April 04, 2006

பொறியில் மாட்டிய எலிகளும், தியாகி சோனியாவும்!

ஆதாயம் அடையும் பதவி குறித்து எழுந்த சர்ச்சையில் பா.ஜ.க.வின் அரசியல் சித்து விளையாட்டு சோனியாவுக்கு எதிராக திரும்பிவுடன் பூமராங்காக செயல்பட்டு தனது இரட்டை பதவிகளையும் ராஜினாமா செய்து தன்னை தியாகியாக வெளிக் காட்டிக் கொண்டார் சோனியாஜி. தற்போது மீண்டும் ரேபரலியில் அவர் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தலை தேர்தல் கமிஷன் மிக சூடாக, அவசர, அவசரமாக அறிவித்து மே 8 அன்று வாக்கு பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

ஆதாயம் தரும் பதவி குறித்து விவாதமோ, அதற்கான சட்ட திருத்தமோ இன்னும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவும் இல்லை. இது குறித்த விவாதம் மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு முன்னாலேயே தேர்தல் கமிஷன் ஏன் சோனியாவுக்காக மிக அவசரமாக செயல்படுகிறது என்பது புதிராக இருக்கிறது.

உண்மையில் சோனியாஜி தன்னை தியாகியாக காட்டிக் கொண்டாலும், ஒரு சட்டம் குறித்து நெருக்கடியான சூழல் ஏற்படும் போது, அதை நேருக்கு நேராக சந்திப்பதற்கு முன்னால் தன்னிச்சையாக ராஜினாமா செய்வது அவருக்கு வேண்டுமானால் பயன் தரலாம். ஆரோக்கியமான அரசியலுக்கு அல்ல. இதே புகாரைத்தான் சோம்நாத் சாட்டர்ஜி மீதும், இன்னும் பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் எழுப்பப்பட்டிருக்கிறது. எல்லோரும் சோனியா போல் தன்னிச்சையாக செயல்பட்டால் என்ன ஆகும்? இந்த ஆட்சியே காணாமல் போகும். சோனியா இதைத்தான் எதிர்பார்க்கிறாரா? அவருக்கே வெளிச்சம்!

குறிப்பாக இடதுசாரிகள் இந்த விஷயத்தில் மிக உறுதியாக அதை பாராளுமன்றத்திற்குள் தீர்த்திட வேண்டும் என்று கூறுவதோடு, நாங்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்ததுதான் சரியான அரசியல் நடவடிக்கையாகும். அரசியலில் ஓடி ஒளிவது எப்போதும் வெற்றியைத் தராது.

அதே சமயம் பொறியில் மாட்டிய சுண்டெலி எம்.பி.க்கள் (அதாங்க பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கே லஞ்சம் பெற்றவர்கள்) பதவியில் இருந்து நீக்கப்பட்டது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை! அந்த ஊழல் எம்.பி.க்களின் பதவி பறிபோய் விட்டது. குறிப்பிட்ட எம்.பி.க்களின் தொகுதிகள் காலியாக கிடக்கிறது. இந்த இடத்தில் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இது சரியான நடவடிக்கையா? அல்லது நாடாளுமன்றம் பெரியதா? நீதிமன்றம் பெரியதா என பெரியண்ணன் பாணியில் உச்சநீதிமன்றம் செயல்படுகிறதா? அது அவர்களுக்கே வெளிச்சம்!

ஜனநாயகத்தில் இரண்டு நடைமுறைகள் இருக்க முடியாது! சோனியாவுக்கு என்றால் உடனே தேர்தல், எம்.பி.க்களே இல்லாத இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கருணையில்தான் தேர்தல் நடக்கும் என்றால் - இது என்ன ஜனநாயகம்! தேர்தல் கமிஷன் எல்லா விஷயத்திலும் வீராதி, வீரராக செயல்படும் போது, இந்த விஷயத்தில் அதன் நிலையென்ன! டாண்டன் சொல்வாரா? அல்லது டன்டனக்கா டன்டனக்கா என்று ஆடுவாரா?

9 comments:

Selvakumar said...

லஞசம் வாங்கியவர்களையும், அரசியல் விளையாட்டுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்களையும் ஒப்பிட்டுள்ளீர்கள். பலே ! பேஷ் !

சோனியா விவகாரத்தையும், எம்பிக்கள் விவகாரத்தையும் ஒப்பிடவே முடியாது. ஏனென்றால், இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை.

தேர்தல் கமிஷன் மட்டும் லஞ்சம் வாங்கிய எம்பிக்களுக்கு இதேபோல் தேர்தல் அறிவித்து இருந்தால் தான் அது கேலிக்குள்ளாகியிருக்கும்.

செல்வகுமார்

சந்திப்பு said...

