April 15, 2006

சுடலைமாடனின் 5 ஆண்டு ஐ.ஐ.டி. அனுபவம்

நன்பர்களே, பிராமணர் ஆதிக்கமா நிலவுகிறது ஐ.ஐ.டி.யில் என்ற பதிவிற்கு பல நன்பர்கள் சூடாக தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் இரண்டும் இருந்தது. ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை நன்பர் சுடலைமாடன் என்னுடைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டிருந்தார். எனவே அந்த பின்னூட்டத்தை உங்கள் முன்னூட்டமாக பதிகிறேன். நன்றி சுடலை மாடன்.
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்வது அந்நிறுவனங்களின் சுதந்திரமான இயங்கலுக்குத் தடையாக இருக்குமா இல்லையா என்று விவாதிப்பது வேறு. ஆனால் இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களில் எல்லாமே உயர்வாக இருக்கின்றன, அவை புனிதமானவை, விமர்சிக்கக் கூட யாருக்கும் உரிமையில்லை, விமர்சிப்பவர்கள் எல்லோரும் பிராமணர் வெறுப்பாளர் என்று திரும்பத் திரும்ப கொஞ்சம் கூட எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசி வருவது வேறு.
முன்னது அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தக் கருத்தை விவாதித்து ஒரு முடிவுக்கு வர இயலும். பின்னது வெறும் சாதிய அரசியலின் வெளிப்பாடு, எந்தப் பயனுமில்லை. வெளிப்படையாக தங்களது சாதிய அடையாளத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் விவாதிக்கும் டோண்டு போன்றவர்களையும், மூளையைக் கழட்டி வைத்து விட்டு வெற்றுக் கூச்சல் இடும் சில வெண்ணைகளையும் விட விஞ்சி நிற்கும் இரவி ஸ்ரீநிவாஸ் உண்மையிலேயே ஒரு இடதுசாரிதானா என்று கேள்வி எழுகிறது.
நான் ஐ.ஐ.டி. சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தங்கிப் படித்திருக்கிறேன். அங்கு எப்படி மாணவர்கள் வருகிறார்கள், எப்படி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், பிற பணிகளில் எப்படி நியமிக்கப் படுகின்றனர், ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் எப்படிப் பணியாற்றுகிறார்கள், பதவி உயர்வு எந்த அடிப்படையில் கொடுக்கப் படுகிறது, துறைத்தலைவர்கள், டீன்கள் போன்ற பதவிகளுக்கு எப்படி ஆசிரியர்களை நியமிக்கிறார்கள், ஆராய்ச்சிக்கான மான்யங்கள் எப்படி பகிர்ந்து கொள்ளப் படுகின்றன என அனைத்து விவரங்களையும் கண்கூடாகப் பார்த்திருகின்றேன்.
இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களைப் புனிதப் பசுக்களாக சித்தரிப்பது எல்லாம் பொய். எல்லாக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் நடந்து வரும் அற்ப அரசியலும், மொழி, சாதி, இனப் பாகுபாடுகளும், பெண்களின் மீதான பாலியல் வக்கிரங்களும் அங்கும் உண்டு. ஒரே வேறுபாடு அவற்றின் அளவும், அவை கையாளப் படும் சாதுரியமும்தான். மேலும் மற்ற கல்வி நிலையங்களைப் போன்று அரசியல்வாதிகள், காவல் துறை, பத்திரிகைகள் நேரடியாக தலையீடு செய்ய முடியாது, அதில் பெரும் நன்மை உண்டு என்றாலும், ஐஐடி-யின் புனிதப் பெயர் கெட்டு விடக் கூடாது என்று மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
