February 15, 2006

இராமதாசு-திருமாவளவன் ஆடு-புலி ஆட்டம்

தமிழக தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. எந்தக் கூட்டணியில் யார், யார் இருப்பார்கள், எவ்வளவு பங்கு கிடைக்கும் என்று சூடாக விவாதித்துக் கொண்டிருக்கையில், எப்போதும் பரபரப்புட்டும் பா.ம.க. மட்டும் மிக அமைதியாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

பா.ம.க.வின் ஒரே பார்முலா யார் அதிக சீட்டு தருவார்களோ அந்த கூட்டணியில்தான் இராமாசு இருப்பார். இன்னொன்று இராமதாசு கூறுவதுபோல் வெற்றிக் கூட்டணியில் இருப்பது. இந்த முறையும் இராமதாசின் பேரமைதி உணர்த்துவது அவருக்கு உரிய பங்கு திமுகவிடம் கிடைத்து விட்டதைத்தான் காட்டுகிறது.

இப்போது நடக்கும் விவாதம் திருமாவளவனை பயன்படுத்தி இன்னும் கூடுதலாக ஏதாவது பெற முடியுமா? என்பதுதான். இராமதாசின் ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடாக திருமாவுக்கு ஒதுக்கலாம் என்பது இராமதாசின் கணக்கு.

திருமாவளவனோ ஆயிரம்தான் தமிழ் பாதுகாப்பு இயக்கம், அது - இது என்று பேசினாலும் இராமதாசின் உள் ஒதுக்கீட்டில் 5 சீட்டோ 10 சீட்டோ பெறுவதில் தனக்கு ஆதாயம் இல்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளார். அதனால்தான் இனிமேல் திமுக கூட்டணியில் தனக்காக இராமதாசு வாதாட வேண்டாம் எனக் கூறி விட்டார். திருமாவோ தங்களுக்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் வாக்குவங்கி இருப்பதாக கதைத்துக் கொண்டு இருக்கிறார்.

மொத்தத்தில் இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்த்தால் அது இராமதாசாகத்தான் இருக்க முடியும். ஏற்கெனவே தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க. எனக் கூறி வரும் இராமதாசு, தற்போது திருமாவளவனை எப்படியாவது தன்னுடைய பங்காளியாக மாற்றிக் கொள்வதன் மூலம், தலித் வாக்கு வங்கியை அபகரித்து பா.ம.க.வின் வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதை நன்கு உணர்ந்துள்ளார் இராமதாசு.
இராமதாசைப் பொறுத்தவரை இந்த தேர்தலை விட, அடுத்து வரக்கூடிய தேர்தலில் தன்னை முதன்மையான கட்சியாக நிலை நிறுத்திக் கொள்வதுதான். இதற்காகத்தான் அவர் மிக சாதூரியமாக திருமாவுடன் கூட்டணி என்று கைகோர்த்து தலித் வாக்கு வங்கியை சுவாகா செய்யத் துடிக்கிறார்.

தமிழக கிராமப்புறத்தில் உள்ள தீண்டாமை வன் கொடுமைக்கு எதிராக திருமா - இராமாசு ஏதாவது போராட்டம் நடத்தியுள்ளார்களா? இல்லை! அல்லது தலித் மக்களுக்கு நிலச் சீர்திருத்தத்தின் மூலம் விவசாய நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஏதாவது இயக்கம் நடத்தியுள்ளாரா இராமதாசு? அதுவும் இல்லை. இவர்களது கூட்டு கொள்கை அடிப்படையானதா? என்றால் நிச்சயம் இல்லை பழைய காலாவதியாகிப்போன தமிழ் கோஷம் தமிழக மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதற்கே உதவிடும்! அதுதான் இவர்களது தேவையும் கூட... மொத்தத்தில் இந்த ஆடு - புலி ஆட்டத்தில் வெல்லப்போவது யானைதான்! நரி செத்தாலும் கண் கோழிக் கூண்டின் மீது என்பது தமிழக பழமொழி. அதுபோலத்தான் தலித் வாக்கு வங்கி மீது கண் வைத்திருக்கிறார் இராமதாசு! இது தலித் மக்களுக்கு பயனளிக்குமா?

8 comments:

b said...

என்ன செய்யச் சொல்றீங்க...? அரசியலுக்குப் போவது என்பது பிசினஸ் செய்யப்போவதுபோல ஆகி விட்டது.

இன்னொரு காமராஜர், கக்கன், ரெங்கசாமி, நல்லகண்ணு எல்லாம் பிறப்பாங்கன்ற நம்பிக்கை எல்லாம் போயி ரொம்ப நாளாச்சுங்க.

சந்திப்பு said...

சரியா சொன்னீங்க மூர்த்தி. அரசியல் என்பதே வியாபாரம்தான். காமராஜர் போல, கக்கன் போலவெல்லாம் அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்யறாங்க; ஆனா அவங்களையெல்லாம் மறக்கடிக்குது நம்ம மீடியா. சமீபத்தில நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்குன லஞ்ச விவகாரத்தில் எல்லா கட்சியும் இருந்தது; இடதுசாரிகளைத் தவிர. ஆனால் இடதுசாரிகளுக்கும் மக்களும் எட்டாத தூரத்தில் இருப்பதாக தெரிகிறது.

Balamurugan said...

மொத்தத்தில் இந்த ஆடு - புலி ஆட்டத்தில் வெல்லப்போவது யானைதான்!

Good joke! :-)

viswa said...

yes all of your thought is correct

any one could you tell me how to type in tamil

சந்திப்பு said...

Dear viswa,

Thanks for your comment.

Download Murasu Anjal. Install it in your PC. It has lot of options. Like English to Tamil... So on..

Site : www.murasu.com

Gopalan Ramasubbu said...

"இந்த முறையும் இராமதாசின் பேரமைதி உணர்த்துவது அவருக்கு உரிய பங்கு திமுகவிடம் கிடைத்து விட்டதைத்தான் காட்டுகிறது".

I don't think so, he has no place to go. Alliance with ADMK is ruled out coz he and his son wants to retain cabinet minister position.MK's well aware of this.so, i wouldn't be surprised if PMK is offered seats equal or less than MDMK.

Gopalan Ramasubbu said...
This comment has been removed by a blog administrator.
சந்திப்பு said...

Thanks Ramasubbu,

Your assessment is correct. It is also one of the fact in this issue.