January 06, 2006

ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை அழித்த குரு!
RSS-இன் அறிவிலித்தனம்

கடந்த இரண்டு நாட்களாக அகில இந்திய அளவிலும், உலகளவிலும் முதற்பக்கச் செய்தியாக இடம் பிடித்திருக்கிறது “போலி ஆயுர்வேத சாமியாரின் தகிடுதத்தம்”.

உத்திராஞ்சலை மையமாக வைத்து செயல்படும் சுவாமி குரு ராம்தேவ் மகராஜ், யோக கலையில் புகழ் பெற்றவர். அனைத்து நோய்களையும் யோகாவின் மூலம் தீர்க்க முடியும் என்று பிரச்சாரம் செய்வதோடு, உலகம் முழுவதிலும் யோகாவை வியாபாரமும் செய்து வருகிறார். இவரது யோக கலை அத்துடன் நின்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், இந்த சாமியார் “திவ்ய யோக பார்மசி” என்ற பெயரில் நடத்தி வருகிறார். இவரது மருந்து பலான விஷயங்களுக்கு ரொம்ப வீரியமாக செயல்படுவதாக விளம்பரம் செய்யப்படுகிறது. இவரது லேபாரட்டிரியில் இருந்து தயாரிக்கும் மருந்துக்கள் மூலிகையால் தயாரிக்கப்படுவதாக லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால், உண்மை வேறாக இருப்பதை தற்போது மத்திய சுகாதார அமைச்சகமே கண்டு பிடித்துள்ளது. அதில் மனித எலும்புகளும், விலங்குகளின் எலும்புகளும், மேலும் விலங்குகளின் கழிவுகளும் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

இந்த போலி சாமியாரின் போலித்தனத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர், சமூக சேவகி பிரந்தா காரத் அம்பலப்படுத்தியுள்ளார். தனக்கு எதிராக கூறப்படும் கருத்தை மறுப்பது சாமியாருக்கு உள்ள உரிமை! ஆனால், அதை விட்டு விட்டு தனக்கு பின்னால் உள்ள RSS - VHP குண்டர்களை ஏவி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை கற்களால் தாக்கியுள்ளனர். RSS-க்கு இதெல்லாம் புதிய விஷயமல்ல; ஏற்கனவே காமராஜரை கொலை செய்ய வெறி கொண்டு அலைந்ததோடு, காமராஜர் தங்கியிருந்த இடத்தையும் அடித்து நொறுக்கியவர்கள். மகாத்மாவை கொலை செய்ததை நாடே அறியும்.

மக்களின் அறியாமையை பயன்படுத்தி, போலி மருந்துகள் மூலம் கோடிக்கோடியாக கொள்ளையடிக்கும் சாமியாருக்கு RSS துணை நிற்பது! ஏதோ சேதப் பற்றினாலோ அல்லது இந்திய மருத்துவத்தை காக்க வேண்டும் என்பதாலோ அல்ல; மாறாக சுளுளு-இன் மறைமுக உலகளாவிய பிரச்சாரத்திற்கு உதவிடும் சாமியாரின் குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்ற ஆத்திரம்தான்.

இந்த போலி மருந்து சாமியார் கூறுவதுபோல் மார்க்சிஸ்ட் கட்சியும், பிருந்தா காரத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதோடு, இதில் எந்த உண்மையும் இல்லை என்பதை அனைவரும் அறிவர். பிருந்தா காரத் எந்த இடத்திலும் ஆயுர் வேத மருத்துவத்தையோ, யோகா கலையையோ குறைகூறவில்லை. இவரது போலித்தனத்தைத்தான் தோலுரித்துள்ளார்.

இந்த யோக்கியர் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்த 112 தொழிலாளிகளை அடிமைகளைப் போல் வேலை வாங்கியதோடு, அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க துணிந்த போது, அவர்களை நிறுவனத்தை விட்டே நீக்கி விட்டார். இதுதான் RSS சகாக்களின் நேர்மை!
பசுவின் புனிதத்தை பேசுபவர்கள் இன்றைக்கும் பசுமாட்டின் மூத்திரத்தை நம்மை குடிக்கச் சொல்லுவார்கள். ஏனென்றால் அது புனித தீர்த்தமாம்!
உண்மை என்ன?
லெப்டோ ஸ்பைரோசிஸ் பாதித்த விலங்குகளின் சிறு நீரில் இருந்து மனிதனைக் கொல்லும் இந்த கொடிய நோய் (எலி ஜூரம்) பரவுகிறது என்று விஞ்ஞான உலகம் நிரூபித்த பின்னும் இந்த மூடத்தனத்தை விட மறுப்பதோடு, இதுவே புனிதம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். எனவே இவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. RSS-இன் அறிவிலித்தனத்தையே இதுவெல்லாம் காட்டுகிறது!

2 comments:

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

சந்திப்பு,

உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்..இருந்தாலும் தமிழ் நண்பர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..
உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

முத்து(தமிழினி) said...

பிருந்தா காரத் நேர்மையானவர்தான்.ஆனால் இந்த சாமியார் விசயத்தில் அவசரப்பட்டு விட்டார் என்று பேசிக்கொள்கிறார்களே...

அறிவியல்பூர்வமாக சாமியார் அஜக் மருந்துகளில் அசுத்தம் உண்டு என்று நிரூபிக்கப்பட்டதா?