மேலும் பாதிக்கப் பட்டவர்கள் இந்தப் புனிதப் பெயரை மீறி எதுவும் செய்ய நினைத்தால் அவர்களின் மீதான நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கப் பட்டு தங்களை இன்னும் தர்மசங்கடங்களுக்குள் ஆளாக விரும்புவதில்லை.சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையும், பாகுபாடும் மற்ற கல்வி நிலையங்களைப் போலவே ஐ.ஐ.டி.யிலும் உண்டு. மற்ற பல்கலைக்கழகங்களில் பிராமணரல்லாத மேல்/நடுச் சாதியினர் ஆதிக்கம் போலவே, ஐ.ஐ.டியில் பிராமணர்களின் ஆதிக்கம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தெலுங்குப் பிராமணர், தமிழ்ப் பிராமணர் மற்றூம் கன்னடப் பிராமணர் என்று அவர்களுக்குள்ளும் தங்கள் குழு மனப் பான்மையையும், ஆதிக்கத்தையும் காண்பிப்பதுண்டு.
சென்னை ஐ.ஐ.டி.யின் எதிரே இருக்கும் CLRI-யில் தமிழ் அய்யர் - தமிழ் அய்யங்கார் என்றும் கூடப் பதவிப் போட்டிகளில் வெளிப்படையாக நடந்து கொண்டதைப் பார்த்திருக்கிறேன். பிராமணர் இல்லாத சாதியினர் திறமையிருந்தும் புறக்கணிக்கப் பட்டதற்கு, இழிவாக நடத்தப் பட்டதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.
கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி வெளிப்படையாக எதிர்த்துப் போராடி வருகிறார். அவர்கள் அல்லாமல், வேதியியல் பேராசிரியர்கள் பி.டி. மனோகரன், இயந்திரவியல் பேராசிரியர் வேலுசாமி போன்றவர்கள் எப்படியெல்லாம் நடத்தப் பட்டார்கள் என்று அவர்களது துறையில் உள்ள மாணவர்களையும், ஊழியர்களையும் கேட்டால் தெரியும்.
மேலும் பெரும்பாலான துறைகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதிலெல்லாம் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களுக்குச் சால்ராப் போடுபவர்களையும் போட்டு நிரப்பி வந்துள்ளனர். இதில் பிராமணர்களில் தகுதியான பலர் கூட நிராகரிக்கப் பட்டுள்ளனர். இதையெல்லாம் நான் சொல்லுவதன் காரணம், பிராமணர்கள் மேல் மட்டுமேயான காழ்ப்புணர்ச்சியால் அல்ல. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பெரும்பாலோர் திறமைக்கு முக்கியம் தராமல், சட்டத்துக்குப் புறம்பாகக் கூட தகுதியில்லாதவர்களை பதவிகளில் நிரப்புகின்றனர். அதற்கு சாதிய மேலாதிக்கக் குணமும் ஒரு காரணம்.
எனவே இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் இட ஒதுக்கீட்டினால் ஐ.ஐ.டிக்களின் தரம் குறைந்து விடும் என மீண்டும், மீண்டும் ஒப்பாரி வைப்பது அவருடைய குறுகிய சாதியடிப்படையிலான வெளிப்பாடுதான்.
நன்றி - சொ. சங்கரபாண்ட

