February 17, 2006

புஷ் வரார்... புஷ் வரார்... பராக், பராக், பராக்

என்னங்க ஏதோ கோர்ட்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருக்குதா? இந்த மாதிரி குரல் கொடுப்பது கோர்டுல மட்டும் இல்லங்க. கலக்டர் ஆபிசுலையும் இப்படித்தான் குரல் கொடுப்பாங்க...


அதுக்கு என்னான்னு கேக்குறீங்க! புரியுது... நம்ம புஷ் இருக்காரே, அதாங்க அமெரிக்க ஜனாதிபதி அவரு இந்தியாவுக்கு அடுத்த மாசம் வரப்போறாராம்... அவர நீங்க வெறுமனே அமெரிக்க ஜனாதிபதின்னு நினைக்காதீங்க... அவரு உலகத்துக்கே ஜனாதிபதி... அதான் அவ்வளவு மரியாதை!
அட அத விடுப்பா, எதுக்கு வரார்ன்னு நீங்க கேக்குறது காதுல விழுது!


நம்ம ஊர்ல நெறைய மிட்டாய் கடைங்க, மளிகை கடைங்க, ஜவுளி கடைங்க, ஹார்டுவேர் கடை, சாப்ட்வேர் கடைங்கல்லாம் இருக்குல்ல... இந்த மாதிரி கடைகல்ல மட்டும் 250 பில்லியன் டாலர் வியாபாரம் நடக்குதாம்! (ஒரு பில்லியன்னா நூறு கோடி. அத அப்படியே டாலர்ல வேற கூட்டனும்...

என்னால முடியாதுப்பா... உங்களுக்கு தெரிந்த பின்னூட்டம் இடுங்க...) சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த மாதிரி கடைகள்ளாம் நமக்கு நடத்த தெரியலையாம்! இன்னும் கூட ஹைடெக்காகவும், ஹைஜீக்காகவும் நடத்தனுமாம்... அதுக்காக இந்த வியாபாரத்த எல்லாம் நாங்களே நடத்துறோம். அதுக்கு நீங்க கதவ திறந்த மட்டும் போதுன்னு சொல்லத்தான் வர்றார்...


இன்னிக்கி ஏதோ பேப்பர்ல போட்டுருக்கிறாங்க... வியாபாரன்னா சரி சமமா இருக்கனும்னு புஷ் பேசினதா! அட ஆமாப்பா... இந்த சில்லறை வியாபாரத்த நம்ம மன்மோகன் சிங் இருக்காரே வெறும் 51 சதவீதம் மட்டும்தான் அனுமதிப்பேன்னு சொல்லிட்டார். அதுக்குத்தான் இந்த புஷ் இவ்வளவு எகிறு எகிறுறாரு...


ஹலோ... நீங்க பேசுறது எனக்கு நல்லா கேக்குது. இந்த புஷ்ஷூதான் அவருடைய செல்ல நாய்குட்டிக்கு இந்தியான்னு பேர் வெச்சார்... அததானே சொல்றீங்க...

இல்லையா! வேற என்னப்பா சொன்னீங்க... நம்ம ஊர்ல நினைற பன்னிங்க மேயுது. அதுக்குன்னு எந்த அடையாளமும் இல்லன்னு ரொம்ப வருத்தமாக இருந்தது. அதனால நம்ம பசங்கள்லாம் சேந்துக்குன்னு வெள்ள பன்னி ஒன்ணுக்கு புஷ்ஷூன்னு பேர் வெச்சாங்க... ஓ அதான பார்த்தேன்... நம்ம ஆளு சும்மா இருப்பானா...


அன்னே யார்னே அது! உங்க பக்கத்துல இருந்துக்குன்னு நொய், நொய்ன்னு பேசிக்கின்னு இருக்காரு. புஷ்ஷூ காதுல விழுந்துறப்போவுதுன்னே... நம்மலயும் டெரரி°ட்டுன்னு கைது பன்னிடப்போறாரு...


