September 30, 2008

தி.மு.க.வின் அரசியல் அனானி சுப.வீ.


பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமிழக அரசியல் கட்சிகளால் மட்டுமல்ல அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் ஒரு பண்பாளர். தமிழ் மற்றும் முற்போக்கு சிந்தனைகளை சமூகத்தில் பரப்பி வருவதில் அவரது பங்கு அனைவராலும் போற்றப்படுகிறது.
பேராசிரியர் சுப.வீ. அவர்களின் இன்றைய பணி. தி.மு.க.வின் - கருணாநிதியின் கொள்கைப் பரப்பும் செயலாளராக மாறிவிட்டதுதான். தமிழகம் முழுவதும் நடைபெறும் தி.மு.க. கூட்டங்களில் சுப.வீ. முக்கிய பேச்சாளராக மாறிவிட்டார். இது குறித்து அவரிடம் கேட்டால் அண்ணா நூற்றாண்டு கூட்டம். அதனால் கலந்து கொள்கிறேன் என்று சப்பைக் கட்டு கட்டுவார். அண்ணா நூற்றாண்டுக்காக அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் யாரும் இதனை பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் ஊருக்கு ஊர் தி.மு.க. அரசியல் மேடைகளில் சுப.வீ. காட்சியளிப்பதும்... அந்த இடங்களில் இவர் பேசும் அரசியலும்தான் நம்மை கேள்விக்கு உள்ளாக்கி தூண்டுகிறது.
குறிப்பாக திருவொற்றியூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகிறார். பெரியாரும் - அண்ணாவும் அரும்பாடுபட்டு இந்த சமூகத்தை முன்னேற்றினர் இதற்காக ஏராளமான தியாங்கள் செய்தனர். அவர்களது கொள்கைகளை கருணாநிதி இன்று வரை கட்டிக்காத்து வருகிறார்... ஆனால் இன்றைக்கு யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். விஜயகாந்த முதல் வடிவேலு வரை ஏன் நமீதா கூட வரலாம்... என்று தி.மு.க. பேச்சாளர்களுக்கு எள்ளவும் குறையாத அளவில் குஷீயாக பேசினார்.
இங்கே நமது கேள்வி என்ன? பெரியாரும் - அண்ணாவும் வளர்த்தெடுத்த திராவிட கொள்கைகள் மக்களிடம் இன்றைக்கு செல்வாக்கிழந்து ஏன் விஜயகாந்திடமும் - வடிவேலுவிடமும் - நமீதாவிடமும் சரணடைந்தது என்று இந்த பேராசிரியர் விளக்க வேண்டாமா? அது குறித்து ஆய்வு நடத்த வேண்டாமா? திராவிட இயக்க கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டு - தங்கள் குடும்பத்தை மட்டுமே வளர்த்துக் கொண்டவர்கல்லவா தி.மு.க.வினர்.
அது மட்டுமா? 1967 இல் அண்ணா காங்கிரசை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று கூறினார். காங்கிரசை தமிழகத்தில் அரசியல் ரீதியாக விரட்டியடித்தவர் அண்ணா. ஆனால் இன்று நிலைமை என்ன? தி.மு.க.தானே அந்த மூழ்கும் கப்பலை கரையேற்றிக் கொண்டிருக்கிறது. தோளில் தூக்கி காவடி சுமந்து வருகிறது.
தி.மு.க. காங்கிரசை மட்டுமா சுமந்தது? பா.ஜ.க.வையும்தானே! இவைகள் எல்லாம் அண்ணா நூற்றாண்டில் பரிசீலிக்க வேண்டாமா? அடுத்து அவர் கூறுகிறார். பெரியார் கடவுளின் எதிரி என்பது போல் சித்தரித்து விட்டார்கள். அவரது மற்ற கொள்கைகளை பேசுவது கிடையாது என்று அதே மேடையில் கூறினார். யார் பெரியாரை அவ்வாறு சித்தரித்தார்கள் என்று விளக்க வேண்டாமா? ஒரு வேளை பெரியாரின் கடவுள் மறுப்பு சித்தாந்தத்திலிருந்து விலகி, ஒன்றே ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று அண்ணா முழங்கினாரே அந்த விலகல் சரியானது என்கிறாரா? இந்த பேராசிரியர்.
மேலும் போகிற போக்கில் தி.மு.க. தொண்டர்களுக்கு கிக் ஏற்றும் வகையில் வடிவேலுவின் கட்சி ஆரம்பித்தால் அவர்களுடன் கூட இடதுசாரி கட்சிகள் உறவு வைத்துக் கொள்வார்கள்... என்று கிண்டல் வேறு.
கேள்வி என்ன? தி.மு.க.வுடன் இடதுசாரி கட்சிகள் கூட்டு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லவில்லையே! இந்த தேசத்திற்கு பெரும் ஆபத்தாக உள்ள அணு சக்தி ஒப்பந்தத்தை மத்திய காங்கிரஸ் நிறைவேற்றத் துணிந்தபோது அதற்கு துணை போக வேண்டாம் என்று தி.மு.க.வை இடதுசாரிகள் எச்சரித்தார்கள். ஆனால் எப்போதும் அவர்களுக்கு கொள்கை என்ற கோமணம் (பதவி)தான் பெரியது என்றால் அதனை விடாமல் பிடித்துக் கொள்ள இன்றும் உறவைத் தொடர்கிறார்கள். எனவேதான் இந்த நிலையில் காங்கிரஸ் - பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துக் கொள்ளாத கட்சிகளுடன் ஒரு மூன்றாவது மாற்றை அமைப்போம் என்று நாடு முழுவதும் அதற்காக முயற்சி எடுத்து வருகிறார்கள் இடதுசாரித் தலைவர்கள். இந்நிலையில், சுப.வீ. அணு சக்தி ஒப்பந்தம் பற்றி அறியாதவரா? இதில் அவரது நிலை என்ன? தி.மு.க.வின் நிலையோடு ஒத்து ஊதுகிறாரா? அல்லது மேடை கிடைத்து விட்டால் போதும் கொள்கை கோமணத்தை அப்புறம் சரி செய்து கொள்ளலாம் என்று சிந்திக்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
மொத்தத்தில் சுப.வீ.யின் சொந்த கட்சிக்கு தெருமுனைக் கூட்டம் நடத்துவதற்கு கூட ஆள் கிடைக்காத நிலையில் பாவம் அவர் என்ன செய்வார். தி.மு.க.வின் அரசியல் அனானியாக மாறுவதைத் தவிர!

29 comments:

Anonymous said...

'இந்த தேசத்திற்கு பெரும் ஆபத்தாக உள்ள அணு சக்தி ஒப்பந்தத்தை மத்திய காங்கிரஸ் நிறைவேற்றத் துணிந்தபோது அதற்கு துணை போக வேண்டாம் என்று தி.மு.க.வை இடதுசாரிகள் எச்சரித்தார்கள்.'

இந்த ஒப்பந்ததை எதிர்த்தால் அவர்கள் யாரானாலும் சேர்கிறோம்
என்று சொல்கிறார்கள் இடதுசாரிகள்.
மாயாவதி, சந்திரபாபு நாயுடு போன்ற
'சோசலிசவாதி'களுடன் சேருகிறார்கள்.அந்த ஒப்பந்தத்தை எதிர்த்திருந்தால் திமுக என்ன செய்தாலும் பரவாயில்லை என்று இருந்திருப்பார்கள்.ஆனால் திமுகவிற்கு பதவிதான் முக்கியம்.
எனவே இடதுகளைப் பற்றி கவலைப்படவில்லை. அதனால் என்ன எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் இடதுசாரிகள் திமுகவை ஆதரிப்பார்கள் என்பது
எங்களுக்கும் தெரியும்.அப்போது
ஏன் அன்று அணுசக்தி ஒப்பந்ததை
ஆதரித்தீர்கள் என்று கேட்டு தொல்லை
தரமாட்டார்கள்.அன்றை மறப்போம், இன்று ஆதரவு தருவோம் என்பதே இடதுகளின் அறிவிக்கப்படாத கொள்கை.நேற்று முளைத்த விஜயகாந்தா, இல்லை
ஜெயலலிதாவா என்று கூட்டணிக்கு
யோசிக்கிறீர்கள். தமிழ் நாட்டில் இடதுகளால் இன்னும் 10% வாக்குகளைக் கூட
பெற முடியவில்லை என்பது வெட்கக்கேடு.

Anonymous said...

ஜெலூசில் சாப்பிட்டா இந்தப் பிரச்சினை உடனே தீரும் ட்ரை பன்னுங்க தோழரே

இம்பூட்டு பேசறீங்களே.. இங்கே நீங்க ஏன் மன்னக் கவ்வினீங்கன்னு விம் பார் போட்டு கொஞ்சம் வெளக்கக் கூடாதா?

திராவிட அரசியல் இங்கே வலுவா இருக்கரதாலே தான் வி.காண்டு கட்சில அவரு மட்டும் தேறினார்.. திராவிட அரசியல் இருக்கரதாலே தான் நான் கூட இங்கே கம்ப்யூட்டர் முன்னே உக்காந்து டைப்பீட்டிருக்கேன். ( இல்லேன்னா செரைக்கத் தான் போயிருக்கனும் - பரம்பரைத் தொழில் ).. திராவிட அரசியல் இருந்ததாலே தான் எங்கைய்யன நாசுவப்பயலேன்னு கூப்பிடாமே “அண்ணே’ன்னு கூப்பிட்டாங்க ( தி.மு.க வட்டம் அவரு)

திராவிட அரசியல் இருக்கதாலே தான் கவர்மெண்டு நிலத்தை வெளிநாட்டானுக்கு கொடுக்க மக்களை சுட்டுக் கொல்லாமே இருக்கு. திராவிட அரசியல் இருக்கதாலே தான் இன்னிக்கு தில்லா கூட்டம் போட்டு நாத்திகப் பிரச்சாரம் பண்ண முடியுது..


