October 28, 2008

மராட்டியம், குஜராத் குண்டு வெடிப்பு பெண் சாமியார் கைது



மராட்டிய மாநிலம் மலே கானில் கடந்த மாதம் 29-ந் தேதி சிமி அலுவலகம் முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் 5 பேர் பலியா னார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாசிக் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத்திருப்பது தெரிந்தது. "டைமர்'' கருவி பொருத் தப்பட்டிருந்த அந்த வெடி குண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப் பட்டிருந்தது. வெடி குண்டு தயாரிப்பு மற்றும் வைக் கப்பட்ட ஸ்டைல் எல்லாம் இதுவரை இல்லாத அள வுக்கு புதுசாக இருந்தது.
தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது தெரிந்தது. இது தொடர் பாக போலீசார் சியாம் சாகு, திலீப்நாசர், சிவநாரா யண்சிங் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பிரபல பெண் சாமியார் சத்வி பிரக்யா தாகூருக்கு நெருக்கமான வர்கள் என்று தெரிந்தது. மேலும் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பெண் சாமி யார் சத்வி பிரக்யா பெய ரில் வாங்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால் பெண் சாமியார் பிரக்யா பற்றிய தகவல்களைத் திரட்டி போலீ சார் விசாரித்தனர்.
பெண் சாமியார் பிரக் யாவின் சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் கிராமம். ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே ராமஜென்ம பூமி போராட்டங்களில் ஈடுபட் டார். பிறகு இந்து ஜக்ரான் மஞ்ச் எனும் அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந் தார். அப்போது சாமியார் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு "வந்தே மாதரம்'' எனும் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு குஜராத் மாநில அரசு நிதி உதவி செய்து ஆதரித்தது. இதனால் பிரக்யா குஜராத் மாநிலம் சூரத் நகரில் குடியேறினார்.
இந்துக்கள் பற்றியும் இந்து அமைப்புகள் பற்றி யும் சாமியார் பிரக்யா ஆவேச மாகப் பேசக் கூடியவர். வட மாநிலங்களில் இந்து அமைப்பு தொண்டர்களுக்கு இவர் பாடம் நடத்தி வந்தார். இதன் காரணமாக பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத் தலைவர்களுடன் இவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது.
பா.ஜ.க. தலைவர் ராஜ் நாத்சிங், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மற்றும் உமா பார திக்கு இவர் வலது கரம் போல செயல்பட்டவர். வெடி குண்டு மோட்டார் சைக்கிள் இவர் பெயரில் பதிவாகி இருந்ததை போலீசார் ரகசிய மாக ஆய்வு செய்தனர். பிறகு குண்டு வெடிப்புக்கு பெண் சாமியாருக்கும் ரகசிய தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டு, பெண் சாமி யார் பிரக்யாவுக்கும் குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான கூடுதல் ஆதா ரங்கள் திரட்டப்பட்டன. குறிப்பாக மலேகானில் குண்டு வெடித்த தினத்தன்று குஜராத் மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பும் ஒரே மாதிரி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
சிமி இயக்கத்தினரை பழிக்குப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழு நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதை தொர்ந்து பெண்சாமியார் பிரக்யாவை போலீசார் இன்று கைது செய்தனர். இது இந்து பரிவார் அமைப்பு நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
குண்டு வெடிப்புக்கு பயன் படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து மற்றும் டைமர் கருவியை இந்து அமைப்பினர் எங்கிருந்து, எப்படி பெற்றனர் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசா ரணை நடத்தினார்கள். அப்போது பெண் சாமியார் பிரக்யாவுடன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்கள் நெருக்கமாக இருப்பது தெரிந்தது. அவர் கள் இருவரும் ராணுவ பயிற்சிப்பள்ளி நடத்தி வருகிறார்கள்.
இந்த பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கைதான ராணுவ வீரர்கள் ஒருவர் பெயர் பிரபாகர் குல்கர்னி மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் என்று தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை சேகரித்து அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்து அமைப்பு ஒன்று வெடி குண்டுகள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதை ஏற்கனவே போலீசார் கண் டறிந்து இருந்தனர். அவர் களுக்கும் ராணுவ வீரர் களுக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.
தற்போது கைதான பெண் சாமியார் உள்பட 2ராணுவ அதிகாரிகளையும் போலீசார் விசாரணைக்காக மும்பை கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களிடம் தீவிர விசாரணையில் நடத்தியதில் குண்டு வெடிப்பில் இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தக வல்கள் வெளியானது.
ராணுவ அதிகாரிகள் குல்கர்னியும், உபாத்யேயும் நாசிக் அருகே ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த பயிற்சி மையத்தை இந்து ராணுவ கல்வி கழகம் நடத்தி வந்தது.
அதில் வெடிகுண்டுகள் தயாரித்தல், வெடிகுண்டு களை கையாள்வது குறித்து இரு அதிகாரிகளும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். மற் றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர்.
மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக பெண் சாமியாரும், 2 ராணுவ வீரர்களும் கைதாகி இருப்பது வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், பஜ்ரங்தளம் மற்றும் சில இந்து அமைப்புகள் குண்டு வெடிப்புடன் தொடர்பு டையதாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஏன் மத்திய அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வில்லை'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு பா.ஜ.க. தலை வர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர். வெங்கையா நாயுடு, உமாப Öரதி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், "பெண் சாமியார் பிரக்யா அப்பாவி சாது. குண்டு வெடிப்பு தொடர்பாக அவரை கைது செய்து இந்து அமைப்புகள் மீது கெட்ட பெயர் ஏற்படுத்த சதி நடக்கிறது'' என்று கூறி உள்ளனர்.
இதற்கிடையே மலேகா னில் 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மராட் டிய மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதை கண்டு பிடிக்கவும் விசா ரணை நடந்து வருவதாக கூறினார்கள்.

குண்டு வெடிப்பு சதி; கைதான பெண் சாமியாருக்கு உண்மை கண்டறியும் சோதனை

மராட்டிய மாநிலம் மலேகானில் கடந்த மாதம் சிமி அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலி யானார்கள்.
இந்த குண்டு வெடிப்பில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சாமியார் சத்வி பிரக்யா தாகூருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரை மும்பை தீவிர வாத தடுப்புப் பிரிவு போலீ சார் கைது செய்தனர். குண்டு வெடிப்புக்கு பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சத்வி மூலம் வாங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பெண் சாமியாரின் உதவியாளர்கள் சம்லா சாகு, சிவநாராயண் சிங் இருவரும் குண்டுகளை தயாரித்துள்ளனர். அதன் பிறகு அந்த வெடிகுண்டை மலேகானில் கொண்டு போய் சாகு வைத்துள்ளார்.
இந்த வெடிகுண்டை எப்படி கையாள வேண்டும் என்று புனேயைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 2 ராணுவ வீரர்கள் பயிற்சி அளித் திருந்தனர். அந்த 2 ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 5 பேர் வீட்டிலும் சோதனை நடந்தது. ஆனால் குற்றச்சாட்டை நிரூபிக்கும் அளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து பெண் சாமியார் பிரஜ்யா, அவரது உதவியாளர்கள் சம்லால் சாகு, சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த சோதனை மூலம் பெண் சாமியார் மறைக்கும் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று போலீசார் நம்புகிறார்கள்.
இதற்காக கைது செய் யப்பட்ட அனைவரும் மும்பை கொண்டு செல்லப் பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்) அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடக்கிறது.
இதற்கிடையே மலேகான் குண்டு வெடிப்பு சதியில் மேலும் ஒரு ராணுவ வீர ருக்கு தொடர்பு இருப்பதை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கண்டு பிடித் துள்ளனர். தற்போது அவர் மத்திய பிரதேச மாநிலம் பஞ்சமடி பகுதியில் பணியாற்றி வருகிறார்.
அவரை கைது செய்து விசாரிக்க ராணுவ உயர் அதிகாரிகளிடம் விண்ணப் பிக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவ வீரர் மூலம் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
thanks:www.maalaimalar.com
October 26 & 28 - 2008

October 25, 2008

மலேகான் குண்டு வெடிப்பும் மாட்டிக் கொண்ட சங்பரிவாரமும்!


9/11 உலகை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம். பின்லேடனின் - தாலிபான் அமைப்பினர் நடத்திய இரட்டை கோபுரத்தின் மீதான தாக்குதல் யாராலும் மறக்க முடியாத பயங்கரவாத சம்பவம். உலகமே இதற்கு கண்டனக் குரல் எழுப்பியது. பின்னர் இதை வைத்தே அமெரிக்கா பல நாடுகளை கபளிகரம் செய்து வருகிறது. இது ஏகாதிபத்திய பயங்கரவாத அரசியல்.
9/8 இது இந்தியாவை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. மகாராஷ்டிரர்களை நடுங்க வைத்த சம்பவம். மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் இசுலாமயர்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்... இசுலாமிய மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். சைக்கிள்களில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டது. சைக்கிள்கள் சாதாரண மக்களின் வாகனம் என்பதிலிருந்து அது பயங்கரவாதிகளின் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. மலேகன் நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.
இந்த சம்பவம் நடைபெற்றவுடன் இது வெளிநாட்டு இசுலாமிய பயங்கரவாதிகளின் சதி என்று கதை கட்டி விடப்பட்டது. இதில் ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதோடு, அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கைதும் செய்யப்பட்டனர். லஷ்கர் - ஈ - தொய்பா போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பு இருந்தது என்று கூறப்பட்டது. நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் இசுலாமிய பயங்கரவாதம் என்று கூக்குரல் எழுப்பினர். இருப்பினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை சரியாக அடையாளம் காண முடியாத நிலை இருந்தே வந்தது.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு குறித்த விசாரணை ATS - Anti-Terrorist Squad பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்தக் குழுவினர் மலேகன் குண்டு தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் யார் என்று கண்டு பிடித்து அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளனர்.
அதாவது, இந்தக் குண்டுப் வெடிப்பை நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச் என்ற பயங்கரவாத அமைப்புதான் இந்த பயங்கரவாத நாசவேலையில் ஈடுபட்டுள்ளது.
இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சாத்வீ புரூனா என்ற பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இவர் யார் என்றால், தற்போது சன்னியாசியாக வேடம் தரித்துக் கொண்டுள்ள இந்துத்துவ பயங்கரவாதி. இந்த சாத்வீ புரூனா இவர் ஏற்கனவே பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பில் வேலை செய்துள்ளார். தற்போது இவர் இந்து ஜாக்ரன் மன்ச்சில் சன்னியாசியாக பணிபுரிந்து வருகிறார். அதாவது இவர் சன்னியாசி என்றால் ஏதோ அமைதியை விரும்பும் சன்னியாசியல்ல. மக்களின் அமைதியைக் குலைக்கும் பயங்கரவாதியாக காவியுடையில் வேடம் தரித்துள்ளார்.
அதாவது, இந்த இந்துத்துவவாதிகளின் மதவாத அரசியல் இந்தியாவில் காலாவதியாகிக் கொண்டிருப்பதால் தங்களது இசுலாமியர்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு எதிரான குரூரக் குரலை சாதாரண இந்து மக்கள் மத்தியில் விதைப்பதற்காக இதுபோன்ற வெடிகுண்டுகளை இவர்களே வெடித்துக் கொண்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனைவதுதான்.
இது ஏதோ மலேகனில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் - திருநெல்வேலி மாவட்டம் - தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் ஆர்.எஸ்.எஸ். மதவாதிகள்தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டு அவர்களது பயங்கரவாத தீச் செயல் கிழிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இந்து முன்ன‌னியை சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதான் நவீன இந்துத்துவா இவர்கள் கோட்சேவின் வாரிசுகள்தான் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டி வருகிறார்கள். தேசப் பிதா மகாத்மாவை கொலை செய்த கோட்சே தனது பெயர் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டதோடு, சுன்னத்தும் செய்துக் கொண்டுதான் மகாத்மாவை சுட்டுக் கொன்றான். இதன் மூலம் இசுலாமிய மக்கள்தான் காந்தியைக் கொன்றாலர்கள் என்று பழியை சுமத்தி இசுலாமியர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக கொலை வெறித் தாக்குதல் தொடுக்க திட்டமிட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். எனவே இந்த முகாமிலிருந்து வெளிவரும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களிடம் நாம் அகிம்சையை எதிர்பார்கக் முடியுமா? அவர்கள் விதைப்பது உள் மனதில் இம்சைதானே.
குறிப்பாக கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பல இடங்களில் வெடிகுண்டு தயாரிப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அவர்கள் ஈடுபடும் கொலை வெறிச் செயல்களை உலகம் அறியம். இருப்பினும் அந்த மண்ணில் இவர்களால் கால் வைக்க முடியவில்லை. எனவே பாசிஸ்ட்டுகளின் வளர்ச்சி இந்திய மக்களின் அழிவு என்று அர்த்தம். எனவே இந்த இந்துத்துவா என்பது மக்களின் - மதச்சார்பின்மையின் - சகிப்புத்தன்மையின் எதிரி என்பதை நாம் மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும். இதன் தத்துவம் மனிதத்திற்கு விரோதமானது என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது. இவர்கள் ஹீட்லரின் தத்துவத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்து அதனை இந்தியாவில் செயலாக்க துடிக்கும் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பதை உலகம் அறிந்துக் கொண்டது. இதற்கு எதிராக பன்முகப்பட்ட மக்களை திரட்ட வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம்.
மேற்கண்ட பயங்கரவாத செயல்களைத்தான் மனிதாபிமானத்தின் உயர்ந்த தத்துவம் இந்துத்துவா என்று இல. கணேசன் கூறியுள்ளார் நேற்றைய தினமணியில். இந்துத்துவ பயங்கரவாதிகள் தங்களை மனிதாபிமானிகளாக வேடம் தரித்துக் கொண்டு தங்களது மதவெறியை விற்பனை செய்ய முனைகிறார்கள். எனவே இவர்களின் முகமூடியை மக்களிடம் காண்பிக்க வேண்டியது முற்போக்குவாதிகளின் கடமையாகிறது.

October 24, 2008

இல. கணேசனின் இந்துத்துவம் பாசிசமே!



பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் "பரந்த மனப்பான்மையே இந்துத்துவம்" என்ற தலைப்பில் தினமணியில் எழுதியுள்ள கட்டுரை பொய்யிலே வளர்ந்து பொய்யிலே பிறந்த புலவர் பெருமானே என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் எப்போதும் தங்களை கோயபல்சின் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்கள் அல்லவா? 


அதனால்தான் மேற்கண்ட கட்டுரையில் இந்துத்துவா மனப்பான்மை குறித்து விளக்கப் புகுந்த இல. கணேசன் அதன் உண்மை சொரூபத்தை விளக்குவதை பாருங்கள். குறிப்பாக சகிப்புத்தன்மை குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார். 


"இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை."


இந்துத்துவம் சகிப்புதன்மையற்றது என்று ஒப்புக் கொள்ளும் இல. கணேசன் அதற்கு மாற்றக மனிதநேயம்தான் இந்துத்துவாவின் உயர்ந்த பண்பு என்று கூறுகிறார். அது குறித்து அவர் எழுதியதையும் நோக்குவோம்.


"மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.

எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை."


இப்படி மனித நேயத்தின் உயர்ந்த வடிவமாக இந்துத்துவாவைக் காட்டுக் கொள்ள முனையும் இல. கணேசன் தத்துவமும் - நடைமுறையும் உண்மையிலேயே மனித தன்மையுடன் இயங்கக் கூடியதா? என்ற கேள்வியை முன்வைத்தால் வாசகர்கள் இதற்காக எந்தவிதமான ஆராய்ச்சியும் செய்யாமல் அதற்கு மிருக நேயம் மட்டுமே உண்டு என்று பதிலளிப்பார்கள். காட்டுமிராண்டித்தனத்தின் மறு வடிவமே இந்துத்துவம் என்று பதிலுரைப்பதைக் காண முடியும். இதற்குள் இப்போது விரிவாக புக வேண்டாம். பின்பு இது குறித்து பார்க்கலாம்.


மனித நேயத்தை இந்துத்துவத்தின் புனித மான்பாக உருவகப்படுத்த முனைந்த இல. கணேசன் அப்படியே தங்களது இந்துத்துவ அஜண்டாவிற்கு மாறி மதமாற்றம் குறித்த தங்களது அரசியல் விவாதத்தை பக்குவமாக முன்வைப்பதைப் பாருங்கள். 


"நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.

மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை."


 இந்த விவாதத்தின் இறுதியில் அவர் மதமாற்றத்தை எதிர்க்கும் ஒரிசா பாணியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுவதையும் அவரது வரிகளில் ஒளிந்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை காண முடியும்.


"மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?

எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்."

இல. கணேசனின் இந்துத்துவ பரந்த மனப்பான்மை எது என்தை மிக அழகாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றியுள்ளார். மேற்குறித்த அவரது கருத்துக்களில் எந்த அளவிற்கு உண்மை பொதிந்துள்ளது என்று ஆராய வேண்டியுள்ளது. ஆராய்வது நமது பண்பாடுகளில் ஒன்று.

முதலில், இந்துத்துவம் என்ற வார்த்தைக்கான பொருள் குறித்து இல. கணேசன் கூறுவதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்தாபகர் சவர்க்கர் கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்! இதில் எது உண்மை, எது அவர்களின் உண்மையான சித்தாந்த அடித்தளம், அது எதை உணர்த்துகிறது, அதன் மூலம் அவர்கள் இந்த நாட்டில் என்ன சாதிக்க விரும்புகிறார்கள் என்பதை பார்ப்போம்!

சவர்க்கரின், இந்துத்துவா என்ற புத்தகத்தில் அவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

"இந்து என்பவர் சிந்து நதியிலிருந்து கடல் வரை நீண்டிருக்கும் பிரதேசமாகிய பாரதவர்ஷத்தை தன் தந்தையர் நாடாகவும், புனித பூமியாகவும் அதாவது தன் மதத்தின் தொட்டிலாகவும் கருதுகின்ற நபர். இதுதான் இந்துத்துவாவின் உண்மையான சாரம்சம் என்று கூறுகிறார்."


இல. கணசேன் என்ன சொல்கிறார். "ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை."


ஆர்.எஸ்.எஸ்.சின் பைபிள் என்றும் குரான் என்றும் பகவத் கீதை என்றும் கூறுப்படுவது இந்துத்துவா என்ற புத்தகம்தான். அதுதான் இந்த பாசிஸ்ட்டுகளின் மூல நூல் - தத்துவ வழிகாட்டி. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இவர்கள் தங்களது செயல்திட்டத்தை வகுத்துள்ளனர். அதனால்தான் சவர்க்கார் மிகத் தெளிவாகக் கூறுகிறார். இந்த நாடு - மன்னிக்கவும் இந்த நாடு என்று கூறும் போது நீங்கள் இந்தியா என்று நினைக்கக் கூடாது. அகண்ட பாரதம் அது ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கியது. இதுதான் அவர்களின் ஒரே கனவு. இந்த பாரத வர்ஷத்தைத்தான் அவர்கள் பித்ரு பூமி என்று வருணிக்கின்றனர். அதாவது தந்தையர் நாடு. பாரதவர்ஷத்தில் உள்ள யாராவது தப்பித் தவறி இதனை பூமாதேவி - தாய் பூமி என்றெல்லாம் வருணித்தால் அவர்கள் இந்துவே அல்ல - அதாவது இந்துத்துவாவின் பரம எதிரி. இந்துத்துவா கோட்பாட்டின் அடி நாதமே ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் இவர்கள் தாய் நாடு என்று அழைப்பதில்லை. தந்தையர் நாடு என்று அழைக்கின்றனர். ஜெர்மனியில் நாஜீ இனவெறியன்கூட தனது நாட்டை தந்தையர் நாடு என்றுதான் அழைத்தான். அவனிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட கொள்கையாதலால்தான் இதனை தந்தையர் நாடு என்று அழைக்கின்றனர். அதனால்தான் இவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வதில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவாவில் பெண்களுக்கு இடமில்லை. பெண்கள் இதில் ஏதாவது உரிமைக் கோரினால் அவர்களுக்கு இந்த பித்ரு பூமியில் இடமில்லை. இதுதான் இந்துத்துவாவின் உயர்ந்த மனிதாபிமானம். இதனைத்தான் இல. கணேசன் தங்களுக்கு சகிப்புத்தன்மை என்றாலே சகிக்காது என்று உரைக்கிறார்.

அடுத்து பாரதவர்ஷத்தில் யாருக்கு இடம் உண்டு. இதனை புண்ணிய பூமியாக கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளாதவர்கள் இந்துத்துவாவின் எதிரிகள். இங்கே பாவப்பட்டவர்களுக்கு இடம் இல்லை. பாவ மன்னிப்பு தரக்கூடிய அமைப்பல்ல இந்துத்துவா! இந்தியாவில் பிறந்து - இந்தியாவில் வளர்ந்து பார்ப்பனீயத்தால் சித்தாந்தத்தால் அடிமைகளாக்கப்பட்ட 25 தலித்துக்கள் - தீண்டாதவர்கள் - பார்க்கக்கூடாதவர்கள் - தொடக்கூடாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டு - ஒழிக்கப்பட்ட அந்த தலித் மக்கள் வாய் பேசாதவர்களாக - ஊமைகளாக இந்த புண்ணிய பூமியில் இந்துக்களாகவே வாழ்ந்து - இந்துத்துக்களாகவே மடிய வேண்டும். செத்துப் போன மாட்டுக்கறிகளையும், புளித்துப் போன உணவையும் உட்கொண்டு இந்துக்களாகவே வாழ வேண்டும். யாருக்காவது தன்மானம் என்று வந்து கிருத்துவர்களாகவோ? இசுலாமியர்களாகவோ மதம் தங்கள் மானம் காப்பதற்காக மதம் மாறினால் அவர்கள் இந்துத்துவாவின் எதிரிகள். நாங்கள் கோவிலுக்குள் விட மாட்டோம். சம மனிதனாக நடத்த மாட்டோம் இருந்தாலும் நீ இதனை புன்னிய பூமியாக கருத வேண்டும். இந்த மதத்திற்கு உள்ளேயே நீ கட்டுண்டு கிடக்க வேண்டும். இதுதான் உனக்கு மனு நீதி வழங்கிய நீதி என்று போதிக்கிறது இந்துத்துவா பைபிள்.

ஒரு விசயத்தை இங்கே உறுதியாக சொல்ல வேண்டும். இந்துத்துவாவிற்கு எதிரி கிருத்துவமும் - இசுலாமும் மட்டுமல்ல. பெளத்தமும் - சமணமும் கூட. இந்தியாவில் தோன்றிய இந்த சிந்தனைகளால் கோடிக்கணக்கான தலித்துக்கள் வளமும் - பலமும் பெற்றார்கள் என்பதற்காகவே இந்த மதத்தை பார்ப்பனீய சித்தாந்தத்தின் கீழ் கொண்டு ஒழித்து விட்டவர்கள் அல்லவா? இந்த மண்ணில் கிருத்துவத்திற்கும் - இசுலாமுக்கும் இடம் கொடுத்தார்களாம் இப்படி உரைக்கிறார் இல. கணேசன். பெளத்தத்தையும் - சமணத்தையும் இந்த மண்ணில் இருந்து பிடிங்கியவர்கள் கிருத்துவர்களா? இசுலாமியர்களா? அல்லவே இந்துத்துவவாதிகள்தானே - பார்ப்பனீய சனாதனத் தத்துவம்தானே இவர்களை வீழ்த்தியது. அதுவும் சதி செய்தல்லவா வீழ்த்தியது. இந்த பன்முகப்பட்ட ஜனநாயகம்தான் இந்துத்துவம் என்று உரைக்கிறார் சவர்க்கார்.


இறுதியாக சவர்க்கரின் கூற்றுப்படி இந்தியாவை - மன்னிக்கவும் பாரதவர்ஷத்தை தாய்நாடு என்று அழைப்பவர்கள் இந்துத்துவத்தின் எதிரிகள். வேற்று மதத்தை தழுவியவர்கள் இந்துத்துவத்தின் எதிரிகள். கிருத்துவமும் - இசுலாமும் இந்தியாவில் தோன்றாததால் அது இயல்பாகவே எதிரியாகிறது இந்துத்துவாவிற்கு. மொத்தத்தில் இந்துத்துவ மண்ணில் பெண்கள் உட்பட மேற்கண்ட யாருவக்கும் இடம் இல்லை. ஏன் ஜனநாயகம் - மதச்சார்பின்மை போன்ற தத்துவங்கள் கூட ஐரோப்பாவில் தோன்றிய கோட்பாடுகள் என்பதால் அவையும் எதிரிகளே!

அடுத்து, இல. கணசேனின் இந்துத்துவம் ஏதோ மனித நேயத்தின் உச்ச கட்டம் என்பதுபோல் புகழ்ந்துரைத்திருக்கிறார். இந்த இந்துத்துவ புனிதர்கள் இந்தியாவில் செய்து வரும் அட்டகாசத்தை - பாசிச வெறித்தனத்தை யாரும் சொல்ல வேண்டியதில்லை. ஒரிசா முதல் கருநாடகம் வரை கிருத்துவர்கள் மீது தாக்குதல் - தேவாலயங்கள் எதிரிப்பு - கிருத்துவ கடவுள் சிலைகள் உடைப்பு - ஏன் ஒரிசாவில் கன்னியாஸ்திரிகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இட்டுச் சென்று கற்பழித்தார்களே அதுதான் இந்துத்துவாவின் உயர்ந்த மனித பண்பு. ஏற்கனவே அஸ்திரேலிய பாதிரியாரையும் - அவரது மகனையும் உயிரோடு கொளுத்தியவர்கள் மனிதப் புனிதர்களாம். குஜராத் மோடித்துவா பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அந்த மோடியை ஏகாதிபத்திய அமெரிக்கா கூட உள்ளே விட மாட்டேன் என்கிறது. நவீன ஹீட்லரின் வாரிசாக மோடி காட்சியளிக்கிறார். குஜராத்தில் 3000 இசுலாமியர்களை நர வேட்டையாடி - கர்ப்பிணி பெண்களையும் - சிசுவையும் கூட எரித்தவர்கள் அல்லவா? இவையெல்லாம் கூட இந்த இந்துத்துவாவின் மகத்துவம்தான். அதாவது இந்துத்துவா தர்மம். ஏதோ இந்துத்துவா என்பது ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் தத்துவம் போல இல. கணசேன் தனது வாதிடுகிறார். மொத்தத்தில் இவரது மனித நேயம் என்பது பாசிசமே! இந்துத்துவம் என்பது இந்தியாவின் எதிரி! இந்துத்துவ அமைப்புகள் என்பது இந்திய மக்கள் ஒற்றுமையை சூறையாடும் சுனாமி.

இறுதியாக மதம் மாற்றம் குறித்து பேசும் இல. கணேசன். ஏதோ மதம் மாறுவது குற்றம் இல்லையாம்? தவறு இல்லையாம்? ஆனால் பண்பாடு மாறக் கூடாதாம்! எந்த பண்பாடு மாறக்கூடாது? எங்கிருந்து வந்தது இந்த பண்பாடு என்பதுதான் நமது கேள்வி? மனு நீதியின் பெயராலும் - பார்ப்பனீயத்தின் பெயராலும் - நிலப்பிரத்துவ சித்தாந்தத்தின் பெயராலும் திணிக்கப்பட்ட மனிதனை மனிதன் வெறுத்து ஒதுக்கும் - இந்த பண்பாடு போற்றுதலுக்கு உரியதாம். மனித நேயத்தை வலியுறுத்தப் புகுந்த இல. கணேசன் மதமாற்றத்தை புகுத்துகிறார். அடிப்படையாகவே ஒரு கேள்வி எழுகிறது மனித நேயம் என்று வந்து விட்டால் அங்கே மதத்திற்கு இடமேயில்லை. அப்புறம் எதற்காக பண்பாடு என்று ஒரு முகமூடிப் போட்டுக் கொண்டு தாக்குகிறார். இன்றைய இந்து மதம் எப்போது வந்தது? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் கொடுத்த பட்டம்தானே இந்து? இந்து மதத்திற்கான விளக்கத்தையாவது உருப்படியாக இதுவரை கொடுத்துள்ளார்களா? இல்லையே? அப்புறம் என்ன இந்து மதம்? இந்துத்துவா என்ற சனாதன கொள்கையை அமலாக்குதற்கும் - தங்களது மதவெறி அரசியல் மூலம் ஆட்சியைப் பிடிப்பதற்கும் கோடிக்காண மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்த இந்து என்ற வார்த்தையை தனது அரசியல் தாயமாக போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறது சங்பரிவாரம். இங்கே இந்துத்துவா என்றால் என்ன அர்த்தம் என்றால்? இந்து மதம் அல்ல; அந்த இந்து மதத்தை பயன்படுத்தி மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பா.ஜ.க., பஜ்ரங் தள் என்று பொருள்! எனவே இந்துத்துவா என்பது மனித நேயம் அல்ல மதவெறிப் பாசிசம் என்பதை வேகமாக உரைக்க வேண்டியுள்ளது.