அது ஒண்ணும் இல்ல... இந்த அமெரிக்காகாரன்தான் பனாமா நாட்டு ஜனாதிபதிய புடிச்சி வெச்சிருக்கான். ஈராக் நாட்டு ஜனாதிபதிய புடிச்சி வெச்சிருக்கான். இது போதாதுன்னு சிரியா, வடகொரியா, கியூபா இதெல்லாம் ரவுடி நாடுன்னு பட்டம் வேற கொடுத்திருக்கான்... இப்ப இந்த பட்டியல்ல ஈரானையும் சேத்துக்கிட்டான்னு சொல்றாருப்பா....


அடப்பாவி இந்த உம்மனா மூஞ்சிக்கு இதெல்லாம்கூடவா தெரியும்! இது மட்டுமா! இன்னும் எவ்வளவோ இருக்குன்னு சொல்றாம்பா...


இன்னாபா அது! ஈரான் - பாகி°தான் - இந்தியா மூணு நாடு வழியா சமையல் எரிவாயு கொண்டார இந்த மூணு நாடுகளும் ஒத்துக்கிச்சாம். அது அமெரிக்காவுக்கு புடிக்கலையாம்! அதுக்கு பதிலா ஆக்கிரமிப்பு ஆப்கானி°தான் கிட்ட இருந்து எரிவாயு வாங்கனுமாம்!....


அடப்பாவி... இப்படியா சொல்றான் புஷ்....


அது கிடக்கட்டும்பா தீவிரங்க பதுங்கிகிறாங்கன்னு சொல்லி பாகி°தான்ல இருக்குற கிராம மக்கள் மேல ராக்கெட் விட்டானாம்மே! அட நீ வேற அமெரிக்காதான் உலக ரவுடியாச்சே! அது பாகி°தானா இருந்தா என்ன? இந்தியாவா இருந்தா என்ன! மொத்ததுல அமெரிக்காவுக்கு பொழப்பு நடக்கனும்...
யோவ்... இன்னிக்கி பேப்பர் பாத்தீயா! இடதுசாரிங்க புஷ் வரும்போது பெரிய அளவுக்கு எதிர்க்கப்போறாங்களாம். ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் - கருத்தரங்கம்னு நடத்தப்போறாங்களாம்...
பாத்தீயா!


மொத்தத்துல புஷ்ஷூ மூஞ்சில கரிய பூசப்போறங்கன்னு சொல்லு.... நம்ம தமிழ்மணங்கல்லாம் என்னப் பன்னப்போறாங்கன்னு பாப்போம்!

4 comments:

மணியன் said...

புஷ் வருகை புஸ்ஸென்று போய்விடும் வாய்ப்புள்ளது.
ஆமாம், சிவப்புக் கம்பளத்திற்கு பதிலாக செங்கோட்டையிலேயே வரவேற்பாமே ?

சந்திப்பு said...

மணிமலர் புஷ் வருகை குறித்து இந்திய அரசு சரியான விபரத்தை இன்னும் வெளியிடவில்லை என்று நினைக்கிறேன். மொத்தத்தில் புஷ் வருகைக்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்களை வலுவாக நடத்துவதற்கான தயாரிப்புகள் துவங்கி விட்டது. இதுவும் அதன் ஒரு பகுதியே. தங்களது வருகைக்கு நன்றி. இதுகுறித்து மேல் விபரங்கள் தெரிந்தால் நீங்களும் எழுதலாம். புஷ்ஷின் அநியாயங்களை தோலுரிப்பது மிக அவசினமான ஒன்று என நான் நினைக்கிறேன்.

thiru said...

//How can India, as a land with glorious tradition of humanism, welcome such a man?//

We do have our glorious leaders like Narendra Modi, Sawarkar and Co... So we might have found alliance with Mr.Bush :P

சந்திப்பு said...

Thanks Studyofsocialism and Thiru

Thiru Excellent Comment. But, our people has rejected those ugliest allience Sang and Bush Parivar.

There is no space for these peoples.

I seen your aalamaram. Realy it's a Bothimaram....