December 17, 2005

“பிரதிபா மரணம்” உலகமயமாக்கல் சீரழிவே!



பெங்களூரில் கால்சென்டரில் பணிபுரியும் திருமதி பிரதிபா (24) கயவன் கார் டிரைவர் ஒருவனால் கற்பழித்து படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரை மட்டுமல்ல; இந்திய நாட்டையே அதிர்ச்சியடைச் செய்கிறது.
பிரதிபாவுக்காக சந்திப்பு அஞ்சலி செலுத்துகிறது.

பிரதிபா மரணம் ஏதோ தற்செயல் நிகழ்வாக பார்க்க முடியாது! இன்றைக்கு அவுட்சோர்சிங் தொழில்களான கால்சென்டர், மெடிக்கல் டிரான்°கிரிப்ஷன், சாப்ட்வேர் டெவ்லப்மெண்ட் போன்ற துறைகளில் உள்ள சீரழிவே இதற்கு மொத்த சாட்சியாக முன்னிற்கிறது.


சகோதரி பிரதிபா தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.00 மணிக்கு வீட்டிற்கு திரும்புவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நாய்களும், பன்றிகளும், ஓநாய்களும் உறங்கிக் கொண்டிருக்கும் போது பேய்கள் மட்டும் உலவும் நேரமான நள்ளிரவில் பிரதிபா வேலைக்கு செல்ல நிர்ப்பந்தித்த (நவீன உலகமயமாக்கல்) சூழலே, அவரை இந்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.


“நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் (நகைகள் எல்லாம் அணிந்து கொண்டு) என்றைக்கு சுதந்திரமாக நடமாடுகிறாரே” அன்றைக்குத்தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் என்று மகாத்மா கூறினார். அப்படியென்றால் இன்றைக்கு இருக்கும் சுதந்திரம் யாருக்கானது? சுதந்திரக் காற்றை முழுமையாக அனுபவிப்பவர்கள் யார்? இதில் பலிகடாக்களாக ஆக்கப்பட்டவர்கள் யார்? இந்த கேள்விகளுக்கு நாம் விடை கண்டே ஆக வேண்டும்.


என் பார்வையில் சகோதரி பிரதிபாவை நள்ளிரவு வேலைக்கு செல்லத் தூண்டிய பெரும் முதலாளிகளும், மறைமுகமான ஏகாதிபத்திய சக்திகளும்தான்; (இப்படிக் கூறினால் பாலிடிக்°பா... என்று முகம் சுளிப்பவர்கள்தான் நம்மில் அதிகம்) உண்மையில் இவர்களுக்குத்தான் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது சுத்தமாக சுரண்டுவதற்கு.பொதுவாக கால் சென்டர்களில் 10 முதல் 12 மணி நேர வேலை என்பது விதியாகிப் போயுள்ளது. அமெரிக்காவிலோ - ஐரோப்பாவிலோ 8 மணிநேரத்திற்கு மேல் யாரும் வேலை செய்வதில்லை. இங்கு 8 நேர வேலை சட்டம் என்ன ஆனது? இதற்கு எதிராக யார் குரலெழுப்புவது?


கால்சென்டர்களில் பணிபுரிபவர்கள் ஏறக்குறைய மக்கள் திரளில் இருந்து தனித்த வாழ்வையே மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு இந்த உலகத்தின் சுக, துக்கங்கள், நாட்டு நடப்புகள் என பல விஷயங்கள் மறக்கப்படுகிறது. 12 மணிநேர வேலை, டிரவலிங் டைம் 4 மணி நேரம், வீட்டில் உறங்குவதற்கும், இதர அடிப்படை வேலைகளைச் செய்துக் கொள்வதும் 8 மணி நேரம்.


இத்தகைய சூழலால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள இளம் தம்பதிகள் பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இதனால் விவகாரத்துக்களும், இருதய நோய், சர்க்கரை வியாதி மற்றும் இளம் வயதிலேயே மணரம் என பல சிக்கல்களை சந்திப்பதாகவும் சர்வேக்கள் பல உணர்த்துகின்றன.


இந்தச் சிக்கல்களில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்? சாப்ட்வேர்துறை என்பது ஏதோ சொர்க்கலோகம் அல்ல; அங்கும் உங்களுடைய உழைப்பு சுரண்டப்படுகிறது. ஒரே வேலையைச் செய்யும் நமக்கும், மேலை நாடுகளில் உள்ளவர்களுக்கும் ஏற்றத்தாழ்வான கூலி வழங்கப்படுகிறது.


