February 10, 2006

சீண்டப்படாத கட்சி பா.ஜ.க.

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் போது, இலை என்ன? என்று கேட்பார்கள். அதுபோல இன்றைக்கு தமிழக பா.ஜ.க.வின் நிலை உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஓயாது குரல் கொடுத்து போராடி வரும் திருமாவளவனின் - விடுதலை சிறுத்தைகளுக்கும், கிருஷ்ணசாமியின் - புதிய தமிழகத்துக்கும் இன்னும் கூட இரண்டு பெரிய கூட்டணியின் கதவுகள் திறக்கப்படவில்லை. இருவமே வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

தேர்தல் நெருங்கும் தருவாயில்,இந்த இரண்டு கட்சிகளும் ஏதாவது ஒரு கூட்டணியில் நிச்சயம் இடம் பெறும். ஏனென்றால் அதன் வாக்கு வங்கி ஒரு காரணம். தலித் அரசியல் இன்றைக்கு முன்னுக்கு வந்துள்ளது மற்றொரு காரணம்.

தேர்தல் என்றாலே கொடி வைத்திருப்பவர்கள் எல்லாரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் காலம் இது. தேர்தலுக்கு தேர்தல் புதுக்கட்சிகள் முளைப்பதும் அது யாருடனாவது கூட்டு சேர்ந்தே, ஆதரவு தெரிவித்தோ பிழைப்பை நடத்தும். ஆனால்....

பா.ஜ.க.வின் அரசியல் நிலை அவராக முன்வந்து நாங்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைப்போம் என்று உரக்கக் கூவினாலும், விஜயகாந்துக்கூட சீண்டாத கட்சியாக பா.ஜ.க. மாறிவிட்டது.
அம்மா திமுகவோ பா.ஜ.க.வின் பெயரை உச்சரிக்கக்கூட தயாரில்லை. அதே நிலைதான் திமுக கூட்டணியிலும்.

பா.ஜ.க.வின் பெருந் தலைவர்கள்? நாங்கள் 234 தொகுதிகளிலும் தனியாக நிற்போம் என்று மார்தூக்கினாலும், வாக்காளர்கள் இவர்களைப் பற்றி ஏதாவது கண்டுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை?

நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும்... டும்... டும்... என்று சொல்வார்களே! அது போல பா.ஜ.க.வின் மதவெறிச் சாயம் வெளுத்து நாளிப்போனதே இப்படி தமிழக மக்கள் அரசியல் ரீதியாக அம்போவென விட்டு விட்டதற்கு.

பா.ஜ.க. மத்திய ஆட்சியில் இருந்தபோது அய்யய்யோ இவர்களது வாய்ஜாலத்தை சொல்லவே வேண்டாம். இந்திய அரசியலே வாஜ்பாய் தலையில் நடைபெறுவதாக ஒரு மதப்பு இருந்தது. அந்த மதப்பு எல்லாம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் காற்றில் பறந்து போனது, போதாக்குறைக்கு பா.ஜ.க.வின் கோஷ்டி மோதல், சங் பரிவாரமே பா.ஜ.க.வை வெறுக்கும் சூழ்நிலை, மேலும் பா.ஜ.க.வில் ஜோசி போன்ற செக்° குருக்கள் பெருகி விட்டது. இது தவிர பாராளுமன்றத்தையே மதிக்காத அடாவடி போக்கு. இவ்வளவு ஏன்? மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரையே மதிக்காத ஒரே கட்சி இந்தியாவில் இருக்கிறது என்றால் அது பா.ஜ.க.தான்., புறக்கதவு வழியாக மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது மாற்றுக் கருத்தை தெரிவிக்க முனைந்தபோது, நமது இந்திய பிரதமர் அதை வாங்க மறுத்தது சாட்டையடி....

இதைவிட உச்சம் குஜராத்தில் தோண்டத் தோண்டக் கிடைக்கும் சிறுபான்மை மக்களின் எலும்புகள்... 3000க்கும் மேற்பட்டவர்களை கதறக், கதறக் கற்பழித்து, கொலை செய்த மகா பாதகர்களை தமிழக மக்கள் ஏற்பார்களா? நிச்சயம் ஏற்க மாட்டார்கள் என்பதுதான் தமிழகத்தில் மக்களாகவோ பா.ஜ.க.வை அரசியல் துறவறம் போகச் செய்து விட்டனர். இந்த துறவறம் மட்டும் போதுமா? எதிர்காலத்தில் பா.ஜ.க. என்ற அடிச்சுவடே இருக்குமா? என்றுத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

5 comments:

Anonymous said...

