April 17, 2006

அம்மாவின் பொற்கால ஆட்சி!

  1. மின்சார டெபாசிட் கட்டண உயர்வு பல மடங்கு ரூ. 400லிருந்து ரூ. 1000 உயர்த்தியது.

  2. சுயநிதி பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை - ஒவ்வொரு ஆண்டும். தமிழக அரசின் மாணவர் அலைகழிப்பு கொள்கை.

  3. அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு - கைது, கருணாநிதி, நல்லகண்ணு, என். வரதராஜன், வைகோ, நெடுமாறன்...

  4. காவிரி பிரச்சினையில் ஜனநாயக அணுகுமுறை இல்லாத போக்கு, அனைத்து கட்சி கூட்டம் எந்தக் காலத்திலும் கூட்டப்படவில்லை.

  5. உள்ளாட்சி அமைப்பு நிதி நிலை - உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின் கட்டண உயர்வு, உள்ளாட்சி ஊழியர் பற்றாக்குறை. உள்ளாட்சிக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை.

  6. சென்னை மாநகராட்சி - நகராட்சி ஜனநாயகம் சீர்குலைப்பு.

  7. பொடா சட்டம் - டெஸ்மா சட்டம் வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் உட்பட பலர் கைது! அரசு ஊழியர்கள் மீது டெஸ்மாவை பாய்ச்சியது.

  8. 2001 முதல் போக்குவரத்து, மின்வாரியம், பொதுவிநியோகம் போன்ற துறைகளில் போன° பிரச்சினை 2004ஆம் ஆண்டு வரை தீர்க்கப்படவில்லை. வெறும் 8.33 சதவீதம் மட்டுமே போன° என்று தன்னிச்சையாக அறிவிப்பு. வழக்கமாக 20 சதவீதம் இருக்கும். போராடிய 20,000 ஊழியர்கள் சிறையில் அடைப்பு.

  9. கட்டண உயர்வுகள்


    பஸ் கட்டணம்


    பால் விலை உயர்வு


    மின்சாரக் கட்டண உயர்வு


    ரேசன் அரிசி 3.50இல் இருந்து ரூ. 9.00 என உயர்த்தியது. பின்னர் 6.50 ஆக ஆக்கியது.


    சர்க்கரை விலை உயர்வு.


    சிமெண்ட் விலை உயர்வு.


    யூரியா விலை உயர்வு


    கல்வி கட்டணம் உயர்வு.


    அரசு மருத்துவமனை நுழைவுக் கட்டணம் ரூ. 5 வசூல்


    க்குவரத்து கட்டணம் உயர்வு


    மாணவர்களுக்கான இலவச பஸ்° பாஸ் ரத்து.


    அரசு ஊழியர் - ஆசிரியர்கள் 30 சதவீதம் குறைப்பு.

  10. மொத்தத்தில் 10,000 கோடி அளவுக்கு கட்டணங்களை உயர்த்தி கொள்ளையடித்தது.

  11. கள்ளச் சாராய சாவுகள்: 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆட்சியில் இறந்த கொடுமை: பின்னர் அரசே டா°மாக்கை ஏற்று நடத்தியது. அந்த ஊழியர்கள் கொத்தடிமைகள் போல் வேலை வாங்கப்படுகின்றனர். வேலையில் சேர்ந்த வாலிபர்களிடமே டெபாசிட் கட்டணம் என வசூல் செய்யப்பட்டது. ஆளுங்கட்சிக்காரர்கள் இதில் பெரும் கொள்ளையடித்தனர். நிரந்தரம் இல்லை. சாராயம் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். இதில் சசிகலாவிற்கு பங்குண்டு.

  12. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தடியடி. 24 மாணவர்கள் மண்டை உடைப்பு. 35 மாணவர்கள் மீது 10 பிரிவுகளில் வழக்குப் போட்டது. ஹா°டலில் நுழைந்து - போலீஸ்° அத்துமீறல்.


    டி.பி.ஐ. முன்னால் மாணவர்களின் கல்விப் பிரச்சினை குறித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீ° காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.

  13. ரூ. 5000 வருமானம் உள்ளவர்களுக்கு ரேஷன் வழங்க மறுப்பு. கலர் - கலர் அட்டைகள் வெளியிடப்பட்டது. கௌரவ ரேஷன் அட்டையை அறிமுகப்படுத்தி கேவலப்படுத்தியது.

  14. விவசாயிகள் மீது தடியடி - கொள்முதல் மையங்களை திறக்க கோரி போராடியவர்கள் நூற்றுக்கணக்கில் கைது.

  15. தஞ்சை மாவட்டங்களில் விவசாயிகள் பட்டினிச் சாவு, எலி கறியை தின்றது. கஞ்சித் தொட்டிகளை திறக்க வைத்தது. இறந்த விவசாயிகளை கேலி பேசியது. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய நல்லகண்ணு மீது வழக்கு.

