September 18, 2008

காவிப் படையில் மகாத்மா!



இந்திய சுதந்திரப் போரினை மக்கள் இயக்கமாக மாற்றியவர் மகாத்மா. இவரது அகிம்சை தத்துவம் இன்று உலகமயமாகி வருகிறது. இது குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது குறித்த அலசல் இல்லை இங்கே. குறிப்பாக இந்திய நாட்டையும் - இந்திய மக்களையும் நேசித்த மகாத்மா தனது இறுதி மூச்சு வரை மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்து காட்டியவர். இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவதை இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்தவர். நமது தேசத்தை இரு கூறாக பிரிப்பது எனது இதயத்தை பிளப்பது போல் என்று மிகவும் நொந்து உருகி தனது கருத்தினை வெளிப்படுத்தியவர்.

இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இத்தகைய மிக எளிய அகிம்சாவாதியை இந்துத்துவ வெறியன் - ஆர்.எஸ்.எஸ். பரிவார பாசிஸ்ட் கோட்சே சுட்டுக் கொன்றான். அகிம்சையை இம்சித்த தத்துவமே இந்துத்துவம் என்பதை உலகுக்கு உணர்த்தியவன். இதன் மூளையாக செயல்பட்டவன் சவர்க்கார். இவன் ஒரு பச்சை துரோகி. இந்திய தேசத்தை காட்டிக் கொடுத்தவன். வெள்ளையனின் சிறையிலிருந்து விடுதலையாக எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன். இத்தகைய பாரம்பரியத்தில் வந்த இந்துத்துவவாதிகளின் தற்போதைய வாரிசுகள் ஏதோ இந்த நாட்டின் மீது தாங்கள்தான் பெரிய நேரம் செலுத்துவது போல் வேஷம் காட்டுகின்றனர்.

இந்த பாசிச வெறியர்கள் கேரளாவில் கூத்துப்பறம்பா என்ற இடத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காவி நிறம் பூசி மகிழ்ந்துள்ளனர். அந்த பேருந்து நிலையம் முழுவதும் காவி நிறம். மகாத்மாவுக்கும் காவி நிறப் பூச்சு. அதாவது, மகாத்மாவை கூட இவர்கள் தங்களுடைய கொள்கை காப்பாளராக மாற்றி விட்டார்கள் இந்த மாபாவிகள். கேரளாவில் இவர்கள் செய்யும் பாசிச வெறித்தனத்திற்கு அளவேயில்லை. இந்த இம்சைவாதிகள் அகிம்சா மூர்த்தியான மகாத்மாவுக்கு அதுவும் தங்களது கொள்கைக்கு விரோதமாக நின்றதால் சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு. சிலை வைத்து காவி நிறம் பூசியுள்ளது வெட்கக்கேடானது. அங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கும் இது குறித்து வருத்தமோ - எதிர்ப்போ எதுவுமேயில்லை. ஏனென்றால் அவர்கள் கூட சில நேரங்களில் இடது முன்னணியை தோற்கடிக்க இந்துத்துவவாதிகளின் வாக்கு வங்கியோடு கள்ளுக் கூட்டுச் சேருபவர்கள்தான். அதாவது சாப்ட் இந்துத்துவாவாதிகள்.

மொத்தத்தில் மகாத்மாவின் சிலையை மட்டுமல்ல இந்த தேசத்தையே இந்த இந்துத்துவவாதிகளிடம் இருந்து மீட்க வேண்டும். இதற்காக விடப்பிடியான கொள்கைப் போராட்டம் தேவை. 

6 comments:

illakkia.blogspot.com said...

Excellent
S.Veeramani

சந்திப்பு said...

Thank you Veeramani

Anonymous said...

கோட்சே அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லை.காந்தி கொலைச்
செய்யப்பட்டதற்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தொடர்பில்லை.
ஆனால் பொய்களை கூறிவருவது
இடதுசாரிகள்தான்.

காவி என்பது ஒரு அமைப்பிற்கோ கட்சிக்கோ சொந்தமான நிறம் அல்ல.
பல துறவிகள் காவி நிற உடை அணிகிறார்கள்.அதற்காக அவர்களை
ஒரு அமைப்பினைச் சேர்ந்தவர்கள்
என்று முத்திரை குத்துவீர்களா.

சந்திப்பு said...


கோட்சே அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லை.காந்தி கொலைச்
செய்யப்பட்டதற்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தொடர்பில்லை.
ஆனால் பொய்களை கூறிவருவது
இடதுசாரிகள்தான்.


உலகம் இதுவரை பொய்களிலே யாரையாவது உதாரணம் காட்ட வேண்டும் என்றால் கோயபல்சைத்தான் காட்டுவார்கள். அவனும் பாசிஸ்ட் இன வெறியன்தான். ஆனால் இன்றிலிருந்து இந்துத்துவாவையே அதற்கு உதாரணம் காட்டலாம். இந்த கோட்சேவின் தம்பி கோபால் கேட்சேவே பலமுறை மறுத்து அவன் ஆர்.எஸ்.எஸ். மதவெறியன்தான் என சொல்லியவற்றை நாடு கேட்டு விட்டது. இனிமேல் இதுபோல் யார் காதிலும் பூ சுற்ற முயல வேண்டாம்.

Anonymous said...

காந்தியடிகள் என்ன; வாய்ப்பு கிடைத்தால், தனக்கு நன்மை பயக்கும் என்றால் இந்து மதத்தையும் பார்ப்பானையும் புரட்டிப்போட்டு அடித்த பெரியாருக்கே காவிச்சாயம் பூச தயங்காது இந்த பார்ப்பனிய இந்து மதவெறி கூட்டம்.

சந்திப்பு said...

Thank you Karigalan

It is absolutely true.