January 16, 2006

ஏழை பேச்சு அம்பலம் ஏறாது!

இயற்கை அன்னை இரும்பு, நிலக்கரி, அலுமினியம்... என பல முக்கியமான தாதுபொருட்களை சீதனமாக கொடுத்துள்ளது ஒரிசாவிற்கு. ராட்சச உருக்காலைகள் பல ஒரிசாவில் செயல்பட்டு வருகிறது. உலக முதலாளிகள் முதல் உள்ளூர் முதலாளிகளை வரை இந்த தாது சுரங்கங்களை கொள்ளையடித்து சுரண்டி கொழுத்து வருகின்றனர்.

சுரங்கங்களில் வேலைபார்க்கும் மக்கள் வாழ்க்கை அந்த சுரங்கங்களோடு சமாதி கட்டப்படுகிறது. சமீபத்தில் புவனே°வரத்திற்கு அருகில் உள்ள கலிங்கா நகரில் டாடா உருக்காலை ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கான நிலங்களை மூத்தகுடிகளான பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக, தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வருபவர்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது. ஏதுமறியா அப்பாவி பழங்குடி மக்களை நிலங்களில் இருந்து விரட்டியடிக்கிறது ஒரிசா மாநில அரசு. ஏற்கெனவே போ°கோ என்ற தென்கொரிய நிறுவனத்திற்கு ஒரிசாவின் தாதுவளத்தை 52,000 கோடி ரூபாய்க்கு கொள்ளையடிக்க அனுமதித்து விட்டது ஒரிசா மாநில அரசு.

இந்த நிறுவனம் அமையவுள்ள நிலப்பகுதியில் இருந்து 12,000க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களை வெளியேற்ற தீர்மானித்து விட்டது. இந்நிலையில் டாடாவின் செல்ல நாய்போல் செயல்பட்டுள்ளார் நவீன் பட்(நாய்)க். தங்களது வாழ்க்கை உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது நவீன துப்பாக்கிகளை பிரயோகித்து 12 உயிர்களை பறித்துள்ளார் பட்நாயக்.

இந்த சம்பவம் இந்திய நாட்டு மக்களை உலுக்கியெடுத்துள்ளது. அதே சமயம் மீடியாக்களிலும் மறைக்கப்பட்டும் வருகிறது. அவர்கள் கேட்டது என்ன? தங்களுக்கு தேவையான மாற்றிடமும், பாதுகாப்பான வாழ்க்கையுமே! அவர்கள் டாடாவிடம் பிச்சையும் கேட்கவில்லை, அல்லது டாடா உற்பத்தி செய்யும் நவீன கார்களை கொள்ளையடிக்கவும்வில்லை.

உள்ளூரில் நாம் பல பேட்டை ரவுடிகளை பார்த்திருப்போம். கட்டபஞ்சாயத்து, அடிதடி மூலம் சொந்த வீட்டை பிடுங்கிக் கொண்ட பல சம்பவங்கள் பத்திரிகைகளில் வந்துள்ளது. இத்தகைய பேட்டை ரவுடிகளுக்கும், ஒரிசா அரசின் ரவுடித்தனத்திற்கும் என்ன வித்தியாசம்!
அரசு என்பது எதற்காக? யாருடைய நலனை காப்பதற்காக? மக்களின் நலனா? அல்லது டாடா, பிரேம்ஜி, அம்பானி, ஷிவ்நாடார்... போன்ற பன முதலைகளின் நலனா? இது போன்ற சம்பவம் ஒரிசாவில் மட்டும் அல்ல. நம்முடைய தமிழகத்திலும் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் திருநெல்வேலி மாஞ்சோலை தொழிலாளர்களை தடியால் அடித்தே 18 உயிர்களை கொன்றது நம் நெஞ்சத்தை விட்டு இன்னும் அகலவில்லை...

மொத்தத்தில் அரசுகள் சாதாரண மக்கள் பக்கம் நிற்பதில்லை. “ஏழை பேச்சு அம்பலம் ஏறாது என்பார்கள்” இது கிராமப்புற பஞ்சாயத்துக்களுக்கு மட்டும் அல்ல. நவீன அரசுகளுக்கும் இதுதான் விதியோ!

1 comment:

முத்து(தமிழினி) said...

இது கடும் கண்டனத்திற்கு உரியது....யாரும் இதைப்பற்றி கவலைப்படவில்லை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்கள்...

52000 கோடி நல்ல தொகை ..ஆகவே 12000 இடமாறுதலை ஏற்றுக்கொள்ளலாம். வேறு இடம் கொடுக்கக்கூட பட்நாயக் முன்வரவில்லை என்றால் அது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது......

மண்ணின் மைந்தர்கள் சந்தோசமாக இருக்கவேண்டியது அவசியம்..டாடா பிர்லா சந்தோசமாக இருப்பதை விட என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.