20 comments:

Anonymous said...

பசுத்தோல் போர்த்திய புலிகள் பிராமணர்கள் என்பதில் ஐயமில்லை.

நன்மனம் said...

\\....மற்ற பல்கலைக்கழகங்களில் பிராமணரல்லாத மேல்/நடுச் சாதியினர் ஆதிக்கம் போலவே,...\\

இந்த பிரச்சினையை பற்றி யாராவது பேசியது உண்டா? பேசி பார்க்க தைரியம் உண்டா?

இதையும் விவாதித்தால் தான், இக்கொடுமை நீங்க வழி பிறக்கும், அதை விடுத்து இத்தகைய குறுகிய அணுகுமுறை பேசுவதற்கு மட்டும் தான் உதவும்.

ஸ்ரீதர்

Anonymous said...

நன்மனம்,

நீங்கதான் பேசுங்களேன்.ஏன் பேச்சை மாற்ற முயற்சி செய்கிறீர்கள்?

ஏதாவது தகவல் இருந்தால் சொல்லுங்கள்.

நன்மனம் said...

அன்பு அனானி, அதை பேசிய ஒருவருக்கு குத்த பட்ட முத்திரை உமக்கும் தெரியும் என நினைக்கிறேன்.

நான் பேச்சை மாற்ற முயற்சி செய்யவில்லை, தெளிவு பிறக்க வழி செய்ய சொல்கிறேன், தங்களுக்கு உள்ள அக்கறை எனக்கும் உள்ளது.

ஸ்ரீதர்

Anonymous said...

Nanmanam,

The currert issue is about the reservations in IIT/IIM & the brahmin dominancy in these institutions.

If you want to write about other dominant castes - go ahead and post a separate posting. No one is stopping you.

Anonymous said...

நாங்கள் செய்தது/செய்வது தவறு என்று வார்த்தை உங்கள் வாயில் இருந்து வராதது துரதிஷ்டவசமானது. இந்த சூழ்நிலை தொடரும்வரை இந்த எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்.

நன்மனம் said...

"அவர்கள் செய்தது/செய்வது தவறு", ஆனால் ஒரு குருகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு பார்க்கும் வறை இது எதிர்ப்பாக மட்டுமே நிற்குமே ஒழிய, தீர்வுக்கு வழி வகுக்காது.

ஸ்ரீதர்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

A quick response
Nowhere I have defended what has happened or what is happening in any IIT.I have already responded to this issue (in Thangamani's blog, i think).If there is any nepotism or mismanagement
that should be investigated and the
solution should be found.Nobody should be treated unfairly.
And in which way the solution is related to reservation.Are you going to argue that reservation will reduce nepotism and mismanagement.


I have argued against reservation and you can read that in my blog.I have nothing against any caste or community.I have not defended any caste.I have challenged some remarks.If you cannot argue on the
basis of facts what can I do.When you say that there are this many
brahmins in IIT-M as faculty I am asking a simple question what is
the evidence or how did you arrive
at this.So far this question has not been answered.Nor the possibility that there can be a factual error in the article is
acknowledged.I have never argued that IITs or IIMs are beyond scrutiny or should be treated as
holy cows.Reservation is treated as
a holy cow by some. If you are willing to argue on the basis of facts, law, and other relevant
factors I am for debate .But if the purpose is to abuse or blame a
caste for all problems or to make
unsubstantiated allegations dont expect me to support it.
If you cannot engage in an informed debate dont try to cast aspersions or distort what the other person has said.
I dont care as to whether you label me as right or left.I am least bothered about such labels.
BJP is for reservations, does that
nake it a progressive and left party.

Badri Seshadri said...

சங்கரபாண்டி: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று பேராசிரியர்களில் வேலுசாமியை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் M.Tech மாணவர்களுக்கு நடத்திய ஒரு பாடத்தை நான் எனது நான்காம் ஆண்டு elective-ஆக எடுத்திருந்தேன். அவரிடம்தான் நான் எனது இறுதியாண்டு புராஜெக்ட் செய்தேன். அப்பொழுது அவர்தான் Machine Design சோதனைச்சாலையின் தலைவராக இருந்தார். அவர் எப்படி "நடத்தப்பட்டார்" என்று விளக்கிச் சொன்னால் நல்லதாக இருக்கும். அவரை யாரும் பிராமணர் அல்லாதவர் என்பதற்காகக் கேவலமாக நடத்தினார்களா? அப்படி அவர் எங்காவது சொல்லியிருக்கிறாரா?

மாணவர்கள் அளவில் அவர்மீது என்னையும் சேர்த்து அனைவருக்கும் மிகுந்த மரியாதை இருந்தது. நல்ல திறமையுள்ள பேராசிரியர்; MIT-இல் PhD செய்தவர்.

