April 03, 2006

துக்ளக் ராஜ்யம்

வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல், மீண்டும் துக்ளக்கான்னு பார்க்காதீங்க! இந்த துக்ளக் நம்ம துக்ளக் இல்லீங்க.

வேற யாருன்னு பாக்றீங்களா? அதாங்க ஏப்ரல் 1 அன்று அமெரிக்காவின் அதி முட்டாள் யாருன்னு எடுத்த சர்வேயில் இடம் பிடிச்ச துணை ஜனாதிபதி டிக் செனி (2வது முட்டாள்), ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் (இவர் 3வது முட்டாள்).

நோல் பரிசு யாரு, யாருக்கோ வழங்கறாங்க... இந்த சர்வே எடுத்தவங்களுக்கு வழங்கனும்னு நான் பரிந்துரைக்கிறேன். அநேகமா நீங்க கூட பரிந்துரைப்பீங் கன்னு நினைக்கிறேன்.

நம்ம ஒரிஜினல் துக்ளக் தலை நகரைத்தான் மாத்தினாரு, ஆனா மி°டர். டேன்ஜர் (புஷ்யை தற்போது மிக செல்லமாக அழைக்கிறார் வெனிசுலா ஜனாதிபதி சாவே°) பயங்கரவாதிகளுக்கு எதிராக உலகளாவிய போர் என்று கூறிக் கொண்டு ஒவ்வொரு வருடமும் எந்த நாட்டை புடிக்கலாம்ன்னு திட்டம் தீட்டி வருகிறார்.

ஒரு நாட்டுல ஒரு துக்ளக் இருந்தாலே தாங்க முடியாது. ஆனா அமெரிக்காவிலோ இரண்டு துக்ளக் இருக்காங்களே, சும்மா இருக்கு முடியுமா?

குரங்கு கையில பூமாலை கிடைச்சா மாதிரி அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே இவங்கே கையில மாட்டிக்கினு அவதிப்படுது.

ஆப்கானி°தான், ஈராக் இந்த ரெண்டு நாடும் இவங்க கைக்கு வந்தாச்சு! அடுத்த என்னன்னு எதிர்கால துக்ளக்கா மாறப்போகும் கண்டலிசா ரைசோடே சேர்ந்து திட்டம் போடுறாங்க!

அதனாலத்தான் இப்ப புதுக் கரடி விடுறாங்க ஈரான் அணு ஆயுதம் தயாரிக்குது. அய்யய்யோ குரங்கு வால்ல தீ பிடிச்சுக்குச்சு... உலகமே எரியப்போகுதுன்னு சொன்னா மாதிரி லபோ, திபோன்னு கத்துறார் புஷ்...
ஈரானை புடிக்கனும், அப்புறம் என்ன? ரவுடி நாடுகள்னு ஒரு பட்டியலே கையில வைச்சிருக்காங்க அதுல,

கியூபா,

வடகொரியா

வெனிசுலா,

சிரியா.... ன்னு பெரிய பட்டியல்...

இந்த நாட்டையெல்லாம் பிடிச்சப்புறம் என்னப்பன்னலாம்னு, இப்ப புது பாட்னர தேடிக்கிட்டே இருக்காங்க!

யாரு அந்த புது பாட்னருன்னு பாக்குறீங்களா, வேற யாரு நம்ம மன்மோகன்தாங்க....

பொருளாதாரத்துல அமெரிக்காவை விட முரட்டுக் காளைய வளர்ந்து வர்ற சீனாவை ஒரு கை பார்க்கனும்னு நம்ம மன்மோகனை வளைச்சிருக்காங்க... இவரும் மண்டையை, மண்டையை ஆட்டிக்கிட்டு அமெரிக்காவோடு சேர்ந்து கிட்டாரு.

முதல் முட்டாள் யாருன்னு உங்களுக்கே தெரியும். அதுவும் கடந்த 4 வருடமா? அவரு அந்த இடத்தை தக்க வைச்சிருக்காரு - அவருதாங்க மைக்nல் ஜாக்ஷன்.

இப்பே புஷ்ஷூக்கு மைக்கேல் ஜாக்ஷன் பெயரைக் கேட்டால அலர்ஜியா இருக்கு. பொறாமையா இருக்கு! எப்படியாவது அடுத்த வருடம் முதல் இடத்தை புடிக்கிறது உங்க கிட்ட ஏதாவது ஐடியா இருந்தா அவருக்கு சொல்லுங்க....

4 comments:

கருப்பு said...

நானும் படித்துச் சிரித்தேன் சந்திப்பு. அடுத்தமுறை புஷ்தான் முதலிடம்.

சந்திப்பு said...

நன்றி

விடாதுகறுப்பு

Anonymous said...

//ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் (இவர் 3வது முட்டாள்).//
மனித குல விரோதி ஜார்ஜ் புஷ் ஒரு முதல் தரமான முட்டாளாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அறிவியல் வளர்ச்சியை மனித குல முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் மனித குல அழிவிற்கு பயன் படுத்துபவன் முட்டாள் தான்.

சந்திப்பு said...

அப்படிப்போடுங்க சுகுமாறன். நிச்சயமா புஷ் முதல்தரமான முட்டாள்தான்.
இந்தியா, ஈரான், வடகொரியா என தொடர்ச்சியாக அணுவை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதற்கு கூட கடுமையான தடைகளை விதிப்பதோடு, அந்த நாடுகள் மீது கடுமையான தடைகளை ஏற்படுத்தி, தன் காலடியில் மண்டியிடச் செய்யலாம் என கருதும் புஷ் முதல்தரமான முட்டாளே.