December 05, 2005

கருப்பு தினம்


இந்தியாவின் கருப்பு தினம் “டிசம்பர் 6”. சங்பரிவாரத்தால் 464 வருட பழமைவாய்ந்த “பாபர்” மசூதி தகர்க்கப்பட்ட நாள். இன்றுடன் 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. உலகின் மிக தொன்மையான பாரம்பரியம் உள்ள நாடு இந்தியா. நம் நாட்டின் மதச்சார்பற்ற பாரம்பரியம் தகர்ப்பட்ட நாள் “டிசம்பர் 6”. மக்களின் மத உணர்வை அரசியலாக்கி அதன் மூலம் பதவி சுகம் காண துடித்தவர்களின் செயலே பாபர் மசூதி இடிப்பு.


மூன்று லட்சம் பக்தர்களை இராமருக்கு கோவில் கட்டுவோம் என்று கூறி, செங்கல் பூஜை என்ற பெயரில் போலி நாடகமாடி, உத்திரபிரதேசத்தின் அன்றய முதல்வர் கல்யாண்சிங் “பாபர் மசூதியை” பாதுகாப்போம் என்று உறுதி மொழி கொடுத்து (போலியாக) சங்பரிவாரங்களின் திட்டமிட்ட வெறிச்செயலால் பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. இடிக்கப்பட்ட ஒவ்வொரு “டூம்”களின் போதும் இந்திய அன்னை வெட்கித் தலைக்குனிந்தாள்.


மசூதியை இடித்தவர்கள் அத்தோடு திருப்தியடைவில்லை. வெற்றி ஊர்வலம் என்ற பெயரில் சாதாரண உழைப்பாளி மக்களான இ°லாமியர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஊர்வலம் நடத்தி, இரத்தகளரியை ஏற்படுத்தி, ஒரே மாதத்தில் நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை வேட்டையாடினர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் பெருமானமுள்ள சொத்துக்களும், பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. கற்பை காப்பாற்ற புறப்பட்டுள்ள “தமிழ் பாண்பாட்டார்கள்”, “பெரியாரின் வழி வந்தவர்கள்” அவர்களோடு கைகோர்த்து - கொஞ்சி மகிழ்ந்தனர். கற்பின் புனிதமெல்லாம் அப்போது தாமரையின் இதழ்களால் மழைக்கப்பட்டது.


மசூதி இடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோசி, அசோக் சிங்கால் ஆகியோர் இதுவரை சிறு தண்டனையைக்கூட அனுபவிக்கவில்லை. மாறாக மதச்சார்பற்ற இந்தியாவின் முக்கிய மந்திரிகளாக வளம் வந்தனர். (அவக்கேடான விஷயம்) அது மட்டுமா? இத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, அந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கீழ்த்தரமான வேலைகளிலும் இறங்கினார் அன்றைய துணை பிரதமர் அத்வானி.


சங்பரிவார ஆட்சிக்காலத்தில் இந்திய நாடே இரத்த களரியானது. குஜராத் மோடி “நவீன பாசிஸ்ட்டாக” வடிவெடுத்துள்ளான். 3000 இஸ்லாமிய மக்களை நரவேட்டையாடியது முகமூடி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்காலத்தில். (கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து கோர நர்த்தனம் ஆடியதெல்லாம் இந்துத்துவ - மோடிச - சங்பரிவார பண்பாடானது - தமிழ் பண்பாட்டார்களின் குரல்கள் அவர்களது குரல் வளைக்குள் சிக்கிக் கொண்டன....)


கிருத்துவ ஆலயங்கள் தகர்ப்பு, கன்னியா°திரிகள் கற்பழிப்பு, பாதிரியார் எரிப்பு... என தங்களது சித்து வேலைகளை, மத துவேஷத்தை தூண்டி உழைப்பாளி மக்களிடையே பகையுணர்வை மூட்டியவர்கள்தான் சங்பரிவார கயவர்கள்.
அன்று இஸ்மாயில்” என்று பச்சைக் குத்திக் கொண்டு மகாத்மாவை கொன்ற கோட்சேவின் வாரிசுகள்தான் இன்றைய சங்பரிவார வகையறாக்கள்.


“இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவது” என்னுடைய இருதயத்தை இரண்டாக பிளப்பது போல் என்று கூறிய மகாத்மா... சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மதக்கலவரத்தால் மனம் நொந்தவராக - அமைதியற்ற மனநிலையில் இருந்தார்.


இந்திய சுதந்திரப்போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளிடம் காட்டிக்கொடுத்தவர்தான் “முகமூடி வாஜ்பாய்”, அந்தமான் சிறையில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர் “வீர (கோழை) சவர்க்கார்”. இந்திய விடுதலைக்கோ, தேச முன்னேற்றத்திற்கோ துரும்பளவுக்கு கூட பங்களிக்காதவர்கள் இந்திய மக்களை - வேட்டையாடும் புல்லுருவிகளாய் புறப்பட்டுள்ளார்கள். இவர்களது மாய்மாலங்களை அம்பலப்படுத்துவதே நம் தேசத்திற்கு செய்யும் உயர்ந்த சேவையாக இருக்கும்.

2 comments:

தமிழ் செல்வன் said...

இன்று காட்டிக் கொடுத்த வாஜ்பாய்க்கு இந்திய பிரதமர் பதவி.

காந்தியை கொன்ற கொலைக் கேசில் தொடர்புண்டு என்று குற்றம் சுமத்தப் பட்ட சாவர்க்கரின் படம் பார்லிமென்டில் அதே காந்தியின் முன்னில்.

தேச விடுதலைக்காக தன் சமுதாயத்தின் வருங்காலத்தை மொத்தமாக பணயம் வைத்த முஸ்லிம்கள் "தீவிரவாதிகள்","பயங்கரவாதிகள்","தேச விரோதிகள்"!

இது தான் "சுதந்திர இந்தியா".

சந்திப்பு said...

நன்றி தமிழ்செல்வன். மிகச் சரியாக நினைவூட்டியுள்ளீர்கள் “சவர்க்கரின் படம்” காந்தியின் நேர் எதிரே! உலகிலேயே இப்படியொரு வேதனையான அற்புதம் நம் நாட்டில் என்பது.
நம்முடைய பாடப்புத்தகங்கள் சுதந்திரப் போரில் காந்தியின் பங்கை மட்டும் பெயருக்கு குறிப்பிட்டவர்கள். சுதந்திரப் போரில் பல தியாகங்களைச் செய்த பகத்சிங், சுகதேவ், ஆசாத், உத்தம்சிங்... போன்ற பலரது தியாகங்களை ஒரு சில பாராக்களில் அடக்கி விட்டதும், சுதந்திரப்போர் என்பது ஏதோ உணர்ச்சியற்ற ஒரு வடிவமாக சித்தரிக்கப்பட்டதும், மேலும் துரோகிகள் யார் என்று நம் சமூகத்திற்கு தெளிவாக சுட்டிக்காட்டாததும்தான் இத்தகைய நிலைக்கு காரணம்.
கரம் கோர்ப்போம் இந்நிலை மாற...
நன்றி தமிழ்...