January 03, 2006


பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒழுக்கம்!


பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒழுக்கம்!பா.ஜ.க.வின் புதிய தலைவராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுள்ளார். வாஜ்பாய், அத்வானி தவிர வேறு யாரும் இரண்டு வருடங்களுக்கு மேல பா.ஜ.க.வில் தலைவராக பொறுப்பில் நீடிக்கவில்லை என்பது பா.ஜ.க.வின் வரலாறு. முரளி மனோகர் ஜோஷி, குஷாபாவ் தாக்ரே, பங்காரு லட்சுமணன், வெங்கய்யா நாயுடு இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர்தான் ராஜ்நாத் சிங்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் பொறுப்பேற்றபோது, இந்திய மீடியாக்களில் இளமையான தலைவர் என்று பத்திரிகைகளில் இடம் பிடித்தார். அவரது வரலாறுகள் தீவிரமாக அலசப்பட்டது. கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் கூட எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் RSS-சும் பா.ஜ.க.விற்கு ஒரு இளமையான தலைவர் தேவை என்ற ஆலோசனையை முன்வைத்து அத்வானியின் காலை வாறுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. பா.ஜ.க. தலைவர் பதவிக்கு பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி... என பலரது பெயர்கள் தீவிரமாக அடிபட்டன.

ஆனால் RSS-க்கு நம்பகமானவரான ராஜ்நாத் சிங்க்கு தற்போது மகுடம் சூட்டப்பட்டுள்ளது.இதன் மூலம் எதிர் வரும் ஆண்டுகள் இந்திய நாட்டிற்கு மதவாத தலைவலி ஆரம்பமாகும் என்ற சிக்னலை சுளுளு விடுத்துள்ளது. அவர்களது நீண்டநாள் கனவான அயோத்தி ராமர் கோவில், காஷ்மீர் விவகாரம், கலாச்சார தேசியம் என பல வழிகளில் மக்களை மதஅடிப்படையில் மோதவிடக்கூடிய செயல்களில் ஈடுபடுவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளனர்.

அதே சமயம் உத்திரபிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் வெளிப்படையாக ராஜ்நாத் சிங் ஒரு கிரிமினல், இவருக்கு பிரபர மாபியா கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்து நிரூபித்தால் நான் முதல்வர் பதவியில் இருந்தே விலகுகிறேன் என்று சவால் விடுத்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் பா.ஜ.க.வின் தலைவர் பதவியில் அழுக்கேறிய கரைபடிந்த கரங்களே அதிகாரப் பீடத்தில் ஏறியிருக்கிறது என நம்பலாம்.

RSS - பா.ஜ.க.விடம் இருந்து ஒழுக்கமானவரையும், ஊழலற்றவரையும், நடத்தையில் சிறப்பானர்களையும் கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்றே கடந்த கால அனுபவம் நிரூபித்துள்ளது. எனவே ராஜ்நாத் சிங்கின் பதவிக்காலம் எத்தனை நாட்களோ தெரியவில்லை! விபரம் தெரிந்தவர்கள் கூறலாம்.

3 comments:

நல்லடியார் said...

எனக்கு போதிய அரசியல் விபரம் இல்லை. தலைவலி போய் திருகுவலி வந்தது போல் அல்லாமல் புதிய தலைவர் பாரதிய ஜனதாவை காங்கிரஸுக்கு மாற்றாகக் கொண்டுவந்தால் நலம் கட்சிக்கு மட்டுமல்ல நாட்டுக்கும்தான்.

பா.ஜ.கவின் தலைவர் பொறுப்பிலிருந்து L.K.அத்வானி கடந்த 31-12-2005 அன்று விலகியதாக மும்பையில் நடந்த வெள்ளிவிழா பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

இவ்விலகல் ஏற்கனவே சென்னையில் நடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதுதான் என்றாலும் அத்வானி விலகுவதும் பரிவாரங்கள் நெருக்குதால் அதை வாபஸ் வாங்குவதும் சமீபகாலமாக அடிக்கடி நிகழ்வதுதான்.

அத்வானியின் விலகல் அரசியல் அவதானிகளுக்கு வியப்பைக் கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினாலும் நாடளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் ஒட்டிக் கொண்டுள்ளார். பிரதமர் பதவிக்கும் போட்டியிடுவாராம்!

