ஒருவாரமாக வாடகைக்கு வீடு தேடி அலைந்த வித்யாவின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை ஓடியது. எதிர்பார்த்த மாதிரியே வீடு கிடைத்தது. வாடகை கொஞ்சம் அதிகம்தான் ரூ. 1100/-, அட்வான்° ரூ. 5000/-.
எப்படியோ இனி கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்! என்ற நினைப்புடன் தன் வேலைகளைத் தொடர்ந்தாள் வித்யா.
இரண்டு பெண் குழந்தைகளையும், ஒரு பையனையும் பெற்ற வித்தியாவின் வாழ்க்கையில் எத்தனையோ சூறாவளிகள் வந்து போகின்றன. உதவாக்கரையாகிப்போன தன் வீட்டுக்காரரையும் சேர்த்து குடும்பத்தை தள்ளவேண்டிய பாரம் அவள் மீது.
வீடு காலி செய்வது என்பது எல்லாருக்கும் பெரிய காரியம்! ஆனால் வித்தியாவுக்கு அது ஒண்ணும் அவ்வளவுப் பெரிய விஷயம் அல்ல. சின்ன மீன் வண்டிய பிடிச்சா போதும் மொத்த சாமானையும் ஏற்றி விடலாம். என்ன இரண்டு பிளா°டிக் குடம், நாலஞ்சு தட்டு முட்டு சாமான்கள், படுப்பதற்கு கட்டில் இதுமட்டும்தான் சொல்லிக்
கொள்வது போல ஏதோ ஒரு பொருளா இருக்கு.
பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்ப ஒரு கிளி, இரண்டு கோழி குஞ்சு... மூன்று பிள்ளைகளும் தங்களுடைய விளையாட்ட இத சுத்தியே அமைச்சுப்பாங்கன்ற நம்பிக்கை!
புது வீட்டுக்கு காலையிலேயே குடித்தனம் வந்தாச்சு! நல்லா வசதியா இருக்கு! நல்ல காற்றோட்டம்.. தவிர மேல இருக்கிற வீட்டுக்காரங்க கீழேவே வரமாட்டாங்க... இது போதாதா...எப்படியோ வீட்டுல இருக்கிற பொருளை எல்லாம் ஒரு வழியாக ஏறக்கட்றதுக்கே மணி 11 ஆயிடுச்சி....
ஐய்யோ பேபியும், சுந்தரியும் எனக்காக வேற அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க... செல் போன் சிணுங்காமல் இருப்பதால் கொஞ்சம் ரிலாக்° ஆகி விட்டு குளிக்கச் சென்றாள் வித்தியா! காலையில டிபன் கூட இன்னும் பண்ணல; பசங்களுக்கு மட்டும் டிபன் வாங்கிக் கொடுத்தாச்சு...
நல்லா மேட்சாக டிர° பண்ணிக்கிட்டு, பசங்க கிட்டு சொல்லிட்டு வேலைக்கு கிளம்பினாள் வித்தியா!வழக்கமாக 10 மணிக்கு வர்ற வித்யா அன்று 8.00 மணிக்கே வீட்டுக்கு வந்துட்டாள். புது வீட்டுக்காரங்க எப்படியிருப்பாங்களோ என்ற ஒரு அச்சம்தான். ச்ச... என்னா வாழ்க்கை இது... எதக் கண்டாலும் பயப்பட வேண்டியிருக்கு... என மனதுக்குள் முனு முணுத்துக் கொண்டே, இரவு வீட்டுக் காரர் வாங்கி வந்த டிபனை எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
வேலை செஞ்ச அந்த களைப்புலேயே சீக்கிமே தூங்கி விட்டாள் வித்யா. பாத்ரூம் போய்டு தூங்கலாம் என்று வெளியே வந்த வித்யாவின் கணவருக்கு அந்த செய்தி சுனாமியாய் காத்திருந்தது!எப்போ வெளியே வருவாங்கன்ணு காத்திருந்த வீட்டு உரிமையாளர், வித்தியாவின் கணவன் அண்ணாவை பார்த்து நீங்க இன்னும் 10 நாள்ல வீட்ட காலி பண்ணுங்கன்னு சொன்னார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை!