  16. ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம். அரசு குடியிருப்பில் இருந்து உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று இரவில் பெண்களை அச்சுறுத்தியது. இறுதியில் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டின் மூலம் வேலை கிடைத்தது. அப்படியிருந்தும் கூட 6072 பேருக்கு வேலை மறுப்பு. அரசு ஊழியர்கள் அலுவலகங்கள் சீல்வைப்பு. அரசு ஊழியர் சங்கங்களுக்கு தடை விதிப்பு. டெஸ்மா பாய்ந்தது.


  17. வீராணம் திட்டம் - வீணாண திட்டம் ரூ. 720 கோடி முதலீடு - கடலூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு. நிலத்தடி நீர் கொள்ளைக்கு வழிவிட்டது. கோகோ - பெப்சி கொள்ளை திருநெல்வேலி தாமிரபரணி முதல் வைகை ஆறு வை தனியாருக்கு தாரை வார்ப்பு. சென்னை போன்ற பெரு நகரங்களில் தண்ணீர் லாரிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை.

  18. ­ கடல் நீரை குடிநீராக்க மத்திய அரசு உதவி ரூ. 1000 கோடி ஒதுக்கீடு இதுவரை இதற்கான திட்டத்தை தமிழக அரசு வழங்கவில்லை. ஏற்கனவே இதுபோன்ற ஒரு திட்டத்தில் ரஷ்ய நிறுவனத்தில் லஞ்சம் கேட்டது - வழக்கு நிலுவையில் உள்ளது.

  19. 10,000 சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம் 4 வருடமாக அலை கழிப்பு உச்சநீதி மன்ற தீர்ப்பைக்கூட மதிக்காத மாநில அரசு. 50க்கும் மேற்பட்டோர் தற்கொலை. பல குடும்பங்கள் சீர்குலைந்து போனது.

  20. சட்டமன்ற ஜனநாயகம் அப்பட்டமாக சீர்குலைக்கப்பட்டது. எதிர்கட்சியினை பேச விடாமல் முடக்கியது. விதி 110 என முதல்வர் குறுக்கீடு.

  21. பட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாள் நடக்க வேண்டியது வெறும் 6 நாட்கள் மட்டுமே நடத்தியது. வரலாற்றில் மிகப்பெரிய அவலம் என்றுத்தான் இதைக் கூற வேண்டும்.

  22. போலீஸ்°துறை சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டது:

  23. போலீசாரா கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டது. ஜெயலட்சுமி விவகாரம் காவல்துறையில் ஏற்பட்டுள்ள சீரழிவை வெளிக்கொண்டு வந்தது. ஷெரீனா விவகாரம் கஞ்சா வழக்கு பதியப்பட்டது.

  24. வைகோ நடை பயணம் - தடை செய்யப்பட்டது.

  25. தீண்டாமை - தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. சைக்கிளைத் தந்த ஜெயலலிதா சைக்கிள் ஓட்டுவதற்கு தடை விதிப்பதற்கு எதிராக என்ன செய்தார்?

  26. நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல், கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி என தலித் பஞ்சாயத்துக்களில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டதா? இந்தியாவிலேயே இந்த விஷயத்தில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.

  27. 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்ப்பு. இந்த இந்த விஷயத்தை மழுப்புவது.

  28. மேதின விழாவிற்குகூட தடை விதித்த அரசு - 2002


  29. வேலை நிறுத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என அறிவிப்பு. ஊர்வலம் - பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பு. மெரீனா பொதுக்கூட்ட இடம் மறுக்கப்பட்டது.

  30. பழங்குடியினர் பிரச்சினை 140 பழங்குடியின மக்களை மத்திய அரசு பட்டியல் செய்து அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் பல பழங்குடி இனங்களை பட்டியலில் இன்னும் சேர்க்கவில்லை.

  31. போக்குவரத்து தனியார்மய முயற்சி, மினி பஸ் சென்னை போன்ற பெரு நகரங்களில் அனுமதிக்க முயற்சி.

  32. மூன்று ஆண்டுகளாக வேட்டி - சேலை - பொங்கல் காலங்களில் அளிக்கப்படவில்லை. இதனால் 25,000 கைத்தறி நெவாளர்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் 100 ரூபாய் பட்டுவாடா செய்யாதததால் மிகவும் துன்பத்திற்கு உள்ளானார்கள்.

  33. கூட்டுறவு ஜனநாயகம் கடந்த 5 ஆண்டுகளாக பறிக்கப்பட்டது.