போங்க சார் போங்க சார்.. மொதல்லெ வாயிலே வாய்க்கால் வெட்டறத உட்டுப்பிட்டு உருப்படியா எதுனா பாருங்க

நல்லக்கண்ணு டி.ராஜா மாதிரி உங்காளுக கொஞ்ச பேர் நல்லவங்களா இருக்கப் போய் கொஞ்ச நஞ்ச மரியாதை இருக்கு உங்க மேல.. இல்லேன்னா டிப்பாசிட்டு கூட தேறாது

முத்துகுமரன் said...

தோழர்! நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களோடு உரையாடுவதில் மகிழ்ச்சி.அரசியல் அனானி என்று குறிப்பிட்டு இருப்பது நாகரீகமற்றதாகவே தோன்றுகிறது. உங்களின் வார்த்தை உபயோகங்கள் உங்களின் பார்வைக் குறைபாட்டையே தெரிவிக்கிறது. ஓட்டுக் கணக்கையோ, சட்டமன்ற நாடளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறிக்கோளாக கொண்டு இயங்கும் அரசியல் கட்சியை அவர் நடத்தவில்லை. விழிப்புணர்வு இயக்கத்தையே நடத்துகிறார். அவர் நடத்தும் கூட்டங்களுக்கு சென்றிருக்கிறீர்களா? செல்லாதிருப்பின் உங்கள் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றதாகி விடுகிறது.

ஆனால் மதவாத/பொருளாதர கொள்கைக்காக காங்கிரஸ், பாஜகவை எதிர்க்கிறோம் என்று கூறும் இடதுசாரிகள் அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இயங்கும் ஜெ.அதிமுக/ விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்க கூடும் என்ற திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளை என்னவென்று சொல்வீர்கள். யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று தப்பித்து கொள்ள வேண்டாம். உரையாடல் என்று வந்த பின்பு வெளிப்படையாக இருப்பதே சிந்திப்பவர்களுக்கு முறையாக இருக்கும்.

ஆம்! பெரியார் கடவுள் எதிர்ப்பாளர் அல்ல. அவர் வேத மறுப்பு/எதிர்ப்பாளர். தெரிந்தோ தெரியாமலோ திராவிட சிந்தனையாளர்களும் பெரியாரை கடவுள் எதிர்ப்பாளர் என்ற வட்டத்திற்குள் சுருக்குவது உண்மையிலே வருந்ததக்க ஒன்றுதான். அதை ஆதிக்க சக்திகள் மிகத் தெளிவாக தங்கள் ஊடகங்களின் மூலமாக நிலைநிறுத்துவதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இருக்கும் ஒரே தகுதி முற்றிலுமாக பெரியார்/அண்ணாவின் கொள்கைகளை கை கழுவி விடாமல் ஊறுகாய் அளவிற்காவது வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே. அவரது சறுக்கல்கள் துரோகத்திற்கு ஒப்பானதும் கூட. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும் கலைஞர் முழுமையாக திராவிட சிந்தனையை கைவிடாது இருப்பதே அவரை சிறிதளவிலேனும் மதிப்பதற்கு காரணமாகும். எதிரிகளிடம் விலை போவதை விட தன் தளம் சார்ந்த இடத்திற்காக அவமானங்களை ஏற்றுக் கொள்வது சரியான ஒன்றுதான். சுப.வீ யின் திமுக ஆதரவு நிலைப்பாடு அத்தகைய ஒன்றுதான்.

//பெரியாரும் - அண்ணாவும் வளர்த்தெடுத்த திராவிட கொள்கைகள் மக்களிடம் இன்றைக்கு செல்வாக்கிழந்து ஏன் விஜயகாந்திடமும் - வடிவேலுவிடமும் - நமீதாவிடமும் சரணடைந்தது என்று இந்த பேராசிரியர் விளக்க வேண்டாமா? //
பெரியாரும் - அண்ணா என்ற இடத்தில் மார்க்ஸும், எங்கல்சும் என்றும் திராவிட கொள்கைகள் என்னும் இடத்தில் கம்யூனிசம் என்று போட்டுக் கொண்டால் விஜயகாந்திடம் சரணடைய துடிப்பது யாரென்று தெளிவாகவே புரியும்.

அறிவுப்பூர்வமான விஞ்ஞானபூர்வமான அரசியல் பார்வையை விஜயகாந்தின் மீது செலுத்தி பார்த்திருக்கிறார்களா இடதுசாரிகள்??

கம்யூனிசம் வேதத்திலிருந்து வந்தது என்று சொன்ன தோழர். டாங்கேவின் சறுக்கலையும், குலக்கல்வி திட்ட சட்டம் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்ட போது அது ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றது. அப்போது சட்டசபைக்கு வராது இருந்தவர் அன்றைய சட்டபேரவையின் எதிர்கட்சி தலைவாரன தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் குறித்தும் பேசுவீர்களா??

Anonymous said...

தோழர்!

வி.காந்த் மற்றும் சிரஞ்சீவியிடம் அரசியல் வாழ்வு கேட்டு பிச்சையெடுக்கும் நிலைக்கு போய்விட்ட கம்யூனிஸ்டுகளை விட தரங்கெட்ட நிலைக்கு சுபவீ ஒன்றும் போய்விடவில்லை தோழர்.

சங்கரையா காலத்திலேயே புதைக்குழிக்குள் போகவேண்டிய மார்க்சிஸ்டு வரதராஜன் காலத்தில் போகப்போகிறது.

ஏகலைவன்

Unknown said...

தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் மதிக்கப் படுகிற அய்யா சுப.வீ. அவர்கள் தன்னையும் தன் குடும்பத்தினையும் தவிர வேறு யாரையும் தன் வேர்களுக்கு உரமாக மட்டுமே மாற்றி வளர்ந்து வரும் கலைஞரின் காலடியில் வீழ்ந்து வீணாய்போவது வருத்தமளிக்கிறது. ஒருவேளை பொடா வழக்குகளில் இருந்துவிடுபட வைத்தவர் என்ற நன்றி பாரட்டுவதாக இருக்கலாம்.பொடா வழக்குகளில் இருந்து தேர்தல் என்கிற ஒரே காரணத்திற்காக தமிழ் உணர்வாளர்களை பிணையில் வரச் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்து பின்னர் துடைத்துத் தூக்கி எறிந்து விட்டதை மறந்து விட்டார். எந்த காரணங்களுக்காக சிறை சென்று தியாகம் செய்தாரோ அதே காரணத்திற்காக கலைஞரை விட்டு விலக வேண்டிய தருணம் வந்து விட்டது. பதவி சுகத்திற்காக தன் இனம் அழித்தொழிக்கப் படுவது குறித்து மூச்சு கூட விட மறுக்கும் கலைஞரை புறக்கணிக்கவேண்டும்.

சந்திப்பு said...

அனானி நன்பரே நாங்கள் ஒருபோதும் மாயாவதியோ, அல்லது சந்திரபாபு நாயுடுவோ சோசலிஸ்ட்டுகள் என்று கூறியது கிடையாது. இவர்களும் முதலாளித்துவ ஜனநாயகவாதிகள்தான். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப - தங்களது சொந்த வர்க்க நலன் சார்ந்தே இவர்களது அரசியல் நடவடிக்கைகளும் அமையும். இருப்பினும் இந்த நாட்டில் உள்ள இடதுசாரி சக்திகள் வலு குறைந்து உள்ளதால் நாட்டின் நலன் கருதி, ஒரு ஐக்கிய முன்னணி யுத்தியாகவே இந்த சக்திகளோடு இணைகிறோம். நாட்டின் நலன் காத்திடவே. மற்றபடி இந்த தேசத்து மக்கள் எல்லாம் முழுமையான இடதுசாரியாக மாறிய பின்னர்தான் நாங்கள் நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் பற்றி சிந்திப்போம் என்று இருந்தால் அது முட்டைக்குள் இருந்து வராத அழுகிய கருபோன்ற நிலையாகத்தான் இருக்கும்.

நீங்கள் விரும்புவது போல் 10 சதவீதத்திற்கும் மேல் வளர்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இது எங்கள் குறைபாடு அல்ல. நாட்டு மக்களின் அரசியல் முதிர்ச்சியை இன்னும் உயர்த்த வேண்டிய பணி ஜனநாயக சக்திகளுடனும் இணைந்தே இருக்கிறது.

சந்திப்பு said...


திராவிட அரசியல் இருக்கரதாலே தான் நான் கூட இங்கே கம்ப்யூட்டர் முன்னே உக்காந்து டைப்பீட்டிருக்கேன். ( இல்லேன்னா செரைக்கத் தான் போயிருக்கனும் - பரம்பரைத் தொழில் ).. திராவிட அரசியல் இருந்ததாலே தான் எங்கைய்யன நாசுவப்பயலேன்னு கூப்பிடாமே “அண்ணே’ன்னு கூப்பிட்டாங்க ( தி.மு.க வட்டம் அவரு)


திராவிட அரசியல் எதையுமே செய்யவில்லை என்று இங்கே வாதடவில்லை. அது பெரியார் - அண்ணாவுடன் முடிந்து விட்டது. அடுத்து வந்தவர்கள் திராவிட கொள்கைகளை வெறும் பேச்சளவில் மட்டுமே கடைப்பிடிக்கின்றனர் என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. இந்த கொள்கையற்ற திராவிட பேர்வழிகளால்தான் இன்னும் வெகும் தூரம் செல்ல வேண்டியிருந்த தமிழகம் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக்ததில் இன்னும் கூட தீண்டாமை கொடுமை கொடி கட்டி பறக்கிறது. இத்தகைய கொடுமை கேரளத்தில் இல்லை அன்பரே! மேற்குவங்கத்திலும் இல்லை. திரிபுராவிலும் இல்லை. அது மட்டுமல்ல. இன்னும்கூட கோவிலுக்குள்ளே தலித்துகள் நுழைய முடியவில்லை.... பள்ளிகளில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது..... இப்படி ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே செல்லலாம். அண்ணா நூற்றாண்டில் இது குறித்து பரிசீலிப்பது திராவிட இயக்க கொள்கை வேந்தர்களுக்கு நல்லது.

லக்கிலுக் said...

பதிவில் இருக்கும் கருத்துக்கு அப்புறம் பின்னூட்டம் போடுகிறேன். முதலில் பின்னூட்டங்களுக்கு பின்னூட்டம்.

//இந்த நாட்டில் உள்ள இடதுசாரி சக்திகள் வலு குறைந்து உள்ளதால் நாட்டின் நலன் கருதி, ஒரு ஐக்கிய முன்னணி யுத்தியாகவே இந்த சக்திகளோடு இணைகிறோம். நாட்டின் நலன் காத்திடவே. //

அடுத்ததாக பிஜேபியோடும் இணைவதற்கு வாழ்த்துக்கள் சந்திப்பு.


//இந்த கொள்கையற்ற திராவிட பேர்வழிகளால்தான் இன்னும் வெகும் தூரம் செல்ல வேண்டியிருந்த தமிழகம் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. //

அதனால் தான் 80ல் அதிமுக, 89-91ல் திமுக, 96ல் மதிமுக, 2001ல் அதிமுக, 2006ல் திமுக என்று மாறி மாறி குதிரை சவாரி செய்துவருகிறீர்களா தோழர்?


//தமிழக்ததில் இன்னும் கூட தீண்டாமை கொடுமை கொடி கட்டி பறக்கிறது. இத்தகைய கொடுமை கேரளத்தில் இல்லை அன்பரே! மேற்குவங்கத்திலும் இல்லை. திரிபுராவிலும் இல்லை. அது மட்டுமல்ல. இன்னும்கூட கோவிலுக்குள்ளே தலித்துகள் நுழைய முடியவில்லை.... பள்ளிகளில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது..... இப்படி ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே செல்லலாம். அண்ணா நூற்றாண்டில் இது குறித்து பரிசீலிப்பது திராவிட இயக்க கொள்கை வேந்தர்களுக்கு நல்லது.//

தீண்டாமை இந்தியா முழுவதும் தானிருக்கிறது. இன்னமும் ஜாதிப்பெயர்களை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து நிற்கும் கம்யூனிஸ்டுகள் முதலில் திருந்தட்டும். குறைந்தபட்சம் திராவிட கட்சிகளில் இருப்பவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தேவர், நாயுடு என்பதை போட்டுக்கொள்வதையாவது தவிர்த்து வருகிறார்கள்.

சந்திப்பு said...


அரசியல் அனானி என்று குறிப்பிட்டு இருப்பது நாகரீகமற்றதாகவே தோன்றுகிறது. உங்களின் வார்த்தை உபயோகங்கள் உங்களின் பார்வைக் குறைபாட்டையே தெரிவிக்கிறது.


அன்புத் தோழர் முத்துவுக்கு முத்தான வணக்கங்கள்.

தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பொருளில் அந்த வார்த்தை பிரயோகம் இருந்திருக்குமேயானால் நானும் வருந்துகிறேன். என்னுடைய பதிவுகளில் இதுவரை சுப.வீ. அவர்களை எந்த இடத்திலும் குறை கூறியது இல்லை. வீரமணியை பல இடங்களில் விமர்சித்துள்ளேன். நான் அரசியலில் ஈடுபடத் துவங்கிய காலத்தில் பகத்சிங் வாழ்க்கை வரலாறு குறித்த சுப.வீ. அவர்களின் நெருப்பான எழுத்துதான் என்னை இன்னும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. நான் மதிக்கக்கூடிய தமிழக தலைவர்களில் சுப.வீ.யும் ஒருவர்தான். தமிழகத்தில் ஒரு பாசிட்டிவான கருத்துருவாக்கத்தில் அவரது பங்களிப்பும் முக்கியமானதே. இருப்பினும் தற்போது தொடர்ந்து தி.மு.க. மேடைகளில் அவர் காட்சியளிப்பதும் அங்கே அவர் பேசும் அரசியலும்தான் அந்த விமர்சனத்தை நோக்கி என்னைத் தள்ளியது. சுப.வீ. போன்றவர்கள் திராவிட இயக்கத்தின் சாதனைகனையும் - வேதனைகளையும் - செல்ல வேண்டிய தூரத்தை தமிழக மக்களுக்கு காட்ட வேண்டிய தருனத்தில் தி.மு.க.வின் மேடைகளில் தோன்றுவது ஏன்? என்பதே என்னுடைய அடிப்படை கேள்வி!




ஆனால் மதவாத/பொருளாதர கொள்கைக்காக காங்கிரஸ், பாஜகவை எதிர்க்கிறோம் என்று கூறும் இடதுசாரிகள் அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இயங்கும் ஜெ.அதிமுக/ விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்க கூடும் என்ற திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளை என்னவென்று சொல்வீர்கள். யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று தப்பித்து கொள்ள வேண்டாம். உரையாடல் என்று வந்த பின்பு வெளிப்படையாக இருப்பதே சிந்திப்பவர்களுக்கு முறையாக இருக்கும்.



தமிழக அரசியல் கடந்த 20 ஆண்டு காலமாக துர்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. புதிது புதிதாக உருவெடுக்கக் கூடிய கட்சிகளும் குறைந்த பட்ச கொள்கையோடு - மாற்றுச் சிந்தனையோடு உருவாவதும் இல்லை. அப்படியே உருவெடுத்த கட்சிகள் நடைமுறையில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக மாறிப்போன கதையும் நமக்குத் தெரியும்.

1. திரு. வைகோ அவர்கள் மதிமுகவை துவக்கிபோது தமிழின மீட்சி - பெரியார் - அண்ணா கொள்கைகளை மீட்டு புது திசையில் பணிக்கப்போவதாக கட்சியைத் துவக்கினார். பெருந்திரளான மக்கள் அவர் பக்கம் அந்த நேரத்தில் நின்றனர். தி.மு.க. இரு கூறாக பிரிந்தது. அந்த நேரத்தில் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க ம.தி.மு.க.வை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு சி.பி.எம். முயற்சி எடுத்தது மதிமுக + பா.ம.க + சி.பி.ஐ. + சி.பி.எம். என்று கூட்டணி அமைக்க!

ஆனால் தங்களுக்குள் யார் பெரியவர்கள் என்ற மோதலில் பா.ம.க. - மதிமுக கூட்டு ஏற்படவில்லை. இருப்பினும் கொள்கையளவில் மதிமுகவோடு (அந்த நேரத்தில் இலங்கைப் பிரச்சினையில் அவரது பேச்சு எங்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்) கூட்டணி அமைத்தோம். இருப்பினும் சி.பி.எம். ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. மதிமுக போட்டியிட்ட அனைத்து இடத்திலும் தோல்வியடைந்தது. பின்னர் பா.ஜ.க.வோடுகூட கூட்டு சேர்ந்தது.

அடுத்து எந்த தி.மு.க.வை எதிர்த்து மதிமுக வெளியே வந்ததோ அதே திமுகவோடு இணைந்தது. பின்னர் ஜெயலலிதாவுடன் முதலில் இணைந்தவர் வைகோ... இன்றைக்கு பொடாவில் கைதுக்குப் பிறகு அதிமுகவின் அதிகாரப்பூர்வமற் பொதுச் செயலாளராக இன்று வைகோதான் உள்ளார்.

2. பா.ம.க.வைப் பொறுத்தவரை அதன் ஜாதிய அடையாளத்தை தாண்டி தமிழர் அடையாளத்தோடு நிற்க பல முயற்சிகள் எடுத்தாலும் - நடைமுறையில் கொள்கை சார்ந்த மக்கள் பிரச்சினைகள் சார்ந்த அரசியல் என்பதற்கு மாறாக தன் கட்சி வளர்ச்சிக்காக யாருடனும் கூட்டு என்ற கொள்கை நிலைபாடும்... மக்களுக்கு சம்பந்தமில்லாத மது போன்ற விசயங்களில் கவனத்தை திசை திருப்புவதும் நடந்து கொண்டே இருக்கிறது. இவர்களும் காங்கிரசை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை. பா.ஜ.க.வோடும் கூட்டுச் சேர்ந்தது.

3. திருமாவளவன் போன்றவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக நம்பிக்கை ஊட்டும் நிலையில் இருந்தாலும் - இடதுசாரிகள் பக்கம் நிற்பதற்கு தயாராக இருப்பதில்லை. அவர்கள் தி.மு.க. - அல்லது அதிமுக பக்கம் நிற்கவே விரும்புகின்றனர்.

4. தி.மு.க. பல்வேறு கட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் - பேச்சுக்கும் - செயலுக்கும் வித்தியாசம் உள்ளது. மேலும் இன்றைக்கு தி.மு.க. வெறும் குடும்பத்து கட்சியாக சுருங்கி விட்டது....

5. அதிமுகவைப் பொறுத்தவரை அது ஒன்உமன் ஆர்மிதான். ஆனால் அந்தக் கட்சிக்கு பின்னால் திரண்டிக்கக்கூடிய தொண்டர்கள் அற்புதமானவர்கள் இன்றைக்கும் எம்.ஜீ.ஆர். விசுவாசிகள்... இந்த மக்கள்திரள் தான் நமக்கு முக்கியமானது.

கடைசியாக பரிசீலிக்கும் போது, மாற்றுக்கான முயற்சிகள் இடதுசாரிகளால் பல முனையில் எடுக்கப்பட்டாலும் அதற்கு தற்போது உரிய பலன் இல்லாத நிலையில் - அகில இந்திய அளவில் எடுத்துள்ள பா.ஜ.க. - காங்கிரஸ் அல்லாத அணியை அமைக்க வேண்டிய நிலையில் - அந்தரத்தில் கூடு கட்ட முடியாது. அது மக்கள் எங்கு உள்ளார்களோ - வாக்காளர்கள் எங்கு உள்ளார்களோ - மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மக்கள் திரளை இந்த கொள்கைபயின் பின் திரட்டுவதற்கு தே.மு.தி.மு.க.வுடன் பேசுகிறோம். - அதிமுகவுடன் இதுவரை சி.பி.எம். பேசவில்லை.... அதற்காக அது புறக்கணிக்கக்கூடிய சக்தியும் அல்ல. எனவே விஜயகாந்தாக இருந்தாலலும் - ஜெயலலிதாவாக இருந்தாலும் மேற்கண்ட நிலைபாட்டோடு வந்தால்தான் கூட்டு. இல்லையென்றால் நிச்சயமாக சந்தர்ப்பவாத நிலையை ஒருபோதும் நாங்கள் எடுக்க மாட்டோம்.

மேலும் பெரும் மக்கள் திரண்டிருக்கக்கூடியவர்களை பா.ஜ.க. பக்கம் தள்ளி விடுவது யாருக்கு உதவும்? இப்போதே நாடு முழுவதும் கிறித்துவர்களை தாக்கும் சங்பரிவாரக் கூட்டம் - சற்று வலு கூடினால் என்ன ஆகும்? என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். யார் பெரியவர்? யார் தூய்மையானவர் என்று பார்க்க முடியாது? அங்கே உள்ள மக்கள்தான் முதன்மையானவர்கள்.


எனினும் கலைஞர் முழுமையாக திராவிட சிந்தனையை கைவிடாது இருப்பதே அவரை சிறிதளவிலேனும் மதிப்பதற்கு காரணமாகும்.


பரிசீலனைக்கு உரியது!

மற்ற சில கேள்விகளுக்கு நாளை பதிலளிக்கிறேன். நன்றி தோழர்...

சந்திப்பு said...


சங்கரையா காலத்திலேயே புதைக்குழிக்குள் போகவேண்டிய மார்க்சிஸ்டு வரதராஜன் காலத்தில் போகப்போகிறது.


அன்பு நன்பரே நீங்கள் ஏகலைவனா? அல்லது ஏவப்பட்ட கலைவனா என்பது உங்களுக்கே வெளிச்சம்.

நீங்கள் குறிப்பிட்டதுபோல் அல்ல நன்பரே எங்களது இயக்க நடவடிக்கைகளையும் - அரசியல் செல்வாக்கும் - வெகுஜன அமைப்புகளின் வளர்ச்சியும் - கட்சி உறுப்பினர் வளர்ச்சியும் உரிய அளவில் உயர்ந்தே வருகிறது. மேலும் சாதாரண அடித்தட்டு மக்கள் இயக்கங்கள் இன்றைக்கு சி.பி.எம்-யை நம்பிக்கையோடு அணுகுகிறது. எனவே இதைப்பற்றியெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டு நீங்கள் தூக்கம் இல்லாமல் இருக்க வேண்டாம்.

சந்திப்பு said...

அன்புள்ள லக்கி வணக்கம்.


அடுத்ததாக பிஜேபியோடும் இணைவதற்கு வாழ்த்துக்கள் சந்திப்பு.


திராவிட சித்தாந்தவாதிகள் பா.ஜ.க.வோடு கரைந்து போன பின்பு அதன் கரைகளை கழுவிக் கொள்ள சி.பி.எம்.மும் அப்படி இணைந்தால் நல்லது என்று எதிர்பார்ப்பது இயல்புதான். (அபத்தம்)

அதனால் தான் 80ல் அதிமுக, 89-91ல் திமுக, 96ல் மதிமுக, 2001ல் அதிமுக, 2006ல் திமுக என்று மாறி மாறி குதிரை சவாரி செய்துவருகிறீர்களா தோழர்?


மேற்கண்ட வருடங்களில் தி.மு.க.வும் - அதிமுகவும் எப்போதெல்லாம் மக்கள் விரோத பாதையில் சென்றதே. அப்போதெல்லாம் நாங்கள் அவர்களுடன் இருந்து விலகி இருந்தோம். எனவே மேற்கண்ட விவரம் சரியானதுதான். அப்போதெல்லாம் உங்களது திராவிட இயக்கம் மக்கள் விரோத கட்சியாக இருந்ததே அதற்கு காரணம். இப்போதும் அதுதான் நிலை. ஆனால் இந்தக் காலத்தில் சி.பி.எம். ஆதரித்தவர்கள் வெற்றி பெற்றார்கள். மதிமுகவுடன் இருந்த காலத்தை தவிர.



தீண்டாமை இந்தியா முழுவதும் தானிருக்கிறது. இன்னமும் ஜாதிப்பெயர்களை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து நிற்கும் கம்யூனிஸ்டுகள் முதலில் திருந்தட்டும். குறைந்தபட்சம் திராவிட கட்சிகளில் இருப்பவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தேவர், நாயுடு என்பதை போட்டுக்கொள்வதையாவது தவிர்த்து வருகிறார்கள்.


லக்கி... இப்படி பொதுவாக பேசலாமா? பெரியார் - அண்ணா சென்ற வழியில் ஒழுங்காக செல்லாததால்தான் தமிழகத்தில் தீண்டாமை உச்சத்தில் இருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் மாநிலத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அது இங்கே விவாதமே அல்ல. அங்கும் ஒழிக்கப்பட வேண்டும். பா.ஜ.க. இந்த நாட்டில் வளர துணை புரிபவர்கள் இருக்கும் வரை இந்த தீண்டாமை ஒழியுமா? அதற்கு துணை போனவர்கள் யார்? அதனை அழிக்க உறுதி பூண்டிருப்பவர்கள் யார்? என்பதை சற்று சீர் தூக்கி பார்க்கவும் லக்கி. தாங்கள் கூறியுள்ளது போல் கம்யூனிஸ்ட்டுகள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.

நன்றி.

Anonymous said...

//இத்தகைய கொடுமை கேரளத்தில் இல்லை மேற்குவங்கத்திலும் இல்லை. திரிபுராவிலும் இல்லை//

லக்கிலுக் சொன்னது போல இங்கேயாவது சாதிப் பெருமை பெயரளவில் ஒழிந்தது.. ஆனால் உங்கள் தலைவர்கள் பெயர்களில்? நம்பூதிரிபாடு என்பது படித்துப் பெற்ற பட்டமா?

இங்கே தீண்டாமை இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் அதனை எதிர்த்துப் போராடுவதால் தான் வெளியே தெரிகிறது.. நீங்கள் சொன்ன மாநிலங்களில் சாதியத்தின் இறுக்கம் கூடுதல் என்பதால் தான் அதனை எதிர்த்து முணுமுணுப்பு கூட எழுவதில்லை..

நான் இங்கே இனைய விவாதங்களில் படித்து புரிந்து கொண்ட வரை சோசலிசத்துக்கு போகும் முன் சனநாயகக் கட்டத்துக்கு சமூகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிகிறது.. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் சனநாயகம் கூடுதல் என்பது என் கணிப்பு. நீங்கள் குறிப்பிட்ட மாநிலங்களில் பழைய பிரபுத்துவ முறை ( உற்பத்தி / கலாச்சார அளவில் ) தமிழகத்தை விட இறுக்கமானது - சரிதானே?

குறைந்த பட்சம் முதலாளித்துவ உற்பத்தி முறையையாவது உங்களால் ஏற்படுத்த முடிந்ததா? நீங்கள் முதலாளித்துவத்தையே மலேசியாவில் இருந்தல்லவா இறக்குமதி செய்கிறீர்கள்.

ஆனால் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவீனத் தொழில் உள்ளூர் அளவில் இருக்கிறது ( அது ஓரளவு சாதிய கட்டுக்குள் இருந்தாலும்) பெருமளவில் கிராமியப் பொருளாதார அடித்தளத்தால் உருவான சாதிய ஆதிக்கத்திற்கு மாற்றுக் கலாச்சாரத்தை ( சமூக மயமான உற்பத்தியின் மூலம்) கொண்டு வந்துள்ளது..

எனக்கு தமிழகம் எதிர் மற்ற மாநிலம் வேறுபட்டை விளக்கத் தெரியவில்லை.. ஆனால் முதலாளித்துவ ஜனநாயக வளர்ச்சிக் கட்டத்தில் தமிழகம் ஆஃப்பாயில்ட் முட்டை என்றால் மற்ற மாநிலங்கள் ( நீங்கள் ஆளும் மாநிலங்கள் உள்ளிட்டு ) இன்னும் பச்சை முட்டை தான். நீங்கள் தாண்ட வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. தமிழகமோ அரை வேக்காட்டு நிலையிலேயே தேங்கிக் கிடக்கிறது

சனநாயகமான பொருளாதார ( அடிக்கட்டுமான!?) பேக்ரவுண்ட் இருந்தது தான் பெரியார் கருத்துக்கள் பற்றிப் படர காரணம் -பெரியாரியம் பற்றிப் படர்ந்தது இந்நிலை மேலும் முன்னேற்றமடைய காரணம். ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

இப்போது கலக்கார தோழராக தெரியும் பெரியார் முன்பு விரோதியாகத் தெரிந்தார் அல்லவா அது நீங்கள் சறுக்கிய முதல் படி! அப்புறம் தலைகுப்புற நீங்கள் விழுந்து கிடக்கும் இடம் கேப்டனின் காலடி!

நீங்கள் இன்றைய நிலையில் தி.மு.கவை எதிர்ப்பது என்பது தத்துவார்த்த ரீதியிலான தற்கொலை முடிவு. ஒருவேளை அம்மாவின் அருளாசியோ கேப்டனின் பரிவோ ( இனைந்து நடத்தும் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் ) கிடைக்கப்பெற்றால் நீங்கள் சில சீட்டுக்கள் வாங்குவீர்கள்.. ஆனால் ஒப்பீட்டளவில் முற்போக்கான தேர்தல் இயக்கமான தி.மு.கவின் வெறுப்பை சம்பாதிக்கக் கூடும்..

