நேற்று (2.4.2006) எனக்கு 37வது பிறந்த தினம். என்னுடைய பிறந்த தினம் எப்போது வரும் என்பதை என்னுடைய 9 வயது மகள் அகல்யா, அவரது பள்ளி டைரியில் குறித்து வைத்து இருந்தார். பிறந்த நாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அப்பாவுக்கு என்ன கிப்ட் வாங்கிக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து இருந்தனர். அதே போல் என்னுடைய இரண்டு மகள்கள் அகல்யாவும், பிரவீனாவும் முன்கூட்டியோ என் மனைவியிடம் கிப்ட் வாங்குவதற்கான ரூபாயை வாங்கி வைத்திருந்தனர்.
நேற்று காலையில் எழுந்ததும் அநேகமாக 5.30 மணிக்கெல்லாம் எழுந்து விட்டனர். இரண்டு பேரும் விழித்துக் கொண்டதை நான் அறிந்திருந்தாலும், படுக்கையை விட்டு எழாமல் தூங்குவது போல் இருந்தேன். அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு என்னை தூக்கத்திலிருந்து! எழுப்பினர். இரண்டு பேரும் ஒரே குரலில் --ஹாப்பி பர்த் டே டூ யூ, காட் பிளஸ் யூ-- என்று கூறினர். நானும் தேங்க்யூ என்று கூறிவிட்டு. என்னுடை வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். அதற்குள் இரண்டு மகள்களும் பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று ஒரு ஹீரோ பேனாவை வாங்கிக் கொண்டு, கலர் பேப்பர்களையும், கொஞ்சம் சாக்லேட்டுகளையும் வாங்கி வந்தனர்.
இரண்டு மணி நேரத்தில் கலர் பேப்பரை துண்டு, துண்டாக வெட்டி ஒட்டினர். அப்புறம் என்ன! அந்த பேனாவை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டு, எல்லோரும் ஒரே குரலில் மீண்டும் --ஹாப்பி பர்த் டே டூ யூ, காட் பிளஸ் யூ-- அவங்க இரண்டு பேர் மட்டுமல்ல; என்னுடைய மூன்றாவது பெண் குழந்தை சந்திரிக்காவும்தான். அவளுக்கு வயது இரண்டரை.
மொத்தத்தில் எனக்குப் பிறந்த நாள் என்பதை விட, அது அவர்களுக்கே பிறந்த நாள் கொண்டாடியது போல் இருந்தது. இதுல உங்க மனைவி என்ன செஞ்சாங்கன்னு கேட்கிறீங்களா... அத ஏன் கேக்குறீங்க... அவர் பங்குகிக்கு காலையிலேயே இட்லி, தோசை, கேசரி, கேக், வடை... அது, இது என்று அவரும் அமர்க்களப்படுத்தினார். வீடே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது.
அப்புறம் முக்கியமான விஷயம் : ராஜேந்திரன் (சின்ன பையன்தான்) எங்க தெருவுல இருக்கிற எல்லோருடைய பிறந்த நாளையும் மனப்பாடமாக வைத்திருப்பான். அவனும் மறக்காமல் காலையில் வந்து வாழ்த்து சொன்னான்! உண்மையிலேயே இது அவனுடைய தனித்திறமை தான்!
13 comments:
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அந்த ராஜேந்திரனும் உங்க பிராடக்டா? இல்லை பக்கத்து வீடா?
நன்றி முத்து!
சரியா கணிச்சிருக்கீங்க முத்து. ஆமாம் அவரும் ஒரே பிராடக்ட்டுதான்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்திப்பு
நன்றி ராசா.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழரே...
நன்றி தோழர் முத்துகுமரன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே!
நன்றி சிங். செயகுமார்
காலங் கடந்தாலும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிள்ளைகள் தந்த அந்தப் பரிசுகள்
எல்லாப் பரிசுகளையும் விட பெறுமதியானவையும்
இனிய உணர்வுகளைத் தரக் கூடியவையும்.
வாழ்த்துக்கள்
நன்றி சந்திரவதனா. ஆம்! குழந்தைகளின் உணர்வுகள் என்றென்றும் பசுமையானதாய் நிலைத்து நிற்கும்.
Happy birthday my friend.Wish you many more happy returns of the day
மிகவும் நல்ல பதிவுகளாக இட்டு என் மனதில் தனி இடம் பிடித்த சந்திப்பு அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நன்றி செல்வன், விடாதுகறுப்பு.
Post a Comment