October 22, 2008

நவ தாராள உலகமயமாதல்: பிடல் காஸ்ரோ

அனைத்து நாடுகளையும், குறிப்பாக நமது நாடுகள் அனைத்தையும் தனிச் சொத்தாக்கவே விரும்புகிறது. தாராளமயம் குறித்து இப்படி சொல்வதுதான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

அதன் பின்னர் நமது வளங்களில் என்னதான் மிஞ்சப் போகிறது? ஏனெனில் அவர்கள் கொள்ளையடிப்பதோடு உலகையே சுரண்டி, பெரும் செல்வத்தைக் குவித்து வருகிறார்கள். அது மட்டுமின்றிக் தாமிரத்தைப் பொன்னாக்கும் முயற்சிகள் முன்னாளில் நடைபெற்றதைப் போல், பல்வேறு தகிடு தத்தங்களையும் செய்து வருகிறார்கள். தற்பொழுது அவர்கள் தங்கத்தை காகிதமாக்கி வருகின்றனர். இந்த காகிதத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்க முயல்கின்றனர். இதில் மனிதனின் ஆன்மா மட்டுமே விலக்காக உள்ளது. இன்னுந் துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனிற், பெரும்பான்மையான மக்களின் ஆன்மாவை; விட அனைத்தையும் அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள்.

அவர்கள் இயற்கை வளங்களை, ஆலைகளை, ஒட்டுமொத்த் தகவல் தொடர்பு சாதனங்களை, சேவைப் பிரிவுகளை, இன்னும் பலவற்றை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த வியாபாரத்தை உலகெங்கிலும் நடாத்தி வருகிறார்கள். தங்கள் நாடுகளைக் காட்டிலும் பிற நாடுகளில் மிகவும் மலிவாக இவை கிடைப்பதால், வேகத்துடன் விலை பேசுகிறார்கள். எதிர் வருங்காலங்களில் சிறப்பு வாய்ந்த முதலீடாகத் திகழும் என்ற நம்பிக்கையின் பேரில் இந்த வர்த்தக முயற்சிகள் நடைபெறுகின்றன.

இதன் இறுதி விளைவுகள் என்னவாகத்தான் இருக்கும்? நமக்கென்று என்னதான் மிஞ்சப் போகிறது? நாம் நடைமுறையில் இரண்டாந்தரக் குடிமக்களாகி விடுவோமா? குறிப்பாக ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களாகச் சொந்த நாட்டிலேயே இருக்கும் நிலை உருவாகிவிடுமோ? உலகை மாபெரும் சுதந்திர வர்த்தக வலயமாக்க அவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அதை இன்னும் சரிவரப் புரிந்துப் கொள்ள வேண்டுமெனிற் கட்டற்ற வர்த்தக வலயம் குறித்து நாம் அறிதல் வேண்டும். இது ஒரு வித்தியாசமான தன்மை கொண்ட பிரதேசம். இங்கு வரியேதுஞ் செலுத்தத் தேவை யில்லை. மூலப் பொருட்களையோ, உதிரிப் பாகங்களையோ சந்தையில் வாங்கி இணைக்கவோ அல்லது வேறு பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளவோ முடியும். இங்கே மனித உழைப்புத் தான் பிரதான அம்சமாகத் திகழுகிறது. ஒரு சில துறைகளில் தங்கள் நாட்டில் அதே விலைக்கு கொடுக்கப்படும் கூலியில் 5மூ அளவே இந்த சுதந்திர வர்த்தக வலயங்களில் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் நமக்கு அளிப்பது அல்லது நம்மிடம் விட்டுச் செல்வது மிகவும் குறைந்த கூலியையே.

இதில் கவலை அளிக்கக்கூடிய விடயம் என்னவென்றால் நமக்கிடையே மோதலை உருவாக்கும் போட்டி நிலைகளே. நாம் ஒருவருக்கொருவர் போட்டியிடும் நிலை அதிகரிக்கிறது. பல்வேறு வரிச் சலுகைகள், முதலீட்டுச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுக்குச் சாதகதமான நிலையை உருவாக்குகிறோம். முதலீடுகட்காகவும் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்கும் பொருட்டும், மூன்றாவது உலக நாடுகள் ஒன்றோடொன்று போட்டி போடும் நிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள்.

நான் அறிந்த பல்வேறு நாடுகளில் வறுமையும் வேலையின்மையும் தலை விரித்தாடுகிறது. ஆயினும் இந் நாடுகள் உலகில் அனைவராலும் ஏற்கப்பட்ட நிலைக்கு ஆளாவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நினைப்பிற், சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. இந் நாடுகளில் இந் நிலை இல்லையேல் இந்த வலயங்கள் உருவாக முடியாது. மேலும் இந்த வலயங்களிலுள்ள தொழிற்சாலைகளை உருவாக்கியவர்கள், தங்கள் நாட்டுச் சம்பளத்தின் 5மூ முதல் 7மூ அளவோ அல்லது அதைக் காட்டிலுங் குறைவாகவோ இந்த கட்டற்ற வர்த்தக வலையங்களிற் கூலியாக வழங்குகிறார்கள்.

அவர்கள் நமது நாட்டையே மாபெரும் சுதந்திர வர்த்தக வலயமாக மாற்ற முயற்சிக்கின்றனர். பின்னர் அவர்களிடம் உள்ள பணபலத்தினதும் தொழில்நுட்பத்தினதுந் துணைகொண்டு அனைத்தையும் வாங்கத் தொடங்குவர். இதுதான் நிகழப் போகிறது. இதன் பின்னர் எத்தனை விமான நிலையங்கள் தேசிய சொத்தாக நீடிக்கும் என்பது தெரியவில்லை. எத்தனை துறைமுகங்கள், எத்தனை வகைச் சேவைப் பிரிவுகள் மக்களின் சொத்தாக நாட்டின் உரிமைப் பொருளாக இருக்கும் என்பதும் தெரியாது.

இவ்வகையான எதிர் காலத்தைத்தான் நவீன தாராளவாத உலகமயமாக்கல் நமக்கு அளிக்கிறது. இது உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப் படுவதாகக் கருத வேண்டாம். தேசிய முதலாளிகள், சிறு மற்றும் இடைநிலை முதலாளிகள் ஆகியோருக்கும் இதே கதிதான். உள்நாட்டு முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடும் நிலைமைக்குத் தள்ளப் படுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் நவீன நுட்பமான சாதனங்களை கொண்டு இருப்பதோடு, உலகளாவிய விநியோக அமைப்பையும் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில்தான் நாம் அவர்களுடன் போட்டியிட வேண்டி உள்ளது. இவர்களது போட்டியாளர்களாகத் திகழும் பன்னாட்டு நிறுவனங்கள் இது போன்ற பாதகமான அம்சங்கள் இல்லாமல், தங்கள் பொருட்களை விற்பதற்கு சந்தையைப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

இனித் தேசியத் தொழிற்றுறைக்கு என்னநிலை ஏற்படும்? அவர்கள் யாருக்கு எதை ஏற்றுமதி செய்வது? உலகின் பெரும் பகுதியில் கோடிக் கணக்கான மக்கள் வறுமை, பசி, வேலையின்மையில் வாடிக் கொண்டிருக்கையில் இத்தகைய நுகர்வு சாதனங்களை வாங்கப் போவது யார்? அனைவரும் தொலைக்காட்சி, தொலைபேசி, குளிர் சாதனப்பெட்டி, கார், கணினி, வீடு என அனைவரும் இப்படி ஒவ்வொன்றையும் வாங்கும் வரை காத்திருப்பதா? அல்லது வேலையின்மைக்கான நிவாரணம் பெறுவதற்காக காத்திருப்பதா? பங்குச் சந்தையில் ஊக பேரத்தில் ஈடுபடுவதா? அல்லது ஓய்வூதியத்தை பத்திரப் படுத்துவதா? இது தான் வளர்ச்சிப் பாதை என்று அவர்கள் பல்லாயிரம் முறை கூறி வந்திருக்கிறார்கள். இந்தப் பாதை உண்மையிலயே வளர்ச்சிக்கு வழி வகுக்குமா? சுங்க வரி பெருமளவுங் குறைக்கப்பட்ட நிலையில் உள்நாட்டுச் சந்தை என்னவாகும்? பெரும்பாலான மூன்றாவது உலக நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தின் ஆதாரமாக சுங்க வரிதான் இருந்து வருகிறது. இப்போது சுங்க வரிக் குறைப்பு நிர்ப்பந்தமாய் அந் நாடுகள் மீது திணிக்கப்பட்டால் அவர்களின் கதி என்னவாகும்?

நவீன தாராளமயவாதிகளால் இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. இன்று, வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமின்றிப் பணக்கார நாடுகளிலும் வேலையின்மை என்பது பாரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில் அவர் களால் என்றைக்குமே இந்தப் பிரச்சனைககு தீர்வு காண முடியாது.

ஒரு பக்கம் முதலீடுகளை அதிகரித்துத் தொழில் நுட்பத்தை மேம்படுத்தி வருகையில், மறுபுறம் மக்கள் அதிகளவில் வேலையின்மைக்கு ஆளாகிறார்கள். இத்தகைய முரண்பாட்டை உள்ளடக்கியதாகவே இந்த அமைப்பு இருக்கிறது. மனிதனின் பேராற்றலில் இருந்து தான் உற்பத்தி திறனும், அதி நவீன கருவிகளும் பிறக்கின்றன. இது செல்வங்களை மட்டுமின்றி, வறுமையையும், தொழிற்சாலைகள் மூடப் படுவதையும் பன் மடங்காகப் பெருக்குகிறது. மனித சமூகத்திற்கு இதனால் விளையும் பயன் என்ன? வேலை நேரத்தைக் குறைத்து ஓய்வு, பொழுது போக்கு, விளையாட்டு, பண்பாடு, அறிவியல் மேம்பாடு ஆகியவற்றிற்கு அதிக நேரத்தை செலவிடும் பொருட்டு இந் நிலை உருவாக்கப் படுகிறதா? இது நிச்சயமாக நடக்க முடியாது. ஏனெனில் நாளுக்கு நாள் புதிய சந்தை விதிகளும் போட்டி முறைகளும், யதார்த்த நிலைகளைக் காட்டிலும் கற்பனையான அம்சங்களையே கொண்டுள்ளன.

பன்னாட்டு நிறுவனங்கள் உலகில் ஆதிக்கம் பெற்ற இந்நாளில், பெரும் நிறுவனங்கட்கு இடையிலான இணைப்புகளும் ஏகபோகங்களும் இவற்றை அனுமதிப்பதே இல்லை. இந்த உலகில் மற்றப் போட்டியாளர்கட்கு ஒரு சிறு இடமோ அல்லது மூலையோ கூட கிடையாது. பணக்கார நாடுகளின் அதிநவீன தொழில் நுட்பங் கொண்ட நிறுவனங்கள், மூன்றாமுலக நாடுகளின் தொழிலாளர்களைக் கொண்டு ஜீன்ஸ், அதற்கான சட்டைகள், ஆடைகள், காலணிகள், பூச்செடிகள், என பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்கின்றன. இவை அனைத்துமே பணக்கார நாடுகளின் தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படுபவையே.

நாம் அனைவருமே அமெரிக்காவில் கஞ்சா பயிர் செய்யப்படுவதை அறிவோம். அங்கே பண்ணைகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தாராளமாக கஞ்சா பயிரிடப்படுகிறது. அங்கே விளைவிக்கப்படும் சோளத்தைக் காட்டிலும் கஞ்சாவின் மதிப்புதான் பலமடங்கு கூடுதலாக உள்ளது. இத்தனைக்கும் உலகிலேயே அதிக அளவிலான சோளத்தை அவர்கள்தான் விளைவிக்கிறார்கள். உலகின் போதைப் பொருட்களின் மாபெரும் உற்பத்தியாளராக திகழும் அந்நாட்டில், எதிர்வருங் காலங்களில் தற்காலிகமாவது அவர்களது ஆய்வுக் கூடங்கள் மூடப்பட்டு விடும். பதட்டத்தை தனிக்கக்கூடிய மருந்து, ஊக்க மருந்து, இன்னும் பல மருந்துகளின் பெயரால் கலவைகள் தயாரிக்கப்படக் கூடும். ஏற்கனவே அந் நாட்டிலுள்ள இளைஞர்கள் இந்த போதைப் பொருட்களை பல்வேறு முறைகளிற் கலப்பதும் பயன்படுத்துவதும் பற்றி நிறைய அறிந்து வைத்துள்ளார்கள்.

வளர்முக நாடுகளில் விவசாயப் பணிகள் இன்னும் இயந்திரமயமாக்கப் படவில்லை என்பது குறித்து மகிழ்ச்சியே. தக்காளி பறிப்பது போன்ற விவசாயப் பணிகளுக்காக இதுவரை எந்த ஒரு இயந்திரமும் உருவாக்கப்படவில்லை. காயா பழமா என்று பாhத்து, அளவு வாரியாக, மற்றைய தன்மைகளை கண்டறிந்து, பிரித்துப் போடக்கூடிய ரோபோக்களும் இன்னும் உருவாக்கப் படவில்லை. அதே போன்று நுகர்வுக் கலாச்சார சமூகத்தில் சாலைகளை சுத்தம் செய்வது போன்ற விரும்பத்தகாத பணிகளை யாருமே செய்ய முன்வருவதில்லை. அப்படியானால் எப்படி இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போகின்றார்கள்? கவலையே வேண்டாம். இதற்காகத்தான் மூன்றாவது உலக நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் இருக்கின்றார்களே. இவை போன்ற வேலைகளைத் தொழில் முறையில் வளர்ச்சி பெற்ற நாடுகளைச் சார்ந்தவர்கள் செய்வதில்லை.

நான் ஏற்கனவே குறிப்pட்டபடி நமது எல்லைகளுக்குள்ளேயே அந்நியராகிப் போனவர்கள் இந்த தொழிலாளர்கள் தான். மேலும் இவர்கள் கண்டதெல்லாம் நீல ஜீன்ஸ{ம் அது போன்றவற்றை உற்பத்தி செய்யும் முறைகளுந் தான். அவர்களது வினோதமான பொருளாதார விதிகளின்படி அவர்கள் நம்மை ஜீன்ஸ் உற்பத்தியில் ஈடுபடுத்தி உள்ளார்கள். ஏற்கெனவே உலக மக்கள் தொகை நாலாயிரம் கோடியைத் தாண்டி விட்டதாகவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஜோடி நீல ஜீன்ஸ் வாங்கும் அளவிற்கு காசு இருப்பதாகவும் கருதி இந்த நீல ஜீன்ஸ் உற்பத்தி நடைபெற்று வரு கிறது. நான் ஜீன்ஸ் கால் சட்டையை கிண்டல் செய்யவில்லை. இளையோருக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்குப், பிடித்த ஆடையாக அது மாறி வருகிறது. அவர்கள் எம் மாதிரியான பணியை நம்மிடம் விட்டு வைத்துள்ளார்கள் என்பதுடன் அதி நவீன தொழில் நுட்பத்திற்கும் இதற்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை என்பதற்குமாகவே இதை விமரிசனம் செய்கிறேன். இனி நமது பல்கலைக் கழகங்களுக்கு வேலையிருக்காது, பணக்கார நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அதே நேரத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றக் கூடிய தொழில் நுட்பப் பணியாளர்கட்குப் பயிற்சி அளித்து உருவாக்குவதே இனி இந்தப் பல்கலைக் கழகங்களின் பணியாக இருக்க முடியும்.

சமீபத்தில் அமெரிக்காவில் கணினி, மின்ணணுவியல் போன்ற துறைகளில் வளர்ந்து வரும் தேவைக்கேற்ப மனித உழைப்பு தேவைப்படுவதாற் சர்வதேச அளவில் இரண்டு லட்சம் பேருக்கு அவர்கள் ‘வேலை வாய்ப்பு அனுமதி’ வழங்கப் போவதாகப் பத்திரிகைகளிற் செய்தி வெளியாகியது. உங்களிற் பலரும் இதை படித்திருக்கக் கூடும்.

அவர்களைப் பொறுத்த மட்டிற் சர்வதேசச் சந்தை என்பது மூன்றாவது உலக நாடுகள் தான். இந்த இரண்டு லட்சம் பேரும் அதி நவீன தொழில் நுட்பக் கூடங்களில் பணியாற்ற வேணடியிருக்கும். நீங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும். ஏனெ னில் அவர்களுக்கு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களே தேவை ப்படுகிறார்கள். இப்பொழுது தக்காளி பறிப்பதற்கு ஆட்களை எடுக்கப் போவதில்லை. அவர்கள் மெத்தப் படித்தவர்களாக இல்லை. இதை நீங்களே நேரில் பார்க்க முடியும். அமெரிக்காவில் பலருக்கு பிரேசிலுக்கும் பொலிவியாவிற்கும் வித்தியாசம் தெரியாது குழம்பிப் போயிருப்பார்கள். பலருக்கு அவர்கள் நாட்டைப் பற்றிய பல்வேறு விஷயங்களே தெரியாது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இன்னுஞ் சொல்லப் போனால் இலத்தீன் அமெரிக்கா பற்றிக் கூட ஏதும் அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. அது ஆபிரிக்காவில் இருக்கிறதா ஐரோப்பாவில் இருக்கிறதா என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இவற்றை எல்லாம் நான் மிகைப்படுத்திக் கூறுவதாக நீங்கள் கருத வேண்டாம். அதி நவீன இயந்திரங்களைக் கையாள்வதற்கு தேவையான புத்திசாலித் தொழில் நுட்பப் பணியாளர்கள் அவர்களிடங் கிடையாது. எனவே தான் அவர்கள் மூன்றாம் உலக நாடுகட்கு வருகிறார்கள். அப்படிப்பட்ட வேலைகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள். நம்மிடம் இருக்கக்கூடிய நாம் உருவாக்கிய தேர்ச்சி பெற்ற ஒரு சிலரையும் அவர்களிடம் ஒட்டு மொத்தமாக இழந்து விடுகிறோம்.

நம்மிடமிருந்த சிறப்பு வாய்ந்த அறிவியலாளர்கள் இப்போது எங்கே? அவர்கள் எந்த ஆய்வுக்கூடங்களிற் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? நம்மிடையில் எந்த நாடு இது போன்ற அறிவியலாளர்களுக்கு பயிற்சி அளித்து சோதனைகளை மேற் கொள்ளும் திறன் பெற்றதாக இருக்கிறது? நம்மால் இவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவது எவ்வளவு?

அவர்கள் அளிப்பது என்ன? அந்த அறிவியலாளர்கள் எங்கே போனார்கள்? அங்கே உள்ள சிறப்புவாய்ந்த, கீர்த்திபெற்ற பல்வேறு லத்தீன் அமெரிக்கர்களை நான் அறிந்திருக்கிறேன். யார் அவர்களுக்குப் பயிற்சி அளித்தது? ஏதோ ஒரு மூன்றாமுலக நாடுதானே அவர்களுக்கு அனைத்து வகையான பயிற்சிகளையும் அளித்தது. அதன் பின்னர் அந் நாடுகளின் உயர்நிலையில் வாய்ப்புகள் இல்லை என்பதனால் அவர்கள் ஏழை நாடுகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுத்து, அந் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள். சந்தைகளில் அடிமைகளை விலைக்கு வாங்குவதைப் போல், நமது பேஸ்பால் விளையாட்டு வீரர்களை வாங்கிக் கொள்கின்றனர்.

அவர்கள் நம்பிக்கைத் துரோகிகள். எப்போதாகிலும் ஒரு ஆன்மா விலை பேசப்படும் என்றுதான் புதிய வேதாகமம் உரைக்கிறது. முதலில் உருவான மனிதனைத் தான் அது அவ்வாறு குறிப்பிடுகிறது. ஆனால் பின்னர் வருபவர்கள் சற்று மாறுதலாக இருக்க வேண்டாமா? நுகர்வுக் கலாசார சமூகம் பற்றி உணராதவர்கள் அதற்காக இப்படி பித்துப் பிடித்து அலைவதா? அந் நாளில் டொலர் என்பதே கிடையாது. இப்பொழுது திடீரென்று சிறகு விரித்து பறக்கத் தொடங்கிவிட்டது. கியூபாவிலுள்ள பேஸ்போள் ஆட்டக்காரர்களை நாம் ஏலத்தில் கூவி விற்கும் பட்சத்தில் நாம் பெரும் செல்வந்தர்களாகி விடுவோம்.

இதற்கு அடுத்தபடியாக குறிப்பிடப்பட வேண்டியது தொலைக்காட்சி விளம்பரங்கள். பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்த அழகிய பெண்கள் கார் விளம்பரங்களில் பயன்படுத்தப் படுவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இதில் மட்டுமின்றி வேறும்பல வர்த்தக விளம்பரங்களும் மற்றவைகளும் நாம் காணும் சாதாரண பத்திரிகைகளிலும் வெளியாகிறது. இந்த விளம்பரங்கள் நம்மில் பலருக்கு ஆசையை தூண்டுகின்றன.

கியூபாவில் அச்சிடக்கூடிய காகிதத்தை இது போன்ற பகட்டான விளம்பரங்களுக்காக விரயமாக்குவதில்லை. மற்ற வளங்களை இதற்காகப் பயன்படுத்துவதில்லை. ஒரு சில நேரங்களில் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை நான் காண்பதுண்டு. என்னால் அவற்றை நீண்ட நேரம் பார்க்க முடிவதில்லை.

காரணம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு வர்த்தக விளம்பரம் காட்டப் படுகிறது. ஒரு சில நேரங்களில் மனிதன் ஒருவன் உடற் பயிற்சிக்கான சைக்கிளை ஓட்டுவதையும் விளம்பரத்தில் கண்டிருக்கிறேன். இதைவிட கன்றாவியான விளம்பரம் உலகில் வேறெதும் இருக்க முடியாது. இந்த விளம்பரங்களை தவறு என்று நான் சொல்லவில்லை. பார்க்கச் சகிக்கவில்லை என்றுதான் கூறுகிறேன். எந்த நிகழ்ச்சியாக இருப்பினும் அல்லது குடும்பத்திற்கானது என்ற பெயரில் சுவிங்கமாக நீடித்த தொடர்களுக்கு இடையில் மட்டும்தான் விளம்பரக் குறுக்கீடுகள் இருக்கிறது என்பதில்லை. ஒரு அற்புதமான காதல் காட்சிக்கு இடையேயும் தான்.

எங்கள் நாட்டில் இருக்கும் சிறிதளவு காகிதத்தைக்கூட உண்மையிலேயே கவனமாகப் பயன்படுத்தி வருகிறோம். அது பாடப் புத்தகங்களுக்கு பயன்படுகிறது. இது தவிரக் குறைவான பக்கங்களைக் கொண்ட ஒரு சில பத்திரிகைகளுக்கும் பயன்படுகிறது. எங்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு அங்கிருப்பதைப் போல் பகட்டான பத்திரிகைகளை அச்சிட முடியாது. அவற்றையெல்லாம் என்னவென்று அழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. பல்வேறு படங்கள் நிறைந்த இந்த பத்திரிகைகளைப் பிச்சை எடுப்பவர்கள் கூட நமது நகரத் தெருக்களின் மூலைகளில் படித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

பல்வேறு ஆடம்பரக் கார்களின் விளம்பரங்கள் கூடவே பாதுகாப்பிற்கு அழகு மிக்க பெண்கள். இன்னும் உல்லாசப் படகுகள் மற்றும் இதர பொருட்களுக்கான விளம்பரங்களின் ஊடான கருத்துப் பிரச்சாரம் மூலம் மக்கள் மனதில் விஷவித்தை விதைக்கிறார்கள். இதுபோன்ற விளம்பரங்களின் தாக்கத்தால் பிச்சை எடுப்பவர்கள் கூட யதார்த்த வாழ்வில் பெற முடியாத சொர்க்கத்தைப் பற்றிய கனவுகளில் மூழ்கி இருக்கிறார்கள். முதலாளித்துவத்தால் இதைத்தான் வழங்க முடியும்.

நுகர்வோரின் வாழ்நிலை பற்றித் தெளிவுபடுத்தச் சில எடுத்துக்காட்டுகளை உங்கள் முன் வழங்க விரும்புகிறேன். பங்ளாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் அல்லது சீனா இங்கெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கார் ஒன்று இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடமும் கார் இருப்பின் என்னை மன்னியுங்கள். இந்தப் போக்குச் சரியல்ல. இதற்கு மாற்றான பல்வேறு வழிகளைத்தான் நாம் பின்பற்றியாக வேண்டும். நான் விமரிசனம் செய்யவில்லை, எச்சரிக்கவே விரும்புகிறேன். வளராத நிலையில், வளர்ந்து வரும் சூழலில், ஒவ்வோர் வீடடிற்கும் ஒரு கார் என்ற ஏற்க முடியாத முன்மாதிரிகளை நாம் கொள்ளலாகாது. இதே போன்று சீனாவில் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். பத்துக் கோடி ஹெக்டேர் விளைநிலங்கள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்ட வேண்டும். இது தவிரப், பெட்ரோல் நிலையங்கள் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் போன்றவற்றையும் உருவாக்க வேண்யிருக்கும். அப்போது ஒரு நெல்மணிகளை விளைவிக்க ஒரு சாண் நிலங் கூட மிஞ்சி இராது.

உலகெங்கிலும் அவர்கள் திணிக்கக்கூடிய நுகர்வுக் கலாசார வடிவம் மிகவும் பைத்தியக்காரத் தனமானது. அது குழப்பமானது மட்டுமின்றி அபத்தமானதும் கூட. அதற்காக உலகமே துறவியர் மடமாக மாற வேணடும் என்று நான் கூறவில்லை. ஆனால் நமக்கு உலகில் வேறு வழியில்லை. நுகர்வு வடிவங்கள் குறித்துச் சரியான வரையறைகளை உண்டாக்கித்தான் தீர வேண்டும். நுகர்வுக்கு ஏற்றவை எவை, அவற்றைப் பெறுவதற்கான முறை எது, அவற்றைப் பெற முடியுமா முடியாதா போன்ற அம்சங்கள் குறித்து மனித சமூகத்திற்கு கற்பிக்கப்பட வேண்டும். நாம் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய தருணம் இது.
தமிழாக்கம்: ஏகலைவா

October 20, 2008

இந்தியாவில் தலை தூக்கும் இட்லரிசம்!



முன்னேற்றப் பாதையில் இந்தியா!... வல்லரசு இந்தியா!... சூப்பர் பவர் இந்தியா!... என்று மதிப்புமிகு அப்துல்கலாம் போன்ற அறிவுஜீவிகளும், ஆட்சியின் உச்சத்தில் உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கும் மன்மோகன் போன்றவர்களும் உரக்க உரைத்தாலும் இந்தியாவைப் பற்றி இமோஜ் - சகிப்பின்மைக்கான மறு அடையாளமாக மாறிவருவதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் மகாராஷ்டிராவில் - ராஜ்தாக்கரேவின் - மகாராஷ்டிர நவநிர்வான் படையினர் வட இந்திய வேலையில்லாத இளை"ர்களிடம் தங்களது வீரவிளையாட்டுக்களை காட்டியுள்ளனர். இரயில்வே தேர்வு எழுத வந்த வட இந்திய இளை"ர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளதோடு. தேர்வு நடைபெற்ற முகாம்களுக்கே அந்த ஹீட்லரிச - நிர்மான்படை உள்ளே புகுந்து தேர்வுத் தாள்களை கிழித்து எரிந்ததோடு - அடையாளம் அறிந்து பீகார் - உத்திரப்பிரதேசம் - டெல்லி - வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்திருந்த வாலிபர்களை அடைத்து உதைத்துள்ளது இந்திய நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மகா அவமானம்.