கலைஞர் மேல் ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், காங்கிரஸோ / மற்ற மாநில கம்யூனிஸ்டுகளோ யோசிக்கத் தயங்கிய பல முற்போக்கான காரியங்களை செய்யும் துணிச்சல் கொண்டவர்..செய்தும் காட்டியவர். அவரது பிரச்சினை உங்களைப் போன்ற ஓரளவாவது ஒத்த கருத்து கொண்ட இயக்கங்கள் துணை நிற்காதது தான். எம்ஜியார் போன்ற கோமாளிகளை ஏற்றி விட்டது நீங்கள் தானே? ஜெயலலிதா போன்ற அராஜகவாதிக்கு பல்லக்குத் தூக்க நேர்ந்தது உங்களுக்கே அவமானமாகத் தோன்றவில்லையா?

அவர் செய்த மாபெரும் தவறு பி.ஜே.பியோடு சேர்ந்து தொலைத்தது... அவர் வரலாற்றில் அது ஒரு கறையாகவே இருந்து கொண்டிருக்கும்..

தேர்தல் சுயநலம் ( இரு தரப்பிலும் ) இப்படி ஒன்றாக வேலை செய்ய வேண்டிய இயக்கங்களை பிரித்து வைப்பது மொத்தமாக இந்த மாநிலத்துக்கே பின்னடைவு தான். நீங்கள் இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..

Anonymous said...

//. தாங்கள் கூறியுள்ளது போல் கம்யூனிஸ்ட்டுகள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.//

நம்பூதிரிபாட், பானர்ஜி, சாட்டர்ஜி etc.,

பூனூல் கல்யாணம், ”நான் பாப்பான் தாண்டா” ஜெயலலிதா ஸ்டைலில் சொன்னது மே.வ அமைச்சர்

வேத கம்யூனிஸம்!?

Anonymous said...

சுப.வீ அவர்களின் தமிழுணர்வும்,அரசியல் உணர்வும் தமிழ் இளைஞர்களால் நன்கு புரிந்து கொள்ளப் பட வில்லை.அந்தப் புரிதல் மட்டும் இருந்திருந்தால் அவர் எவர் பின்னும் செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
அவரைப் பயன் படுத்த விரும்பியவர்கள் நன்கு பயன் படுத்தி விட்டார்கள்.அவர் பண்படுத்த விரும்புபவர்கள் பல இடங்களிலே சிதறிக் கிடக்கின்றனர்.அவர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே சென்று அவர் பண் படுத்தி வருவ்தால் ஒட்டு மொத்தத் தமிழினத்திற்கு நல்லதே தவிர எந்த இழப்பும் இல்லை.

குழலி / Kuzhali said...

//மக்களுக்கு சம்பந்தமில்லாத மது போன்ற விசயங்களில் கவனத்தை திசை திருப்புவதும் நடந்து கொண்டே இருக்கிறது.
//
உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் சொந்த்தக்காரர்களிலோ எத்தனை பேர் குடியால் செத்து இருக்கிறார்கள்? எங்கள் சொந்தக்காரர்களில் 45, 50 வயதுக்கும் குறைவான இறந்தவர்களில் பெரும்பாண்மையானோர் குடித்து குடித்து வயிறும் நரம்பு மண்டலமும் கெட்டு செத்துப்போனார்கள்... இன்னும் சிலர் சாவுக்கு டிக்கெட் வாங்கி கையில் வைத்துக்கொண்டு இன்றா நாளையா என்று இருக்கிறார்கள் குடித்து குடித்து செல்லரித்துப்போன வயிற்றுடன்...பிறகெப்படி இது மக்கள் பிரச்சினையாக இல்லாமல் போகும்... நிதர்சனத்தை பார்க்காதவர்கள் இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் என்ற என் நம்பிக்கையை மேலும் உறுதிபடுத்தியுள்ளார் சந்திப்பு

Anonymous said...

//உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் சொந்த்தக்காரர்களிலோ எத்தனை பேர் குடியால் செத்து இருக்கிறார்கள்? எங்கள் சொந்தக்காரர்களில் 45, 50 வயதுக்கும் குறைவான இறந்தவர்களில் பெரும்பாண்மையானோர் குடித்து குடித்து வயிறும் நரம்பு மண்டலமும் கெட்டு செத்துப்போனார்கள்... இன்னும் சிலர் சாவுக்கு டிக்கெட் வாங்கி கையில் வைத்துக்கொண்டு இன்றா நாளையா என்று இருக்கிறார்கள் குடித்து குடித்து செல்லரித்துப்போன வயிற்றுடன்...பிறகெப்படி இது மக்கள் பிரச்சினையாக இல்லாமல் போகும்... நிதர்சனத்தை பார்க்காதவர்கள் இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் என்ற என் நம்பிக்கையை மேலும் உறுதிபடுத்தியுள்ளார் சந்திப்பு//

குழலி அய்யா

முதலில் மரம் வெட்டி அய்யா தன் கட்சியின் போராட்டங்களுக்கு வரும் பெண்களுக்கு ஊத்தி கொடுக்காமல் இருக்கட்டும் அய்யா. கீழே தினமலரில் ஆதாரத்தோடு வந்த செய்தியை பாருங்கள் அய்யா. மரம் வெட்டி அய்யாவும் இதுபோல ரகசியமாக மட்டை ஆவாரோ?

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?news_id=2456&ncat=TN&archive=1&showfrom=7/13/2008

சந்திப்பு said...


முதலில் மரம் வெட்டி அய்யா தன் கட்சியின் போராட்டங்களுக்கு வரும் பெண்களுக்கு ஊத்தி கொடுக்காமல் இருக்கட்டும் அய்யா. கீழே தினமலரில் ஆதாரத்தோடு வந்த செய்தியை பாருங்கள் அய்யா. மரம் வெட்டி அய்யாவும் இதுபோல ரகசியமாக மட்டை ஆவாரோ?


அனானி இது திட்டமிட்ட திரிபு செய்தியாகத்தான் இருக்கும். குழலின் குடும்பத்தில் நேர்ந்த அவலத்தினை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. குடி குடியை கெடுக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதனை ஒழிப்பதற்கான திட்டம் என்பது வெறும் பிரச்சாரமோ? அல்லது சட்டத்தின் மூலம் நிறுத்துவதோ அல்ல. நிறுத்தவும் முடியாது. சரியான விழிப்புணர்வை அரசும், சமூக இயக்கங்களும் செய்ய வேண்டும். சட்டத்தின் மூலம் மதுவை ஒழிப்பதால் இங்கே கள்ளச் சாராய சாவுகள் ஆறாய் ஓடும். என்னைப் பொறுத்தவரை பா.ம.க. தலைவர் இராமதாஸ் மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பும் ஒரு கருவியாகவே இதனை கையாள்கிறார் என்பதுதான் உண்மை. மேலும் அவர் கட்சியில் உள்ள பல தலைவர்கள் கள்ளச் சாராயம் காய்ச்சி - கட்டப் ப;"சாயத்து செய்து இன்றைக்கு சமூக அங்கீகாரம் பெற்றவர்கள்தான். இதனை யாரும் மறுக்க முடியாது. குழலிக்கும் இது தெரிந்திருக்கலாம்.

சந்திப்பு said...


பூனூல் கல்யாணம், ”நான் பாப்பான் தாண்டா” ஜெயலலிதா ஸ்டைலில் சொன்னது மே.வ அமைச்சர்

வேத கம்யூனிஸம்!?


மேற்கண்ட அனைத்தும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கண்டிக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

//மேற்கண்ட அனைத்தும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கண்டிக்கப்பட்டுள்ளது.//

டாங்கேயின் கருத்து கூடவா? அப்படியென்றால் ஆச்சர்யம்தான்

முத்துகுமரன் said...

//ஜெயலலிதாவாக இருந்தாலும் மேற்கண்ட நிலைபாட்டோடு வந்தால்தான் கூட்டு. இல்லையென்றால் நிச்சயமாக சந்தர்ப்பவாத நிலையை ஒருபோதும் நாங்கள் எடுக்க மாட்டோம்.//
மதவாதக் கட்சியான பாஜக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை நிராகரிக்கிற நீங்கள் அதே மதவாதத்தை பேசும் அதிமுக வை கூட்டணிக்கான ஒரு கட்சியாக பரிசீலிப்பது எப்படி? ஜெ இப்போதெல்லாம் மாறிவிட்டார் என்று சான்றிதழ் கொடுத்து விடாதீர்கள். அதிமுக மதவாதக் கட்சி இல்லை என்பது எப்படி என்று மட்டும் விளக்குங்கள்.

மது ஒழிப்பு பிரச்சாரத்தை இடதுசாரிகள் செய்தால் அது விழிப்புணர்வு. பாமக செய்தால் அது மட்டும் எப்படி திரிபாகும்? இன்று மதுவினால் பாதிக்கப்பட்ட விதவைகளைக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அதுவும் திரிபுசெயலா?


ஆம் என்று சொல்வீர்களாயின் உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

சந்திப்பு said...


அதே மதவாதத்தை பேசும் அதிமுக வை கூட்டணிக்கான ஒரு கட்சியாக பரிசீலிப்பது எப்படி? ஜெ இப்போதெல்லாம் மாறிவிட்டார் என்று சான்றிதழ் கொடுத்து விடாதீர்கள்.



அன்புள்ள முத்துவுக்கு வணக்கம்.

