February 20, 2006

கலவை கர்ப்பம்

காஞ்சிபுரம், கலவையில் உள்ள சங்கரமடத்தில் தொண்டூழியம் புரிந்த பிராமண பெண் கர்ப்பம் தரித்து, குழந்தை பெற்றுள்ளார். கர்ப்பம் தரிப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா என்று கேட்கலாம். திருமணம் ஆகாத அந்தப் பெண் கலவை மடத்தை சேர்ந்த கயவன் ஒருவன் கர்ப்பமாகியுள்ளான்.

இந்த விஷயத்தை சங்கர்ராமன் கொலை குற்றவாளி சங்காரச்சாரியாரிடம் கொண்டு போக, அவரோ, யார் கர்ப்பம், யார் கர்ப்பம் இல்லை என்று பார்ப்பதா என் வேலை? என்று கை கழுவியுள்ளார். இவரது ஒழுக்கமே சந்தி சிரிக்கும்போது, இவர் எப்படி இன்னொருவருக்கு நீதி வழங்க முடியும்! பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் தன் உள்ளத்தில் அடக்கி வைத்திருந்த தீ.... பற்றியெறிந்ததே! இதைதான் தமிழக மக்கள் மறப்பார்களா?

கடவுளுக்கு தொண்டூழியம் புரிகிறோம் என்ற போர்வையில் ஒழுக்கக்கேடு, கொலை புரிதல், சதி திட்டம் தீட்டுதல் போன்ற இழி செயல்களில் செயல்படுவது மடங்களின் இன்றைய நவீன கலாச்சாரமாகி போய் விட்டது! இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் முகமூடிகள் - சங்பரிவார் கூட்டம் மறுபுறம்!

இது குறித்து யாராவது வாய் திறந்தால், அவர்கள் எல்லாம் இந்து மத துரோகிகள் என்று பட்டம் சூட்டப்படும். முன்மாதிரியாக இருக்க வேண்டிய மத பீடாதிபதிகளே இத்தகைய அட்டூழியங்களில் ஈடுபடுவது இந்து மதத்திற்கு களங்கம் விளைக்காதா? இவர்களை தண்டிக்க வேண்டியவர்கள் யார்? முதலில் அவர்களிடம் இருந்து புனிதமான? இந்து மதத்தை காப்பாற்ற வேண்டாமா? அல்லது இத்தயை சித்துவேளைகளெல்லாம் கடவுளின் பெயரால் நிகழ்த்தப்படுவதால் இவற்றை கடவுள் ஜீரணித்துக் கொள்வாரா?

மனிதனை பார்த்தாலே தீட்டு, தொட்டால் தீட்டு என்று சொன்னவர்கள் மடத்திற்குள்ளேயே அந்தரங்க லீலைகளை நடத்துவது இந்து மதத்தை புனிதப்படுத்தவா?

மனித உரிமை, பெண்ணுரிமை, ஜனநாயகம் என 21ஆம் நூற்றாண்டில் இருக்கும் போதே இத்தகைய அட்டூழியங்களை புரியும் இவர்களின் மூதாதையர்கள் இந்துக்களாக சொல்லிக் கொள்ளும் தலித் மக்களையும், இதர இந்துக்களையும் எத்தனை பாடு படுத்தியிருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை!

சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் இத்தகைய போலிகளுக்கு முதலிடம் என்பது வெட்கக்கேடானது இல்லையா?

கலவையில் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு காரணமாக கயவாளி உடனே முன்னுக்கு வரவேண்டும். இல்லையென்றால் இன்னொரு புராணம் உருவாக இதுவே காரணமாகவும் அமையலாம். என்ன சூரிய பகவானால் கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று ஏதாவது ஒரு பிளாக்கில் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

11 comments:

மூர்த்தி said...

கலவை என்றால் கலப்பு என்று ஒரு பொருள். நான் அந்த அர்த்தத்தில் படித்தேன். பின்னர் முழுக் கட்டௌரையையும் படித்துத் தெளிந்தேன். நன்றி சந்திப்பு அவர்களே.

சல்மா அயூப் said...

இந்த தகவலை தங்கள் பதிப்பிலிருந்துதான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

இது எந்த ஆதாரமான தகவல் என்று தாங்கள் கூறவேண்டும்

நன்றி

சந்திப்பு said...