"இயந்திரவியல் பேராசிரியர் வேலுசாமி போன்றவர்கள் எப்படியெல்லாம் நடத்தப் பட்டார்கள் என்று அவர்களது துறையில் உள்ள மாணவர்களையும், ஊழியர்களையும் கேட்டால் தெரியும்" என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

ரவி ஸ்ரீநிவாஸ் said...

If my memory is right Prof.Manoharan became VC of Madras
University.He did not complete his term and quit the post.At that time it was reported in the media
that one of the(unstated) reasons for his resignation was the politics , particularly caste politics in Madras university. If I remember it right he went back to IIT.Had he been treated so badly in IIT why should he go back
to IIT.He could have continued in
the prestigious post of VC of Madras University or could have
joined elsewhere.Reservation in admissions is no solution to the alleged nepotism and mismanagement in IITs.This is common sense but a
biased mind cannot understand this.

dondu(#11168674346665545885) said...

"வெளிப்படையாக தங்களது சாதிய அடையாளத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் விவாதிக்கும் டோண்டு போன்றவர்களையும்,..."

Not so fast my dear sir. Where have I said that Brahmins are superior to others? My reference was to the unfair attack on Brahmins by others. As a result, many Brahmins are hiding their identity. This was touched upon by Asokamithhtiran, the author.

It was against this background that I came on the scene. I am dead against Brahmins, who try to keep a low profile. They seem to have been brainwashed by others into taking this stance. My call was addressed to them. I told them and I tell them again and again that there is no need to worry about the bigotted people accusing the Brahmins. We Brahmins need be apolegetic about the past. Do not worry about any riffraff (ஜாட்டான்).

The discrimination against Dalits is presently only at the hands of other castes such as Thevars, Vanniyars, Mudaliyars, Kaunders and so on. And they have the gall to demand reservation for themselves under BC and other quotas. They hide their ongoing persecution of the Dalits behind talks about events 5000 years back, when Brahmins were supposed to have conspired to bring about the caste divisions.

Is it anybody's case that the high percentage of Brahmin students in the IIT is due to any preference given to them? They have come through JEEE and similar exams, where the caste of the candidates is not asked for. So much so that any demand for open competition is anathema to many persons and they coin this call as being favorable to Brahmins. It can mean only one thing. They themselves acknowledge the superiority of the Brahmins, that is the only construct possible.

Let me hasten to add that I do not consider that intelligence is limited to only one caste. All castes have their own share of all shades of people.

To show that only the genuine Dondu posted this comment, I will post a copy thereof in my blog "வெளிப்படையான எண்ணங்கள்".

See: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

How come my comment came immediately? No moderation?

Regards,
Dondu N.Raghavan

அமலசிங் said...

saathi ozhiya vendumendral
paarppan ozhiya vendum

Sivabalan said...

Good Blog!!!

Anonymous said...

saathi ozhiya vendumendral
paarppan ozhiya vendum

great, why not kill all forward castes and dalits so that OBCs
can rule the world.

Anonymous said...

//saathi ozhiya vendumendral
paarppan ozhiya vendum//

noku aarivu irruka ??

bramanala ozhicha

vaarungala mudal ammaicharuku (jj) yaaru yagam paanuva??? ,

noku yaaru kalyanam paanivappa???,

noku samy peru yaaru soli kodupa???,.

mahabaratham ,geethai ithuellam yaaru soli kodupa???

athuellam vidungo naanga ooruvakuna intha jathi naalathane ippo ummaku idaothikidu kidaikirthu!!!

naandri keetavane>>>>

-sujatha

-/சுடலை மாடன்/- said...

இரண்டு நாட்களாக நான் வீட்டில் இல்லை. பத்ரி மற்றும் இரவி கேட்ட கேள்விகளுக்கு மட்டும் சுருக்கமாக இந்தப் பதிலை எழுதுகிறேன்.