Typing "Amma" Instead of "Anna" is it a purposeful writing or slip.

Anyhow interesting analysis

முத்து(தமிழினி) said...

//விஜயகாந்துக்கூட சீண்டாத கட்சியாக//

:)))))))

ஸில்வியா said...

oru dhesiya katchiyai neerum tamil naattu makkalum insult pannuvathai erka mudiyavillai ayya! read cho. rams and gurumoorthy's article about why we need to support BJP

Anonymous said...

Aamam nanbare.....

Ethirkatchi BJB - 3000 Kolaigal Gujaratile pannuchu...Alum Katchi Indira padukolai appo 5000 Kolaigal pannuchu.
Ella katchium Kolai kara katchi than. Ana Suthanthiram Vangi kodutha Congress Vetti ellama poguthu. Tamila valatha DMK,
Jathi katchi illama irukke mattenguthu.... BJB 25 varusamthan achu...Inanamum tamil natta alavillai, aana aanda congress
nelamai than theriallai. kasmirlie innamum kathara kathara kolai kollai/karpalippu ellam nadakka karanamana congress eethukittanga,
samye illainu solli sambarchuttu, appanu koopitavalaiye kattikittu ponavangalai follow pandravangalai mattum tamil makkal atharikkanumakkum.


Chinna Payyan

சந்திப்பு said...

முத்து! விஜயகாந்த் கூட சீண்டாத கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது என்பதில் என்ன ஆச்சரியம்! உண்மை அதுதானே. பா.ஜ.க. ஒரு பண்டோரா பாக்° அதனுடன் யார் கூட்டு வைத்தாலும், அவர்களுடைய எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகி விடும்.

சில்வியா, ஒரு தேசிய கட்சியை அவமானப்படுத்துவதாக சொல்கிறீர்கள். எந்தக் கட்சியையும் அவமானப்படுத்துவது என் நோக்கமும் அல்ல தமிழ் மக்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. தமிழ் மக்கள் என்றைக்கும் தேசியத்துடன் ஒத்துப் போகிறவர்கள். அது மட்டும் அல்ல; தேசிய கட்சி தேச துரோக கட்சியாக இருக்கக்கூடாது (வாஜ்பாயும், சவர்க்கரும் சுதந்திரப் போராட்டத்தில் இழைத்த தூரோக வரலாறு தெரியாதா?) என்பதுதான் எனது விருப்பம். சோ, குருமூர்த்தி இவர்கள் எல்லாம் சங்பரிவாரத்தின் அங்கங்கள் எனவே அவர்களது வாய்° பச்சோந்திப்போலத்தான் ஒலிக்கும்...

முதல் அனானமிக்கு நன்றி! அண்ண திமுகவின் இன்றைய வடிவம் அம்மா திமுக என்பதால்தான் அவ்வாறு பயன்படுத்தினேன்.

இரண்டாவது அனானமி! தங்களது ஆதங்கம் நியாயமானது காங்கிர° செய்த படுகொலைளும் ஏற்கத்தக்கதல்ல: இரண்டுமே இழிவான செயல்களே! ஒரே ஒரு வித்தியாசம் அது எமோஷனாலாக எழுந்தது. குஜராத் திட்டமிட்டு செய்தது. பா.ஜ.க. தோன்றி 25 ஆண்டு என்பது கண்துடைப்பு வேலைதான் இதனுடைய தாய் அமைப்பு ஜனசங்கம் என்பது மறந்துப் போச்சா? பா.ஜ.க. தோன்றியது முதலே மதவெறி என்னும் மிருக குணத்தோடு செயல்படுகிறது இதை மறந்து விட வேண்டாம். இந்திய சூழலில் ஜாதி கட்சிகள் தோன்றுவது தவிர்க்க முடியாது. ஆனால் ஜாதி வெறி இருக்கிறதா, அடுத்த ஜாதிக்கு எதிராக வன்மம் தூண்டி விடப்படுகிறதா என்பதுதான் கேள்வி. பா.ஜ.க. தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக எழுதுவதும், பேசுவதும், தாக்குவதும் தொடர்ந்து நடக்கிறது...
எல்லாரும் படிக்கிற மாதிரி தமிழில் எழுதுங்கள்...