(தேர்தல் கமிஷன் மட்டும் லஞ்சம் வாங்கிய எம்பிக்களுக்கு இதேபோல் தேர்தல் அறிவித்து இருந்தால் தான் அது கேலிக்குள்ளாகியிருக்கும்)

செல்வகுமார் தாங்கள் கூறியிருப்பது சரியே! லஞ்சம் வாங்கிய எம்.பி.க்களுக்கு இதே போல் தேர்தல் அறிவித்து இருந்தால் அது கேலிக்கூத்தானதுதான்.
நான் கூறியது அந்த அர்த்தத்தில் அல்ல. லஞ்சம் வாங்கிய எம்.பி.க்களுக்காக நான் வாதாடவில்லை. நீக்கப்பட்ட எம்.பி.க்களின் தொகுதி (விதவன்) கோலத்தில் காட்சியளிக்கிறதே அதற்காகத்தான் அந்த தொகுதி மக்கள் எம்.பி.க்கள் இல்லாமல் இருக்கிறார்களே! அங்கே ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டாமா? என்பதுதான் என்னுடைய கேள்வி. லஞ்சம் வாங்கிய எம்.பி.க்களை இனிமேல் எந்த தேர்தலிலும் நிற்பதற்கு அனுமதிக்கக்கூடாது. அப்படியே ஏதாவது கட்சிகள் அனுமதித்தாலும், அதை மக்கள் முறியடிப்பார்கள். இந்த அடிப்படையில்தான் சோனியாவுக்காக ஒரு மாத காலத்திற்குள்ளாகவே தேர்தலை நடத்த துடிக்கும் தேர்தல் கமிஷன் - 10 நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்த தடை விதிக்கும் உச்சநீதிமன்றம். அரசுகளின் இந்த முரண்பாடு எந்த வகையான ஜனநாயகம் என்பதுதான் என் கேள்வி.

பரஞ்சோதி said...

சந்திப்பு அவர்களே!

நம்ம ஜனநாயகத்தின் கேலிகூத்தை நினைத்தால் சிரிப்பு தான் வருது.

சோனியா பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தான் வெல்வார் என்பதும் தெரிந்த ஒன்றே.
சில மாதங்களில் மீண்டும் அதே எம்.பியாக வருவார். அப்படி இருக்கையில் ஏன் வீணாக தேர்தல் செலவு, பேசாம ராஜினாமாவை ஏற்காமல் தொடர சொல்லலாமே.

அதே போல் இரட்டை பதவியில் இருந்ததற்கு தண்டனை கிடையாதா?

ஒருவர் ஒன்றுக்கு மேல்ப்பட்ட தொகுதியில் போட்டியிடுவதும், பின்னர் ராஜினாமா செய்வதும் எப்படி அனுமதிக்கப்படுகிறது என்று புரியலை.

ஒரு சட்டம் வரவேண்டும், ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்தால் அதன் பின்னர் அடுத்த ஆட்சி மாற்றம் வரும்வரை போட்டியிட முடியாது என்று வரவேண்டும்.

ஒன்றுமே புரியலை, அரசியலே விளங்கலை. ஏதோ சொல்லனுமுன்னு தோணிச்சி, சொல்லிட்டேன், தப்பா நினைக்காதீங்க.

Muthu said...

//குறிப்பாக இடதுசாரிகள் இந்த விஷயத்தில் மிக உறுதியாக அதை பாராளுமன்றத்திற்குள் தீர்த்திட வேண்டும் என்று கூறுவதோடு, நாங்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்ததுதான் சரியான அரசியல் நடவடிக்கையாகும்//

இடதுசாரிகள் எந்த நிலை எடுத்தாலும் உங்களுக்கு சரிதான். இது பயங்கர காமெடி சந்திப்பு. அதாவது அவங்களுக்குள்ள எல்லா கூத்தும் கட்டிக்கலாம்.ஆனால் மக்களுக்கு பதில் சொல்ல மாட்டாங்க.
இதற்காக சோனியாவை நான் ஆதரிக்கவில்லை.

சந்திப்பு said...

(ஒரு சட்டம் வரவேண்டும், ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்தால் அதன் பின்னர் அடுத்த ஆட்சி மாற்றம் வரும்வரை போட்டியிட முடியாது என்று வரவேண்டும்.)

-----------------------------------
பரஞ்சோதி தங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். இந்த கருத்தை நம்ம தேர்தல் கமிஷன் பரிசீலிக்குமா? இல்ல - ஜனநாயகத்தில் இதுவும் ஒரு அம்சம் என்று ஒதுங்கி விடுமா?
-----------------------------------

(இடதுசாரிகள் எந்த நிலை எடுத்தாலும் உங்களுக்கு சரிதான். இது பயங்கர காமெடி சந்திப்பு. அதாவது அவங்களுக்குள்ள எல்லா கூத்தும் கட்டிக்கலாம்.ஆனால் மக்களுக்கு பதில் சொல்ல மாட்டாங்க.)

