January 21, 2006

புதிய மொந்தையில் பழை கல்
சங்பரிவாரின் புதிய திட்டம்
பா.ஜ.க.-வின் புதிய தலைவர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க.வுக்கு புதிய எழுச்சியை உண்டாக்கப்போவதாக அவர்களது தொண்டர்களிடையே கர்ஜித்திருக்கிறார். அதற்காக அவர் கீழ்கண்ட திட்டத்தை முன்வைத்துள்ளார்.
 1. இந்துத்துவா
 2. ஒரே சிவில் சட்டம்
 3. ராமனும் - கிருஷ்ணரும் தேசிய சின்னங்களாம்
 4. அயோத்தி மத தலைமை பீடம்
 5. 370வது சட்டப் பிரிவு
 6. ராமர் கோவில் அஜண்டா
 7. கலாச்சார தேசியம்
 8. இந்திய மாநிலங்கள் அரசியல் ரீதியானவை அல்ல
 9. கலாச்சார புவியியல் ரீதியனவை
இது தவிர பா.ஜ.க.வின் மூல மந்திரமாக அவர் கூறியிருப்பதுசுய கட்டுப்பாடு, ஒத்துழைப்பு, அரசியல் போராட்டம் மற்றும் தேச சேவை.
தமிழில் ஒரு பழமொழி உண்டு : “புதிய மொந்தையில் பழை கல்” என்று. ஏற்கனவே பா.ஜ.க. - சங்பரிவாரங்கள் ஓயாது ஊதி, மக்களிடம் எடுபடாமல் போன அதே பழைய விஷயங்களையே வாந்தி எடுத்துள்ளார் ராஜ்நாத் சிங். ஒவ்வொரு விஷயங்கள் குறித்தும் தீவிரமாக அலசலாம்.அதைவிட முக்கியமானது : புதிய தலைவருக்காவது மக்கள் மீது ஏதாவது பாசம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பொய்யாய்போனதுதான் வருத்தமானது.
இந்தியா ஒளிர்கிறது என்று மக்கள் பணத்தில் ஒளிரும் விளம்பரம் செய்து ஓய்ந்து - தேய்ந்து போன பா.ஜ.க.வும், அதன் மூகமூடி தலைவர்களும் தற்போது ராஜ்நாத் சிங் என்ற புதிய முகமூடி அணிந்த மதவாத - பாசிச எண்ணங்கொண்ட பழைய குரூர சிந்தனை கொண்ட தலையையே காண முடிகிறது.
 • இந்திய நாடு சுதந்திரம் பெற்று இன்னும் 34 கோடி பேருக்கு கல்வியறிவு கிட்டவில்லை.
 • 24 கோடி பேர் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.
 • முந்தைய - தற்போதைய அரசுகளின் கொள்கைகளால் - கடன் தொல்லைகளால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 • வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி - வேலையில்லாத் திண்டாட்டம்
 • இன்னும் கூட ஜாதிய ஏற்றத் தாழ்வுகள்
 • வீடில்லா மக்களின் எண்ணிக்கை
என பல பிரச்சினைகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.ஆனால் புதிய தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கோ, சங்பரிவாரத்திற்கோ இதுவெல்லாம் பிரச்சினையே இல்லை. மக்களது குறுகிய - உணர்வுகளை பயன்படுத்தி கலவரத்தை தூண்டி, பிளவுபடுத்தி அதில் குளிர் காய்வதே பாசிச சிந்தனையின் போக்கு. இத்தகைய பாசிச சிந்தனைகள் உலகில் எந்த நாட்டிலும் எடுபட்டதில்லை. இந்தியாவிலும் ஏறக்குறைய அதற்கு சமாதி கட்டியாகி விட்டது. இன்னும் வேறோடு பிடிங்கி ஏறிய வேண்டிய வேலைதான் பாக்கியுள்ளது. அந்த வேலையை மிக வேகமாக செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறார் ராஜ்நாத் சிங்.
இந்திய மாநிலங்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னால் மொழிவழி மாநிலமாக அமைந்துள்ளது. மொழி அடிப்படையிலான கலாச்சாரமே இந்திய நாட்டின் அரசியல் - பொருளாதார உறவாக இதுவரை இருந்து வந்துள்ளது.
