February 01, 2006

முல்போர்டு எந்த நாட்டின் தூதர்?

டெல்யில் அமெரிக்க தூதராக செயல்படும் டேவிட் முல்போர்டு சமீபத்தில் இந்திய அரசை மிரட்டியுள்ளார். அணுசக்தி விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால், இந்தியா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நேரடியாகவே மிரட்டியுள்ளார்.

எந்த ஒரு விஷயத்திலும் இந்திய நாடு எத்தகைய அரசியல் நிலையை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்திய அரசுக்குத்தானே ஒழிய, ஒரு நாட்டின் ஏஜண்டாக செயல்படும் டேவிட் முல்போர்டு அல்ல.

இந்த விவகாரத்தில் வி.சி. சிங், முலாயம்சிங், பிரகாஷ்காரத், பரதன் உட்பட இடதுசாரி தலைவர்கள் டேவிட் முல்போர்டை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். டேவிட் முல்போர்டு தானே இந்திய நாட்டின் எஜமான் போல, இடதுசாரிகள் இதுபோன்ற விஷயங்களில் ஏன் தலையிடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது எதை காட்டுகிறது என்றால் இருப்பதற்கு இடம் கொடுத்தால் படுப்பதற்கு பாய் கேட்ட கதையாக இருக்கிறது.

சமீப காலத்தில் இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் அமெரிக்காவின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருவதை காணலாம்.

ஈரானில் இருந்து சமையல் எரிவாயுவை பெறுவதற்கும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் கண்டோலிசா ரை° கண்டனம் தெரிவித்ததோடு, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். ஈரானில் இருந்து கொண்டு வரப்படும் சமையல் எரிவாயு பாகி°தான் வழியாக இந்தியாவிற்கு வருவது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். பாகி°தானுடன் இந்தியாவின் உறவு அதிகரித்து வருவதும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.

இதுமட்டுமின்றி, சமீபதில் சிரியா நாட்டில் இந்திய நாட்டின் சார்பில் எண்ணெய் வயல்களை வாங்குவதற்கும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்த திட்டத்தையும் கைவிட வேண்டும் என்று மிரட்டியுள்ளது.

இந்திய நாட்டின் இறையாண்மை, சுயாதிபத்தியத்தை கேள்விக்குறியாக்கும் அமெரிக்கா உலக ரவுடியாக, உலக பயரங்கரவாதியாக மற்ற நாடுகளை கபளிகரம் செய்யத் துடிக்கும், ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் ஆக்டோபசாக செயல்படுவதை இந்திய மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் மூலம் கண்டிப்பதோடு, அமெரிக்க பொருட்களை வாங்குவதை நாம் அடியோடு நிறுத்த வேண்டும். அமெரிக்காவுடனான இந்தியாவின் அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

5 comments:

Amar said...

//அமெரிக்க பொருட்களை வாங்குவதை நாம் அடியோடு நிறுத்த வேண்டும். அமெரிக்காவுடனான இந்தியாவின் அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
//

முதலில் அமெரிக்க கண்டுபிடிப்பு "World Wide Web" ஐ பயன்படுத்துவதை நிறுத்துவிடலாம்.

நிங்கள் எழுதும் Blogger ஒரு அமெரிக்க நிறுவனம். :-)

:-)

மற்றபடி வழக்கமான பதிவு தான்.

Operation Parakramஇன் போது இந்திய-பாகிஸ்தான் போர் வராமல் தடுக்க அமெரிக்கா செய்த சமரச வேலைகளை பற்றி சொல்லாமல் நமக்கும் பாகிஸ்தானுக்கும் நல்லுறவு ஏற்படுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது என்பது தமாஷ்.

//India summoned Mulford and gave him a virtual dressing down, eliciting not just “regret” from the envoy despite his claim that he was misquoted but also had the US State Department straining to the beat of India being its own judge!//

இனிமேல் எந்த அமெரிக்க பொருளையும் நிங்கள் தொட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
(முக்கியமாக blogger)
சமுத்ரா.

சந்திப்பு said...

சமுத்ரா!

நான் நேற்று மெயில் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் நேற்றே பதில் கொடுத்திருப்பேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

நீங்கள் ஒரு தேசப்பற்றுமிக்கவர் என்று எண்ணிணேன். அது தவறு என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போதும் கூட உங்களது பாசம் அமெரிக்காவின் மீதே உள்ளது. (அமெரிக்காவின் மிரட்டல் குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறர்கள்!) அதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத நீங்கள் மிக அவசர, அவசரமாக நான் அமெரிக்காவின் பிளாக்கரை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவதன் நோக்கம் என்ன?