இது ஏதோ திடீரென்று இன்றைக்கு ஏற்பட்ட சம்பவமா? 80களில் தென்னிந்தியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிட்ட பால்தாக்கரேவின் - சிவசேனா படையினர் கடும் தாக்குதல்களைத் தொடுத்தனர். அப்போது மண்ணின் மைந்தர் கோஷம் என்ற பெயரில் மகாராஷ்டிரம் - மகாராஷ்டிரர்களுக்கே என்றுச் சொல்லி மும்பையில் வேலைப்பார்த்த தமிழ் உயரதிகளின் பட்டியல் தயாரித்து - வெளியிட்டு வெறியைத் தூண்டி தாக்குதல் நடத்தியவர்களின் வழி வந்தவர்கள்தான் இன்றை ராஜ்தாக்கேரவின் நவநிர்மான் படையினர். அவர் தென்னிந்தியர்களைத் தாக்கினார் என்றால் இவர் வட இந்தியர்களைத் தாக்குகிறார்.

இந்த சம்பவத்தை இரயில்வே மந்திரி கடுமையாக கண்டித்துள்ளதோடு - ராஜ்தாக்கரேவை மென்டல் என்று வர்ணித்துள்ளார். பதிலுக்கு நாகரீகமற்றவர் என்று ராஜ்தாக்கரே விளித்துள்ளார் லாலுவைப் பார்த்து. தங்களது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ராஜ்தாக்கரேவின் கட்சி இந்த தேசத்திற்காக இளம் வயதில் தன்னுடைய உயிரை ஈந்த பகத்சிங் முதல் வங்கத்தின் மகா கவி ரவீந்திரநாத் உட்பட பலரது படங்களைப் போட்டுக் கொண்டே இந்த நரவேட்டையாடும் - செயல் சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. கறிக்கடையில் காந்தியின் படம் தொங்குவது போன்று இவர்களது இணையதளத்தில் அந்த மகா மனிதர்களின் படத்தை தங்களது அடையாளத்திற்கு பயன்படுத்துகிறது இந்த பாசிச படை.

பால்தாக்கரே - ராஜ்தாக்கரே என இந்த இனவாத அமைப்புடன் கை கோர்ப்பது யார்? பாரதம் பேசும் - இந்துத்துவவாதிகள்தான் என்பதை மறக்கக்கூடாது. பா.ஜ.க.வின் உற்ற தோழர்கள்தான் இந்த பாசிசவதிகள். இருவரது செயலும் ஒன்றுபட்டிருப்பதால்தான் இவர்கள் கூட்டாளியாக உள்ளனர். நான் ஏன் நாத்திகன் என்று உலகுக்கு உரைத்தவன் பகத்சிங். இந்த சமூகத்தை ஒரு சோசலிச சமூகமாக மாற்ற வேண்டும் என்ற வேட்கைக் கொண்ட பகத்சிங்கின் அடையாளத்தைப் பயன்படுத்தும் இவர்கள்தான் தங்களது இந்து மத அடையாளத்தையும் - மகாராஷ்டிர அடையாளத்திற்குள்ளும் இந்த புரட்சியாளர்களைக் கூட அடைத்திட முயலுகிறார்கள். தமிழகத்தில்கூட தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம. சிங்காரவேலரின் படத்தை பா.ஜ.க. போட்டுக் கொள்வதுதான் சந்தர்ப்பவாதத்தின் உச்சம். பாசிசவாதிகள் தங்களது செயலின் கொடூரத்தை மறைப்பதற்காகத்தான் இந்த புரட்சிவாதிகளை பயன்படுத்த முயலுகின்றனர்.

மேலும் தொடர்ந்து மகாராஷ்டிராவில் அராஜகத்தை நிகழ்த்தும் ராஜ்தாக்கரேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அலறுகிறது காங்கிரஸ் அரசு. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சிக் கட்டில் சொந்தமாக இருந்தால் போதும். யார் வேண்டும் என்றாலும் எதையும் பேசலாம் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர்கள் அல்லவா? அதனால்தான் ராஜ்தாக்கரேவை கைது செய்வதற்கு பயப்படுகிறார்கள்.

இந்திய நாட்டில் உயர்ந்து வரும் வேலையின்மைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய வாலிபர்களை பிரிக்கும் நோக்கம் கொண்ட பாசிஸ்ட்டுகள்தான் வாலிபர்களின் - தேசத்தின் முதல் எதிரிகள்... எனவே இந்த இந்துத்துவ - இனவெறிப்பிடித்த பாசிச கொள்கை வெறியர்களுக்கு எதிராக ஒற்றுமை எனும் கொடிய ஓங்கிப் பிடிப்போம்! இனவாதம் என்பது தேசியவாதம் அல்ல. அதற்குள்ள ஒளிந்துக் கொண்டிருப்பது அப்பட்டமான முதலாளித்துவ சுரண்டல்வாதமே என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.

October 17, 2008

ஜெயமோகனின் சாயம் வெளுத்துப் போச்சு!


அக்டோபர் 9, 2008 தேதியிட்டு "எனது இந்தியா" என்ற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் மூலம் தான் யார்? தனது கொள்கை என்ன? என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். குறிப்பாக சிறு பத்திரிகை, சிறுபான்மையினர், தலித்துக்கள், சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று அனைவர் மீதும் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

"நாய்க்கு நெல்பழ வாசனை" தெரியாது என்பார்கள் தமிழகத்தில். அதுபோலதான் இருக்கிறது இவரது கட்டுரையும். இந்தியாவை இவர் பார்ப்பது எல்லாம் இந்துத்துவ கண்ணாடி அணிந்து கொண்டுதான். அதற்கு இவரே கொடுத்துள்ள பெயர்தான், "இந்து ஞான மரபு". இணையத்திலும், வலைப்பதிவு உலகிலும், ஏன் அறிவுலகத்தினர் யாரும் "இந்து ஞான மரபு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வளவு ஏன் இந்த இந்து மரபு என்பது வெறும் "பார்ப்பனீய சனாதன" குப்பைதான் என்று அடித்து உரைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மேலும் இவர் உரைக்கக்கூடிய இந்த இந்து என்பதே பன்மைக்கு எதிரானதாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவும் செயல்படுவதுதான்.

சரி விசயத்திற்கு வருவோம். அவரது எனது இந்தியா கட்டுரையில் துவக்கத்திலேயே விழிப்புணர்வு என்ற பத்திரிகை மீது விழுந்து பிடுங்குவதோடு, அதனுடன் சேர்ந்த அனைத்து சிறு பத்திரிகைகளையும் தனது இந்துத்துவ பற்களைக் கொண்டு கிழித்து எடுக்கிறார். இந்த விழிப்புணர்வு பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைகள் குறித்து அவர் கூறுவதை இங்கே பாருங்கள். 

(அதன் பக்கங்கள் பெரும்பாலும் யாரென தெரியாதவர்களால் எழுதப்பட்டிருந்தன. அனேகமாக ஒருவரே எழுதியிருப்பாரோ என்று எண்ணவைக்கும் நடை.)

அதாவது ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் இவரைப் போன்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களால்தான் எழுத வேண்டும் என்பதுதான் இவர் வகுத்துள்ள சனாதன மனு நீதி - இதைத்தான் இவர் அடிக்கடி "இந்து ஞான மரபு" என்று பிதற்றுகிறார். அந்த பத்திரிகையில் வந்துள்ள கருத்தின் மீது விவாதம் செய்வதற்கு மாறாக, எழுத்தாளரையே முதலில் கூண்டுக்குள் எழுதுகிறார். அதாவது இதன் அர்த்தம் என்ன தெரியுமா? இவனெல்லாம் எழுத வந்துட்டானுங்க... இதுதான் மனுவின் உள்ளார்ந்த விஷம். அது மட்டுமல்ல இந்த எழுத்தாளர்கள் எல்லாம் கூலி எழுத்தாளார்களாம், அதுவும் அந்நிய நாட்டு நிதியைப் பெற்று எழுதுபவர்களாம். அது சரி இந்த அடையாளம் தெரியாத அனாமதேய எழுத்தாளர்கள் மட்டுமா?

அருந்ததிராய் முதல் அ. மார்க்ஸ் வரை அந்நிய நாட்டு நிதி பெற்று எழுதும் எழுத்தாளார்கள்தான் குற்றம் சாட்டுகின்றார். மேலும் இசுலாமிய இதழ்களாக வெளி வரும் சமரசம் முதல் அனைத்தும் தாலிபானிய அரசை விரும்புவதாகவும் அதனை அமைப்பதற்கே பாடுபடுவதாகவும் குற்றம் சாட்டுகிறார் இந்த மகா புனிதர். அது சரி ஜெயமோகனின் எனது இந்தியா எது என்று தெரிந்து கொள்ளலாமா? அது என்ன அகண்ட பாரதமா? இந்தியா என்ற ஒற்றைக் கோட்பாட்டை வடிவமைத்தவனே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள்தானே? அது மட்டுமா? இந்து என்ற அடையாளத்தையும் அவர்கள்தானே வழங்கினார்கள். இல்லையென்றால் சைவமாகவும், வைனவமாகவும், சமணமாகவும் அல்லவா இன்றைக்க மண்டையை பிளந்துக் கொண்டிருப்பார்கள் இந்த சனாதனவதிகள்.

நல்ல காலம் இந்த வலைப்பதிவு என்று கொண்டு வந்த தொழில்நுட்பம் கூட அவர்களது சதி என்று வாதிடாமல் விட்டு விட்டார் ஜெயமோகன். வலைப்பதிவு மூலமாக இன்றைக்கு பல புதிய நவீன எழுத்தாளார்கள் உருவாகி தேசத்திற்கும் - உலகிற்கும் சேவை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். இங்கே இவர்களைப் பார்ப்பது முகத்தையல்ல - மதத்தையல்ல - கருத்தைத்தான். இது கூட தெரியாத இந்த ரப்பர் மனிதர்களை என்ன வென்று சொல்லுவது?

மேலும் ஜெயமோகன் கூறுவதை கேளுங்கள்:

(இவை அனைத்துக்குமே பொதுவான ஒரு அம்சம் உண்டு. கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பு. இந்த நாடு முழுக்க முழுக்க அநீதி மீது கட்டப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் அநீதியால் இயக்கப்படுவதென்பதில் இவர்களுக்கு ஐயமே இல்லை.)

அதாவது, சிறுபத்திகையாளர்கள் எல்லாம் இந்திய எதிர்ப்பை மையமாகக் கொண்டே எழுதுகிறார்களாம்? அது சரி இந்திய எதிர்ப்பு என்றால் எது என்று சற்று விளக்கியிருக்கலாம். ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் எங்கள் இந்திய தாயின் கண்மணிகள் கற்பழிக்கப்படுகிறார்களே அதை இவர் தேச சேவை என்று போற்றுகிறாரா? குஜராத்தில் கர்ப்பணிகளையும் - குழந்தைகளையும் கருவருத்த மனித மாமிசவாதிகளையும் - சிறுபான்மையினரை நரவேட்டையாடிவர்களையும் தேசப் பிதாவாக சித்தரிக்கச் சொல்கிறாரா? இந்த நாட்டில் நடக்கும் மனிதனை மனிதன் வேட்டையாடும் இந்து இந்துத்துவ கொள்கைக்கு எதிராக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் ஒரே குரலில் எழுந்து நிற்கையில் வக்காலத்து வாங்கிக் கொண்டு வாதிட வந்திருக்கிறார் இந்த இந்துத்துவ மூகமூடி ஜெயமோகன்.

அடுத்து ஜெயமோகனி்ன் கவலை என்ன என்று பாருங்கள். அப்போது தெரியும் இந்த உண்மை சிகாமணியின் உடலுக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ ரகசியம்.

(சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன.)


சிறு பத்திரிகைகள் சிறுபான்மையினரையும், தலித்துக்களையும், பழங்குடிகளையும் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்கிறார்களாம்? இந்த கருத்துக்காக 

இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துக்கள் நாயினும் கீழாக நடத்தப்படுவது கண்டு எதுவும் பேசாத இந்த அதி மேதவி. அவர்களது வாழ்க்கைக்காக - சுய மரியாதைக்காக - மனிதனாக எங்களையும் அங்கீகரியுங்கள் என்ற கோரிக்கையோடு வயிற்றுப் பிழைப்பையும் கூட பாராது போராடுபவர்களைப் பார்த்து இந்த தேசத்திற்கு எதிராக கிளர்ந்து எழுமாறு தூண்டுகிறார்களாம். ஹரியானாவில் 5 தலித்துக்களை செத்துப் போன பசு மாட்டிற்காக அந்த தலித்துக்களின் உயிரை எடுத்தபோது இந்த ஜெயமோகனின் குரல் எங்கே ஒடுங்கிக் கிடந்தது? இதைச் செய்தது இந்துத்துவாதானே? கயர் லா;"சியில் என்ன நடந்தது? தாயும் - மகளும் - மகனும் கற்பழிக்கப்பட்டு கொன்று வீசி எரியப்பட்டார்களே? இந்த அநியாயம் யாரால் நடத்தப்பட்டது? இன்றும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலப்பிரபுத்து - இந்து சனாதனத்தால் உருவாக்கப்பட்டு ஆதிக்க கருத்தியல்தானே?, திண்ணியத்தில் மலத்தை திணித்தவனுக்கு எதிராக தீக்குரல் எழுப்பும் தலித் மக்களைப் பார்த்து - ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து இந்த தேசத்திற்கு எதிரானவர்கள் என்று பசப்பும் ஏ இந்துத்துவவாதியே உன்னுடைய எழுதுகோலை கீழே போடு... இனியும் எழுதுவதற்கு நீ அனுமதிக்கப்பட்டால் அது அநீதிக்குத்தான் துணை போகும்.....