நான் இருவர் பெயர்களைச் சொல்லியதன் அவசியமே, பல்கலைக் கழகங்களை மட்டுமே குறை கூறிக்கொண்டு, ஐ.ஐ.டி.க்களில் மட்டும் தரம் ஒன்றின் அடிப்படையிலேயே எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று இரவி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்ததனால்தான். பேராசிரியர் மனோகரனோ, வேலுசாமியோ கூட தங்களைப் பற்றிய இப்படிப்பட்ட விவாதம் வெளியில் நடப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் நான் பெயர் சொல்லாத பேராசிரியர்களும் உண்டு. அவர்கள் வெளிப்படையாகச் சொல்வதனால் அங்கே தொடர்ந்து பணியாற்றுவதிலும் பல சிக்கல்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் பல்கலைக்கழகங்களின் நிலை இதைப் போன்றோ அல்லது இன்னும் மோசமாகவோ உள்ளது. பொருளாதார ரீதியிலும், ஆராய்ச்சி வசதிகளின் அடிப்படையிலும் அவர்களுக்கு ஐ.ஐ.டி.யில் தொடர்வதே நல்லது. அதனால் தான் பேராசிரியர் பி.டி. மனோகரன் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக நியமிக்கப் பட்டு, பின்னால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் திமுக அரசின் அடாவடி அரசியலுக்குப் பயந்து அந்தப் பதவியை உதறி விட்டு மீண்டும் ஐ.ஐ.டி.க்கே வந்து விட்டார். நான் எந்த வகையிலும் மற்ற பல்கலைக்கழகங்கள் உயர்ந்தவை என்றோ அல்லது மற்ற சாதியினர் பிராமணர்களை விட நல்லவர்கள் என்றோ சொல்ல வில்லை. ஒரு சாதியில் இன்னும் தன்னை ஒட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க நினைத்தாலும் நியாயமானவர்களாக நடந்து கொள்ள முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

பேராசிரியர் வேலுசாமி ஆராய்ச்சியிலும், கற்பித்தலிலும் நல்ல பெயர் கொண்டவர் என்றாலும், பதவி உயர்வு மற்றும் டீன், இயக்குனர் போன்ற பதவிக்கான நியமனம் போன்றவற்றில் கண்டு கொள்ளப் படவில்லை எனவும், அவரை விட தகுதியில் குறைந்தவர்கள் உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் என்னுடன் விடுதியில் தங்கியிருந்த இயந்திரவியல் ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி பேராசிரியர் வேலுசாமியே அதைப் பற்றி எங்கும் சொன்னாரா என்பது எனக்குத் தெரியாது. அல்லது இயந்திரவியல் துறையில் மற்றவர்களுடைய தகுதி என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ள அந்தத்துறை சார்ந்த அறிவு எனக்குக் கிடையாது. ஆனால் வேதியியல் துறையைப் பற்றி நன்கு அறிவேன். பேராசிரியர் மனோகரனிடம் தான் நான் ஆராய்ச்சி மாணவராக இருந்தேன். வேதியியல் துறையில் இருந்த பேராசிரியர்களில், விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே தரமுள்ள ஆராய்ச்சியில் ஈடுபட்டு, உலக அரங்கில் பெயர் வாங்கியவர்கள். அவர்கள் கற்பித்தலிலும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்று இருந்தவர்கள். நிர்வாகத் திறமையிலும் பேராசியர் மனோகரன் நல்ல பெயர் வாங்கியவர். மாணவர்களின் பிரச்னையானாலும், தொழிலாளிகளின் பிரச்னையானாலும் சுமூகமாகத் தீர்த்து வைத்து அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர். ஆனால் வேதியியல் துறைத் தலைவர் பதவிக்கு அவருடைய முறை வந்த பொழுது வேதியியல் துறைப் பேராசிரியர்கள் பலர் இயக்குனருக்குக் கடிதம் எழுதி, அவர் நியமிக்கப் படக் கூடாது என்று நிர்ப்பந்தப் படுத்தி அவர் தலைவராகவே ஆகவில்லை. இது நான் தரும் ஒரு உதாரணம் தான், இதைப்பற்றி வெளியே சொல்ல பேராசிரியர் மனோகரனே விரும்பாவிட்டாலும், அனைவருமறிய நடந்த இந்த சம்பவத்தை அவரோ மற்றவர்களோ மறுக்க முடியாது.