1. அமெரிக்க பொருளை வாங்கக் கூடாது என்றுதான் கூறியுள்ளேனே தவிர பயன்படுத்தக்கூடாது என்றல்ல.

2. பொதுவாக அமெரிக்காவின் பல கண்டுபிடிப்புகளில் இந்தியர்களின் பங்கு உள்ளது என்பதை ஏன் மறந்து விட்டீர்கள். விலைபேசி வாங்கும் புத்தி உடைய நாடுதான் அமெரிக்கா என்பதை நீங்கள் ஏன் அறியவில்லை? ஏன் மைக்ரோ சாப்ட்டே கூட ஐ.பி.எம்., இந்தியாவின் ஹாட்மெயில் போன்றவற்றை வாங்கியதை தாங்கள் அறியவில்லையோ!.... ச்சோ... ச்சோ...

3. அமெரிக்க காப்புரிமை விதிப்படியே கூட ஒரு பொருளை கண்டு பிடித்து 20 ஆண்டுகள் ஆகி விட்டால் அது சர்வதேசிய மக்களுக்கு சொந்தமாகி விடும் என்பது கூடவா தெரியாது?


தேச பக்தி இல்லாத நீங்கள் இனிமேல் இந்தியாவைப் பற்றியோ, இந்திய கலாச்சாரத்தை பற்றியோ இந்திய மக்களை பற்றியோ எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

Amar said...

//இந்திய கலாச்சாரத்தை...//

இந்திய கலாச்சாரம் என்றால் என்ன?
குஷ்பூவை செருப்பால் அடிப்பதா?

உடன்கட்டை,குழந்தை திருமனம்,ஜாதி இதுவும் இந்திய கலாச்சாரமா?

இந்திய கலாச்சாரத்தை நிங்கள் define செய்ய வேண்டியது இல்லை.அது உங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.

அதுவும் இந்திய பதிவில் அதற்க்கு வேலை இல்லை.என்னை தாக்க வேறு எதாவது வழி தேடவும்.

நான் இந்திய கலாச்சாரத்தை திட்டுவேன், பாராட்டுவேன்.எது வேண்டுமானாலும் செய்வேன் - அடுத்தவர் புன்படாமல்.

இது ஜனநாயக இந்தியா.
கம்யூனிஸ்ட் சீனா அல்ல - எனது கருத்துக்களை censor செய்ய.

//இப்போதும் கூட உங்களது பாசம் அமெரிக்காவின் மீதே உள்ளது//

Are you blind?
Cant you see my comments on the American envoy being given a dressing down?

அது எப்படி அமெரிக்க தூதரை இந்தியா அழைத்து தனது கண்டனம் தெரிவித்தது உங்கள் கன்னுக்கு தெரியவில்லை.

எனது நிலைபாடும் அதை சார்ந்தது தான் எனபது கூட புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிப்பா?

//1. அமெரிக்க பொருளை வாங்கக் கூடாது என்றுதான் கூறியுள்ளேனே தவிர பயன்படுத்தக்கூடாது என்றல்ல.//

அட!
வழக்கமான "Communist" excuse!

நண்பன் said...

நண்பர் சந்திப்பு அவர்களே,

சமுத்ராவை ஒதுக்கித் தள்ளுங்கள்.

இந்தக் கருத்தை ஒட்டிய ஒரு பதிவை எழுத உத்தேசித்திருந்த பொழுது, உங்களின் இந்தப் பதிவு வந்து விட்டது.

இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டின் தலைவர்களை அமெரிக்க தலைவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது குறித்து இந்த சமுத்ராக்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. இந்திரா காந்தியை bitch என்று சொன்னதையும் ரசித்துக் கொண்டு தான் இந்த "நண்பர்கள்" அமெரிக்க சார்பு நிலை எடுக்கிறார்கள்.

நாடே கொதித்துப் போன இந்த தூதர் விஷயத்தையும் கூட, இந்த நபர்கள் எத்தனை இலகுவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அவர்களாகவே முன் வந்து வெளிகாட்டிக் கொள்வதும் நல்லது தானே!!! - இப்பொழுது பாருங்கள் - சமுத்ராவின் தேசபக்தியை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். இதை நான் பல நாட்களுக்கு முன்னே கணித்துக் கூறிவிட்டேன்.

இவர்களால், எதையுமே ஒரு கொள்கை ரீதியாகப் பார்க்க முடியாது. அமெரிக்கர்கள் அரபு நாடுகளில் ஜனநாயகம் இல்லை என்று கூச்சல் போடுகிறார்கள். ஆனால், ஒரு ஜனநாயக நாட்டை எப்படி கையாள்கிறார்கள்? - அதிகார தோரணையுடன் ஆணையிடுகிறார்கள். இதைச் செய், அதைச் செய்யாதே என்று.

