April 22, 2006

அம்மாவின் பொற்கால ஆட்சியில்....

ஜெ அம்மாவின் சூறாவளி பிரச்சாரத்தில், புல்லரிக்கும் புள்ளி விவரங்களோடு, ‘பொற்கால ஆட்சி’ என்ற முழக்கத்தையும் எதிரொலிக்கத் தவறுவதில்லை.

கடந்த ஐந்தாண்டு காலம், ‘தமிழகத்தின் பொற்காலம்’ என வருணிக்கும் ஜெயலலிதா, மீண்டும் பொற்கால ஆட்சி தொடர, உங்கள் சகோதரிக்கு வாய்ப்பளிக்குமாறு கொஞ்சுகிறார் - கெஞ்சுகிறார்.

சங்ககாலத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றதாக கதைக்கும் தமிழ் ஆர்வலர்களின் கூற்றே அதீதமானது என ஆ. சிவசுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதோடு, இதுவரை தமிழகத்தில் பொற்கால ஆட்சி என ஒன்று இருந்ததில்லை என எடுத்துரைக்கவும் தவறுவதில்லை.

இந்த பின்னணியில், ஜெயலலிதாவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியை ‘பொற்கால ஆட்சி’ என தானே பறைசாற்றிக் கொள்வது குறித்து, இந்த வரலாற்றாசிர்களிடம் கேட்டால், பின்னங்கால் பிடறியில் இடிபட பறந்தோடி விடுவார்கள்!

வரலாற்றாசிரியரை விடுங்கள்... 2004 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்தார்கள்? அம்மாவின் பொற்கால ஆட்சி இனியும் தொடர்ந்தால், தாங்களும் பொற்சிலைகளாகிவிடுவோம் என்று கருதியல்லவா, அம்மாவுக்கு முட்டை போட்டார்கள். (40 பாராளுமன்றத் தொகுதியிலும் நாமம் போட்டார்கள்)