----------------------------------
முத்து தங்கள் ஆதங்கம் புரியுது! மக்களுக்கு பதில் சொல்லாத யாரும் இடதுசாரியா இருக்க முடியாதுங்க... நீங்க யாரை இடதுசாரின்னு நினைக்கிறீங்க (கார்த்திக்கையா, சந்தானத்தையா....?)
----------------------------------

Muthu said...

//நீங்க யாரை இடதுசாரின்னு நினைக்கிறீங்க (கார்த்திக்கையா, சந்தானத்தையா....?)//

இதுக்கு நீங்க என்னைய திட்டியே இருக்கலாம் அய்யா:)))))

எனக்கு எந்த ஆதங்கமும் இல்லைங்க..அரசியல் சட்டத்தில் ஆதாயம் தரும் பதவி வகிப்பது தவறு என்றால் ரிசைன் செய்வது சரிதானே?

(சோனியா ஆரம்பித்து வைத்ததால் மட்டுமே அவரின் ராஜினாமா கேலிகுட்படுகிறது)

சந்திப்பு said...

முத்து மன்னிக்கவும். ஒரு சேஞ்சுக்காகத்தான் அப்படி போட்டிருந்தேன்.

(அரசியல் சட்டத்தில் ஆதாயம் தரும் பதவி வகிப்பது தவறு என்றால் ரிசைன் செய்வது சரிதானே?)

-----------------------------------
அதுதான் பிரச்சினையே! எது ஆதாயம் தரும் பதவி என்பது குறித்து அரசியல் சட்டத்தில் தெளிவாக இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள், சோனியா, சாட்டர்ஜி போன்ற பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது அவர்கள் ஆதாயம் அடைவதற்காக அல்ல. நமது தேசம் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக. இதைத்தான் பா.ஜ.க. - காங்கிரசு அரசியலாக்க முயற்சி செய்து தற்கொலை செய்து கொண்டனர். தற்போது இடதுசாரிகள் கூறிய ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சட்டத்தில் ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்றால், அதை பாராளுமன்றத்திற்கு உள்ளேயே தீர்த்திட வேண்டுமே தவிர, வேறு வழிகளில் அல்ல. அதைதான் இடதுசாரிகள் மிக தைரியமாக சாங்கள் ரிசைன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. எந்தவிதமான ஆதாயம் தரும் பதவிகளிலும் நாங்கள் இல்லை என்று கூறினர்.
-----------------------------------

Selvakumar said...

// நீக்கப்பட்ட எம்.பி.க்களின் தொகுதி (விதவன்) கோலத்தில் காட்சியளிக்கிறதே அதற்காகத்தான் அந்த தொகுதி மக்கள் எம்.பி.க்கள் இல்லாமல் இருக்கிறார்களே! அங்கே ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டாமா? //

நான் இதை மறுக்கவில்லை. ஆனால், எம்பிக்கள் விவகாரத்தில் உள்ளது சட்டசிக்கல். முதல்முறையாக, நாடு இம்மாறான பிரச்சனையை சந்திக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இது ஒரு சட்டசிக்கல். எம்பிக்களுக்கு அவர்களை நிருபிக்க(சட்டத்தின் ஒட்டைகளை கண்டறிந்து தப்பிக்க) உச்சநீதிமன்றம் வாய்ப்பளித்துள்ளது. இங்கு தேர்தல் கமிஷனின் வேலை ஏதும் இல்லை. சோனியாவின் தொகுதியில் தேர்தல் அறிவிப்பதில் அவர்களிக்கு எவ்வித சட்டசிக்கலும் இருக்கப்போவதில்லை. எம்பிக்கள் தொகுதியில் அது சாத்தியமில்லை.

இதற்கு காரணம் சட்ட சிக்கல்தான்.

"சட்டம் என்பது கழுதை மாதிரி, முன்னாடி போகவும் முடியாது, (கடிக்கும்), பின்னாடி வரவும் முடியாது (உதைக்கும்)"

இந்த நிலைதான் இப்போது தேர்தல் கமிஷனுக்கும்.

செல்வகுமார்

சந்திப்பு said...

(எம்பிக்களுக்கு அவர்களை நிருபிக்க(சட்டத்தின் ஒட்டைகளை கண்டறிந்து தப்பிக்க) உச்சநீதிமன்றம் வாய்ப்பளித்துள்ளது.)

-----------------------------------
அப்படிப் போடுங்க அரிவாளை!

இதைத்தான் நானும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளேன் என்பதை நினைவூட்டுகிறேன்.


இந்த இடத்தில் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இது சரியான நடவடிக்கையா? அல்லது நாடாளுமன்றம் பெரியதா? நீதிமன்றம் பெரியதா என பெரியண்ணன் பாணியில் உச்சநீதிமன்றம் செயல்படுகிறதா? அது அவர்களுக்கே வெளிச்சம்!
-----------------------------------