இன்று இந்திய ஏழை மக்களுக்கு குறைந்த அளவில், சமையல் எரி வாயுவையும், போக்குவரத்தையும் அமைத்துக் கொடுப்பது அரசின் கடமையாகிறது. இல்லையென்றால், அடுத்த தேர்தலில் மக்கள் இவர்களை விரட்டி அடிப்பார்கள். அதனால், ஒவ்வொரு அரசும் இந்த ஏழை மக்களின் பொருளாதாரத்தைக் கவனத்தில் வைத்து தான் செயல் பட முடியும். அமெரிக்காவிற்கு இதில் என்ன வந்து விட்டது? ஏன், எங்கிருந்து நாம் எதை வாங்க வேண்டும் என்று கட்டளையிட வேண்டும்? அதோட உள்நோக்கம்?

ஐயா, இந்தியர்களே - நீங்கள் ஜனநாயக நாடாக மட்டும் இருந்தால் போதாது - நாங்கள் விரும்பும் வகையில் ஜனநாயக நாடாக இருக்க வேண்டும். அதாவது, ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு காலனி நாடாக இல்லாவிட்டாலும், எங்கள் சொல்படி நடக்கும் ஓரு நவீன காலனியாக - அடிமை நாடாக இருந்தால் மட்டுமே - உங்கள் ஜனநாயகத்தை மதிப்போம் - அவ்வாறில்லாவிட்டால், நீங்கள் ஒரு நாடாக இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? இது தான் அமெரிக்காவின் ஜனநாயகம்.

இத்தகைய அமெரிக்காவிற்கு அடிவருடிகளும், அதை நியாயப்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். யாருக்குத் தெரியும் - அவர்கள் பெறும் ஆதாயம்?

இந்த அமெரிக்கா - 25 வருடங்களாக நமது முயற்சிகளை நசுக்கி ஒடுக்கி விடத்துடித்த இந்த அமெரிக்கா, அது முடியாமல் போனதும், உதவ முன் வந்திருக்கிறது -- ஏதோ தங்கள் ஒத்துழைப்பினால் மட்டுமே இந்தியா அணுத்துறையில் முன்னேறிவிட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள.

இதை நாம் ஏற்றுக் கொண்டேமேயானால், அது இந்திய அணுத்துறைக்கு சளைக்காமல் உழைத்த - பலவித இன்னல்களுக்கும், சர்வதேச புறக்கணிப்புகளுக்குமிடையில், மன உளைச்சல்களுக்கிடையில், போராடி வெற்றி பெற்றுத் தந்த - பல விஞ்ஞானிகளின் நினைவை அவமானபடுத்துவதாகும். அதை விட, அமெரிக்கர்களின் இந்த உதவியை உதறித்தள்ளி விட்டு, மீண்டும் போராடியே வெற்றி பெறலாம். ஒரு போராட்டக் குணத்துடன் செயல்படும் பொழுது, இந்தியர்கள் ஒன்றுபடுகிறார்கள் - வெற்றி பெறுகிறார்கள்.

அல்லது சமுத்ராக்களைப் போல அழுகிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

சந்திப்பு said...

நன்பன்,

தங்களின் பின்னூட்டம் மிக அருமை!

நீங்கள் சொல்வது நிஜம்தான். நீங்கள் எழுத நினைத்ததை உங்கள் பாணியில் உடனே எழுதுங்கள் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் வாசிப்பதற்கு. ஏனென்றால் தூரோக்கங்களும், நம் நாட்டையும், நாட்டுத் தலைவர்களையும் இழிவு படுத்தி வரலாறு மக்களுக்குத் தெரியவேண்டும். அடிக்கடி பதியப்பட வேண்டும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட நம் தேசத்திற்கு துரோகம் செய்தவர்தான். சுதந்திரப்போராட்டக் காலத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்தவர்தான் வாஜ்பாய். அதேபோல் வீர சவர்க்கார் என்ற (மா)வீரரும் அந்தமான் சிறையில் பிரிட்டிஷாருக்கு எழுதிக் கொடுத்து மன்னிப்புக் கேட்டவர்தான்.

இப்படிப்பட்ட தூரோக வரலாறுகளையும் நம்முடைய இந்த தலைமுறைக்கு விடாமல் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் உங்களின் பதிவை எதிர்பார்த்து... சந்திப்பு.

உங்களின் இந்த பதிலையே சமுத்திராக்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

நன்றி - சந்திப்பு