December 29, 2005

“ஏழை படும் பாடு”
படித்ததில் பிடித்தது

பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹீயூகோவால் எழுதப்பட்ட “ஏழை படும் பாடு” சமீபத்தில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு ‘இனிய உதயத்தில்’ வெளியாகி இருந்தது.

18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும், இன்றைக்கும் உலக மக்களின் துன்பங்களை, துயரங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. பிரான்சில் சமீபத்தில் எழுந்த மக்கள் எழுச்சி - ஏழை படும் பாட்டினை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

இந்த நூலில் இரண்டு கதாப் பாத்திரங்கள் என்னை மிகுந்த ஈர்ப்புக்கு உள்ளாக்கியது. 1. பாந்தோன், 2. ஜீன் வால்ஜின்.

முதலில் பாந்தோன் கதாபாத்திரம் குறித்து பார்க்கலாம்.

பாந்தோன் தாய், தந்தையற்ற ஒரு அபலைப் பெண். அவளது பெயரைக் கூட அவள்தான் வைத்துக் கொண்டாள். பாந்தோனின் அழகு நமது ஐ°வர்யாராயை கூட மிஞ்சும் எழிலழகு கொண்டவள்.அவளதும் அவளது மூன்று தோழிகளும் தையற் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நால்வரும் கட்டழகுமிக்க வாலிபர்களின் காதலுக்கு இரையாகின்றனர். அதில் பாந்தோன் ஒரு குழந்தையையும் பெற்று விடுகிறாள்.

இப்பின்னணியில் அந்த நான்கு வாலிபர்களும், பாந்தோன் உட்பட மற்ற தோழிகளுக்கு டாட்டா காண்பித்துவிட்டு ஓடி விடுகின்றனர்.

பாந்தோனை இந்த நிகழ்ச்சி உருக்குலைத்து விட்டது? அடுத்து பாந்தோனுடைய எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி அவளை வாட்டியெடுத்தது. மற்ற தோழிகளைப் பொறுத்தவரை, இவர்கள் இல்லாவிட்டால், தங்கள் அழகுக்கு மற்றவர்கள் கிடைப்பார்கள் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டனர். ஆனால் பாந்தோன் இந்த வழி பிடிக்கவில்லை. அத்துடன் தன்னுடைய குழந்தையை எப்படியாவது நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கிறாள்.எனவே, பாந்தோன் வேலைக்கு குறுக்கே நிற்பது இந்த குழந்தை. இந்த குழந்தையை (பெண் குழந்தை) யாருடைய பாதுகாப்பிலாவது விட்டு விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டே... தன்னுடைய நடையை வேகப்படுத்தினால் வாழ்கையை... வேலையைத் தேடி...

நீண்ட தூர நடை பயணத்திற்கு பின் ஒரு உணவகம் தென்பட்டது. அந்த இடத்தில் இருந்த குழந்தைகளுடன் இவளுடைய குழந்தையும் ஒட்டிக் கொண்டது. எனவே அந்த உணவகத்தை நடத்துபவரிடமே தன்னுடைய நிலையை கூறி குழந்தையை ஒப்படைக்க தீர்மானித்தாள்.உணவகம் நடத்துபவர் மகா பேர் வழி! பாந்தோனின் சூழலைப் புரிந்து கொண்டு அவளிடம் மாதத்திற்கு இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டான். அத்துடன் அவள் கையில் இருந்த பணத்தையும், குழந்தைக்காக அவள் வைத்திருந்த உயர்ந்த பட்டாடையையும் பெற்றுக் கொண்டான்.

வேலை தேடி புறப்பட்ட பாந்தோனுக்கு தன்னுடைய குழந்தையின் எதிர்காலம் மட்டுமே கண்ணில் நின்றது! அவளும் ஒரு சிறு தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்தாள்.

தன்குழந்தைக்காக மாதந்தோறும் பணத்தை அனுப்பிக் கொண்டே இருந்தான். குழந்தையை வளர்ப்பவன் பெரும் பேராசைக்காரன், அத்துடன் குழந்தையை மிக மோசமான வேலைகளில் எல்லாம் ஈடுபடுத்தினான், மிக கொடுமையாக வேலையை வாங்கினான். கிழிந்த கந்தல்களையே உடையாக கொடுத்தான். ஏன் பாந்தோன் கொடுத்த விலை உயர்ந்த பட்டாடையைக்கூட விற்று காசாக்கிக் கொண்டான். அவனது மனைவி அதைவிட கொடுமைக்காரி. அந்த குழந்தையை பிசாசாகவே நடத்தி வந்தாள். இந்த துயரமெல்லாம் பாந்தோனுக்கு தெரியாது.

இருப்பினும் குழந்தைக்கு பணத்தை அனுப்புவதே தன் குறிக்கோளாக அதைச் செய்து வந்ததோடு, தன் குழந்தையின் வளர்ச்சி குறித்து அடிக்கடி யாரிடமாவது சொல்லி கடிதம் எழுதி வந்தாள்.அவளது அழகு பார்ப்பவர்கள் கண்ணை உருத்தாமல் இல்லை. மேலும் அவள் யாருக்கோ அடிக்கடி கடிதம் எழுதுவதாக அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த சக பெண்கள் பேசிக் கொண்டதோடு, அவள் மோசமானவள், நடத்தை கெட்டவள் என்றெல்லாம் இழிவாக பேசத் துவங்கினர். இங்கு யாரை வலை வீசுவதற்கு வந்திருக்கிறாளோ என்று ஏசினர். வேலை பளு அவளது உடல் அழகை நாளுக்கு நாள் மேலும், மேலும் குலைத்துக் கொண்டே வந்தது!

இதே சூழ்நிலையில் பாந்தோனிடம், உணவகத்தை நடத்துபவன் அடிக்கடி அதிகமான தொகையை கேட்டு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தான். தற்போது குழந்தைக்கு மிக மோசமாக காய்ச்சல் கண்டிருப்பதாகவும், அதற்கு அதிகமான தொகை தேவைப்படுவதாக கூறி கடிதம் எழுதியிருந்தான்.பாந்தோன் பற்றிய அவதூறு பேச்சுக்களால், அந்த நிறுவனத்தில் இருந்து அவளை வேலையில் இருந்து நீக்கி விட்டனர். என்ன செய்வது என்று தெரியாத சூழலில் - உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குழந்தையை காப்பாற்ற என்ன செய்து? எங்கெங்கோ கடன் கேட்டுப் பார்த்தால் யாரும் உதவுவதாக தெரியவில்லை.
வேறு என்ன வழி!

முடிவுக்கு வந்தால், அங்கேயுள்ள ஒரு சவுரி முடி வியாபாரியிடம் சென்று தன் தலை முடியை வைத்துக் கொண்டால் தங்கள் எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்டால், அவரோ இது போன்ற முடியை நான் பார்த்ததேயில்லை. மிக அழகாக இருக்கிறது என்று கூறி அவரது முடியை வழித்து எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட தொகைய கொடுத்தார்.

அந்த தொகையில் ஒரு தொப்பியை வாங்கி மாட்டிக் கொண்ட பாந்தோன். தன் குழந்தையின் மருத்துவ செலவிற்காக பணத்தை அனுப்பி வைத்தாள். அடுத்த கடிதம் வந்தது, தற்போது குளிர் காலம் துவங்கி விட்டது குழந்தைக்கு விலை உயர்ந்த கம்பளி ஆடை வாங்க வேண்டும் இல்லையென்றால் குழந்தை குளிரில் நடுங்கி இறந்து விடும் என்று கூறி!