பா.ஜ.க.வின் புதிய தலைவர் அத்வானியின் உத்தரவில்லாமல் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பதால் "ரப்பர்" ஸ்டாம்பாகவே இருப்பார் என நம்புவோமாக!

இவ்விழாவில் வாஜ்பாய் அவர்கள் தீவிர அரசியலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது யாரும் எதிர்ப்பாராதது. இது பற்றி அத்வானி அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, வாஜ்பாய் இதுபோல் அவ்வப்போது அறிவிப்பது சகஜம்தான்!!! என்றார்.

அத்வானியின் விலகல் பற்றி வாஜ்பாயிடம் கருத்துக் கேட்டால் என்ன சொல்லி இருப்பார் தெரியுமா?

சனி விலகியது! (அத்வானி விலகியது சனிக்கிழமை!)

(தனியாக பதிக்க இருந்தேன் நேரம் இல்லை. எனவே உங்கள் பதிவில் பின்னூட்டமாக இட்டேன் ;-)

சந்திப்பு said...

நல்லடியார் தங்களின் வாஜ்பாய் - அத்வானி உரையாடல் மிக சிறப்பு நகைப்பும் - சிந்தனையும் ஒருங்கே அமைந்துள்ளது. இருப்பினும் ஒரு நெருடல்...

காங்கிரசுக்கு பா.ஜ.க. மாற்று என்பதும், நாட்டுக்கு நல்லது ஏற்படும் என்பதையும்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் காங்கிர° ஒரு மோசமான கட்சியே! ஆனால், அது மதவாத கட்சியல்ல என்பதுதான் மிகப்பெரிய வித்தியாசம். கடந்த காலத்தில், சில நேரங்களில் மறைமுகமாக அரசியலுக்காக சமரசமும் செய்துக் கொண்டுள்ளது. அதையும் மறுக்க முடியாது.

ஆனால், பா.ஜ.க. ஆட்சி காலத்தில் நம்முடைய இந்திய நாட்டை அந்நியருக்கு முழுமையாக அடகு வைத்ததும், அவர்களுக்கு பணிந்து சென்றதும் தங்கள் அறிந்திருக்கலாம். உதாரணம் : ஜார்ஜ் பெர்னான்ட° அமெரிக்க பயனத்தின் போது, அவரை நிர்வானமாக செக்கப் செய்தார்களாம். இந்தி இராணுவ மந்திரியின் நிலைமை இதுதான். ஆனால் பா.ஜ.க. கமுக்கமாக மறைத்து விட்டது.


மேலும் அயோத்தி, மும்பை, குஜராத் மதகலவரங்களில் பல்லாயிரம் பேர் வெட்டிக் கொல்லப்பட்டது. மனித நேயத்துக்கே சமாதி கட்டியது. இந்திய மக்களை இந்து, மு°லீம், கிறி°து என பிரித்துப் பார்த்தது இவையெல்லாம் பா.ஜ.க.வின் மகா மட்டமான, கொடூர குணத்தை வெளிப்படுத்தியது.

அது மட்டுமின்றி, கன்னியா°திரிகள் கற்பழிப்பு, மசூதி தகர்ப்பு, சர்ச்சுகள் சூறையாடல், ஏன் தேசிய கொடியில் இருந்த அசோக சின்னத்தையே அகற்ற வேண்டும் என்று கூறியது இன்னும் பல....

வாஜ்பாயும், அத்வானியும் இதையெல்லாம் தேசபக்தியின் பெயரால் செய்தார்கள் என்றுக்கூட கூறுவார்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது வாஜ்பாயும், சவர்க்காரும் தேசத்தை காட்டிக் கொடுத்தது தேச பக்தியின் பெயரால்தானா? என்று மக்கள் கேட்கிறார்கள்.

நல்லடியார் said...

பா.ஜ.க. வை காங்கிரஸின் மாற்றுக் கட்சியாக சொன்னது எதிர்க்கட்சி வரிசையில் அமரவே ;-)பா.ஜ.கவுக்கும் காங்கிரஸுக்கும் உள்ள வித்தியாசம்தான் நாடறிந்த உண்மையாச்சே.

பா.ஜ.க. மத்திய அரசை இடித்துரைக்கும் கட்சியாக இருக்க வேண்டும். (இடித்து உடைக்கும் கட்சியாக அல்ல ;-)