உலகிலேயே உயர்மொழி சம°கிருதம் என்று மற்ற தாய்மொழிகளை (சாரி - தந்தை மொழிகளை) மட்டம் தட்டும் சங்பரிவாரம் கலாச்சார தேசியம் என்று பேசுவதும், புவியியல் ரீதியான கலாச்சாரம் என்று பேசுவதெல்லாம் மக்களை குழப்புவதற்கே தவிர உண்மை அதுவல்ல. கோயாபல்சின் வாரிசுகளிடம் இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
ராமரும் - கிருஷ்ணரும் தேசிய சின்னங்களாம்: தேசிய சின்னம் என்றுச் சொன்னால் இந்திய நாட்டில் வாழும் கோடிக்கணக்கான முசுலிம்களும், கிறித்துவர்களும், சீக்கியர்களும் கூட இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
இந்திய நாட்டில் ஆணுக்கு பெண் சமம் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளாக நிலை நாட்டி வந்த சிவன் - பார்வதி (சிவலிங்கம்) ஏன் முன்னிறுத்தப்படவில்லை. (சிவலிங்கத்தை கடவுள் என்ற அர்த்தத்தில் நான் இங்கு குறிப்பிடவில்லை) சமத்துவ சமூகம் நம்முடைய இந்திய நாட்டின் பாரம்பரியம் என்பதை நிலைநாட்டவே.ஆரிய கடவுள்களில் பெண்களுக்கு இடமேயில்லை. அவர்களைப் பொருத்தவரை இந்திரன், மித்திரன், வருணன் என்ற ஆணாதிக்க சிந்தனையே ஆதிகாலத்தில் இருந்து தொடர்கிறது. அதனால் தான் இன்றைக்கும் சுளுளு-ல் பெண்களை உறுப்பினராக சேர்ப்பதில்லை. அதுமட்டுமின்றி நம்முடைய தாய்நாட்டை அவர்கள் பித்ரு பூமி - தந்தை பூமி கூறுகின்றனர்.
இவர்களது கலாச்சார தேசியம் இதுதான். RSS துறவி சஞ்சய் ஜோசியின் காம கொட்டாரங்களை இந்திய நாடே சிரித்ததே! இதுதான் இவர்களின் ஒழுக்கம் - சுய கட்டுப்பாடு - கலாச்சாரம்.
370வது சட்டப் பிரிவு குறித்து கேள்வி எழுப்பும் இவர்கள் தலித் மக்களை இன்னும் கோவில் கர்ப்ப கிரகம் வரை சென்று வழிபடவும், அவர்களை பூசாரிகளாக்கவும் முதலில் ஒத்துக் கொள்வார்களா? கேட்டால் மனுவே எங்களது வேத நூல், எனவே மனுவின் சட்டமே எங்கள் சட்டம். அதில் தலித்துக்கள் புழு, பூச்சிக்களை விட மிக கேவலமானவர்கள் என்று கூறுவார்கள் இந்த கொழுப்பேறிய சோம்பேறிகள்.
ஒரே சிவில் சட்டம் பேசும் இவர்களை பற்றித்தான் முந்தைய - இந்நாளைய - எதிர்கால சகா உமா பாரதி கூறினார் பா.ஜ.க.வுக்குள் மேல் ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது. பெண்களையோ, பிற்படுத்தப்பட்ட மக்களையோ கண்டு கொள்வதே இல்லை என்று முதலில் சங்பரிவாரத்திற்குள் சிவில் சட்டத்தையும் - பெண்களுக்கு சமஅந்த°தையும் கொடுக்கட்டும். பிறகு இது குறித்து விவாதிக்கலாம்.
“உண்மை இந்துக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத கொலைகார தத்துவம்தான் இந்துத்துவா” இந்த இந்துத்துவாவில் பெயரால்தான் மகாத்காந்தி என்ற தீவிரமான - அகிம்சாவாத - நிராயுதபாணியான இந்து பக்தரை - இந்தியாவின் ஆத்மாவ திகழ்ந்தவரை கொலை புரிந்ததுதான் இந்துத்துவாவின் உண்மை முகம். இத்தகைய அழுக்கேறிய காட்டிக்கொடுக்கும் புத்தியுள்ள - மனுவின் வாரிசுகளை இந்திய மக்கள் நிச்சயம் வீழ்த்துவார்கள்.

No comments: