February 03, 2006

தாமரை தொப்பி

இனிய உதயமானது இன்று! அதிகாலையே திருமணத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நீண்ட பயணம்தான். குறைந்தது இரண்டு மணி நேர பேருந்து பயணம். கையில் இனிய உதயம்.

பேருந்தில் பயணம் செய்யும் போது படிக்க ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே தூக்கம் என்னை ஆக்கிரமிக்கும். இன்றோ இனிய உதயம்! பாப்லா நெருடாவின் ஒரு கவிதையும், தாமரை தொப்பி என்ற கவிதையும், சக்கரியாவின் நேர்காணலும் படித்தேன். மூன்றுமே சும்மா... நச்சுன்னு இருந்தது.

தாமரை தொப்பி என்ற சிறுகதை ஆட்சியாளன் சுயசிந்தனையும், கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால் அந்த நாட்டு மக்கள் எத்தகைய அவதிக்கு உள்ளாவர்கள் என்பதை உரைக்கும் கதை. மிக அழகாகவும், நகைச்சுவையாகவும், எந்த இடத்திலும் போரடிக்காமல், மிக விரு விருப்பாக கதை நகர்ந்தது. கதையின் ஒவ்வொரு இடத்திலும் ஒரு டர்னிங் பாய்ன்ட்.
கதை சுருக்கம்


மன்னன் ஒருவன் பல வைப்பாட்டிகளை வைத்திப்பவன். தாமரையை மணந்த பிறகு எந்த வைப்பாட்டியையும் அவன் சேர்த்துக் கொண்டே இல்லை.


மன்னன் ஒரு நாள் குதிரையில் தனியாக உலா வரச் சென்றான். அப்போது மிக தூரத்திற்கு சென்று விட்டான். யாரும் இல்லாத வயல் வெளியில் குதிரையை கட்டி விட்டு, தானும் ஓய்வெடுக்க விரும்பினான். அப்போது தூரத்தில் ஒரு மிக அழகிய இளம் பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தாள்.

மன்னன் அவள் அருகில் சென்று தாகத்தற்கு தண்ணீர் கிடைக்குமா என கேட்க! ஓ தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறினாள். மன்னருக்கு தண்ணீர் ஊற்றும் போது தாமரையின் மிக மெல்லிய புன்னகை வலையில் வீழ்ந்து விடுகிறார் மன்னர்.

அழகியே நான் உன்னை ஒன்று கேட்கலாமா? என்று மன்னர் கூற - நான் அழகி இல்லை என் பெயர் தாமரை என்று சொன்னாள்.

இதைத் தொடர்ந்து நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூற, பத்திரகாளியானாள் தாமரை...

ஏ பினமே..., பன்னி, காட்டுப் பன்னி, கரடி, ஓடிடு இல்லாட்டி மண்டைய பிளந்துடுவேன்.. என கட, கடவென தன் கோபக் கனலை வெளிக்காட்டினாள். அதிர்ந்து போன மன்னர்

நான் யார் தெரியுமா? என்று கேட்டு நான் மன்னர் என்று கூறி, நான் உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறினார். இத முன்னாலேயே சொல்லியிருக்க கூடாதா என்று தாமரை கூற...

நான் சொல்றதெல்லாம் நீ செய்வியா என கேட்க மன்னர் ஆமாம் என தலையாட்ட... பிறகு என்ன

ஒரு வழியாக இருவருக்கும் திருமணம் நடந்தது. மன்னரின் ஆசைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டாள் தாமரை... ஆனால் மன்னன் மட்டும் சோகத்திலேயே இருந்தார்.

என்ன காரணம் என்று தாமரை கேட்க! நீ என்னை அன்புடன் கூப்பிட வேண்டும் என்று கூற... மீண்டும் டேய் பன்னி, கரடி குட்டி, செத்த பினமே... என அர்ச்சிக்க மீண்டும் மன்னர் இந்த பேச்சால் உற்சாகமானார்...

தம்பதிகள் இருவரும் மாடியின் மேல் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் போது அழகான தொப்பி அணிந்து சென்றதை பார்த்த தாமரை அது வேண்டும் என கேட்க!

உடனே மன்னரின் உத்தரவு பறக்க... மக்களிடம் பதட்டம் தொற்றிக் கொண்டது.. மன்னர் ஏதோ வேறு நாட்டோடு போர் புரிய போகிறார்... அதுதான் இவ்வளவு பரபரப்பு என பேசத் துவங்கி விட்டனர்.

எப்படியோ ஒரு வழியாக தொப்பியை கொண்டு வந்து கொடுத்ததும் தாமரை திருப்தியானால்... அதோடு மட்டும் நிற்கவில்லை அவள்... இதை நம் மக்கள் எல்லோரும் அணிய வேண்டும் என்று கூற...

மன்னர் விழி பிதுங்கினார். அது எப்படி தாமரை முடியும் என கேட்க! தாமரை ஆத்திரத்தோடு கோபித்துக் கொண்டு டேய் பன்னி, சனியனே, காட்டு பன்னி, கரடி என கத்த மன்னர் மனம் குளிர்ந்து அதற்கும் உத்தரவிட...

ஒரே... தமாஷ்தான் போங்கள் நாட்டில் உள்ள அனைவரும் பெரியவர், சிறியவர், குழந்தைகள் என எல்லோரும் இந்த தொப்பியை அணிந்து கொண்டனர். சை° மட்டும் ஒரே சை° என்பதால் பலருக்கும் இது பிரச்சினையானது. பலரின் தலைமுழுக்க இது மூடிக் கொண்டது.... குழந்தைகள் பாடு திண்டாட்டம்தான்.

மன்னரும் - ராணியும் உலா வருவதால் அனைவரும் இந்த தொப்பியை அணிய வேண்டும் என்ற உத்தரவு பறக்க... வீதியில் அனைவரையும் பார்த்தபடி வந்தபோது, கூட்டத்தில் இருந்து குரல் வந்தது மன்னனும் - ராணியும் தொப்பி அணியவில்லை என்று...

மந்திரி உடனே ஏற்பாடு செய்ய இருவருக்கும் தொப்பி கொண்டு வரப்பட்டது... அந்த தொப்பி தாமரைக்கும் பொருந்தவில்லை, ராஜாவுக்கும் பொருந்தவில்லை! பிறகு என்ன?

தாமரை தன்னுடைய அழகிய கூந்தலைக் கொண்டு கட்டி விட்டுக் கொண்டால். தொப்பியும் ஜம்மென்று நின்று விட்டது. ஆனால் மன்னர் பாடு திண்டாட்டம் முகமே தெரியவில்லை.

தாமரையை பார்த்து உனக்கு தொப்பி எப்படி பொருந்தியது என கேட்க. பன்னி, காட்டு பன்னி, வழுக்கத் தலையா... முதல்ல முடிய வளரு... அப்பத்தான் பொருந்தும் என்பதோடு கதை முடிகிறது...

சுராவின் மொழி பெயர்ப்பு அற்புதம். நீங்களும் படிங்க...

No comments: