April 22, 2009

தி.மு.க.வின் தேர்தல் ஜனநாயகம்!

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகள் துப்பாக்கிமுனையில் வாக்குகளை பெறுவதாக குற்றம் சுமத்திய கருணாநிதியின் தேர்தல் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை இன்றைய தினமணியில் வெளியான கீழ்க்கண்ட செய்தியினை படித்து அறிந்து கொள்ளவும். இதுதான் கருணாநிதியின் உண்மை முகம்!


மேலும், இலங்கை விவகாரத்தில் ஏப்ரல் 23 அன்று பொதுவேலை நிறுத்தம் என்று நாடகம் ஆடியுள்ளார் கருணாநிதி. உண்மையென்னவென்றால், அன்றைய தினம் மதுரையில் 59வது வார்டு கவுன்சிலரான தோழர் லீலாவதி கொலை செய்யப்பட்ட தினம். அன்றைய தினத்தில்தான் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கூட்டம் மதுரையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களும் உரையாற்ற உள்ளார்கள். இந்நிலையில் அந்தப் பொதுக்கூட்ட நிகழ்வை அன்றைய தினத்தில் சீர்குலைக்கும் நோக்கோடுதான் கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அரசியல் சாதூர்யம் யாருக்கு வரும்! அவருக்கு நிகர் அவரே! அவரது சாணக்கியத்தனம் எல்லாம் நாட்டு மக்களுக்கானதா? அல்லதது தனது மக்களுக்கானதா? என்பதை மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள். அதுமட்டுமா? இன்றைய தினம் விலைவாசி உயர்வு என்பது இந்தத் தேர்தலில் முதன்மையான பிரச்சனையாக முன்னுக்கு வந்துள்ளது. ஆன்லைன் டிரேடிங் என்பதும் பதுக்கல் பேர்வழிகளாலும்தான் விலைவாசி விண்ணுக்கு ஏறியது. மத்திய அரசியல் இருந்த கருணாநிதி என்றைக்காவது ஒருநாளாவது இது குறித்து கவலைப்பட்டிருப்பாரா? இன்றைய தினம் அவரது கலையெல்லாம் இந்தத் தேர்தலில் எப்படி கரையேறுவது என்பதுதான். காங்கிரசுடன் சேர்ந்து பயணிக்கும் திமுக ஒரு மூழ்கும் கப்பல் என்பதை தமிழக மக்கள் எப்போதோ தீர்மானித்துவிட்டனர்.

18 comments:

Anonymous said...

ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யாதவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இலங்கையில் வடக்குப் பகுதியில் தமிழ் மக்கள் படும் துன்பத்தைக்கூட, அது குறித்து தமிழக மக்கள் கொண்டுள்ள உணர்வைக்கூட தனது மகன் அஞ்சாத நெஞ்சருக்காக ஆதயமாக்கும் கருணாநிதியின் முயற்சியை அம்பலப் படுத்தியுள்ளீர்கள்.

சந்திப்பு said...

கருணாநிதி தனக்காக காரியம் ஆற்றுவதில் வல்லவர். அதுவும் அவரது மகன் அழகிரிக்காக அவர் எதையும் செய்வார். ஒருமுறை தா. கிருஷ்ணன் கொலை வழக்கு குறித்து நிருபர் ஒருவர் அவரிடம் பேட்டி கண்டபோது, இந்த கொலையை யார் செய்தார்கள் என்று கேட்க? நீ தான் செய்தாய் என்றார். அவ்வளவு தூரத்திற்கு கெட்டிக்காரர். அதேபோலத்தான். கம்யூனிஸ்ட்டுகளால் எனது மகனின் உயிருக்கு ஆபத்து. அவர் அப்பாவி என்று உரைத்ததோடு, இருப்பது ஒரு உயிர்தான் போவது ஒரு உயிர்தான் என்ற தூண்டி விடுகிறார் வன்முறையை. இதேபோலத்தான் மகன் ஸ்டாலின் கன்னியாகுமரியில், பேட்டி கொடுக்கும் போது, "இலங்கை பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை" என்று கூறினார். தந்தை கருணாநிதி இலங்கைக்காக பந்த் நடத்தச் சொல்கிறார்? இதுதான் திமுக - இதுதான் கருணாநிதி.

Anonymous said...

mr santhippu

why you can't write the special issue on stand of eelam of cpi(m).

ganesh said...

இதையும் பாருங்களேன்...

http://maduraicpmmohan.wordpress.com/

Anonymous said...

தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக செய்ய வேண்டியது என்ன
http://udaippuu.blogspot.com/2009/04/blog-post_23.html

லக்கிலுக் said...

லீலாவதியை திமுக தான் கொலைசெய்தது என்று இன்று சொல்கிறீர்கள். ஓக்கே. இதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும் அதற்குப் பிறகு மார்க்சிஸ்ட் திமுகவோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்றா இருந்தது?

