August 26, 2008

கலாச்சார பாசிசம்!






பாசிசம் சகிப்புத்தன்மையற்றது. அது ஒரு இனத்தின் மீது அல்லது வேற்று மதத்தின் மீது அல்லது வேற்று நாட்டு மக்கள் மீது எப்போதும் நெருப்பையும் - வெறுப்பையும் உமிழ்ந்துக் கொண்டிருக்கும். குறிப்பாக இந்த பாசிசஸ்ட்டுகள் கலாச்சாரத்துறை மீதுதான் அளவுகடந்த வெறுப்பை கக்குவார்கள். கல்வித்துறை, கலை, இலக்கியம் என்று எதையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

இந்தியாவில் இந்துத்துவ பாசிசம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இல்லாவிட்டாலும் அதன் பாசிச வெறிச் செயல் மண்டையில் ஆழமாக ஊறியுள்ளதால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி தங்களது வெறித்தனத்தை காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் சஹமத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச ஓவிய கண்காட்சியில் புகுந்து எம்.எப். ஹுசைனின் ஓவியங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

சர்வதேச அளவிலான ஓவிய கண்காட்சி இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய கலை மாநாடு 2008 என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் 35 அரங்கங்களில் 400க்கும் மேற்பட்ட ஓவிய மற்றும் கலை கண்காட்சிகளை அமைத்திருந்தனர். சர்வதேச புகழ்பெற்ற ஓவியர்கள் இதில் பங்கேற்று தங்களது பண்பாடு, கலை மற்றும் அழகியல் வெளிப்பாடுகளை அற்புதமாக அமைத்திருந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில்தான் இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹுசைனின் ஓவியமும் இடம் பெற்றிருந்தது.

சீரி ராம் சேனா என்ற சங்பரிவார - ஆர்.எஸ்.எஸ். கொலைவெறிக் கூட்டம் பார்வையாளர்கள் போன்று 10 பேர் உள்ளே நுழைந்து திட்டமிட்டு எம்.எப். ஹுசைனின் ஓவியத்தை சேதப்படுத்தியுள்ளனர். உடைத்துள்ளனர். கிழித்தெறிந்துள்ளனர். தலைநகர் டெல்லியிலேயே சங்பரிவாரம் இத்தகைய கோர மதவெறித்தனத்தை காட்டுகிறது என்றால் நாட்டின் மற்ற இடங்களில் அதன் வெறித்தனத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்.

சில மாதங்களுக்கு முன்பு இதே டெல்லியில்தான் மதவெறியர்கள் - பாசிச சன்னியாசி கும்பல் ஒன்று சி.பி.எம். அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. டெல்லியில் உள்ள போலீசாருக்கும், உளவுத்துறையினரும் சங்பரிவாரத்தின் நடவக்கைகளை கண்காணிக்கிறார்களா? இல்லையா? என்ற சந்தேகமே மேலெழுகிறது. இவையெல்லாம் அரசியல் நடவடிக்கை என்று வேடிக்கை பார்க்கிறார்களா? இந்த பாசிச மதவெறியர்களின் செயலினை மத்திய அரசும், மாநில அரசுகளும் வேடிக்கை பார்ப்பது அதன் மதவெறித்தனத்திற்கு மறைமுகமாக தீனி போடுவதாகவே ஆகும்.

ஏதே இந்த மதவெறியர்கள் இசுலாமியரான ஹுசைனுக்கு எதிராக மட்டும்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த பாசிச சங்பரிவார கும்பல் ஏற்கனவே சாயாஜீ சரபோஜீராவ் ஓவிய கல்லூரின் இறுதித் தேர்விலி சந்திரமோகன் என்ற ஓவிய கல்லூரி மாணவன் வைத்த ஓவியங்களை அடித்து நொறுக்கியதோடு. அந்த அப்பாவி மாணவன் மீதும் தாக்குதல் நடத்தியது. எனவே பாசிசம் என்பது எதிர் கருத்தை ஒருபோதும் அனுமதியாது. அதற்கு ஜனநாயக வடிவம் என்றால் என்னவென்றே தெரியாதுது. அவர்களிடம் நாம் ஜனநாயகத்தை ஒருபோதும் எதிர்பார்க்க கூடாது.