நன்றி மூர்த்தி, கலவைக்கு அப்படியொரு அர்த்தம் இருக்கிறதா! நல்ல தகவல்:
ஜோதி தங்கள் கேட்ட ஆதாரத்திற்கான லிங்கை கொடுத்துள்ளேன்.

http://thatstamil.oneindia.com/news/2006/02/20/kanchi.html

நாகு said...

ada Kadauuley....romba mosama poguthu...cheecheee!!

Anonymous said...

//என்ன சூரிய பகவானால் கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று ஏதாவது ஒரு பிளாக்கில் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.//

சங்கராச்சாரியார் கைதால் சுனாமி வந்தது என்று சொன்னவர்கள், இதை சொன்னாலும் சொல்லுவார்கள்...

சந்திப்பு said...

நாகராஜன் இந்த மடக்கூத்தாடிகள்தான் நம்ம கலாச்சாரத்தையே சூறையாடி வருகிறாங்க...

அனானி சும்மா நச்சுன்னு இருக்கு. வரலாற்றை திருப்புறதுல கைவந்த கில்லாடிகள் இந்த மடாதிபதிகள்... மத வேடதாரிகள்... மத வியாபாரிகள்...

முத்து(தமிழினி) said...

//என்ன சூரிய பகவானால் கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று ஏதாவது ஒரு பிளாக்கில் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. //

யோவ் சந்திப்பு , உங்க எழுத்து மெருகேறி வருதுன்றதுக்கு உதாரணம்யா மேற்கண்ட வரி....


but i cannot comment on the story becos we have to wait for some time before analysing facts

சந்திப்பு said...

முத்து! நன்றி.
இன்றைய மாலை நாளிதழில் வந்த செய்தியையும் இங்கே சொல்லி விடுகிறேன். பா.ஜ.க. தேசீய செயலாளர் இல. கணேசன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? இனிமேல் யாராவது இந்துக்களைப் பற்றியோ, சங்கராச்சாரியார்களைப் பற்றியோ ஏதாவது பேசினால், வீட்டுக்கு போவதற்குள் இரண்டு கைகளும் இருக்காது! சங்பரிவாரின் அரசியல் முதிர்ச்சியை பாத்தீங்களா!
இதுதான் பாசிசம்... நாஜியிசம்... மோடியிசம்....

Anonymous said...

கலவை மடம் நல்ல பேரு( குழந்தைப் பேரு) கிடைக்குமிடம்

இதற்கும் ஏதாவது கடவுள் பேர் சொல்லி அந்த பொண்ணை ஏமாத்தப்போறாங்க..

நல்ல மடம், நல்ல மடாதிபதி, மிகவும் நல்ல பக்தர்கள் இப்படியே போனா கின்னஸில் இடம் பிடிக்கலாம்.

Gopalan Ramasubbu said...

"என்ன சூரிய பகவானால் கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று ஏதாவது ஒரு பிளாக்கில் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை"

Sanarachariyar once said 80% of working womans are not ethical.so he can say anything.

சந்திப்பு said...

நன்றி ராமசுப்பு, அனானி

சங்கராச்சாரியாரும், சங்பரிவாரும் பின்பற்றும் இந்து தத்துவத்தின் ஆதாரமே மனுதர்மம்தான். அந்த மனு தர்மத்தில் பெண்களை மனித ஜன்மமாகவே மதிக்கவில்லை. சூத்திரர்கள் எப்படி தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டார்களோ, அதேபோல்தான் பெண்களும். பெண்கள் வேதத்தை கேட்டாலோ, கற்றாலோ காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது. அதனால்தான் சங்பரிவாரத்தில் (ஆர்.எ°.எ°.)இல் பெண்களை உறுப்பினர்களக சேர்த்துக் கொள்வதில்லை. அதேபோல் கடவுளின் முன்னாள் அனைவரும் சமம் என்று கூறிக் கொண்டே, கர்ப்பகிரகத்தினுள் பெண்களை அனுமதிப்பதில்லை. மதத் தத்துவமே பெண்களை மதிக்காத போது, சங்கராச்சாரியார் எப்படி மதிப்பார்! அவருடைய திருவாயில்! இருந்து இதுவும் வரும், இதற்கு மேலும் வரும்... இந்துக்கள்! இளிச்சவாயர்களாக உள்ளவரை...