கூட்டணி அமைத்து வெற்றிகண்டு ராஜ்யசபா சீட்டு கூட ஒன்று வாங்கிக் கொண்டதே?

யாருக்கு வெட்கமில்லை என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.

சந்திப்பு said...

நரி குருடானாலும் கண் கோழி கூண்டு மீதுதான் இருக்கும் என்பார்கள். அதுபோலத்தான் கருணாநிதி தற்போது தேர்தல் வெற்றியொன்றே தனது இலக்காகக் கொண்டு இலங்கையை வைத்து பகடை உருட்டுகிறார். தனது மகன் அழகிரிக்காகவும் சேர்த்து தாயக் கட்டைகளை வேகமாக வீசுகிறார். நன்றி அனானி.

சந்திப்பு said...

இலங்கை பிரச்சனையில் சிபிஎம் நிலை என்ன என்பதை பலமுறை எழுதியாகி விட்டது. என்னுடைய தேடுபொறியில் இலங்கை என்று தேடி படித்துக் கொள்ளவும். மேலும் www.cpim.org / http:pd.cpim.org போன்ற தளங்களுக்கு சென்று படித்துக் கொள்ளவும்.

சந்திப்பு said...

கணேஷ் மதுரை பக்கம் நன்றா உள்ளது. மதுரையில் உள்ள சாதாரண மக்களின் வார்த்தைகளையும், ஆதங்கத்தையும் பதிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

சந்திப்பு said...

உடைப்பு பார்த்தேன். நல்ல பதிவு அனானி. வாழ்த்துக்கள்.

சந்திப்பு said...

லீலாவதியை திமுக தான் கொலைசெய்தது என்று இன்று சொல்கிறீர்கள். ஓக்கே. இதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும் அதற்குப் பிறகு மார்க்சிஸ்ட் திமுகவோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்றா இருந்தது?

கூட்டணி அமைத்து வெற்றிகண்டு ராஜ்யசபா சீட்டு கூட ஒன்று வாங்கிக் கொண்டதே?

யாருக்கு வெட்கமில்லை என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.
அன்புள்ள லக்கிலுக் வணக்கம்.

லீலாவதியை கொலை செய்தவர்கள் திமுகவினர்தான்
என இன்றல்ல. அன்றைக்கே சொன்னோம். அவர்களுக்கு
தண்டனையும் பெற்றுக் கொடுத்தோம். ஆனால் ஆயுள்
தண்டனை பெற்ற அந்த கொடூரர்களை அண்ணா பிறந்த
நாளன்று விடுதலை செய்து விட்டார் கருணாநிதி. இதனை
சிபிஎம் வன்மையாக கண்டித்துள்ளது. அவர்கள்தான் தற்போது
அழகிரியின் தேர்தல் சேவகர்கள். வானரப்படைகள்.
அதிருக்கட்டும். அதற்கு பின் திமுகவுடன் தேர்தல்
உடன்பாடுகளை சிபிஎம் வைத்துக் கொண்டது
திமுவின் மீதான காதல் பாசத்தால் அல்ல.
நாட்டை மதவெறியர்களிடம் இருந்து காக்க வேண்டும்
என்பதற்காக. தற்போது மதவெறியும் - நாட்டை
அடகு வைக்கும் காங்கிரசையும் வீட்டுக்கு அனுப்ப
வேண்டும் என்பதற்கான போராட்டத்தை இடதுசாரிகள்
நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் அந்த
அடகு வைக்கும் கும்பலுக்கு துணைபோகும் திமுகவையும்
தோற்கடிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் அதிமுகவோடு
கைகோர்த்துள்ளனர்.

மேலும் திமுக ராஜ்யசபா சீட் கொடுத்தது அவர்கள்
போட்ட பிச்சை அல்ல. மைனாரிட்டி திமுக தற்போது
கூட எங்கள் காலில்தன் நின்றுக் கொண்டிருக்கிறது.

திமுக இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்றால்
அது திமுகவின் கொடைத்தன்மைக்கு கிடைத்த வெற்றி
அல்ல. மக்கள் மற்ற கட்சிகள் மீதிருந்த நம்பிக்கையால்
திமுகவை அமர வைத்துள்ளார்கள். ஆனால் மக்கள்
நம்பிக்கைக்கு பாத்திரமாக திமுக இன்று நடந்து கொள்ள
வில்லை. எனவே மக்களே அவர்களை தூக்கி
எறிவார்கள். அடுத்து தோழமை கட்சிகளுக்கு எல்லாம்
பதவி கொடக்கும் பிச்சை பாத்திரத்தை மக்கள் ஒன்றும்
கருணாநிதியிடம் ஒப்படைக்கவில்லை. இன்னும் அது
அவர்கள் கையில்தான் உள்ளது லக்கி. எனவே மக்கள்
சக்தி பலமானது. அதுவே நமக்கு துணை. திமுக
வெறும் துரும்புதான்! அது தூணாக மாறி மிரட்டுகிறது.
அழகிரி வடிவத்தில் அதற்காக கண்ணீர் வடிக்கிறார்
கருணாநிதி.