  34. வேலையின்மை 55 லட்சம். வேலை நியமனத் தடைச் சட்டம், வேலையில்லா கால நிவாரணம் மறுப்பு, தமிழகத்தில் வேலையிண்மை 11 சதவீதம், தேசிய அளவில் 7 சதவீதம். போலீசுக்கு ஆள் எடுக்கும் போது தடியடி.

  35. பத்திரிகைகள் மீது வழக்கு, இந்து, முரசொலி, தீக்கதிர், தினகரன், நக்கீரன் என பத்திரிகைககளின் குரல்வளை நெறிக்கப்பட்டது.

  36. சட்டமன்றமே நீதிபதியாக மாறியது சபநாயகர் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுத்தது.

  37. தலைமைச் செயலாளர்கள் மாற்றம். காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி பந்தாடப்பட்டது. மந்திரிகள் ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து மாற்றம்.

  38. போலீஸ் என்கவுன்டர் கொலைகள்.

  39. சிறுசேரி நில விற்பனையில் ஊழல் குற்றச்சாட்டு. தற்போது இந்த நில விற்பனையை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் இன்னொரு டான்சியாக இந்த விவகாரம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

  40. உணவுக்கு வேலைத் திட்டம் காண்டிராக்ட் விட்டு கொள்ளை. முறையாக அமலாக்கிட வில்லை.

  41. ஆடு - கோடி பலியிட தடை, மதமாற்றத் தடைச் சட்டம்.

  42. சேது சமுத்திரத்திற்கு எதிர்ப்பு.
  43. கடற்கரையோர பிரதேசங்களில் உள்ள மீனவர்களை அகற்றிவிட்டு - மலேசியா - சிங்கப்பூர் போல பெரும் ஹோட்டல்கள் - சுற்றுலா தலமாக்கிட முயற்சி. அதே போல் கூவம் கரையோர மக்கள் வெளியேற்ற முயற்சி.

7 comments:

ஜெயக்குமார் said...

ஜெயலலிதா தன்னிடம் உள்ள ஆளுமைத்திறனையும், அடக்கியாளும் திறனையும் வைத்து சிறப்பான ஆட்சியைக்கொடுக்க முடியும் ஆனால் மாறனின் சுயநல குடும்பத்தில் சிக்கிய கருணாநிதி போல சசியின் நட்பு வலையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறார் பாவம்.

Anonymous said...

Both Karunanidhi & Jayalalitha are known to be able administrators. Otherwise do you think they can survive the TamilNadu politics for such a long time (especially for MK).

Unfortunately Maran's family is causing damage to MK & Sasi's family is causing damage to JJ.

I would say sasi's damage is much more than marans. Maran's family would have used the links in central govt to get licenses etc etc but SUN TV's growth cannot be attributed to that alone.

You cannot make the viewers to watch a particular TV just because you are a central minister. Their programming quality (I hate most of them - thats a different story), Technology advantage etc etc makes them a better TV to watch.

Muthu said...

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை கம்பேர் செய்யாதீர்கள் சந்திப்பு அவர்களே

சந்திப்பு said...

ஜெயக்குமார் ஜெயலலிதாவிடம் இருப்பது ஆளுமைத் திறன் அல்ல: அனைவரையும் அடக்கியாளும் துருபிடித்த பாசிச சிந்தனை. அதனால்தான் தன்கட்சிக்காரர்கள் உட்பட அனைவரையும் தனக்கு கீழானவராக பார்ப்பது. ஜனநாயகத்தை தன் காலில் போட்டு மதிப்பது. தானே என்ற மமதையோடு நடப்பது இவையெல்லாம் ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் என்று நீங்கள் அங்கிகரித்தால்... உங்களைப் பார்த்து பரிதாபமடைவதைத் தவிர வேறு வழியில்லை!

சந்திப்பு said...


ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை கம்பேர் செய்யாதீர்கள்

முத்து ஜெவையும் - கருணாநிதியையும் எந்த இடத்திலும் கம்பேர் செய்யவில்லையே! அது அனானியுடைய கமெண்ட். நேற்றைய ஜெயலலிதாவின் ஜெ.டி.வி. பேட்டியில் கடந்த ஐந்தாண்டு தமிழகத்தின் பொற்காலம் என்று கூறியிருந்தார் ஜெ. சரி அந்த பொற்காலம் எப்படியிருந்ததை என்பதற்காகத்தான் இதை பட்டியலிட்டுள்ளேன்.

இரா.சுகுமாரன் said...

குப்தர் காலம் பொற்காலம், பிறகு அம்மா காலம் தான் பொற்காலம்.
அது மக்களுக்கு பொற்காலம், இது கொள்ளை அடிப்பவர்களுக்கு பொற்காலம்.

சந்திப்பு said...

சுகுமாறன் நச் கமெண்ட்டுன்னு சொல்றாங்களே, அது இதுதானா!
வாழ்த்துக்கள்..