April 24, 2006

அரித்மெட்டிக் வேதியல் வினையாகிறது!

தமிழக தேர்தல் குறித்த விவாதங்களில், முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அரித்மெட்டிக்கா? வேதிவினையா? கூட்டணி கணக்கு திமுகவுக்கும், வேதியல் வினை (கெமிக்கல் ரியாக்ஷன்) அதிமுகவுக்கும் என கணிக்கப்பட்டது. இதில் வெல்லப்போவது யார்? என இந்து பத்திரிகையில் ஜெயந்த் துவக்கி வைத்தது, இன்று சூடுபிடித்து உச்சகட்டத்தை எட்டியுள்ளது.


ஆம்! திமுகவின் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் 6 கட்சி பலம் இந்த தேர்தல் வெற்றியை தீர்மானிக்குமா? என அரூடம் பார்க்கத் துவங்கியவர்களுக்கு புது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது திமுக தேர்தல் அறிக்கை என்றால் மிகையாகாது.


ஜெயலலிதா எதிர் கட்சி முகாமை சிதைக்க முயற்சித்து, தோல்வி கண்ட பிறகு, எப்படியோ அந்த வலையில் வைகோவும் - திருமாவும் சிக்கினாலும் கூட நான் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று கூறியதோடு நிற்காமல் ஜனநாயக மக்கள் கூட்டணி என மகுடம் சூட்டியுள்ளார்.
முதலில் பேட்டிங்கை துவக்கிய ஜெயலலிதா மிக வேகமாக முயல்போல் - பம்பரமாக சூழன்று தேர்தல் பிரச்சார களத்தில் தாங்களே எல்லா விதத்திலும் முன்னணியில் நிற்பதாக காட்டிக் கொண்டார். ஜெயலலிதா பிரச்சாரம் துவக்கிய சூழலில் பத்திரிகைகளின் கணிப்புகள் (ஆரூடங்கள்) அவருக்கு சாதகமாக கூறி வந்தன.


திமுக தலைவர் குடு, குடு கிழவன் கருணாநிதி தனக்கு நிகராக எங்கே ஈடுகொடுக்கப்போகிறார் என்ற எக்களத்தோடு வலம் வந்தார் அம்மையார்.


இந்த பின்னணியில் திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் அறிக்கையும், அதைத் தொடர்ந்து தனது பிரச்சாரத்தை ஆமைபோல் துவக்கினாலும் இன்றைக்கு வெல்லத்தை சுற்றும் எறும்புகளாக எங்கும் மக்கள் கூட்டத்தை எங்கெங்கும் காண முடிகிறது ஆண்டிப்பட்டி உட்பட.


கடந்த காலங்களில் தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் விவாதத்துக்கு உரிய விஷயமே இல்லை. அது ஏதோ கட்சிகள் செய்யும் - சொல்லும் பார்மாலிட்டி° என மக்கள் நினைத்தனர்.
ஆனால், இந்த முறை திமுக தலைவர் கருணாநிதி தான் வெளியிட்ட தேர்தல் அறிக்கை இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.


அறிக்கையில் மிக முக்கியமான அம்சம்:

  • 1. கிலோ அரிசி ரூ. 2க்கு
    2. டி.வி. இல்லாதவர்களுக்கு இலவச கலர் டி.வி.
    3. இரண்டு ஏக்கர் நிலம்
    4. விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் ரத்து
    5. வேலையில்லா காலத்தில் வாலிபர்களுக்கு நிவாரம் ரூ. 300
    6. பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் ரூ. 15,000
    7. சுயஉதவிக்குழுக்களுக்கு ஊக்கம், நலவாரியம்...

என பல கவர்ச்சிகரமான திட்டங்களோடு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.


திமுக தேர்தல் அறிக்கை ஆரம்பத்தில், அதிமுக அணியினர் வாயில் மெல்லுவதற்கு கிடைத்த அவலாய் போனது அரிசியும், டி.வி.யும்!


தர முடியுமா? ஏமாற்று வேலை என்றெல்லாம் ஏச்சும் - பேச்சும் தொடர்ந்தது.


இந்த சூழலில் கருணாநிதியின் தேர்தல் பிரச்சார துவக்கம் முதல் இன்று வரை எல்லா இடங்களிலும் அரிசி நிச்சயம் - அதுவே என் முதல் கையெழுத்து எனத் துவங்கி, டி.வி.க்கும் உத்திரவாதம் செய்ததோடு, கணக்கெடுப்பு துவக்கியாச்சு - என உறுதி கூறியதிலிருந்து, மக்களின் மனோ நிலையில் மாற்றம் துவங்கியது (வேதியல் எதிர் வினை புரியத்துவங்கியது).


ஒரு கட்டத்தில் மக்களின் மனோ நிலையில் மிக வேகமாக மாற்றம் ஏற்பட்டுவருவதை கண்ட ஜெயலலிதா அடித்தார் அந்தர் பல்டி 10 கிலோ அரிசி இலவசம் என்று! கேலி பேசியவர்களே கேலிப்பொருளாய் போனது இதுதான் முதல் முறை!


தற்போது களத்தில் கலைஞர் கருணாநிதியும், கூட்டணி கட்சி தலைவர்களான டாக்டர் இராமதா°, மத்திய அமைச்சர் பா. சிரதம்பரம், கம்யூனி°ட் தலைவர்கள் என். வரதராஜன், தா. பாண்டியன் மற்றும் இளம் தலைமுறையினர் புயல் வேகத்தில் நடத்தி வரும் பிரச்சாரத்தில் மக்கள் சாரை, சாரையாக எறும்புகளைப் போல், ஈக்களை போல் மொய்க்கத் துவங்கியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு வந்த கூட்டம் ஈசல் பூச்சிகளாய் செத்து மடிவதைத்தான் இன்றைய வேதிவினையில் பார்க்க முடிகிறது.


அரித்மெட்டிக்கா? வேதிவினையா? என்றவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது. திமுக கூட்டணியின் அரித்மெட்டிக் வலுவாக இருப்பதுபோல், அதன் தேர்தல் அறிக்கை செய்யும் வேதியல் வினை அதை விட வலுவானதாக மாறியுள்ளது. எனவே அரித்மெட்டிக்கும் + வேதியல் வினையும் கூட்டணி தற்போது அமைத்துள்ளதால், திமுகவின் வெற்றிக்கு கட்டியம் கூறியாகி விட்டது

4 comments:

ஆப்பு said...

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

சந்திப்பு said...

ஆப்பு ராசா யாராவது அப்பிடப்போறாங்க! அதனால பாத்து ஆப்பு வையுங்க.

சந்திப்பு said...

நன்பரே முழுமையான மது விலக்கா? இன்றைய தேவை இதுவல்ல முழுமையான கல்விதான்! கல்வி கண் திறந்தால் மதுவின் கண்கள் தானாக அடைக்கப்படும். நன்றி நன்பரே.

Muthu said...

நான் எழுதலாம் என்று இருந்தேன்...எழுதிட்டீரா?

என்னய்யா நமக்குள்ள போட்டீ?