இந்திய நக்சலிசமும்
நேபாள் மாவோயிசமும்
நேபாள் மாவோயிசமும்
இந்திய நாட்டில் தனித்தனிக்குழுக்களாக செயல்பட்டு வந்த நக்சலைட் குழுக்கள் சில ஒன்றினைந்து தற்போது “மாவோயி°ட்டுகள்” என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். இப்புதிய அமைப்பின் உருவாக்கத்திற்கு பின், இவர்களது வன்முறை அரசியல் தீவிரமாகியுள்ளது. துப்பாக்கிகள் மூலம் இந்திய நிலப்பிரச்சினைக்கும், இதர சமூக பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள்.
ஆந்திரம், பீகார், ஜார்கண்ட் என பல மலைகள் - காடுகள் சார்ந்த மாநிலங்களில்தான் இவர்களது தலைமறைவு செயல்பாடுகள் அமைந்துள்ளது. 100 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் நிலவும் வேலையிண்மை, கல்வியிண்மை, நிலப்பிரச்சினை, வீடின்மை போன்ற பல்வேறு சுரண்டல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண குறைந்தபட்சம் ஜனநாயக ரீதியில் - கருத்துரீதியில் அணிதிரளக்கூடிய 5 கோடி பேரையாவது திரட்டாமல் சமூக மாற்றம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். அதுவரை புரட்சி என்ற பெயரால் இவர்கள் நிகழ்த்தும் படுகொலைகள் அனைத்தும் வன்முறை என்ற அடையாளத்திற்கே இட்டுச் செல்லும். கிராமப்புறங்களில் ஆழமான சமூக முரண்பாடுகள் இருப்பதும், அதற்கான ஒரே சர்வோரக நிவாரண துப்பாக்கி அரசியல்தான் என்பதுதான் கேள்வியாக உள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் நான் படித்ததையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். “நக்சலிசம்” தோன்ற மேற்குவங்கத்திலேயே அதன் வேர்கள் இல்லாமலாகி விட்டது. இதற்கு அடிப்படையான காரணம்; அங்குள்ள நிலப்பிரச்சினை உட்பட பல்வேறு சமூக பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் தீர்வு கண்டது இடதுசாரி இயக்கம்.
நக்சலிச புரட்சி அரசியல் 1994 முதல் 2005 வரை நிகழ்த்திய வன்முறைச் சம்பவத்தில் சாதாரண மக்கள் (சிவிலியன்கள்) 2228 பேரும், போலீ° தரப்பில் 737 பேரும், நக்ஸலைட்டுகள் 2076 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 5041 பேர் இந்த சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். http://www.satp.org/satporgtp/countries/india/database/fatalities.htm நக்சலிசத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் போலீ° தரப்பில் எடுக்கும் நடவடிக்கையாலும் சாதாரண அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும் பெரும் எண்ணிக்கையில் அமைந்து விடுகிறது. இத்தகைய உயிரிழப்புகள் மூலம் அவர்கள் அரசியல் ரீதியாக என்ன சாதித்தார்கள் என்ற கேள்வி எழுவதும் இயல்பே!
நக்சலிச புரட்சி அரசியல் 1994 முதல் 2005 வரை நிகழ்த்திய வன்முறைச் சம்பவத்தில் சாதாரண மக்கள் (சிவிலியன்கள்) 2228 பேரும், போலீ° தரப்பில் 737 பேரும், நக்ஸலைட்டுகள் 2076 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 5041 பேர் இந்த சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். http://www.satp.org/satporgtp/countries/india/database/fatalities.htm நக்சலிசத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் போலீ° தரப்பில் எடுக்கும் நடவடிக்கையாலும் சாதாரண அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும் பெரும் எண்ணிக்கையில் அமைந்து விடுகிறது. இத்தகைய உயிரிழப்புகள் மூலம் அவர்கள் அரசியல் ரீதியாக என்ன சாதித்தார்கள் என்ற கேள்வி எழுவதும் இயல்பே!
நேபாளத்தில் மன்னர் ஞானேந்திரா இந்த வருடத் துவக்கத்தில் நாடாளுமன்ற அரசியலை முடக்கி, தன்னுடைய மன்னாராட்சியை அமல்படுத்தினார். அத்துடன் நோபாள் அரசியல் சாசனத்தில் வழங்கியிருந்த அடிப்படை உரிமைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, நேபாளத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர்த் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். இவையெல்லாம் நாம் அறிந்ததே. இருப்பினும் நேபாள அரசியலில் “நேபாள மாவோயி°ட்டுகள்” இந்திய நக்ஸலைட்டுகளைப்போலவே பெரும் வன்முறை அரசியலை அரங்கேற்றி வந்தனர். நேபாளத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஊடுருவி துப்பாக்கி முனையில் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர். நேபாள மாவோயி°ட்டுகளின் துப்பாக்கி - வன்முறை அரசியல் மூலமே நேபாளத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்த்திற்கு உயிரூட்ட முடியும் என்று கனவு கண்டிருந்தனர்.
உண்மை நிலை வேறாகத்தான் இருந்தது. நோபள மக்களின் இதயங்களில் - அவர்களின் உண்மையான நம்பிக்கையைப் பெற்ற அமைப்புகளாக ஐக்கிய மார்க்சி°ட் - லெனி°ட் அமைப்பும், நேபாள காங்கிர° உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் உள்ளன. இவர்களது ஒன்றுபட்ட ஜனநாயக ரீதியான போராட்டம் நேபாளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேபாள மாவோயி°ட்டுகள் இனியும் தனிமை அரசியல் செய்தால் ஏற்படும் ஜனநாயக புரட்சியில் நாம் கரை ஒதுக்கப்படுவோம் என்பதை உணர்ந்து அவர்களும் துப்பாக்கிகளை கீழே வைக்க ஒப்புக் கொண்டு ஏழு கட்சியுடன் சேர்ந்த கரம் கோர்த்துள்ளனர். இது ஒரு நல்ல துவக்கம். உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக ஆர்வலர்கள் இதை வரவேற்றுள்ளனர். எந்த ஒரு நாட்டிலும் ஏற்படும் சமூக மாற்றத்திற்கு ஒரு அமைப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஒரு மையக் கருத்தை எட்டிட பன்முகப்பட்ட தன்மைக் கொண்ட அமைப்புகள் சூழ்நிலைக்கு ஏற்ப கைகோர்ப்பதன் மூலமே மாற்றம் ஏற்படும். இதுதான் நேபாளம் உணர்த்தும் பாடம். உணருவார்களா இந்திய நக்சலிச சித்தாந்தவாதிகள்.
No comments:
Post a Comment