January 25, 2006

விஜயகாந்தின் (அ) நியாயம்!

அடுத்தவர்களின் சொத்துக்களை அப்புறப்படுத்துதற்கு ஆளாய்ப் பறக்கிறார்கள். பேரன் சொத்துக்கு பிரச்சினை என்றவுடன் ஓடோடி யார் யாரையோ பார்க்கிறார்கள், பதட்டப்படுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார் தேசிய ¬முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் பேசுகையில், நான் சிரமப்பட்டு, உழைத்து சம்பாதித்த பணத்தில் கல்யாண மண்டபம் கட்டினேன். அதை இடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அது தொடர்பான உத்தரவு கூட எனக்கு இன்னும் வரவில்லை. கல்யாண மண்டபத்தை இடிப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.

மொத்தத்தில் விஜயகாந்த் திமுகவை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் கொள்கை பிரச்சினைகள் அல்ல. அவரது திருமண மண்டபம் (சாரி, கட்சி அலுவலகம்) பொது மக்களின் தேவைக்காக நெடுஞ்சாலைத்துறை இடிக்க உத்திரவிட்டுள்ளதே அதுதான்!

ஏழை - எளிய மக்கள் சிறுக, சிறுக சேர்த்து வாங்கிய எளிய கட்டிடங்கள் பல நெடுஞ்சாலைத்துறையால் இடிக்கப்படும்போதெல்லாம் இவர் எங்கே போய் இருந்தார்.இவர் மட்டும்தான் உழைத்து சம்பாதித்தார். மற்றவர்களெல்லாம் திருடினார்கள் என்று சொல்கிறாரா? இவரது ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கணக்கான சினிமா உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டப்பட்டதால்தான் இவர் அழகாக டைவ் அடிப்பது போலவும், சாகசங்கள் புரிவது போலவும் காட்சி அமைக்கப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்.

இவரது பிரதான தேர்தல் அறிக்கையே! தன்னுடைய திருமண மண்டபத்தை இடிக்கக்கூடாது என்பதாகத்தான் இருக்கும்!

2 comments:

சந்திப்பு said...

டி ராஜ்
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சபதமிட்டிருப்பவர் அல்லவா? பொய் சொல்லலாகது பாப்பா என்று பாரதி சொன்து போல் இவர் தன் கட்சித் தொண்டர்களுக்கு சொல்லவில்லையே! அதுதான் போலும். நான் தனித்தே நிற்பேன் என்று கூறிக் கொண்டே திமுகவை விமர்சிப்பது அதிமுகவிற்கு துணை செய்யவே! இதுவும் ஒரு டாக்டி°தான்.

Muthu said...

பாடம் கத்துக்கிறாரு விஜயகாந்த் இன்னும் எவ்வளவோ இருக்கு பார்ப்போம்...