மற்ற எத்தனையோ விசயங்களை பாதிக்கப் பட்ட பேராசிரியர்களே முன்வந்து சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் சொல்ல மாட்டார்கள். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், பேரா. வசந்தா கந்தசாமி போன்று ஒரு சின்ன சலசலப்பு ஏற்பட்டாலே, அரசு நிறுவனங்களும், முறை சாரா ஆராய்ச்சி நிறுவனங்களும், பத்திரிகைகளும் ஐ,ஐ.டி.யின் மொத்த வரலாறையே ஆராய்ச்சிக்குட்படுத்தி சாதியடிப்படையில் என்ன நடக்கிறது, எது உண்மை, எது பொய் என்று சொல்லப் போட்டி நடக்கும், இந்தியாவில்தான் எல்லா ஆராய்ச்சி நிறுவனங்களும், இருப்பைப் போற்றிப் பாதுகாப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே. பாதிக்கப் பட்டவர்களுக்காகப் பரிந்து பேச வரும் கட்சிகளும் ஓட்டு ஒன்றையே குறிக்கோளாக வைத்து வெற்றுக் கூச்சல் எழுப்பி பிரச்சினையின் நம்பகத்தன்மையையே இழக்கச் செய்து விடுவர். இதையெல்லாம் நம்பி பேராசிரியர்கள் தங்களை இன்னும் சர்ச்சைக்குட்படுத்த விரும்புவதில்லை என்பதே உண்மை.

இதையெல்லாம் வெளிப்படையாக என்னைப் போன்றவர்கள் விவாதித்தால் எங்களை வாயடைப்பதற்கும் முயற்சிகள் நடக்கும். மண்டல் கமிசன் பரிந்துரைகளை எதிர்த்து ஐ.ஐ.டியில் கையெழுத்து வேட்டை நடந்த பொழுது நான் அங்கு இருந்தேன். என்னன்னவோ பிரச்னைகளின் மீதெல்லாம் சிறப்பு விருந்தினர்களை அழைத்து உரை நிகழ்த்தி, நாகரீகமாக தங்களுக்குள்ளும் விவாதம் செய்யும் ஐ.ஐ.டி. மாணவர்கள், இட ஒதுக்கீடு பற்றி எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யவில்லை. கையெழுத்து போடாத மாணவர்கள் (அப்படிப் பட்டவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே) எல்லாம் ஏளனமாகப் பார்க்கப் படும் நிலையால், கையெழுத்துப் போட்டு வைத்தனர். என்னைப் போன்று ஒரு சிலர் அவர்களின் போக்குக்கு எதிராக இன்னொரு கையெழுத்து வேட்டை ஆரம்பித்த பொழுது என்னைத் திட்டி இழிவாக எழுதி என்னுடைய அறைக்குள் துண்டுச் சீட்டு வீசினர்.

ஐ.ஐ.டி.யில் எல்லாம் மோசம் என்றொ எல்லாப் பேராசிரியர்களும் மோசம் என்றோ நான் குறிப்பிடவில்லை. ஐ.ஐ.டி.யில் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். ஒரு சில பேராசிரியர்கள் எந்தவித வேறுபாடும் காட்டாமல், எல்லோரையும் நன்றாக நடத்தி நல்ல உதவிகள் செய்தவ்ர்களும் உண்டு, இப்பொழுது கூட ஒருவருக்கொருவர் குடும்ப அளவில் நல்ல நட்புடன் இருப்பவர்களும் உண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.

