April 26, 2006

செந்தில் - கவுண்டமணி சந்திப்பு

செந்தில் : அண்ணே.. அண்ணே வணக்குமண...
கவுண்மணி : ஏண்டா எல்மட் தலையா, பண்ணி மாரி கருத்துப் போயிருக்கியே ஏன்டா?

செந்தில் : அத ஏன்னே கேக்குறீங்க... அம்மாவ முதலமைச்சராக்க பிரச்சாரம் பண்ணப் போயிருந்தேன்ன...
கவுண்டமணி : டேய்... பண்ணி வாயா... நீ என்ன எப்படா அரசியல்வாதியான...

செந்தில் : அண்ணே... எங்க தாத்தாவுக்கு தாத்ததா சுதந்திரப்போராட்டம் நடக்குறப்பே ஓரமா நின்னு பாத்தார்னே..., எங்க பரம்பரையே அரசியல் பரம்பரைன்னே...
கவுண்டமணி : டேய் கருவாட்டு தலையா உங்கப்பன் பன்னி மேச்சிக்கிட்டிருந்ததா சொன்னே... இப்போ என்னடான்னா அரசியல் பரம்பரை, அது, இதுன்னு... உதார் விடுற...

செந்தில் : உங்களுக்கு எப்பவுமே பொறாமன்னே...
கவுண்டமணி : சரிடா... மேடையில நீ போய் என்னடா பேசினா....

செந்தில் : அம்மா வேதனையெல்லாம் (அய்யய்யோ...) சாதனையெல்லாம் சொன்னேன்னே...
கவுண்டமணி : என்னடா சாதனை... உங்க அக்கா வெள்ள நிவாரணம் வாங்கப்போய் மிதிப்பட்டு செத்தாங்களே... அதச் சொல்றீயா...

செந்தில் : அண்ணே... அம்மா அதுக்கும் சேத்துத்தான்னே நிவாரணம் தந்தாங்க...
கவுண்டமணி : டேய் எருமாட்டுத் தலையா... உங்க ஆயா... எலிக்கறி சாப்பிட்டு நாட்டுக்குனு செத்துப்போச்ச அத சொன்னீயாடா....

செந்தில் : அத மறப்பனான்னே.... (தலையை சொறிந்து கொண்டே, பேய் முழி முழித்துக் கொண்டு) எலிக்கறி சுருசியா இருக்குன்னு சாப்பிட்டாங்கன்னு.......
கவுண்டமணி : ஏண்டா நாயே.... பண்ணி... எரும மாடு... ஒவ்வொரு நாளா ஒரு பொய்யச் சொல்ற... டேய். உன்னையெல்லாம் நடுத்தெருவுல வெச்சு.... நாக்கப் புடுங்கனும்டா....

செந்தில் : அம்மா... போலீசு.... காப்பாத்துங்க.... காப்பாத்துங்க... என்று டவுசரோடு ஓடுகிறார்.... நாயெல்லாம் அவர துரத்திக்கினே போகுது....

9 comments:

Anonymous said...

சந்திப்பு...

கற்பனை என்றாலும் அபாரம்!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அய்யோ... என்னுடைய ஃபயர் பாக்ஸ்-ல் படிக்க வரலியே தலிவா?
ஒரு வழி சொல்லுங்க...
:(

ஜயராமன் said...

கவுண்டமனியும் பின்னால் துரத்தி ஓடுகிறார்...

"எலே ரோடு ரோலருக்கு பொறந்தவனே. நில்லுடா. என்னயும் இட்டுகினு போயி அம்மாகிட்ட சேத்துவுடுடா. இங்க உடுர உதார மேடையில உட்டு நாலு காசு பாக்குறேன். இப்பதான் மார்கட் போன, டிவில கூட தூக்கி எறிஞ்சவங்களுக்கு கடசீ வழி கட்சி கூட்டம்தானப்பா..."

சந்திப்பு said...

பாலபாரதி முதல்ல... நம்ம Internet Explorer க்கு மாறிடுங்க... அதுதான் சரிப்பட்டு வருது!

சந்திப்பு said...


"எலே ரோடு ரோலருக்கு பொறந்தவனே. நில்லுடா. என்னயும் இட்டுகினு போயி அம்மாகிட்ட சேத்துவுடுடா. இங்க உடுர உதார மேடையில உட்டு நாலு காசு பாக்குறேன். இப்பதான் மார்கட் போன, டிவில கூட தூக்கி எறிஞ்சவங்களுக்கு கடசீ வழி கட்சி கூட்டம்தானப்பா..."

ஹி... ஹி... ஹி... ஹி... ஹி... ஹி...ஹி... ஹி... ஹி...ஹி... ஹி... ஹி...

அப்படிப்போடுங்க...

அம்மாவே சரணம் கச்சாமி!
அம்மாவே சரணம் கச்சாமி!
அம்மாவே சரணம் கச்சாமி!

Anonymous said...

karunanidiku support seyya eppadi ellam eluthuranga paaruda

chandar said...

அம்மாவுக்கு எதிர்ப்பா எழுதினா கருணாநிதிக்கு சப்போர்ட்டா? அம்மாவுக்கு ஆதரவா எழுதினாத்தான் கருணாநிதிக்கு எதிர்ப்பா? இருக்கறதை இருக்குறபடி எழுத படிக்க கத்துகங்கப்பா!

raviraj said...

¬ò¾¡ ¬ÃõÀ¢îð¼¡í¸Â¡ ¬ÃõÀ¢îð¼¡í¸ Â측 ¦Å측 ¦ÂôÀ¡ þÅí¸Ç þôÀ¢Ê§Â Ţ𼡠¿õÁÇ´Õ
ÅÆ¢Àñ½¢ÀÎÅ¡í¸.§ÀºÁ ±Ðò¾¡ôÀÄ Â¡÷ Åó¾Öõ «Åí¸ ¸øÄÅØóÐçÅñÊÂоý.þôÀ§¾÷¾ø ¨¼ÁÃ.

சந்திப்பு said...


இருக்கறதை இருக்குறபடி எழுத படிக்க கத்துகங்கப்பா!

Fantastic Comment.