பழங்குடி மக்களை இன்றைக்கு ஒரிசாவில் வேட்டையாடும் சக்தி எது? காட்டிலிருந்து விரட்டப்படும் பழங்குடிகள் எங்கே இருக்கிறார்கள்? சட்டீஸ்கரில் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பழங்குடிகள் விரட்டியக்கப்படுகிறார்களே அவரது குரல் ஓங்கி ஒலிப்பதால் உனக்கு எங்கே வலிக்கிறது? இவர்கள் கேள்வி எழுப்பக் கூடாது அவ்வாறு எழுப்பினால் அது இந்த தேசத்திற்கு எதிரானதா?

அருந்ததி ராய் காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று கட்ரைத் தீட்டியிருக்கிறார். அவ்வாறு கட்டுரை தீட்டக்கூடாதாம்! அதுதான் இவ்வளவு எரிச்சல் இந்த ஜெயமோகனுக்கு. இது குறித்து அவர் எழுதுவதைப் பாருங்கள்.

(மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளை கொன்று குவித்து அடித்து துரத்தியபின்னர்தான் அவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. காஷ்மீரிகள் தேடுவது எவ்வகையிலும் முற்போக்கான, மேலான ஒரு சமூக அமைப்பை அல்ல, மாறாக அவர்கள் தாலிபானிய அரசு ஒன்றை நாடுகிறார்கள். அவர்கள் இந்திய அரசை வெறுப்பது இது அடக்குமுறை அரசு என்பதனால் அல்ல, இது ஒரு தாலிபானிய இஸ்லாமிய அரசு அல்ல என்பதனாலேயே.)

காஷ்மீரி பண்டிட்டுக்கள் மண்ணின் மைந்தர்களாம்? அப்படியென்றால் அங்கே உள்ள முஸ்லீம்கள் எல்லாம் எங்கிருந்து வந்தவர்கள். இப்படிச் சொல்லி சொல்லித்தான் அந்த மக்களை அந்நியப்படுத்தினார்கள் மத்திய ஆட்சியாளர்கள். 370வது சட்டப் பிரிவு இருக்கக்கூடாது என்று ஓயாது குரல் கொடுக்கும் பா.ஜ.க. தனது ஆட்சிக் காலத்தில் காஷ்மீரை மேலும் அந்நியப்படுத்திது. மேலும் காஷ்மீர் மக்கள் விரும்புவது தாலிபானிய அரசைத்தானாம்? அந்த மக்கள் எந்த எதிர்பார்ப்போடு இந்தியாவில் இணைந்தார்கள் என்பதாவது தெரியுமா? இந்த அறிவு ஜீவிக்கு. காஷ்மீரியம் என்பது உயர்ந்த மதச்சார்பற்ற பண்பாடாக திகழ்ந்தது. அதில் விஷத்தை ஏற்றியவர்கள் அங்குள்ள இந்துத்துவ பண்டிட்டுக்கள்தான். அவர்கள் தாலிபாணிய அரசை விரும்புகிறார்கள் என்று பழியை சுமத்துவம் ஜெயமோகனின் இந்தியாவில் புஷ்யமித்திரனின் அரசு அமைய வேண்டும் என்று விரும்புவதைத்தான் இது மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறது.

அடுத்து அவர் இஸ்லாம் மீது பாய்வதை சற்று நோக்குங்கள் 

(காரணம் இஸ்லாம் என்பது அடிப்படையில் ஒரு தேசியகற்பிதம்– ஒரு மதமோ வாழ்க்கைமுறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காது. அந்த தேசிய கற்பிதங்களுக்குள் தனித்தேசியமாக தன்னை உணர்ந்து அவற்றை உள்ளிருந்து பிளக்கவே முயலும்.)

திராவிட இயக்கத்தவர்களுக்கும், பெரியாரியவாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கடவுள் மறுப்பு கொள்கை இருந்தாலும்கூட ஒரு மதம் குறித்து விமர்சிக்கும் போது அதன் பிற்போக்கு அம்சங்களை ஆதாரத்துடன் விமர்சிப்பதுதான் நாகரீகமாக கொண்டவர்கள். ஆனால் ஜெயமோகனின் எழுத்து இஸ்லாமின் அடிப்படையையே தகர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாக அமைகிறது. இந்த இஸ்லாமின் கோட்பாட்டால்தான் உலகம் முழுவதும் குண்டுகள் புதைக்கப்படுவதாக இவர் கதைக்கிறார். மேலும் அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காதாம். இவரது இந்துத்துவாதான் எல்லாக் கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் ஜனநாயக மரபாம்! இந்த நாட்டில் இந்தியா - பாகிஸ்தான் என்ற பிரிவினை உருவாக்குவதற்கே அடிப்படையாக இருந்தவர்களே இந்த இந்துத்துவாதிகள்தான். மேலும் இன்றைக்கும் நாட்டில் பதட்டத்தையும் - பிரிவினையையும் தூண்டிக் கொண்டிருக்கும் தத்துவம் ஜெயமோகனாயிசமே! இந்த பாசிச கொள்கைதான் அடிப்படை. இதன் அட்டூழியங்களுக்கு எதிராக சுண்டு விரலைக் கூட நீட்டாத இந்த பச்சிலம் பாலகர் இசுலாமின் மீது எறிந்து விழுவதன் நோக்கம் என்ன என்று புரிந்துக் கொள்ளக் கூடியதே.

இதற்கும் அடுத்து என்ன கூறுகிறார் என்று பாருங்கள்

(தாங்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளிலாவது பிற தேசியங்களுடன் ஒத்துப்போகவும் அதற்குக் கற்பிப்பதே இன்று அவசியம்.)

அதாவது எனது இந்தியா கட்டுரையில் இவர் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து புளங்காகிதம் அடைகிறார். அதனை கொ;"சி குலாவுகிறார். அதாவது இவரது ஜனநாயகம் என்பது சிறுபான்மையினர் அடங்கிக் கிடக்க வேண்டும். ஒடுங்கிக் கிடக்க வேண்டும் என்பதுதானாம்! ஆஹா இந்த இனிமேல் இதனை ஜெயமோகனாயிச ஜனநாயகம் என்றே அழைக்கலாம். இதுதான் இந்துத்துவ புத்தி! அதே சமயம் அது தத்துவ ரீதியாக சிறுபான்மையினராக இருந்துக் கொண்டு பெரும்பான்மை தலித்துக்களை ஒடுக்க நினைக்கும் என்பது ஒரு தர்க்க முரண். இந்த முரணியக்க விதியை ஏனோ தெரியவில்லை இந்த பாலகன் அறியவில்லை. இதுவும் அவரது ஜனநாயகத்தின் ஒரு பகுதியே!

மேலும் இந்த கொடிய விஷ சிந்தனையைக் கேளுங்கள் - ஜெயமோகன் கூறுகிறார்.

(எளிய லௌகீக வாழ்க்கையின் துயர்களில் துணைவரும்படி  இறைவனை தொழுவதற்காக ஒவ்வொரு முறைச் செல்லும்போதும் ஓர் இஸ்லாமிய நாட்டுக்காக போராளியாகும்படியான அறைகூவலை எதிர்கொள்கிறான் சாதாரண முஸ்லீம்.)

அதாவது தொழுகைக்கு செல்லும் முஸ்லீம்கள் எல்லாம் இஸ்லாமிய நாட்டுக்கான போராளியாகும்படி அறைகூவல் விடுக்கிறார்களாம்? இதைவிட விஷயத்தை வேறு யாரால் கொட்ட முடியும். இதைவிட வேறு யாரால் கொச்சைப்படுத்த முடியும். இந்துத்துவ ஷகாவுக்கு போகும் சாதாரண அப்பாவிகளை கொலையாளிகளாகவும் - பாசிஸ்ட்டுகளாகவும் உருவாக்கிக் கொண்டிருப்பவரின் அறிவுஜுவிச் சிந்தனையில் வேறு என்ன தோன்றும். நானும் இந்துதான் - பகவத் கீதையை படிக்கும் இந்துத்தான் என்று கூறிக் கொண்டே சனாதனத்தை கடைப்பிடித்த - அகிம்சைவாதியான மகாத்மாவை கொலை செய்த கோட்சேவிவின் குருக்களின் சிந்தனைக் கொத்துக்களை பயின்று வளர்ந்துள்ள இந்த இந்து ஞான மரபியலரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஜெயமோகனிடம் நேரடியாக ஒரு கேள்வியை எழுப்புகிறேன். தலித் மக்களை தீண்டத்தகாதவர்களா கோவிலுக்குள்ளே அனுமதிக்காத சனாதன குப்பையை கேள்வி கேட்க உன்னால் முடியுமா? அங்கே தினமும் என்ன வேதம் ஓதப்படுகிறது. இந்த தீண்டாமை வேதம்தானே!

மேலும் காஷ்மீர் குறித்த கட்டுரை எழுதிய அருந்ததி ராயை அவர் விமர்சிப்பதைப் பாருங்கள் - இவர்தான் தான் உயர்ந்த எழுத்தாளர் என்று டமாரம் அடித்துக் கொள்கிறார்.

(அடிப்படையான  வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்றுபெறும் அதீத முக்கியத்துவம் மிகமிக ஆச்சரியமானது.)


அருந்ததி ராய் குருவி மண்டையராம். ஒரு பெண் அறிவு ஜீவியாக வலம் வருவதை இந்த இந்துத்துவவாதியால் பொருத்துக் கொள்ள முடியுவில்லை. இந்துத்துவம் எப்போதும் பெண்களுக்கு எதிரானது தானே. இந்து ஞான மரபும் அப்படிப்பட்டதுதானே! அதனால்தான் சொல்கிறார் உலகளவில் ஒப்பற்ற எழுத்தாளராக திகழும் அருந்ததி ராயைப் பார்த்து குருவி மண்டையர் என்று? உன்னைப் பார்த்து என்ன சொல்லாம்! நீ ஏற்கனவே ஒரிஜீனல் பைத்தியக்காரன். இப்போது முழு பைத்தியக்காரனாகி விட்டாய் என்று யாராவது சொன்னால் அது எப்படி அபத்தமோ? அப்படித்தான் இதுவும் இருக்கிறது. எனக்கும் கூட அருந்ததி ராயின் பல கருத்துக்களோடு வித்தியாசம் உள்ளது. அதற்காக அவரது எழுத்துக்களை விமர்சனம் செய்யலாமே தவிர இப்படி ஜெமோகன் போல அவதூறு செய்வது ஜெயமோகனுக்கு அழகா!


அடுத்து அப்சல் குருவைப் பற்றி கூறுகிறார்:

(இந்தியப்பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டவர் அப்சல் குரு. அவரது வழக்கு இந்திய நீதிமன்றத்தின் வழக்கமான அனைத்துச் சம்பிரதாயங்களுடனும் படிப்படியாக நடத்தப்பட்டு மீண்டும் மீண்டும் மேல் முறையீட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது. அப்சல் குருவுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த இந்திய இதழாளர்கள் ஒட்டுமொத்த இந்திய நீதியமைப்பே முழுமையாகவே அநீதியானது, மதவெறி கொண்டது என்றார்கள். அந்த விசாரணையின் எந்தப் படியிலும் அப்சல்குருவுக்கு எளிய முறையீட்டுக்குக்கூட வழி தரப்படவில்லை என்றார்கள்.)

அப்சல் குருவுக்காக வாதாடியவர்கள் ஒட்டுமொத்த இந்திய நீதியமைப்பையே குற்றம் சுமத்துகிறார்கள் என்று ஜெயமோகன் குற்றம் சாட்டுகிறார். இங்கே இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அத்வானி அவர்கள் ஆட்சியிலிருந்த போது அதிலிருந்து விடுவித்துக் கொண்டார். இது எந்த நீதியின் அடிப்படை. பாபர் மசூதி இடிப்படிற்கு அடிப்படை தூண்டுகோலாக இருந்த முதல் குற்றவாளியே அத்வானிதான். 3000 இசுலாமியர்களை வேட்டையாடுவதற்கு அடிப்படையாக அமைந்தது இந்த பாபர் மசூதி இடிப்புதான். அப்சல் குருவுக்காக வாதாடும் இந்த இந்துத்துவ வேந்தன் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரின் உணர்வுகள் குறித்து - பட்ட வேதனைகள் குறித்து ஏதாவது எழுதினாரா? அப்சல் குரு சம்பந்தமாக எழுப்பப்பட்டுள்ள அடிப்படையான சந்தேகங்களுக்கு இதுவரை முழுமையான விடை இந்த ஜனநாயகத்தில் கிடைத்து விட்டதா? மொத்தத்தில் ஜெமோகனின் எனது இந்தியா இந்துத்துவ இந்தியாவே! அவரது குரல் இந்துத்துவ பாசிச குரலே!

ஜெயமோகன் தனது இந்துத்துவ வெறித்தனத்தின் உச்சிக்கே சென்று உளறுவதைப் பாருங்கள்

(இத்தனை வெறியூட்டல்களுக்குப் பின்னும் இங்குள்ள சராசரி இஸ்லாமியர் தங்கள் அன்றாடத்தொழில்களைச் செய்தும் பிற சமூகத்தவரிடம் வணிகத்தில் ஈடுபட்டும் ஒரு சமூக வாழ்க்கையை கடைப்பிடிப்பது.இந்திய சமூகம் இன்று அளிக்கும் வாய்ப்புகள் மூலம் மக்களில் பெரும்பகுதியினர் மெல்லமெல்ல நடுத்தரவற்கமாக உருவாகி வருகிறார்கள். இந்தியாவெங்கும் இந்த வளர்ச்சிப்போக்கைக் காணமுடிகிறது. இது ஒன்றுதான் இந்த வெறியூட்டல்களுக்கு எதிரான ஒரே சக்தியாக இருக்கிறது.)