எல்லாச் சாதியிலும் நல்லவர்களும் உண்டு, மோசமானவர்களும் உண்டு. சாதியில் நம்பிக்கை வைத்திருந்தாலும் பாரபட்சம் காட்டாதவ்ர்களும் உண்டு. ஆனால் அவர்களால் கூட, சாதிகளின் ஆளுமை பற்றியும், அவை விளைவிக்கும் பிரச்னைகள் பற்றியும் நடுனிலையோடு பார்க்க முடிவதில்லை. சாதியில் நம்பிக்கை வைத்திருந்த வரை (குறிப்பாக ஐ.ஐ.டி. வரும் வரை) நானே கூட இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளனாகவே இருந்திருக்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Badri Seshadri said...

பேராசிரியர் வேலுசாமி பற்றி: சங்கரபாண்டி சொல்வதுபோல, வேலுசாமி அளவுக்கு இயந்திரவியல் துறையில் படிப்பு, திறமை, கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றிலும், அதேபோல மாணவர்களிடையே இதமாக நடந்துகொள்வது, நிர்வாகம் ஆகியவற்றிலும் திறமை மிக்கவர்கள் குறைவுதான். அதனால் வேலுசாமிக்கு துறைத் தலைவர் பதவி, டீன், ஐஐடி டைரக்டர் பதவிகள் நிச்சயமாகக் கிடைத்திருக்கவேண்டும். அப்படிக் கிடைக்காமல் இருந்ததற்கு மேலிடத்தில் - மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் - நண்பர்கள் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். சாதியும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியானால் அது வருந்தத்தக்கது. கேவலமானது.

இதுபற்றி என்னிடம் முழுமையான தகவல்கள் இல்லை.

நான் ஐஐடியிலிருந்து வெளியேறியபின்னர் வேலுசாமியுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஏதோ செய்திப்பத்திரிகையில் வேலுசாமி ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு முதல்வராக உள்ளார் என்று படித்ததுபோல ஞாபகம்.

சாதியத்தால் திறமையாளர்களை இழக்கிறமோதவிர இட ஒதுக்கீட்டால் அல்ல.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

நான் இருவர் பெயர்களைச் சொல்லியதன் அவசியமே, பல்கலைக் கழகங்களை மட்டுமே குறை கூறிக்கொண்டு, ஐ.ஐ.டி.க்களில் மட்டும் தரம் ஒன்றின் அடிப்படையிலேயே எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று இரவி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்ததனால்தான்.

Please let me know where i have said so.

-/சுடலை மாடன்/- said...

//Please let me know where i have said so.//

Ravi,

From what you wrote in the blogs of Thangamani, you and Santhippu on this issue, I got that impression. The basic premise on which you argue against the caste-based reservations in IIT was that IITs are centres of excellence where merit (and not any other factor) is the only criteria in admission and appointments and caste-based reservations will introduce the caste factor in this. My arguement with you is only on the second part. I say that even now caste is one of the factors in deciding the appointments and promotions. I agree that undergraduate and M.Tech admissions are strictly on the basis of JEE and GATE scores while admissions to M.S and Ph.D. are not 100% fool-proof.

If you deny that my I conclusion about your views is wrong, I am happy with it and I withdraw my comments. I am not here to put you on trial quoting your comments and splitting the words. My only request you and others is that we cannot discuss with a pre-conceived notion on the caste-based reservations in IITs either way. I too think that caste-based reservations are not the *ideal* way to fix the imbalances but I do not know of any other corrupt-free approach. Economical-status-based reservation looks very appealing on the outside but is more prone to abuse in our corrupt political system. But we cannot simply ignore the issue and accept the staus quo.

As Sundaramoorthy pointed out in Thangamani's blog, it is the duty of the government to find out why majority of the people are left out of the current process.For identifying a successful and creative scientist or engineer, the knowledge and understnading of science and math are important but not the tests based on numerical aptitude and the knowledge of English. For the indian industry and inventions, the engineers from other institutions seem to have contributed more than the IITans. So there is some disconnect between the Indian system and IIT system that needs to be addressed as well.

Thanks,
S. Sankarapandi