நாங்க லோன் அப்ளே பண்ணியிருந்தோம். லோன் சேன்ஷன் ஆயிடுச்சு... மேல வீடு கட்டப்போறோம்! எனவே நீங்கள் இன்னும் 10 நாள்ல வீட்ட காலிப்பண்ணுங்ன்னு உறுதியா கூறிட்டார் வீட்டு உரிமையாளர்.
அண்ணா தூங்கிக் கொண்டிருந்த வித்யாவிடம் இந்த செய்திய சொன்னதும், தூக்கம் பறந்து போனது வித்யாவுக்கு.
வித்யாவுக்கு ஒரே குழப்பம் இன்னைக்கி காலையில தான் வந்தோம். எதிர்பாத்த மாதிரி எல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஏன் வீட்ட காலிபண்ணச் சொள்றாங்க... ஒரு வேளை நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சோ... என்ற குழப்பத்தில், மன இறுக்கத்துடன் மூளையை கசக்கிக் கொண்டிருந்த வித்தியா அப்படியே தூங்கிப் போனாள்.
வீட்டு உரிமையாளர் எப்படியோ இந்த பேமலிய சாதூரியமா வீட்ட காலி பண்ணச் சொல்லிட்டோம். ச்சே... ச்சே... என்ன முட்டாள்தனம் செஞ்சுட்டோம். எப்பவும் உஷாராக இருப்போம்... இந்த தடவை... என்று சலித்துக் கொண்டே சாப்பிட உட்கார்ந்தார்.
வீட்டு உரிமையாளரின் மனைவி உஷாவும் அந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து ஏதோ சித்தபிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள், இந்த விஷயத்தை தன் கணவரிடம் சொன்ன பின்னரே ஓரளவு சுயநினைவுக்கு வந்தவள் போலானாள்.
எனக்கு அப்பவே இந்த பேமிலி பத்தி ஒரே டவுட் என்றான் கணவன்!உஷா அதற்கு, நான் அப்பவே சொன்னான் யார்கிட்டயாவது விசாரிங்ன்னு... கேட்டீங்களா...அதுவும் நம்ம வீட்ல போய் இந்த மாதிரி ஒரு பேமிலி வைச்சிக்கினு இருந்தா என்ன சொல்வாங்க!எனக்கு அப்பவே சந்தேகம்! என்று உஷா ஆரம்பிக்க..என்ன?
காலையிலே அவங்க கொண்டுட்டு வந்த பொருட்களை பாத்ததுமே திக் என்றது! ஒண்ணும் புரியல! அதனாலதான் நான் அந்த தயிர்காரம்மா கிட்ட கேட்டேன் இந்த பேமிலி பத்தி, அவுங்க புட்டு, புட்டு வெச்சுட்டாங்க.
வித்யாவோட வேலையே காலையில போனா நைட் 10 மணிக்கு வர்றதாம்... அது மட்டுமில்லாம இரவு 12 மணிக்கு மேல நிறைய ஆம்பளைங்க வருவாங்களாம்... ஏற்கனவே குடியிருந்த வீட்டில், அவங்கள காலி பண்ண வக்கிறதுக்கே படாத பாடு பட்டாங்களாம்! இதுல வேற இரண்டு பேரும் லவ் மேரேஜாம். வித்யா வீட்டுக்காரன் வேலைக்கே போக மாட்டானாம்... இன்னும் என்னென்னவோ சொன்னங்க...
ஆமா இப்படியொரு கையாலாகத வீட்டுக்காரன் இருந்தா, வேற என்னப் பண்ணுவா மூணு புள்ளைய வேற காப்பாத்துனும், வித்யா என்ன எம்.ஏ., பி.ஏ.வா படிச்சிருக்கா? வேலைக்கு போனவுடன கைநிறைய சம்பளம் கொடுக்க! பி.இ. படிச்சவனுங்களே 1500 ரூபாய்தான் சம்பளம் வாங்குறானுங்க. எக்°போர்ட்டுல வேலைக்கு போய் மாசமெல்லாம் மாடா ஒழச்சாலும் 2000 ரூபாய் சம்பாதிக்க முடியாது! இதுல வீட்டு வாடகைக் கொடுத்து விட்டு, மூணு பேரு சாப்புடனும்னா முடியுமா? என்னய்யா சமூகம் இதுன்னு புலம்பி விட்டு கையை கழுவினார் உஷாவின் கணவர்.
No comments:
Post a Comment