அம்மாவின் பொற்கால ஆட்சி எப்படியிருந்தது என கொஞ்சம் பார்ப்போம்!
  • குழந்தைகளுக்கு சத்துணவில் முட்டையா? அவர்களுக்கு கொழுப்பு அதிகமாக இதய நோய் வந்து விடும் என்று முட்டையை பறித்தார் சகோதரி!
  • மாணவர்களுக்கு இலவச ப°பா° வழங்குவதா? பிஞ்சு பருவத்திலேயே எல்லாம் இலவசமாக கிடைக்கும் என்ற சிந்தனை முளைத்து விடாதா? அதனால்தான் அதையும் பிடுங்கிக் கொண்டார். (இந்த இடத்தில் 10 கிலோ அரிசி இலவசமாக கொடுக்கிறேன் என கூறுகிறாரே அதை ஞாபகப்படுத்திக் கொள்ளாதீர்)
  • போக்குவரத்து, மின்சாரத்துறை ஊழியர்கள் அம்மாவின் பொற்கால ஆட்சியில் மிகுந்த ஏற்றம் பெற்று விட்டதால் அவர்களின் போன° உட்பட அனைத்து சலுகைகளும் இனியும் வழங்குவது அவர்களை அவமதிப்பதாக இருக்கும் என அதையெல்லாம் மறுத்து விட்டார். மறுத்து விட்டார்.
  • பெண்களின் மேல் மிகுந்த பாசம் கொண்ட சகோதரி ஜெயலலிதா குடிப்பதற்கு தண்ணீரா இல்லை? கவலையை விடுங்கள் இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் ஒரு லிட்டர் குடிநீரை விட, ஒரு லிட்டர் பால் விலை குறைந்துதானே இருக்கிறது என பாலபிஷேகம் செய்தார்.
  • இது மட்டுமா? பொற்கால ஆட்சியில் ரேஷன் கடையில் நின்று பொருட்களை வாங்கலாமா! கூடாது என தீர்மானித்த சகோதரி எல்லோருக்கும் கௌரவ முத்திரை கொடுத்தாரே அதை மறக்கலாமா?
  • பொங்கலுக்கு புடவை - வேட்டியா? அபிஷ்டு, சுய உதவிக்குழுக்களால சுகமாக இருக்கும் உங்களுக்கு இதெல்லாம் தேவையா? என அதையும் நிறுத்தியது தாயுள்ளம்.
  • 25,000 நெசவாளர் குடும்பங்கள் பாதிப்பா? அதெல்லாம் எதிர்க்கட்சிகளின் பொறாமை பேச்சு! கஞ்சித் தொட்டி திறப்பது பொற்கால ஆட்சியை களங்கப்படுத்திடவே, எதிர்கட்சிகள் செய்யும் சதி! எனவே பொற்கால ஆட்சியில் அரிசி சாதமா? கூடாது பிரிணியே போடுறோம் என்று உலக சாதனை புரிந்தவரல்லவா அம்மா!
  • பொற்கால ஆட்சியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் எல்லாம் மூன்று வேளை மூக்கைப் பிடித்து திண்ணும் போது, எதுக்கு அவங்களுக்கு நிலம்! இருப்பதே 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம்தான் அதைக்கூட பெரு முதலாளிகளுக்கு தரக்கூடாதா? அதற்கும் எதிர்ப்பா என சட்டமன்றத்தில் அலுத்துக் கொண்டார் அம்மா!
  • பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண்! உண்மைதான் இங்கு நடப்பதோ பொற்கால ஆட்சி! அப்படியிருக்க பழைய நினைப்பில் பத்திரிகைகள் ஏதாவது உளரக்கூடாதே என்பதற்காகத்தான் அவர்களது மூளைகளை சரிப்படுத்திட வழக்கு!
  • விவாய நிலங்களில் எல்லாம் பொன் விளைந்ததால், ஒரு சேஞ்சுக்காக விவாசயிகள் எலிக்கறியை திண்றதை எதிர்க்கட்சிகள் கேலிப்பேசுகின்றன. அது மட்டுமா? பொற்கால ஆட்சியை கண்டு கொண்ட ஆனந்த சந்தோஷத்திலல்லவா விவசாயிகள் தங்களையே மாய்த்துக் கொண்டனர். (பூச்சி மருந்து குடித்து சாகவில்லை, சாராயம் குடித்துதான் செத்தார் என்ற ஜெயலலிதாவின் புளுகை அம்பலப்படுத்தியதால்தான் நல்லகண்ணு மீது வழக்கு)
  • பொற்கால ஆட்சியில் மக்களிடம் செல்வம் மிகுந்திருப்பதால் அரசு மருத்துவமனைக்குப் போகும் போது வெறும் ஐந்து ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என அம்மாவின் கணிவான அறிவிப்பு!
  • பொற்கால ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கும் எதிரி நாட்டு மன்னர்களை ஒழிக்க வேண்டாமா? அதனால்தான் பொடாவை பயன்படுத்தி வைகோ, (இவர் இப்போது பொற்கால மயக்கத்தில் உள்ளார்) நக்கீரன் கோபால், நெடுமாறன், சுப. வீரபாண்டியன்... என பலரையும் உள்ளே வைத்தது! அது மட்டுமா? டெ°மாவைப் பயன்படுத்தி பொற்கால ஆட்சிக்கு தீங்கு செய்யும் அயல்நாட்டுக்கு உளவுபார்க்கும் உளவாளிகளான அரசு ஊழியர்களை பிடித்து உள்ளே தள்ளியது.அம்மாவின் பொற்கால ஆட்சியின் சாதனைகளை சொல்லுவதற்கு இடம் போதாது! எனவே அம்மாவின் இந்த பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைந்திட வேண்டுமா?
பாராளுமன்றத்தில் நல்ல தீர்ப்பு வழங்கி தேசத்தை காத்தீர்!
சட்டமன்றத்திற்கும் நல்ல தீர்ப்பு வழங்கி தமிழகத்தை காத்திடுவீர்!!

6 comments:

Anonymous said...

Well done!Wonderful explanation and analysis. No doubt we had golden rule all these five years.

கோவி.கண்ணன் said...

சந்திப்பு,
உங்கள் எழுத்தும் எண்ணமும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்

சந்திப்பு said...

Thank you Anony and Govikannan.

லக்கிலுக் said...

நன்றாக எழுதுகிறீர்கள் சந்திப்பு!

சந்திப்பு said...

நன்றி லக்கி குட்.

Anonymous said...

Poster Adiyhu otta Vandiya Ponnaana Karuthugal.Aaana Namma ThamilNaattu Makkalukku Selective Amnecia Noi iruntha ( Ammavin kadantha 5 Aandu kala Porkaala Aatchi Saathanaigal maranthu Poieruntha ) Marupadiyum Amma thaan CM.Enavae Makkalae Marakkama Aiyan Valum Valluvarukku Oottu Podunga.Dubai Raja.