சொந்த போயிருந்த பாந்தோனின் இதயம் இறுகிப்போனது. யோசித்தால் பணத்திற்கு என்ன செய்வது, குழந்தை அவள் கண் முன் நிழலாடியது! பிரான்சில் உள்ள பல் டாக்டரிடம் சென்று தன்னுடைய பற்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறு கூறினாள், டாக்டர் அவளது பற்களை சோதித்து விட்டு, உன்னுடைய இரண்டு முன் பற்கள் மிக அழகாக இருக்கிறது அதை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி, பற்களை கழட்டிக் கொண்டு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தார்.

தொகையை தன் குழந்தைக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய பாந்தோன் வலியால் மிகத் துன்பப்பட்டார். வேலையும் கிடைக்கவில்லை. வீட்டை விட்டும் வெளியில் செல்ல முடியவில்லை உடம்பும் முன்பு இருந்ததுபோல் இல்லை.... என்ன செய்வாள்?
மீண்டும் கடிதம் வந்தது! தற்போது குழந்தை மிக சிரியசாக இருப்பதாக எனவே அவசரமாக பணம் தேவை என்று!

இனிமேல் பாந்தோனிடம் எடுத்துக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? உதவும் கரங்களும் இல்லை... தன்னுடைய தோழி ஒருத்தி விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது அவளுக்குத் தெரியும். பாந்தோனுக்கு தற்போது கடைசியாக இருப்பது அந்த ஒரு வழிதான். குழந்தைக்காக பாந்தோன் தன்னை சீவி சிங்காரித்துக் கொண்டு புறப்பட்டாள்!

பாந்தோனை விபச்சாரத்தில் ஈடுபடத் தூண்டியது யார்? என்று நூலாசிரியர் விக்டர் யூகோ எழுப்பும் கேள்வி நெஞ்சை விட்டு அகலவில்லை! இந்த சமூகம் ஏழைகளுக்கும் வழங்கும் பரிசு இதுதானா?நீங்கள் கூறுங்கள் இப்போது!

6 comments:

அனுசுயா said...

உண்மையிலேயே ஏழை படும் பாடு கண்ணீர் வர வைக்கும் கதைதான். சாதாரண கதையில் கதாநாயகன் இளமையானவராக ஆரம்பிப்பார்கள் ஆனால் இக்கதையின் ஆரம்பத்திலேயே கதாநாயகன் வயதானவராக வருவது ஆச்சரியம்

சந்திப்பு said...

நன்றி அனுசுயா!
தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு. ஜீன் வால்ஜின் பசிக்காக ரொட்டித் துண்டை திருட முயற்சி செய்திருப்பான். ஆனால், சமூகமும், ஆட்சியாளர்களும் அவனை மாபெரும் திருடனாக சித்தரித்து விடுகிறது. இன்றைக்கும் நமது சமூகத்தில் இதுதான் நடக்கிறது.

Muthu said...

write about the second character also

சந்திப்பு said...

Muthu,

sure, I will put next day.

Thanks.

பட்டணத்து ராசா said...

//பிரான்சில் சமீபத்தில் எழுந்த மக்கள் எழுச்சி//

எதை குறிப்பிடுகிறிர்கள்

சந்திப்பு said...

பட்டணத்து ராசாவிற்காக நீண்ட நாள் கழித்து எழுதும் பதில் பின்னூட்டம். காலம் கடந்தாலும் கருத்து கடக்கவில்லை. சமீபத்தில் என்று குறிப்பிட்டது. இரண்டு சிறுவர்களை பிரான்சு காவல்துறை துரத்தி அடிக்க முயன்றபோது அவர்கள் மின்சார டிரான்ஸ்பரில் மோதி இறந்ததும். அதனையொட்டி எழுந்த கலவரத்தையும்தான். இது பிரான்சின் மறுபக்கத்தை உலக மக்களுக்கு உணர்த்தியது. பிரான்சில் இன்னும் தரித்திரம் தாண்டிவமாடிக் கொண்டுதான் இருக்கிறது. இவற்றுக்கு முதலாளித்துவம் தீர்வு காணவில்லை என்பதுதான் அதன் அர்த்தம் நன்பரே. வாழ்த்துக்கள்.