அதாவது, இஸ்லாமியர்கள் வெறியூட்டல்களில் ஈடுபடுகிறார்களாம். அப்படியிருந்தும் அவர்களை இந்த சமூகம் அவர்களது அன்றாடத் தொழில்களைக் செய்ய அனுமதிப்பது ஆச்சரியமாக இருக்கிறதாம். பிற சமூகத்திடம் வணிகத்தில் ஈடுபடுவதும் - கடைப்பிடிக்கப்படுவதும் வியப்பளிக்கிறதாம். மேலும் அவர்கள் பொருளாதார ரீதியாக வளர்கிறார்களாம். இதுதான் அவர்களை வெறியூட்டல்களுக்கு எதிரான சக்தியாக இருக்கிறதாம். சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட சச்சார் கமிட்டி அறிக்கையை இந்த அறிவு படித்திருந்தாலும் - படிக்காததுபோல் பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார். அதில் இந்திய முஸ்லீம்களின் நிலை தலித்துக்களை விட சில இடங்களில் கீழாக இருக்கிறது. அவர்களது வாங்கும் சக்தி முதல் கல்வி நிலை - வாழ்நிலை அனைத்தும் கேள்விக்கு இடமாகி உள்ளது. அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வேலைவாய்ப்பில் தரப்படுவதில்லை. கல்வி நிலையத்தில் தரப்படுவதில்லை என்று உண்மையை உலகுக்கு உணர்த்தியது. உண்மை இப்படியிருக்க தனது இந்துத்துவ கோயபல்ஸ் பிரச்சாரத்தை கையாளுவதை ஜெயமோகன் தவிர்க்கவில்லை. இதுதான் அவரது பாரதீய சிந்தனை வளர்ச்சியின் சாரம்.

அடுத்து மேலும் ஒரு படி போய் வெறிக் கொண்டு கொக்கறிக்கிறார் ஜெயமோகன்

(ஆனால் இந்த நாட்டை விட மேலானதாக நீங்கள் சொல்லும் நாடு எது நண்பர்களே? பாகிஸ்தானா? தாலிபானின் ஆப்கானிஸ்தானா? சீனாவா? இதை அழித்து நீங்கள் உருவாக்க எண்ணும் நாடு எதைப்போன்றது?)

இந்திய முஸ்லீம்கள் இந்த நாட்டை விட மேலானதாக பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும், சீனாவைவும் கருதுவது போல ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறார். அதுசரி சீனாவை எப்படி முஸ்லீம்கள் விரும்புவார்கள் என்று ஜெயமோகனுக்கே வெளிச்சம். இப்படியெல்லாம் அவதூறுப் பிரச்சாரத்தை கிளப்பி சிறுபான்மை இந்திய மக்களை - இந்தியாவை தாயகமாக கொண்டவர்களை வெறுப்புடன் பார்க்கும் பார்வைக்கு இந்திய மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள். அவர்கள் ஒருபோதும் சவர்க்கர் சிந்தனையின் பக்கம் சென்றதில்லை. செல்லவும் மாட்டார்கள். 

இந்தியாவில் அரவாணிகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கிறார்களாம். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உயர்ந்த மாண்பாம். இதைவிட ஜனநாயகம் வேறு எங்காவது உண்டா என்ற தொனியில் கேள்வி எழுப்பும் போது இவரது ஜனநாயக உள்ளடக்க சிந்தனையில் எந்தக் குப்பைக் கூடையில் போடுவது என்றுத்தான் தெரியவில்லை. ஒருவேளை இவர் ஐரோப்பாவில் இருந்தால் அங்கே லெஸ்பியன்களுக்கு கூட சட்ட உரிமை வழங்குகிறார்கள் என்று புளங்காகிதம் அடைந்து புகழ்ந்து தள்ளியிருப்பார். கூடுதல் விஷயம் என்னவென்றால் இந்துத்துவவாதிகளில் பலபேர் லெஸ்பியன்கள் என்று கூறப்படுகிறது அது குறித்து ஏதாவது மேல் தகவல் இருந்தால் அதையும் வெளிப்படுத்துங்கள் ஜெயமோகன் சார்.


இறுதியாக எனது இந்தியா எப்படியிருக்கும் என்று அவர் கூறியிருப்பதைப் பார்ப்போம்.

(எனது இந்தியாவில் இந்துமரபும் பௌத்த சமண மரபுகளும் கிறித்தவ மரபும் இஸ்லாமிய மரபும் ஒவ்வொரு கணமும் உரையாடி தங்களை வளர்த்துக் கொண்டவாறிருக்கும்.)


முதலில் ஒரு விஷயம் இங்கே இந்து மரபு என ஒன்று இல்லவே இல்லை. இங்குள்ள பார்ப்பனீய மரபைத்தான் இவர்கள் இந்து மரபு என்று கூறுகிறார்கள். எனவே பார்ப்பனீய மரபு பெளத்த மரபை - சமண மரபுகளுடன் உரையாடி வளர்த்துக் கொண்டுள்ளதா? அது இஸ்லாமையும் - கிறித்துவத்தையும் சகிக்கிறதா? இது உண்மைதானா? இந்தியாவில் பிறந்த பெளத்தம் இன்றைக்கு சீனா - ஜப்பான் என்று இடம் மாறிப்போனதேன். பார்ப்பனீய சூழ்ச்சிகள்தானே. அந்த பார்ப்பனீய சூழ்ச்சியைத்தான் இவர் எனது இந்தியாவாக சித்தரிக்கிறார்.


எனவே ஜெயமோகனின் எனது இந்தியா என்பது இந்துத்துவ இந்தியாவே என்று வரையறுத்து முடிக்கலாம். நமது இந்தியா மதச்சார்பற்ற - ஜனநாயக - சோசலிசத்தை நோக்கி முன்னேறும் இந்தியாவாக இருக்கட்டும். நமது இந்தியாவில் ஜெயமோகனாயிசத்திற்கு இடமில்லை.

October 14, 2008

ஜெயமோகனுக்கு முன்நவீனத்துவ பயித்தியம்!



ஜெயமோகன் தமிழக எழுத்தாளர்களில் முன்னணியில் இருப்பவர். பல்வேறு நாவல்கள் மூலம் தமிழக இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். இவரது எழுத்து மற்றும் கருத்து குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், தமிழகத்தில் இவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட (ரப்பர்) ஸ்டாம்பாகி (எழுத்தாளர்)விட்டார்.

பல்வேறு தருணங்களில் தனது அதிரடியான கருத்துக்கள் மூலம் தனது அறிவு ஜீவித்தனத்தை காட்டி அனைத்து எழுத்தாளர்களையும் கெக்கலிக்க வைப்பார். இதில் எப்போதும் பலே கில்லாடி...

இருப்பினும் இந்த முதிர்ச்சியான எழுத்தாளர் எப்போதும் சங்பரிவாரத்தின் உற்ற நன்பனாகவே வலம் வருவதைப் பற்றி யாராவது பேசினால், அவருக்கு மன்னாங்கட்டி பட்டம் சூட்டி வீட்டுக்கு அனுப்பும் கலையில் கூட இவர்தான் வல்லவராம்.

இந்த முதிர்ச்சியடைந்த எழுத்தாளரின் எழுத்து வல்லமைக்காக இந்த வருடம் நோபல் பரிசுக் கூட கிடைக்கும் என்று இவரது நன்பர்கள் சொன்னால்.... சீ... சீ.... இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி புல்லரிக்க வைத்து விட்டாராம்...

அவரது சமீபத்திய காமெடி - மன்னிக்கவும் இலக்கிய ஆளுமையை தீராநதி அக்டோபர் மாதம் வெளியான தமிழ் இலக்கியம் ஓர் விவாதம் - உட்கார்ந்து யோசிக்கும்போது கட்டுரையை வாசித்து முடித்தவுடன்.... எனக்கு இப்படித்தான் தோன்றியது. ஐயோ பாவம்... இந்த தமிழகத்தின் புகழ் பெற்ற இலக்கியவாதிக்கு ஏன் இந்த நிலை! இவருக்கு போய் இப்படி ஒரு நிலைமை வரலாமா? என்றே என்னத் தோன்றியது. இந்த இலக்கிய பேதைக்கு பைத்தியம் முத்திவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றியது. இதற்காக யாராவது ஜெயமோகன் மீது வருத்தப்பட்டால் உடனடியாக நல்ல கேரள மாந்தீரிகவாதியிடம் கொண்டுச் சென்று நன்றாக மந்திரித்தால்தான் இவருக்கு இந்த வியாதி தெளியும் என்று தெரிகிறது.

அதிலும் இந்த இலக்கிய வேதாந்திக்கு முன்நவீனத்துவம்தான் பிடிக்கும் என்று அறிந்தபோது உள்ளூர வருந்தாமல் இருக்க முடியுமா? அதனை அப்படி முந்தி... முந்தி... எழுதித்தள்ளியிருக்கிறார்.. இந்த முன்நவீனத்துவ முண்டம்.

இனியும் தெரியாமல் கூட இந்த பேதையின் நாவல்களையோ, படைப்புகளையோ தொடுவதில்லை... என்று முடிவெடுத்து விட்டேன்.... நீங்களும் தொடாமல் இருப்பதுதான் நல்லது.

October 03, 2008

அமெரிக்காவின் பொருளாதார சூதாட்டம்: இலாபம் யாருக்கு?

