February 07, 2006

‘உண்மை’ உண்மையல்ல!

ஆம்! நாம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில், பல விஷயங்களில் எதை உண்மை என்று நம்புகிறோமோ அது உண்மையாக இருப்பதில்லை; கானல் நீராகி விடுகிறது. இதைதான் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற ஹெரால்ட் பிண்டர் அவரது ஏற்புரையில் எடுத்துரைத்துள்ளார்.

அவர் எழுப்பிய கேள்வியில் மிக முக்கியமானது “ஈராக்கில் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறியதே!” அது உண்மையா? என்பதுதான். இன்றைக்கு ஈராக் அமெரிக்காவின் பிடியில் முழுமையாக வந்து விட்டது. இப்போதாவது அங்கிருந்து பேரழிவு மிக்க ஆயுதங்கள் எடுக்கப்பட்டதா? உண்மை என்ன ஆனது?

இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பது ஈரான்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு, இந்த விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு போகப்பட்டு பொருளாதார தடை உட்பட இராணுவ தாக்குதல் நடத்துவதுற்கு அமெரிக்கா முழுமையான அளவில் தயாராகி வருகிறது.

சமீபத்தில் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஈரானுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரான் தரப்பில் கூறப்படுவது என்ன? நாங்கள் அணுவை ஆக்கத்திற்கு பயன்படுத்திடவே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். நவீன விஞ்ஞான உலகில் இது மிக அவசியமானது என்று கூறியுள்ளது ஈரான். இதில் என்ன தப்பு.

இன்றைக்கும் உலகை பல முறை அழிக்கக்கூடிய வல்லமை படைத்த மிகப் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் உள்ள நாடு எது என்று கேட்டால்? குழந்தை கூட எளிதாக பதில் கூறி விடும் அமெரிக்கா என்று.

அணு ஆயுதங்களை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் போடுவதெல்லாம், அது ஏழை நாடுகளோ, வளரும் நாடுகளோ தங்களை விட - வேறு யாரும் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடக்கூடாது என்பதற்காகத்தான்.

இந்த அமெரிக்கா ஓநாயின் நீலிக் கண்ணீருக்கு துணை போயிருக்கிறது இந்தியா. இந்தியா நேரு காலத்தில் இருந்து சுயேச்சையான வெளியுறவு கொள்கையில் ஈடுபட்டு வந்த நாடு? இன்றைக்கு அதன் நிலை என்ன? அமெரிக்காவின் காலடியில் சரணாகதி... என்ற நிலையை நோக்கி செல்கிறது. இது சரியா?

ஈரான் இன்னொரு கேள்வியை எழுப்புகிறது. இதற்கு அமெரிக்கா ஓநாயோ, அல்லது ஐரோப்பிய ஊளைச் சதை ஜாம்பவான்களோ வாயே திறப்பதில்லை. என்ன அது?

இ°ரேலிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறதே இதை கட்டுப்படுத்தவோ, அல்லது இதன் மீது நடவடிக்கை எடுக்கவோ ஏன் முயலவில்லை என்று கேள்வி எழுப்பும் போது, அமெரிக்கா கப் - சிப்பாகி விடுகிறது.
எதிர்கால உலகின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது - எண்ணெய் வயல்கள்தான் - இந்த சூழலில் மத்திய ஆசியாவை கபளிகரம் செய்துக் கொள்ள அமெரிக்க துடித்துக் கொண்டு இருக்கிறது. இதற்காகத்தான் இசுரேலையும் இசுலாமிய நாடுகளுக்கு எதிராக கொம்பு சீவி விட்டு முரட்டுக் காளையாக வளர்த்து வருகிறது.

மொத்தத்தில் உலகின் நவீன எசமான் அமெரிக்கா - புஷ்:

நாமெல்லாம் அடிமைகள் இல்லா நவீன அடிமைகள்! எந்த வொரு நாட்டின் சுயாதிபத்தியத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் அமெரிக்காவின் மூக்கு உடைபடுவது வெகு சீக்கிரத்தில்....

அமெரிக்காவின் சீண்டலுக்கு துணைபோகும் இந்திய அரசு, மிக விரைவில் சர்வதேச அளவில் பெட்ரோல் விலை உயர்வு என்ற பெயரில், இந்திய மக்கள் மீது பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு குண்டாக வீசப்போகிறது. அமெரிக்காவின் தலையாட்டி பொம்மையாக, இப்படியே போனால் இந்திய மக்கள் இந்த ஆட்சியை குண்டுக்கட்டாக வீசுவார்கள்....

3 comments:

Anonymous said...

அமெரிக்காவை பற்றி அதிகமாக திட்டும் நீங்கள் என்ன இடதுசாரியா? முசுலிம் நாடுகளை எல்லாம் வளைத்து பிடிக்கும் இவர்கள், இந்தியாவுக்கு எதிராக பாகிசுதானை தூண்டி விடுமா? ஒன்று மட்டும் தெரிகிறது : என்னதான் செய்தாலும், நாங்க அமெரிக்கா பின்னாடித்தான் போவோன்னுன்றத தெளிவா சுட்டிக்காட்டியிருக்கிறீங்க. இது ஒரு விஷயம். இரண்டாவது, நம்ம வாங்கன சுதந்திரம் இப்போது 59 ஆண்டு ஆகிறது. 66ஆவது ஆண்டில் இது அமெரிக்கா கையில போயிடுமா?...! மீண்டும் ஒரு மகாத்மா தேவை!

சந்திப்பு said...

அட நீ வேறப்பா! ஏதாவது ஒண்ணு எழுதுனாலே, இடதுசாரியா, சோசலி°டான்னு ஆரம்பிச்சுடுறிங்க... ஹாலோ நான் இந்தியசாரி. இந்தியாவுக்கு எதிராக பாகி°தானை தூண்டி விடுமா என்று கேட்டிருக்கிறீர்கள்! வளரும் நாடுகளுக்கு இடையே மோதலை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் தந்திரம். இது எப்படி இருக்குதுன்னா... 300 வருடமாக நாம் வெள்ளக்காரன் கிட்ட அடிமையா இருந்தோம். இப்போது அமெரிக்கா மறைமுகமாக இந்தியாவை அடிமையாக்க துடிக்கிறது. உங்க கணிப்பு சரிதான்!

சந்திப்பு said...

அட நீ வேறப்பா! ஏதாவது ஒண்ணு எழுதுனாலே, இடதுசாரியா, சோசலி°டான்னு ஆரம்பிச்சுடுறிங்க... ஹாலோ நான் இந்தியசாரி. இந்தியாவுக்கு எதிராக பாகி°தானை தூண்டி விடுமா என்று கேட்டிருக்கிறீர்கள்! வளரும் நாடுகளுக்கு இடையே மோதலை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் தந்திரம். இது எப்படி இருக்குதுன்னா... 300 வருடமாக நாம் வெள்ளக்காரன் கிட்ட அடிமையா இருந்தோம். இப்போது அமெரிக்கா மறைமுகமாக இந்தியாவை அடிமையாக்க துடிக்கிறது. உங்க கணிப்பு சரிதான்!