அதிமுகவைப் பொறுத்தவரை கடந்த காலத்தில் மக்கள் விரோத கொள்கைகளை அமலாக்கிய கட்சிதான். குறிப்பாக தொழிலாளர் விரோத கொள்கைகளை அமலாக்கிய சர்வாதிகார போக்குடையவரே ஜெயலலிதா. அரசு ஊழியர் - ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர் - மின்சார ஊழியர் என்று தொடர்ச்சியாக தனது அடக்குமுறை - சர்வாதிகார போக்கின் மூலம் தொழிலாளர்களை வ;"சித்தவர். மேலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் கடைப்பிடித்தவர். இதனை சமகாலத்தில் கடுமையாக எதிர்த்து களத்தில் நின்ற கட்சி சி.பி.எம். மட்டுமே. தி.மு.க. கூட இந்த காலகட்டத்தில் அதிமுக எதிர்ப்பு போராட்டத்தை தெருவில் இறங்கி நடத்தவில்லை. இதுபோன்ற மக்கள் விரோத கொள்கைகளுக்காகவே அதிமுக 2006 தேர்தலில் தமிழக மக்களால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது, தற்போது ஆட்சியை இழந்தாலும் தனது தவறுகளை உணர்ந்தவராக ஜெயலலிதா இதுவரை தெரியவில்லை. மேலும், சேது சமுத்திர விசயம், மோடியை வரவேற்றது, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஷெகாவத்தை ஆதரித்தது போன்று பல்வேறு கட்டங்களில் பா.ஜ.க. ஆதரவு நடவடிக்கைகளையே அவர் மேற்கொண்டார். இதனையெல்லாம் இன்று வரை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பது சி.பி.எம். மேலும் தமிழகத்திற்கு மோடி வந்தபோது அதனை எதிர்த்து நடத்தப்பட்ட இயக்கத்தில் நானும் கைது செய்யப்பட்டு பின்னர் மோடி சென்ற பிறகு இரவு 9 மணிக்குதான் விடுவித்தார்கள். எனவே இந்திய மண்ணிலும் - தமிழக மண்ணிலும் மதவாதத்தை அனுமதிக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் அவரை சமரசமின்றி எதிர்ப்பது சி.பி.எம். - எதிர்த்துக் கொண்டிருக்ககிறது. எதிர்க்கும்.

மேற்கண்ட உண்மைகள் இருந்தாலும், அதிமுக மதவாதத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு அல்ல. அதன் தொண்டர்கள் நாள்தோறும் மதவாதத்தை தொழிற்படுத்துபவர்கள் கிடையாது. எனவே பா.ஜ.க.வையும் - அதிமுகவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. கூடாது என்பதே எனது கருத்து.

அடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பலம் பொருந்திய இயக்கங்களை - மக்கள் திரள் கொண்ட அமைப்புகளை வெறும் விமர்சித்துக் கொண்டு, அவர்களை பா.ஜ.க. பக்கம் தள்ளிவிடவும் செய்யக்கூடாது என்பதே எனது நிலை. தற்போது அகில இந்திய அளவில் சி.பி.எம். எடுத்திருக்கும் காங்கிரசையும் வீழ்த்துவோம் - பா.ஜ.க.வையும் வீழ்த்துவோம் என்பதே. எனவே இந்த தேர்தலில் அந்த கொள்கையை எப்படி எட்டப்போகிறாம் என்பதுதான் முக்கியமானது. இரண்டையும் ஒரே கல்லில் அடிக்க வேண்டும். எனவே எதிரிக்கு - எதிரி நண்பன் என்ற முறையில் இது நாட்டைக் காப்பதற்கான ஒரு ஐக்கிய முன்னணி தந்திரம். அடுத்து இன்னும் கூட நாங்கள் அதிமுகவுடன்தான் இருப்போம் என்று அடம் பிடித்துக் கொண்டும் இல்லை. சி.பி.எம். விரும்பும் மேற்கண்ட நிலையை யார் எடுத்தாலும் சி.பி.எம். அவர்களோடு நிற்கும். எனவே, தேசமா? தேச நலனா? நபரா? என்று பார்த்தால் தேசம்தான் முக்கியம்.


நம்முடைய தமிழகத்தில்தான் திராவிடம் பேசிய பெரியார் - அண்ணாவின் வாரிசுகள் அனைவரும் பா.ஜ.க. எனும் மதவாத அமைப்பினை முதுகில் சுமந்து சென்றவர்கள் என்பதை மறக்கக்கூடாது. இத்தகைய சந்தர்ப்பாதம் எப்போது தலையெடுத்தாலும் அதனை அடித்து நொறுக்க வேண்டும். அதைத்தான் சி.பி.எம். செய்கிறது தோழர் முத்து.

மற்றபடி பா.ம.க. விசயத்தில், அதன் மது எதிர்ப்பு கொள்கையை இங்கே விமர்சிக்கவில்லை. ஆனால் அது மக்களின் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து விசயங்களையும் இந்த மது கொள்கையை முன்னனிறுத்தி திசை திருப்புகிறது என்பதுதான் எங்கள் விமர்சனம்.

அது குறித்து கீழ்க்கண்ட கட்டுரையையும் தயவு செய்து தனியே படிக்கவும்.

சந்திப்பு said...

அன்புள்ள குழலிக்கும் - முத்துவுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

குடியை ஒழிக்க சிறந்த வழி

-வே. மீனாட்சிசுந்தரம்

பூரண மது விலக்கை அமுலாக்கிட பா.ம.க இயக்கம் நடத்திவருகிறது. ஆட் சிக்கு வந்தால் மதுவை ஒழிக்க சட்டம் கொண்டு வருவோமென பா.ம.க நிறுவனர் அறிவித்தும் வருகிறார். கடந்த காலத்தில் மது விலக்கு சட்டங்களால் கள்ளச் சாராயமும் ஊழலும் ஆறாக பெருக்கெ டுத்தன. அரசியலில் சாராயவாதிகளின் பிடிமானமும் இறுகின.காலம் காலமாய் இருக்கும் விஷ சாராயத்தால் பார்வை இழப்புகளும் கை கால் முடங்கல்களும், மூளை பாதிப்பும், சாவுகளும் முன்னை விட அதிகரித்தன. விஷ சாராய பாதிப்பு கள் இப்பொழுதும் தொடர்கிறது. இதற்கு அடிப்படையே வேறு.

சட்டம் எதற்கு?

குண்டர் சட்டமும், காவல் துறையின் தடியும், குடியை ஒழித்துவிடும் என்றால் அது என்றோ ஒழிந்து போயிருக்க வேண் டும். குடியை கெடுக்கும் குடிப் பழக் கத்தை ஒழிப்பதற்கு விஞ்ஞானரீதியான அணுகுமுறை தேவை. முதலில் குடியை நாடவைக்கிற காரணங்களை அறிவதில் தெளிவுவேண்டும்.அடுத்து இந்தப் பிரச் சனைக்கும் சமூக, அரசியல், பொருளா தார நிலவரங்களுக்கும் உள்ள உறவு களை காணும் ஆற்றல் வேண்டும். வர லாற்று அனுபவங்களை மட்டுமல்ல; இன்று உலக நாடுகளில் உள்ள நிலவரங் களையும் அறிந்திருப்பது அவசியம். நமது நாட்டு நிலவரங்களை முற்றிலும் தெரிந்து அதற்கேற்ப பன்முக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

நமது முன்னோர்கள் மதுவை போற் றும் பண்பாடு கொண்டிருந்தனர்.சங்க கால அவ்வையார் கள் குடித்து பாடி மகிழ்ந்ததை அவரே பாடலில் குறிப்பிடு கிறார். கள்ளை உடல் வலியைப் போக்கி உற்சாகம் தரும் பானம் என்ற வகையில் மக்கள் போற்றினர் . அதே நேரம் போதை யில் திளைக்கும் மொடாக் குடியின் ஆபத்தையும் அவர்கள் உணர்ந்திருந்த னர். கள்ளுண்ணாமை இயக்கம் வள்ளு வர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. கருத்தடை இல்லாத காலத்தில் சிசு பலி, துறவறம், புலனடக்கம் போன்ற கொடூர முறைகள் சமூக தர்மமாக ஆக்கப்பட்டது போல், உடல் ஆரோக்கியத்தை கெடுக் கும் அளவிற்கு போதையில் திளைப் பதை தடுக்க மது விலக்கை அறமாக ஆக்கும் நிலையும் அன்று இருந்தது.

விஞ்ஞான யுகத்தில்

20 -ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் மதுபானங்களின் தாக்கத்தை அறிய விஞ்ஞான ரீதியாக ஆய்வுகள் தொடங்கின. சாராயம் மற்றும் கள் போன்ற பொருட்களின் மருத்துவ குணங்களை யும் அளவு மீறிய குடியின் கேடுகளையும் விஞ்ஞானம் அளந்துவிட்டது. ஐக்கிய நாட்டு சபை தோன்றிய பின் அதன் துணை அமைப்பாக இருக்கும் உலக சுகா தார நிறுவனம் எல்லா நாடுகளிலும் ஆய் வுகள் நடத்தி வருடா வருடம் விவரங் களை வெளியிடுகிறது. அதுமட்டுமல்ல மதுவால் உருவாகும் ஆரோக்கிய பிரச் சனை, சமூக பிரச்சனை, பாலியல் துன் புறுத்தல்கள் உட்பட பல வகை குற்றங் கள், வன்முறைகள், விபத்துக்கள், இவை கள் சம்பந்தமான புள்ளி விவரங்களை நாட்டிற்கு நாடு சேகரித்து, ஆய்வுகள், சர்ச்சைகள்,அதற்குமேல் உலக சுகாதார நிறுவனத்தின் சிபாரிசுகள் மலை போல் குவிந்து வருகின்றன.

அந்த விவரங்கள் நமக்கு நமது நாட் டில் உள்ள குடியால் வரும் பிரச்சனை களையும் அதற்கான தீர்வுகளை எங்கி ருந்து தொடங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க நமக்கு உதவுகிறது.

நம்மில் பலர் நம்புவது போல் நமது நாடு மொடாக் குடியர்கள் நிறைந்த நாடல்ல!உலக சுகாதார நிறுவன புள்ளி விவரப்படி நமது நாடு குடிப்பழக்கத்தால் கெட்டுவரும் நாடுகளின் பட்டியலில் இல்லை! 25-7-2007-ம் தேதிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை வெளியிட்ட செய்தியைப் பாருங்கள். குடி அளவு பட்டி யலில் உள்ள 184 நாடுகளில் குடி அள வில் நாம் 154 வது இடத்தில் உள்ளோம். நபர் வாரி சராசரி கணக்குப்படி 0.86 லிட்டர் (அதாவது ஒரு லிட்டருக்கும் குறைவு) குடி அளவில் முதல் 10 நாடுகள் உகாண்டா-19 லிட்டர், லக்ஸ்ஸம்பர்க்-17.5 செக்- 16.2லிட்டர், அயர்லாந்து-14.5லிட்டர் , பிரான்ஸ்- 13.5 லிட்டர், ஜெர்மனி-12.9 லிட்டர், குரேஷியா12.7லிட்டர், ரஷ்யா-10.2 லிட்டர்.