தொழிற்சங்கம் போன்ற அடிப்படையான உரிமைகள் எதுவும் இல்லாத காரணத்தால், ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே குவார்ட்டர்°களை அமைத்துக் கொடுத்தல் போன்ற எந்தவிதமான உரிமைகளையும் நிலைநாட்டாத சூழல்தான் இங்கு நிலவுகிறது.

ஹைடெக் பேசும் மனிதர்கள் - மாடுகளைப் போல் அழுக்கான குளத்தில் விழுந்து எழுவது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரண மனிதன் தங்களது உரிமையை நிலைநாட்ட ரிக்ஷா ஓட்டுனர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், சுமைப்பணி சங்கம் என வைத்துக் கொள்ளும் போது ஹைடெக் அறிவு பெற்றவர்கள் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டுமா?


பிரதிபா மரணத்திற்கு அனுதாபம் மட்டும் போதுமானதல்ல!


புது வாழ்வு பாய்ச்சும் போர்முனையாக மாறுவதே பிரதிபாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்!!

17 comments:

Amar said...

Hmm, okay, did you know that there is no law stopping call center labour unions ?

Besides, the only things Unions have given India is more poverty,stupid communist chest-thumping idealism and ofcourse more poverty.

Some fetish you have for trade unions!

சந்திப்பு said...

நன்றி சமுத்திரா

தாங்கள் இப்பதிவை வாசித்தது மிக்க மகிழ்ச்சி! கம்யூனி°ட்டுகளின் நோக்கம் பிரச்சினைகளை உண்டாக்குவது அல்ல; மாறாக இச்சமூகத்தை மாற்றுவதுதான். தொழிற்சங்கங்களால் வறுமை உண்டாவதில்லை. வறுமையும், வேலையிண்மையும் முதலாளித்துவத்தின் பேராயுதம். வெளியில் இருக்கும் வேலையில்லாதவர்களை வைத்துக் கொண்டுதான் - வேலையில் உள்ளவர்களை மிரட்ட முடியும். இது முதலாளித்துவத்தின் அடிப்படை கொள்கை.


செல்வச் செழிப்பை உணர்த்தும் உயர்ந்த கட்டிடங்களைச் சுற்றி புழு நெளியும் குடிசைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தத் துடிப்பவர்கள். அவர்களும் தங்களைப் போல் சுகாதாரமான, தரமான வீடுகளில் வசிக்க வேண்டும் என்பதை மறந்துப் போனவர்கள் அல்ல கம்யூனி°ட்டுகள்.


மாறாக, மக்கள் அனைவருக்கும் தரமான - சுகாதாரமான வாழ்க்கையும், பாரபட்சமற்ற கல்வியும் - வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள். இதை நிரூபித்தும் உள்ளனர். நம்மைவிட சீனாவிலும், கியூபாவிலும், வியட்நாமிலும், வடகொரியாவிலும், ஏன் சமீபத்திய வெனிசுலாவிலும் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை ஒப்பு நோக்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

மீண்டும் நன்றி!

மணியன் said...

நானும் உங்களுடன் பிரதிபாவிற்கான அஞ்சலியில் சேர்ந்து கொள்கிறேன். உங்கள் பதிவு மிகச் சரியானதே.

முத்துகுமரன் said...

மிக நல்ல பதிவு சந்திப்பு. உலக மயமாக்கலின் ஒரு விளைவு அடிமையாதல். கோக்கில் இந்து சாப்ட்வேர் துறை வரை. வெளியில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் கை நிறைய சம்பாதிப்பது போல தோன்றலாம். ஆனால் அவர்களெல்லாம் கொஞ்சம் வசதிகள் தரப்பட்ட கொத்தடிமைகளே.. இது போன்று பணி புரியும் சகோதரிகள் பணிக்கு வருவதற்கு பாதுகாப்பான சூழல்களை நிர்வாகங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். ஊழியர் குடியிருப்புகள் போன்றவற்றை செய்தும் தரலாம்.

