாவின் அரசியல் வலையில் சிக்காமல் இருப்பாரா அப்துல் கலாம்!