ஆனால் உலக சுகாதார நிறுவனம் இந்திய நாட்டின் சாராய சராசரி அளவை குறிப்பிடுகிற பொழுது இன்னொரு மிக முக்கியமான விவரத்தை சேர்த்தே குறிப் பிடுகிறது. இந்தியர்களின் சராசரி சாராய அளவு 0.86 லிட்டர் என்பது தரமான சாராயத்தின் அளவாகும். இதில் உள்ளூர் அளவில் தயாரிக்கப்படும் தரமற்ற சாராயம் சேர்க்கப்படவில்லை. ஏழை மக்கள் அருந்தும் அந்த சாராயத்தின் அளவை கணக்கிட இயலவில்லை. இருந்தாலும் சாம்பிள் சர்வே மூலம் குத்து மதிப்பாக கணக்கிட்டு சேர்த்தால் சராசரி சாராய அருந்தல் அளவு 2.6 லிட்டர் ஆகும். அதாவது கள்ளச்சாராய அருந்தல் தரமான சாராய அருந்தலைப் போல் இரண்டு மடங்கு உள்ளது. (தரமான சாரா யம் 0.86லிட்டர்+ விஷ சாராயம் 1.7லிட்டர்).

தெளிவாக சொன்னால் 10 லிட்டருக்கு மேல் அருந்தும் ஐரோப்பியர்களை விட நமது நாட்டு உழைப்பாளிகளாக இருக் கும் ஏழைகளின் உடல் நலம் கள்ளச் சாராயத்தால் அதிகம் கெடுகிறது. சாராயம் அருந்தியதால் ஏற்படும் வன்முறைகள், விபத்துக்கள் மற்றவர்களை விட குறைவு என்றாலும் உழைப்பாளி மக்களின் உழைப்புத் திறன் மங்கிவிடுகிறது. கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுகிற தொழிலாளர் கள் மலம், சாக்கடை அள்ளுதல் போன்ற அருவருப்பான வேலைக்கு நிர்பந்திக்கப் பட்டவர்கள் தங்களது உடல் வலியை உணராமல் இருக்க மலிவான, தரமற்ற சாராயத்தை நாடுவதை பார்க்கிறோம்.

கள்ளச் சாராய சந்தை ஒழிப்பு

கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளிகளை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் கள்ளச் சாராயத்திற்கு சந்தையில்லாமல் ஆக்குவது அரசின் கடமையாகும். ஆனால் ஏழ்மையை போக்காமல் கள்ளச் சாராய சந்தை ஒழியாது.அடுத்து எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சாரா யத்திற்கு அடிமையானவர்களை மீட்க மருத்துவர்கள், உளவியல் நிபுணர்களை கொண்ட குழு செயல்பட அரசு நிதி ஒதுக்கவேண்டும். கடுமையான உழைப் பிற்கு வேலை நேரத்தை குறைக்க சட்டம் வேண்டும் சுகமான வாழ்விற்கேற்ற குறைந்தபட்ச கூலிக்கு சட்டம் வேண் டும். சங்கம் வைக்க உரிமை வேண்டும். ரெட்டணை போல துப்பாக்கி நீளக் கூடாது. தொழில் தாவாவில் காவல் துறை தலையிடக்கூடாது. (மேற்கு வங் கம் வழி காட்டுகிறது. டாட்டா பிரச்சனை யை கவனிக்க) உழுபவனுக்கு நிலம் கொடுத்து கிராமப்புற வறுமையை போக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கள்ளச் சாராய சந்தையை மூட வழிகாண வேண்டும். மாதர் அமைப்பிற்கு காவல் துறை பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் ஊறல் பானைகளை உடைக்க உத்தர வாதம் வேண்டும். கள்ளச் சாராய சந்தை ஒழிப்பே துவக்கமாகும். கள் போன்ற பானங்களின் மருத்துவ குணத்தை ஆராய நிபுணர்கள் நியமித்து தர நிர்ணயம் உடனடியாக செய்ய அரசு முன்வர வேண்டும்.

விஞ்ஞான ஆய்வின்படி சாராயம் அளவிற்கு மீறினால் ஈரல் கெடுதல், புற்றுநோய், பிளாக் அவுட் என்ற மறதி வியாதி(குடி போதையில் செய்ததை மறப்பது உட்பட)

வெர்னிக்கே-கர்ஷேக்காப்-சின்ட் ரோம்- சத்துணவு பெற வாய்ப்பில்லாத வர்கள் சாராயம் அருந்துவதால் வரும் மூளையை பாதிக்கும் வியாதி. இத்தகைய வியாதிகளை அளவு மீறிய குடி உறுதியாக கொண்டு வரும்.

குரல் ஒலிக்கட்டும்

கள்ளச் சாராய சந்தையை ஒழிக்கும் நடவடிக்கைக்கு குரல் கொடுக்க வேண் டும், வறுமையையும் அறியாமையையும் அகல நடவடிக்கை தேவை. நிலம், கூலி உரிமையை காக்கும் சுதந்திரம் வேண் டும். இந்த மூன்றுக்கும் போராடும் மக் களை திரட்டாமல் மது விலக்கு என்று பொதுவாக கூறுவதால் பயன் உண்டா?

☀நான் ஆதவன்☀ said...

//தமிழக்ததில் இன்னும் கூட தீண்டாமை கொடுமை கொடி கட்டி பறக்கிறது. இத்தகைய கொடுமை கேரளத்தில் இல்லை அன்பரே!//

அன்பரே உடனே கேரளத்தோடு ஒப்பிடுவீர்களே...
அங்கு மத்திய அமைச்சர் ஒருவரின் மகன் கோவிலில் நுழைந்தார் என்பதர்காக (அமைச்சரின் அம்மா கிறிஸ்துவர்) கோவிலேயே கழுவி சுத்தப்படுத்தியது குருவாயூர் கோவில் நிர்வாகம்.அமைச்சரின் மகனுக்கே இந்த கதியென்றால்... இத்தனைக்கும் அங்கு உங்கள் ஆட்சி தான். அதை விட தமிழகம் ஆயிரம் மடங்கு மேல்

☀நான் ஆதவன்☀ said...

மன்னிக்கவும்

அமைச்சரின் மனைவி தான் கிறிஸ்துவர்.

Anonymous said...

இந்தியாவில் மக்கள் தொகையில் 75% குழந்தைகள், பெண்கள்.மீதி 25% பேர்
குடிக்கும் அளவைப் பாருங்கள்.
மது விலக்கை மறைமுகமாக எதிர்க்கும் கட்சி சிபிஎம்.நேரடியாக
எதிர்க்கும் கட்சி திமுக.கேரளாவில்
மது ஆறாக ஒடுகிறது, கள் உண்டு
இருப்பினும் சாராயமும் ஏன்
இருக்கிறது. மதுவால் சீரழிவது
பெரும்பாலும் ஏழைகளும்,
அவர்களும் குடும்பமும்.
மு.க.முத்து போல் எல்லாக்
குடிகாரர்களுக்கும் தந்தையாக
பணக்காரர்,முதல்வர் இல்லை.

Anonymous said...

¾¢Ó¸ ´Õ Àì¸õ þÕì¸ðÎõ..
±õ÷¦ƒýº¢ ¬¾Ã× Ò¸ú Å¢ƒ¢ §Â¡¼ Ü𼽢측¸
«ÅÕ çðÎìÌ ²ý §À¡È¢í¸.. «ô§À¡ ´í¸ÙìÌô
À¾Å¢ ¬º þø¨Ä¡.. «ÅÕ §Àîº §¸ð¼¡§Ä «õÁ¡×õ
¸¡Å¢Ôõ ±ùÅǧš §¾ÅÄ¡õÛ ÌõÀ¢¼ò §¾¡ÏÐ..
«ôÀÈõ ÅÄÐ ¦¾Ç¢Å¡ þÄí¨¸ò ¾Á¢Æ÷ À¢ÃîºÉÂ
¨¸ÂÄ ±Îì¸È §À¡Ð, ¿£í¸ «¾ô Àò¾¢ §ÀºÈ§¾
«ÀÃõÛ ´ì¸¡÷ÈÐ ¿¢Â¡ÂÁ¡.. ÁÉ¢¾î ºí¸Ä¢Â¢Ä
¡ÕìÌõ ¦¾Ã¢Â¡Á ²ý ¸ÄóÐì¸Ïõ.. ¦º¡øÄ¢ðÎî
¦ºöÂÈÐ ¾¡É.. ²ý ´Ç¢× Á¨È×...

சந்திப்பு said...


திமுக ஒரு பக்கம் இருக்கட்டும்..
எம்ர்ஜென்சி ஆதரவு புகழ் விஜி யோட கூட்டணிக்காக
அவரு வூட்டுக்கு ஏன் போறிங்க.. அப்போ ஒங்களுக்குப்
பதவி ஆச இல்லையா.. அவரு பேச்ச கேட்டாலே அம்மாவும்
காவியும் எவ்வளவோ தேவலாம்னு கும்பிடத் தோணுது..
அப்பறம் வலது தெளிவா இலங்கைத் தமிழர் பிரச்சனய
கையல எடுக்கற போது, நீங்க அதப் பத்தி பேசறதே
அபச்சாரம்னு ஒக்கார்றது நியாயமா.. மனிதச் சங்கலியில
யாருக்கும் தெரியாம ஏன் கலந்துக்கணும்.. சொல்லிட்டுச்
செய்யறது தான.. ஏன் ஒளிவு மறைவு...