இது போன்று பணிபுரிவர்களுக்கான உரிமைகளை பேசுவதற்கு முறையான அமைப்ப்புகள் எதுவும் கிடையாது. ஒரு நிரந்தமற்ற பணிச்சூழல் இருப்பது அவர்களின் மன நலன்களையும் பாதிக்கும். அருகில் தன்னைச் சேர்ந்த ஒருவனைச் சிதைவதை பொருட்படுத்தாமல் கோடிகளின் வீச்சு குறித்து பேசுவார்கள்.

உயிரின் மதிப்பையும், பணத்தின் மதிப்பையும் ஒரே தட்டில் வைக்கும் இந்த கார்ப்பரேட் கோமகன்களிடம் இதை விட வேறெதையும் எதிர்பார்க்க முடியாது

Deiva said...

I am working in US and typically we work 12-15 hrs a day here and many of our colleagues also does the same thing. Donot generalize anything. Also our indian counterparts in India work only 8 hrs a day in our company. The payscale is similiar to the currency. In US, if we earn Rs.20,000 a month, we can't even buy our meal for the month. The payscale is proportionate to the cost of living. Please conside these things before posting these kind of articles

Sri Rangan said...

பிரதீபாவின் படுகொலையை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன்,தங்கள் கருத்துக்களோடு முற்று முழுதாக உடன்படுகிறேன்.உங்கள் விரிந்த பார்வை சரியானது.இனியும் பல பிரதீபாக்கள் மரணமுறுவதைத் தடுத்தாகவேண்டும்.இதற்காகவேனும் உலகமயமாதலைத் தடுத்தாக வேண்டும்.

Amar said...

அய்யா, சீனாவை பற்றி பேச வேன்டுமா?

திபத் அக்கிரமிப்பு முதல் துவங்கலாமா?

அல்லது , சமிபத்தில் கருவில் இருந்த, பிறக்க சில நாட்களே இருந்த அந்த குழ்ந்தையை ஊசி போட்டு கொன்று விடும் சீன கம்யுனிச சர்வாதிகாரிகளை பற்றி பேசலாமா?

பின்னர் அந்த பினம் பிறந்த போது, அப்படியே தன்னீரில் போட்டு , செத்து விட்டது என்று உறுதி செய்வது தானே சீன அரசு?

சீன சுரங்கம் எல்லாம் கொத்து அடிமைகளை கொன்டு தானே தோன்ட படுகின்றன?
எமாற்ற வேறு எங்காவது போங்கள்!

அன்னே, ஆங்கிலத்தில் ஒரு பழமொழில் உள்ளது.

"Wisdom is knowing how little we know."

Amar said...

//அன்னே, ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது.//

Spell Error.
Sorry.

Muthu said...

perumal,

issue is very complicated then we think...

பிரதீபாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஐ.டி மற்றும் பி.பி.ஓ துறைகளில் இருப்பவருக்கு இவ்விதம் நேர்ந்தால் மட்டும் நாம் கண்டிப்பது தார்மீகமற்றது...நாட்டில் பலருக்கும் நேர்கிறது...இது முதலில் பாதுகாப்பை பற்றிய பிரச்சினை. இதை மொத்தமாகத்தான் பார்க்கவேண்டும்.

டைமிங் மற்றும் ஷிப்ட் பற்றி இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்துள்ள கட்டுரையை பார்க்கவும்.

நேரடியாக இதற்கு சம்மந்தம் இல்லாவிடினும் இதை பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள இந்த பதிவை படிக்கவும்.
http://muthuvintamil.blogspot.com/2005/10/blog-post_27.html

சந்திப்பு said...

முத்து தாங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மையே மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்களை இன்றைக்கு “சைபர் கூலிகள்” என்றே அழைக்கின்றனர். ஆனால், அவர்கள் தங்களை அவ்வாறு பார்க்காததுதான் வருத்தம்.
நம்நாட்டில் பெரும் முதலாளிகள் கூட தங்களுக்கு என்று சங்கங்கள் வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். (http://www.ciionline.org) ஆனால் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு தொழிற்சங்கம் என்றால் எட்டிக்காய் புளிப்பு. இவ்விஷயத்தில் தொழிலாளிகளின் உறுதி மட்டுமே வெல்லும்!

சந்திப்பு said...