சிறப்பு கட்டுரை
வே. மீனாட்சிசுந்தரம்
பல நாடுகளில் கிளைகள் அமைத்து செயல்படும் அமெரிக்க நாட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து டாலர் முடக்கத்தால் திவாலாகின. உலகமே பதற எல்லா திக்கிலும் வீசும் புயலாகவும் வெள்ளமாகவும் இந்த திவால் படபடப்பு உருவெடுத்து பல நாட்டு மக்களின் சேமிப்புகளை வாரி எடுத்துச் சென்று விட்டது. (இதனை அமெரிக்கர்கள் பட்டாம் பூச்சி விளைவு என்கின்றனர். இதனை விளக்க சீனாவில் பட்டாம் பூச்சிகள் சிறகடித்தால் அமெரிக்காவில் புயலாகிவிடும் என்ற புது மொழியை சொல்லுகின்றனர்! அதை விட அமெரிக்க பெரு முதலாளிகள் தாயம் உருட்டினால் உலகமே உருளும் என்பதே இந்த விளைவை விளக்கப் பொருந்தும்) உலகளவில் இந்த நிறுவனங்களில் பங்குகளாகவும், இன்சூரன்ஸ் பிரிமியமாகவும் முதலீடு செய்தவர்கள் உள்ளதையும் இழந்து அந்தந்த நாடுகளின் தெருக்களிலே நிறுத்தி விடப்பட்டுள்ளனர்.ஐரோப்பா (பிரிட்டன் உட்பட) மற்றும் ஜப்பான், தென் அமெரிக்க நாடுகளின் அரசுகள் இந்த பாதிப்பிற்கு அமெரிக்க அரசை குற்றம் சாட்டுகின்றனர்.
அரசியல் கலப்பில்லாத பொருளாதார பன்டிதர்களோ மக்களின் பேராசையே இந்த துன்பத்திற்கு காரணம் என்று உளவியல் விளக்கம் தருகின்றனர். நமது பிரதமர் மன்மோகன் சிங் எல்லாம் வல்ல புஷ் காப்பாற்றுவார் என்று கும்பிடுகிறார். நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நிதி அமைச்சர் கண்ணை மூடிக்கொண்டு மார் தட்டுகிறார்! நமது நாட்டில் பணம் காய்க்கும் மரமாக இருக்கும் அவுட் சோர்சிங் துறையில் உடனடியாக பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். பண புழக்கத் துறையில்தான் கொழுத்த சம்பளம் பெறமுடியும் என்று பட்டம் பெற்ற இளவட்டங்கள் காத்திருக்கும் பட்டியலில் தள்ளப்பட்டனர். அந்நிய நிறுவனங்களில் ஏதேனும் ஒருவகையில் (ஹெட்ஜ் பன்ட் உட்பட) நமது பெரு முதலாளிகளும் அரசியல் பெரும் புள்ளிகளும், ஊழல் அதிகாரிகளும் முதலீடு செய்த பணம் எவ்வளவு காணாமல் போனது என்பதை நாம் அறிய முடியாது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் அவர்களும் சொல்ல மாட்டார்கள். நமது இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் பொதுத்துறை வங்கிகளை அந்நிய நிறுவனங்களுக்கு விற்க அரசு முயற்சித்த பொழுது இடதுசாரிகளும் விழிப்புணர்வு பெற்ற ஊழியர்களும் தடுத்ததால் நமது மக்களின் சேமிப்பு ஓரளவு தப்பியது. ஆனால் எதையெடுத்தாலும் முதலீட்டிற்கு டாலரை சார்ந்து நிற்க வைக்கப்பட்டிருக்கும் நமது பொருளாதார உற்பத்தி திறன் வளர்ச்சி வேகம் எவ்வளவு பாதிக்கும் என்பதை நிபுணர்களைத் தவிர மற்றவர்கள் கணக்கிட முடியாது. எனவே தனது அறியாமையை மறைக்க ப. சிதம்பரம் மார்தட்டுகிறார்!
உண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் கடன் நிலுவையும் திவாலும் விளைவே தவிர நெருக்கடிக்கான காரணங்களல்ல! இந்த நெருக்கடி பண முதளைகள் பங்குச் சந்தையில் நடத்தும் மங்காத்தா ஆட்டத்தால் வந்தது. மாயமாக வந்த பணம் மாயமாக போய்விட்டது. போகிற போக்கில் பாமரர்களின் உழைப்பை சுரண்டிவிட்டது. இது சராசரி மனிதனின் பார்வைக்கு அப்பால் நடைபெறுவதால் சுரண்டும் கும்பலால் எளிதில் குழப்ப முடிகிறது. காரணங்களை விளைவுகளாகவும், விளைவுகளை காரணங்களாகவும் சித்தரிப்பதில் வல்ல மேலை நாட்டு மீடியாக்கள் பரபரப்பாக போட்ட கூச்சலென்ன?அமெரிக்க,ஐரோப்பிய, நிதி நிறுவனங்கள் கண்மூடித்தனமாக அமெரிக்க மக்களுக்கு வீட்டுக் கடன் வழங்கின. கடன் வாங்கியவர்கள் தவனை கட்ட தவறினர். வராக் கடன் சுமை பெருகியது. பணம் முடங்கியதால் நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின. சந்தை விளைவால் இதுவே ஊழிக் கூத்தாக ஆகிவிட்டது! பல லட்சம் கோடி ரூபாய்களை இழந்து விஷ சக்கரத்தில் நிதி நிறுவனங்கள் மாட்டிக் கொண்டன! என்றுதானே சத்தம் போட்டன. ஏன் அவர்கள் கடன் கொடுத்தனர் ஏன் இவர்கள் தவனை தவறினர் என்பதை இந்த மீடியாக்கள் கூறாமல் விட்டதின் மூலம் ஒரு உண்மைக்கு திரை போட்டு மறைத்தனர். விலை உயர்வும் வட்டிவீத உயர்வும் தவனை தரத் தள்ளியது என்பதை யாரும் பெரிது படுத்தவில்லை. லட்சக்கனக்காக அமெரிக்கர்கள் வீடுகளை இழந்து விட்டதைப் பற்றி யாரும் மூச்சுவிடவில்லை அதே நேரம் அமெரிக்க பொருளாதாரமே சறுக்கி குழியில் விழுந்து விட்டது என்று மீடியாக்கள் பயமுறுத்தின. ஆபத்பாந்தவன் புஷ் திவாலாகிப்போன நிதி நிறுவனங்களை பல லட்சம் கோடி வழங்கி காப்பாற்றிய பிறகே சில உண்மைகளை வெளியிட முன்வந்தன. மீடியாக்களில் சில புஷ் அமெரிக்காவை சோவியத் யூனியனாக்கி விட்டார் என்று அலறின. ஆனால் நடந்ததென்ன? சராசரி அமெரிக்கனின் வீடுகள் பணம் போல் மாயமாக மறையவில்லை! கடன் கொடுத்த நிறுவனங்களின் அசையா சொத்தாக ஆகிவிட்டன. அதே நேரம் நிறுவனங்கள் இழந்த டாலரை அரசே கொடுத்து விட்டது. அதாவது புஷ்ஷின் நடவடிக்கையால் சராசரி மனிதனின் சொத்து கடன் கொடுத்த நிறுனங்களின் சொத்தாக ஆக்கப்பட்டன. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொடுத்ததால் அமெரிக்க மக்களின் கோபம் தன் மீது பாயாமல் இருக்க டால திரட்ட வரிகளை போடாமல் புஷ் செய்ததென்ன? டாலர் தாளை அச்சடித்ததோடு கடன் பத்திரங்களையும் அச்சடித்து டாலருக்கு ஏங்கும் நாடுகளின் தலையில் கட்டிவிட்டார். அதாவது நிறுவனங்களின் வராக்கடனை வட்டியும் முதலுமாக நம்மை தவனை முறையில் கொடுக்கவைத்து விட்டார். இதுவே வால் ஸ்டீரீட் சோசலிசம் என்று பிரபலமானது!!இதிலிருந்து நாம் காண்பதென்ன?அமெரிக்காவிடம் டாலர் நோட்டுக்களை அச்சடிக்கும் எந்திரமும், அந்நிய செலவானிக்கு டாலரை நம்பி நிற்கும் ஏழை நாடுகளும் இருக்கிறவரை எந்த புயலையும் அமெரிக்கா சமாளிக்கும்!!!
பங்குச்சந்தை சூதாட்டம் மூலம் சுரண்டல்
இன்று உலகமயத்தால் முக்கியமாக நடப்பதென்ன? உலகளவில் பங்குச் சந்தைகள் மூலம் பணத்தையும் அதனுடைய டூப்பிளிகேட்டுகளையும் வைத்து நடக்கும் கொடுக்கல் வாங்கல் சூதாட்டங்களே. உலகளவில் சரக்குகளும் மனிதர்களும் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி போக வர இருக்கிற தடைகள் வரம்புகள் ஏராளம் உள்ளன. பணத்திற்கு அவ்வளவு தடைகள் இல்லை! இதனைத்தான் தாராள மயமாக்கல் என்கிறோம். பணமென்பதென்ன? ஒரு சமூகத்தின் உழைப்பு சக்தியும், அதனால் உருவாக்கப்படும் சரக்குகளும் பணவடிவம் பெறுகின்றன. முன்னொரு காலத்தில் தங்கமே பணமாக இருந்தது. பின்னர் அதனை ஸ்ட்டாக் வைத்து அரசு தாள்பணம் வெளியிட்டது. அதாவது பணத்தை தாள்வடிவில் டூப்பிளிகேட் செய்தது. இப்பொழுது அந்த டூப்பிளி கேட்டிற்கு பல டூப்பிளி கேட்டுக்களை பணச்சந்தை உருவாக்கிவிட்டது. அதனை பங்கு பத்திரம், கடன் பத்திரம், பியூட்ச்சர்ஸ், ஆப்சன்ஸ் ஸ்வாப்ஸ் என்று ஒரு டசனுக்கு மேல் டூப்பிளிகேட்டுகள் இன்றைய தேதியில் உள்ளன. இதனை நிதிக் கருவிகள் (பினான்சியல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்) என்கின்றனர். இந்த டூப்பிளிகேட்டுகளை வாங்கி விற்று லாபம் சம்பாதிப்பது என்பதை பந்தய விளையாட்டாக பணம் படைத்தவர்கள் ஆக்கியுள்ளனர். மஹா பாரதத்தில் தருமருக்கு பணயம் வைக்க ஏதும் கிடைக்காமல் மனைவியை பணயம் வைத்திழந்தது போல் சங்கடங்கள் இவர்களுக்கு இல்லை! குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்றுத்தான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை நட்டத்திலும், லாபம் சம்பாதிக்கலாம். விலைகள் ஏறும் பொழுதும் சம்பாதிக்கலாம், விலைகள் விழும் பொழுதும் சம்பாதிக்கலாம். சொந்த பங்குகளையே விற்றும் வாங்கியும் லாபம் சம்பாதிக்கலாம். இன்னொருத்தர் பங்குகளை வாடகைக்கு எடுத்தும் லாபம் சம்பாதிக்கலாம். ஒரு உதாரணம் கூறினால் இது விளங்கும்.
அப்பாவிசாமி தனது சேமிப்பை முதலீடு செய்து அலையன்ஸ் நிறுவனத்தின் நூறு பங்குகளை வாங்குகிறார். உல்ட்டாசாமி அவரிடம் வாடகை தருவதாக கூறி மூன்று மாதத்திற்கு வாடகைக்கு அந்த பாங்குகளை வாங்குகிறார். பங்கு விலைகள் ஏறுமுகமாக இருக்கிற நேரத்தில் அந்த பங்குகளை ஆறுசாமிக்கு ஆயிரம் ரூபாயிக்கு விற்கிறார். மூன்றாவது மாதத்தில் அன்றய நிலவர விலை கொடுத்து வாங்குவதாக உள்ட்டாசாமி ஒப்பந்தம் போட்டே விற்கிறார். ஆறுசாமியும் தனக்கு சாதகமாக பங்கு விலை உயரும் என்று எதிர்பார்த்து பங்குகளை ஆயிரம் கொடுத்து வாங்குகிறார். ஆனால் மூன்றாவது மாதத்தில் பங்குவிலை சரிந்தது. ஆயிரம் கொடுத்து வாங்கிய பங்குகளை விற்ற உல்ட்டாசாமிக்கு 800 ரூபாய்க்கு கொடுக்கிறார். உல்ட்டா சாமிக்கு 200 ரூபாய் லாபம் கிடைக்கிறது. வாடகைக்கு வாங்கிய பங்குகளை திருப்பி கொடுக்கிறார். 200 ரூபாய் சம்பாத்தியத்தில் வாடகை போக மீதியை உள்ட்டாசாமி சுருட்டுகிறார். ஒரு வேளை பங்கு விலை உயர்ந்து இருந்திருந்தால் உள்ட்டா சாமிக்கு நட்ட மேற்பட்டிருக்கும். இதில் உள்ள உள்குத்து என்னவெனில் இருவருமே அப்பாவி சாமியின் பங்கை காட்டி நிதி நிறுவனங்களிடம் குறுகிய காலகடனை வாங்கியே விளையாடுவர். ஓரே பொருளை பலர் காட்டி கடன் வாங்குகிற பொழுது நிதி நிறுவனங்களே இழப்பை தாங்க வேண்டும்.
இது புயலாகிற பொழுது அரசு தலையிடுகிறது. அதன் மூலம் சொத்துக்கள் பணக்கார நிறுவனங்களின் கைக்கு மாற்றப்படுகிறது. பணத்தின் டூப்பிளிகேட்டுக்களை வைத்து நடக்கும் இந்த சூதாடட்டங்கள் உலகளவில் நடக்கிற பொழுது நிகழ்வதென்ன? அந்நிய செலவானிக்கு பணக்கார நாடுகளின் நாணயங்களை ஏழை நாடுகள் சார்ந்து இருக்கிற வரை பங்குச் சந்தை வினைகளால் உருவாகும் இத்தகைய வாந்தி பேதி சுரண்டலை அணுபவித்தே ஆக வேண்டும்.
டாலரை பகவானாக கருதி கை யேந்தும் பிச்சைகார அரசியல் தலைவர்கள் ஆளுகிற வரை நமது வறுமை வேலை இன்மை மின்சார பஞ்சம் அகலாது. டாலர் பகவானே வெள்ளத்தில் அடித்துச் செல்லுகிற பொழுது அவர் எங்கே நம்மை காக்க கை நீட்டப் போகிறார்! நாட்டுப் பற்றுள்ள அரசியல் தலைவர்களும் பொது அறிவு படைத்த பொருளாதார நிபுனர்களும் கூறுவதென்ன? நம்மை கட்டையாக்கி டாலர் பகவான் தப்பி விடுவார்! சிலரை சீக்கிரமாக பணக்காரர்களாக ஆக்க ஆசைப்பட்டு பூங்கா அமைக்க கூட அவாளிடம் கடன் வாங்கும் கொள்கையை உடைய அரசியல் கட்சிகளின் கூட்டு ஆளுகிறவரையில் மீட்சி இல்லை. சுய சார்பை நிறுவும் அரசை அமைப்போம். நமது கையையும், காலையும், மூளையையும் நம்புவோம். கரை சேர அதுதான் வழி என்கின்றனர். அந்தந்த நாட்டு மக்களின் வர்க்கப் போராட்டம் பொருளாதார உறவுகளை மாற்றி அமைக்கும் சர்வதேச இயக்கமாவது அவசியம் என்பதையே இந்த டாலர் நெருக்கடி உணர்த்துகிறது

October 02, 2008

அண்ணா நூற்றாண்டுக்கு அனுமதி மறுப்பா?




பேரரறிர் அண்ணாவின் நூற்றாண்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் பெரியார் - அண்ணாவின் முற்போக்கு கருத்துக்கள் வெகு மக்களிடம் கொண்டுச் செல்லப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரசை மூட்டை முடிச்சுகளோடு ஓட விட்டவர் அண்ணா. 1967க்குப் பின் காங்கிரசால் தமிழகத்தில் கால் வைக்க முடியவில்லை. தற்போது எப்படியாவது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையின் மூலம் மீண்டும் தங்களை தமிழக ஆட்சியின் பங்காளிகளாக மாற்ற முனைந்துக் கொண்டிருக்கின்றனர். இருக்கட்டும்.

அண்ணாவின் ஆரிய மாயை - இந்துத்துவ சக்திகளுக்கு இன்றும் ஒரு சவால், அதே போல் அவரது செவ்வாழை சிறுகதை நிலப்பிரபுத்துவ கோரத்தை எளிய மக்களிடம் கொண்டுச் சென்ற இலக்கிய ஆயுதம். மதவாதிகள் - குறிப்பாக இந்துத்துவ சங்பரிவாரத்தை தனது இறுதிக்காலம் வரை சமரசம் இன்றி தோலுரித்தவர் அண்ணா.

இன்றைக்கு அதே அண்ணாவின் தம்பியின் ஆட்சியில் அண்ணா நூற்றாண்டை சிந்தாதரிப்பேட்டையில் கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவையில் சீமான் கலந்து கொண்ட கூட்டத்தில் தாக்குதல் தொடுத்த இந்துத்துவவாதிகளை கண்டித்து சிந்தாதரிப்பேட்டையில் கூட்டம் நடத்துவதற்கு சிந்தாதரிப்பேட்டை காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டதாம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர். அதற்கு அவர்கள் எழுத்து மூலமாக சொல்லப்பட்ட காரணம்தான் வேடிக்கையானது.

இங்கே இராமகோபாலன் தங்கியிருக்கிறார். மேலும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகமும் இங்கேதான் இருக்கிறது. எனவே கூட்டத்திற்கு அனுமதியில்லை என்று கூறப்பட்டதும்.

இதனையடுத்து அதே அமைப்பின் சார்பில் அண்ணா நூற்றாண்டு கொண்டாடுவதற்கும் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டதும். அப்போதும் மேற்கண்ட அதே சுலோகத்தை அச்சரம் பிசகாமல் சொல்லியிருக்கிறது காவல்துறை.

இராமகோபாலன் தங்கியிருப்பதாலும் - ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் இருப்பதாலும் அனுமதியில்லை என்று சொல்லுவதுதான் வேடிக்கையானது - வேதனையானது.

யார் எங்கிருந்தாலும் உரிய பாதுகாப்பு கொடுத்து கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டிய காவல்துறையே இப்படி கூறினால், இனி அவர்கள் எங்குபோய் அனுமதி கேட்பார்கள். ஒருவேளை அத்வானியும் - வாஜ்பாயும் இந்தியாவில் உள்ளூரில் இருப்பதால் பா.ஜ.க.கவுக்கு எதிராக யாரும் பேசக் கூடாது, யாரும் கூட்டம் போடக் கூடாது என்று சொன்னால் எப்படியிருக்குமோ? அதுபோலத்தான் இருக்கிறது.

அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்,  ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சிமுறை மட்டுமன்று, அது ஒரு வாழ்கை நெறி என்று மக்களுக்கு அறிவுறுத்தி ஜனநாயகம் பேசியவர். கடைப்பிடித்தவர். ஆனால், ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் இந்த காவிக் கும்பலுக்காக ஜனநாயகம் பலியிடப்படுகிறது அண்ணாவின் தம்பியாட்சியில்.