இந்தியாவில் எமர்ஜென்சியை அமலாக்கிய காங்கிரஸ் கட்சியுடன்தான் தி.மு.க. அதன் ஆட்சியிலேயே பங்காளியாகியுள்ளது என்பதை ஏன் மறந்து விட்டீர்கள் நன்பரே. ஒவ்வொரு கட்டத்திலும் எந்த ஒரு கட்சியும் எடுக்கக் கூடிய நடவடிக்கை சம்பந்தமாக அவ்வப்போது விமர்சனமும் - எதிர்ப்பும் காட்டுவதுதான் ஜனநாயகம். அதனை சி.பி.எம். சரியாகவே செய்து வருகிறது.

மேலும் விஜயகாந்த் எமர்ஜென்சி ஆதரவாளர் என்றால், உங்களுக்கு அதனை எதிர்த்து எழுதுவதற்கு முழுமையான உரிமை உண்டு. தாராளமாக எழுதுங்கள். எனக்கும் அதில் உடன்பாடு இல்லை.


அவரு பேச்ச கேட்டாலே அம்மாவும் காவியும் எவ்வளவோ தேவலாம்னு கும்பிடத் தோணுது..


காவியை குறைத்து மதிப்பிடும் அவலம்தான் இது. காவி என்பது நமது நாட்டின் - நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு விரோதி. அது மக்களை மோதவிட்டு அரசியல் குளிர் காயும் மதவெறி - பாசிச அமைப்பு. அதற்காக காவியை விட விஜயகாந்த் மோசம் என்று பேசுவது தங்களது அரசியல் பார்வையில் உள்ள மந்தகதியைத்தான் வெளிப்படுத்துகிறது. மேலும் விஜயகாந்த் குறித்து நானோ அல்லது எங்கள் கட்சியோ ஐ.எஸ்.ஓ. 2000 சான்றிதழ் எதுவும் தரத் தயாரில்லை. நீங்கள் வேண்டும் என்றால் அது குறித்து விலாவரியாக ஆராய்ந்து வழங்கலாம். அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்.



அப்பறம் வலது தெளிவா இலங்கைத் தமிழர் பிரச்சனய கையல எடுக்கற போது, நீங்க அதப் பத்தி பேசறதே அபச்சாரம்னு ஒக்கார்றது நியாயமா.. மனிதச் சங்கலியில யாருக்கும் தெரியாம ஏன் கலந்துக்கணும்.. சொல்லிட்டுச் செய்யறது தான.. ஏன் ஒளிவு மறைவு...


அனானி நன்பரே முதலில் வலது - இடது என்று பேசுவதை தவிர்த்து விடுங்கள். இங்கே வலது என்றால் பா.ஜ.க.வும் - இந்துத்துவ சக்திகளும்தான். எனவே சி.பி.ஐ., சி.பி.எம். என்று குறிப்பிடுங்கள்.

தங்களது கேள்வியில் இருந்த தெளிவு - நடைமுறையில் தாங்கள் கவனிக்கத் தவறுவதைத்தான் வெளிப்படுத்துகிறது. சி.பி.ஐ. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக ஏற்பாடு செய்த உண்ணாவிரதத்தில் சி.பி.ஐ.எம். கலந்து கொண்டு வாழ்த்திப் பேசியது. எங்கள் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.ரா. வரதராசன் கலந்து கொண்டு பேசினார். ஜனசக்தி பத்திரிகையில் அவரது பேச்சு முழுமையாக வெளி வந்துள்ளது. படித்து அறிந்து கொள்ள வேண்டுகிறேன். அடுத்து, இதே பிரச்சனைக்காக நடத்தப்பட்ட மனித சங்கிலி இயக்கத்தில் சி.பி.எம். பங்கெடுக்கும் என்று அறிக்கையும் கொடுத்திருந்ததோடு - எங்களது தலைவர்களும் - தொண்டர்களும் சென்னை பனகல் மாளிகை - சைதாப்பேட்டையில் கலந்து கொண்டனர். இது குறித்த செய்தியும் - படமும் தினத்தந்தியில் வெளிவந்துள்ளது. அது சரி தி.மு.க. ஏன் சி.பி.ஐ. நடத்திய உண்ணாவிரத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதையும் சற்று விளக்குங்களேன்.

மேற்குறித்த உங்களது கேள்விகளில் எந்தவிதமான நியாயமும் இருப்பதாக நான் கருதவில்லை. தங்களது விவாத முன்முயற்சிக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

§¾¡Æ§Ã.. ¿¡ §¸ð¼ÐìÌ À¾¢Ä ¦º¡øÄ¡Á, ¿£í¸ §ÅÈ ²§¾¡
¦º¡øȢ§Ç..¾¢Ó¸ ±ôÀÊ þÕó¾¡ ±ýÉ §¾¡Æ÷.. «×¸¾¡ý
À½ì¸¡Ã (À¢Ã¡Á½ÃøÄ¡¾×¸Ù측¸) ¸îº¢ ¿¼òÐÈ¡¸.. «×¸ ±ôÀÊ
þÕó¾¡ ¿ÁìÌ ±ýÉ.. ¿£í¸ þôÀÊî ¦ºöÂÄ¡Óí¸Ç¡..? «¾¡ÅÐ
±Á÷¦ƒýº¢ Ò¸ú Å¢ƒ¢ ±ýÉ §ÀðÊ ¦¸¡Îò¾¡¸ýÉ.. þó¾ ¸õäÉ¢ŠÎ¸¡Ãí¸
±ý çÎ §¾Ê Å÷È¡í¸ Üð¼½¢ìÌýÛ ¦º¡øÈ §À¡Ð ±ý§É¡¼
'º¢ÅôÒ' Ãò¾õ ¦¸¡¾¢ìÌÐ «ö¡.. «ò¾¾¡ý ¿¡ý §¸ð§¼ý.. §ÁÖõ
«§¾ ±õ¦ƒýº¢ ¸¡í¸¢ÃŠ¾¡É ±øÄ¡Õõ ¬¾Ã¢î§º¡õ.. (¿¡Á ¯ðÀ¼)..
«Ð ¦¸¼ì¸ðÎõ.. þó¾ Å¢ƒ¢ §Àîº §¸ð¼¡ ¦Ã¡õÀ À¾ÚÐ.. ¾ôÀ¢ò¾ÅÈ¢
ÅóÐð¼¡÷ýÉ¡.. ±õ÷¦ƒýº¢Â ¿¢îºÂõ ¦¸¡ñ¼¡óÐÕÅ¡Õ.. «ó¾ô ÀÂò¾¢Ä¾¡
§¸ì¸§Èý.. ¸¡ôÀ¡ò¾ ¿£í¸ þÕôÀ¢í¸ýÛ ¦¿É.. ¿£í¸§Ç ¬¾Ã× çðÎìÌô
§À¡Â¢ ¦¸¡Îò¾¢ÎÅ¢í¸ §À¡ÄÕ째..

«É¡É¢ ¿ñÀý

சந்திப்பு said...

அனானி அன்பு நன்பர உங்களது கமெண்ட்டை யூனிகோடில் அடித்துப் போட்டால்தான் தெளிவாக தெரியும். எனவே முதலில் நீங்கள் டைப் செய்யும் தமிழை கீழ்க்கண்ட தளத்தில் சென்று யுனிகோடாக மாற்றி பதியும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
www.suratha.com/reader.htm

அடுத்து அனானி நன்பர் இட்ட பின்னுட்டத்தை இங்கே கொடுக்கிறேன்.


தோழரே.. நா கேட்டதுக்கு பதில சொல்லாம, நீங்க வேற ஏதோ
சொல்றியளே..திமுக எப்படி இருந்தா என்ன தோழர்.. அவுகதான்
பணக்கார (பிராமணரல்லாதவுகளுக்காக) கச்சி நடத்துறாக.. அவுக எப்படி
இருந்தா நமக்கு என்ன.. நீங்க இப்படிச் செய்யலாமுங்களா..? அதாவது
எமர்ஜென்சி புகழ் விஜி என்ன பேட்டி கொடுத்தாகன்ன.. இந்த கம்யூனிஸ்டுகாரங்க
என் வூடு தேடி வர்றாங்க கூட்டணிக்குன்னு சொல்ற போது என்னோட
'சிவப்பு' ரத்தம் கொதிக்குது அய்யா.. அத்ததான் நான் கேட்டேன்.. மேலும்
அதே எம்ஜென்சி காங்கிரஸ்தான எல்லாரும் ஆதரிச்சோம்.. (நாம உட்பட)..
அது கெடக்கட்டும்.. இந்த விஜி பேச்ச கேட்டா ரொம்ப பதறுது.. தப்பித்தவறி
வந்துட்டார்ன்னா.. எம்ர்ஜென்சிய நிச்சயம் கொண்டாந்துருவாரு.. அந்தப் பயத்திலதா
கேக்கறேன்.. காப்பாத்த நீங்க இருப்பிங்கன்னு நெனச்சா.. நீங்களே ஆதரவு வூட்டுக்குப்
போயி கொடுத்திடுவிங்க போலருக்கே..
அனானி நண்பன்



விஜீ ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்ப்பது மிகப் பெரிய கனவாகவே நான் பார்க்கிறேன். அடுத்து அப்படியே விஜீ ஆட்சிக்கு வந்தாலும் அவரால் எமர்ஜென்சியை அமலாக்கும் அதிகாரம் கிடையாது. அது மத்திய அரசிடம்தான் உள்ளது அனானி நன்பரே. மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் இந்த வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அதனை முதல் எதிரியாக கருதி அதற்கு எதிரான போராட்ட வியுகத்தை வகுப்பதுதான் நமது கடமை அனானி நன்பரே. அது தவிர அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை தாயத்தாக பயன்படுத்துகிறது. ஒரு வேளை காங்கிரஸ் போன்ற அமெரிக்க ஆதரவு எடுபிடிகள் ஆட்சியைப் பிடித்தால் அமெரிக்கா அவ்வாறு நிர்ப்பந்திக்கலாம். எனவே பா.ஜ.க. - காங்கிரஸ் இரண்டையும் எதிர்ப்போம். அதற்கு விஜீ என்ற சிறிய கல் பயன்படும் என்றால் அதனையும் பயன்படுத்தி அடிப்போம். வாருங்கள்.... நன்றி.