திரு. அபிராமன், மணியன், முத்துகுமரன், ஸ்ரீரங்கன், தெய்வா, சமுத்ரா, முத்து ஆகியோர் தங்களது சகோதரி பிரதிபாவுக்காக தங்களது இதய அஞ்சலிகளை தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, தங்களது கருத்துக்களையும், இத்துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களையும் தெளிவாக வெளியிட்டுள்ளனர். இத்தகைய விவாதங்கள் நிச்சயம் இத்துறையில் உள்ளவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளது.
தெய்வா தன்னுடைய அனுபவத்தையும் கூறியுள்ளார். அமெரிக்காவிலும் 12-15 மணிநேரம் உழைப்பதாக கூறியுள்ளார். சம்பளமும் இந்தியாவில் இருப்பதைப்போலவே சமமாக உள்ளதாக கூறியுள்ளார்.
உண்மை விபரத்தை அமெரிக்க நண்பர்களே அவருக்கு விளக்குவதுதான் பொருத்தமாக இருக்கும். ஆனால், எனக்குத் தெரிந்தவரை “இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து செல்பவர்கள்தான் 12 - 15 மணி நேரம் வேலை செய்கின்றனர்”. அமெரிக்க முதலாளிகளும் இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தியர்களை விரும்புகின்றனர். இதனால் அமெரிக்க தொழிலாளிக்கும் - வெளிநாட்டு தொழிலாளிகளுக்கும் மெல்லிய முரண்பாடுகள் எழுந்து நிற்கின்றன. ஆனால், இன்றைக்க விஷயம் அமெரிக்க முதலாளிகளின் சுரண்டல் அமெரிக்காவோடு நிற்பதை விரும்பாமல்தான் “அவுட் சோர்சிங்” என்ற பெயரில் இந்தியாவிற்கு அதே வேலைகளை ஒப்படைக்கின்றனர். இன்னும் குறைந்த சம்பளத்தில், தொழிலாளிகள் குறித்த எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் இலாபம் தேடும் நுட்பத்தை அவர்கள் கற்றுக் கொண்டனர். ஆனால், நம் தொழிலாளிகள் உண்மையை தேடுவதில் கற்கவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது....
நண்பர் சமுத்திரா தொடையை தட்டிக் கொண்டு விவாதத்திற்கு வந்திருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
ஆனால், அவரது கவலையெல்லாம் ஏதோ கம்யூனிச பூதம் உலகையே வெகு சீக்கிரத்தில் ஆக்கிரமித்துவிடுமோ என்ற பயமாகத்தான் தெரிகிறது. மாறாக துன்பப்படும் தொழிலாளிகள், நடுத்தர, ஏழைகள் மீது இருப்பதாக தெரியவில்லை. அதனால்தான் நாம் எழுப்பியுள்ள அடிப்படையான கேள்விகளுக்கு விடை கொடுக்காமல் நழுவி விடுகிறார்.
அவர் கூறுவதுபோல் சீனாவில் கருவிலேயே குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால் கண்டிக்க வேண்டியதே! உண்மை என்ன என்பதை ஆராய வேண்டியுள்ளது! நம்மை விட மக்கள் தொகை அதிகமாக உள்ள சீன மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி, சுகாதாரம்... போன்ற விஷயங்களை இதய சுத்தியோடு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறோம்.
இரு தரப்பு திபெத் வரலாரை படித்து விட்டு முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் நன்றி!

Unknown said...

I have expressed my views on the same in my blog
http://chennaicutchery.blogspot.com/

கசி said...

உலகமயமாக்கல் எனக்கு தெரியாது. ஆனால் பிராமணமயமாக்கல் எனக்கு நன்கு தெரியும். அவர்கள் தங்கள் மனைவிகளையும் மகள்களையும் கூட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்துவார்கள்.

சந்திப்பு said...

காசி, தங்கள் வருகைக்கு நன்றி!
தங்களது அற்புதமான வீச்சருவாளை உலகமயத்துக்கு எதிராக வீசுங்கள்...
அது உலக மக்களின் விடுதலைக்குப் பயன்படும்

Muthu said...

என்ன பெருமாள்,

இது ஏதோ விஷமிகளின் பின்னூட்டம். காசியுடையது இல்லை...
(இவ்ளோ அப்பாவியாவா இருப்பீங்க நீங்க...)


அப்புறம் ஹாங்காங் முடிவு பத்தி நீங்க எதுவும் சொல்லலியே....

Premalatha said...

you are featured in Desipundit

Voice on Wings said...

I have responded to the DesiPundit 'feature'