லக்கிலுக் said...

சந்திப்பு சார்!

தேர்தல் முடிந்ததும் அதிமுகவிடமிருந்து ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டு கூட வேண்டாம். கவுன்சிலர் சீட்டாவது கேட்டு வாங்கி காட்டுங்கள் பார்ப்போம் :-)

//திமுவின் மீதான காதல் பாசத்தால் அல்ல.
நாட்டை மதவெறியர்களிடம் இருந்து காக்க வேண்டும்
என்பதற்காக. //

அதாவது மதவெறியர்களுக்கு எதிராக கொலைகாரர்களோடு கூட கூட்டு சேர மார்க்சிஸ்ட் தயார் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.


//மைனாரிட்டி திமுக தற்போது
கூட எங்கள் காலில்தன் நின்றுக் கொண்டிருக்கிறது.//

வாபஸ் வாங்கிக் கொள்ளுங்களேன். கவிழ்ந்து விடுகிறதா என்று பார்ப்போம் :-)

ஆதரவு கொடுக்கிறோம் என்று மிரட்டி ராஜ்யசபா சீட்டு வாங்கியிருக்கிறீர்கள் என்பது போன்ற தொனி தெரிகிறது நன்றி.

உங்கள் தமிழக தலைவர்களுக்கு நீங்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் கூட யாரும் ராஜ்யசபா சீட்டு தரப்போவதில்லை. சீண்டுவாரின்றி கிடக்கும் உங்களுக்கெல்லாம் அதிகபட்ச அரசியல் நாகரிகத்தோடு ராஜ்யசபா சீட்டு கொடுத்தவர்களை அக்கட்சியின் தொண்டர்கள் செருப்பால் கூட அடிக்கலாம்.

சரி, சரி, விடுங்கள். பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த ஒரு மணி நேரத்திலேயே போயஸ் தோட்டத்திலிருந்து உங்களை எப்படியும் அடித்து துரத்தப் போகிறார்கள். அறிவாலயம் பக்கமாக தான் காற்று வாங்க வருவீர்கள். அப்போது பேசிக்கொள்ளலாம் :-)


சந்திப்பு!

கடைசியாக ஒரே ஒரு கேள்வி. திமுககாரனுக்கு தான் கொள்கையில்லை, கோட்பாடு இல்லை என்கிறீர்கள். கொள்கையும், கோட்பாடும் நிறைய கம்யூனிஸ்டுகள் எதிர்காலத்தில் காங்கிரசுக்கு ஆதரவு தருவதோ அல்லது திமுகவோடு தேர்தல் உடன்பாடு கொள்வதோ அறவே இல்லை என்று அறிவிக்க முடியுமா? அல்லது திமுகவோடு கூட்டு சேர்ந்தால் அது சகோதரியை புணர்வதற்கு சமம் என்று டாக்டர் அய்யா மாதிரி அறிக்கையாவது விட முடியுமா?

தீப்பெட்டி said...

//அவர்களுக்கு
தண்டனையும் பெற்றுக் கொடுத்தோம். ஆனால் ஆயுள்
தண்டனை பெற்ற அந்த கொடூரர்களை அண்ணா பிறந்த
நாளன்று விடுதலை செய்து விட்டார் கருணாநிதி. இதனை
சிபிஎம் வன்மையாக கண்டித்துள்ளது. அவர்கள்தான் தற்போது
அழகிரியின் தேர்தல் சேவகர்கள். வானரப்படைகள்//

லக்கி லுக் பதில் தேவை..

சந்திப்பு said...

Thanks Match Box

லக்கிலுக் said...

திரு. சந்திப்பு அவர்களே!

நான் போட்ட பதில் பின்னூட்டத்தை காக்கா தூக்கிக் கொண்டு போய்விட்டதா? :-)

சந்திப்பு said...

உங்களுக்கும், திமுகவினருக்கும் கண் பார்வை போய்விட்டதோ? என்ற சந்தேகம்தான் தோன்றுகிறது! கழுகார் வந்து கொத்தி விட்டாரோ!

லக்கிலுக் said...

சந்திப்பு அவர்களே!

ஒன்று இங்கே இருக்கிறது. இன்னொன்று எங்கே? அதாவது உங்களது நீண்ட பதிலுக்கு சொன்ன பதில்.

நந்திக்ராம் புத்தியை அடிக்கடி காட்டுகிறீர்களே? :-)

சந்திப்பு said...

ஹலோ லக்கி நான் இப்போ உங்களது வலையுலகிற்கு சென்று போன் நெம்பரை தேடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போட்ட பின்னுட்டம் வரவேயில்லை. மீண்டும் போடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நந்திகிராம் புத்தியிருந்தால் அது வளர்ச்சிக்கு பயன்படும் நந்தியாத்தான் இருக்கக்கூடாது!