 இந்த மதவெறியர்களின் பாசிச நடவடிக்கைகளை இந்த ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள யேல் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற விமர்சகர் ராபர்ட் ஸ்டோர் கடுமையாக கண்டனம் செய்துள்ளார். அவர் கூறும் போது, சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும் இதுபோன்ற கலை நடவடிக்கைகளை கூட அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மதச்சார்பற்ற கொள்கைகளுக்காக நிற்பதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இதர ஜனநாயக சக்திகளோ இந்த இந்துத்துவ மதவெறியர்களுக்கு எதிராக தங்களது சுண்டு விரலைக் கூட நீட்ட வில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளதோடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கலாச்சார பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள ஓவியர்கள் ஓரணியில் திரள வேண்டும். இவர்களால் எத்தனை ஓவியங்களை சிதைக்க முடியும். உங்களது தூரிகைகள் இந்த வெறியர்களின் முகத்திரையை மக்கள் முன் அம்பலப்படுத்துவதாக அமையட்டும். ஒரு ஓவியர் ஒரு ஓவியம் என்று இந்த மதவெறியர்களுக்கு எதிராக படைத்து அதனை அனைத்து மீடியாக்களிலும் இடம் பெறச் செய்ய வேண்டும். சாலையோரங்களில், வலைப்பதிவுகளில், பத்திரிகைகளில்... என்று அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த பாசிச வெறியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

18 comments:

Anonymous said...

this guy has to clear that hussain can paint anything against his own religion and can he keep his paintings in any part of world?

if he does that thing then we will support him.
first he should do that immdiately.

Anonymous said...

i fully agree with you. i hope you have the same view on the attacks in lieu of the cartoons published in Denmark on Mohammad..

Anonymous said...

பெரியாரின் தாடி மணியம்மையை புணர்வது போல் ஹுசைன் வரைந்திருந்தால் கலாச்சாரப் பாசிஸ்டுகள் யார் என்று தெரிந்திருக்கும்டா குருட்டுக் கம்யூனிஸ்டு நாய்களா.

சந்திப்பு said...

ஆங்கிலா அனானி எம்.எப். ஹுசைனை ஒரு மதத்திற்குள் அடைத்தால்தான் உங்களால் அரசியல் நடத்த முடியும். பொதுவாக ஓவியர்கள் - கலை"ர்கள் - பண்பாட்டாளர்கள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட சுதந்திர சிந்தனையாளர்கள். உங்களுக்கு அவரை விமர்சிக்கும் உரிமை உண்டு. அடித்து நொறுக்கும் உரிமையில்லை. இதைத்தான் சங்பரிவாரம் செய்கிறது.

சந்திப்பு said...

ஆங்கில அனானி நன்பரே டென்மார்க்சில் முகம்மது குறித்து கார்ட்டூன் வெளியிட்டதற்காக எழுந்த பிரச்சினையில் எங்களைப் போன்றவர்கள் அந்த கலை"ரின் பக்கம்தான் நின்றோம்.

சந்திப்பு said...


பெரியாரின் தாடி மணியம்மையை புணர்வது போல் ஹுசைன் வரைந்திருந்தால்


பாசிச சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இதுதான்.

Anonymous said...

//
பாசிச சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இதுதான்.
//

முட்டாள்களின் சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தங்கள் பதிவு.

Anonymous said...

//
பாசிச சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இதுதான்.
//

முட்டாள்களின் சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தங்கள் பதிவு.

குரங்கு said...

அப்ப, ஹுசைனின் சுதந்திரம் என்ற பேரில் சாமி படங்களை நிர்வானமாகவும், கேவலமாகவும் வரைவார், யப்பா... இது படைப்பு சுதந்திரம் எதுவுமே பேசப்புடாது அப்படீன்னு விடனுமா?

எதுங்க படைப்பு சுதந்திரம்?

அடுத்தவங்களை கேவலப்படுத்துறதா படைப்பு சுதந்திரம்?

Anonymous said...

Very good treatment to hussain. I like this and I want this.

விடுதலை said...

//அப்ப, ஹுசைனின் சுதந்திரம்

எதுங்க படைப்பு சுதந்திரம்?

அடுத்தவங்களை கேவலப்படுத்துறதா படைப்பு சுதந்திரம்?//

அப்படி என்றால் முதலில் இந்தியாவில் உள்ள இந்து மத அடையாளங்கள் அனைந்தும் ஆபாசங்களும் .அபத்தங்களும் நிறைந்ததை என்னவென்று சொல்வீர்கள்.

சிவனும் & பார்வதியும் ஆண் & பெண் குறிகளாக மாறி இன்னும் சிவலிங்கமாக இருந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறாங்க. எங்க இயற்பகை நாயனாரை, ஊரே கூடி உதைக்க வந்த போதும் அஞ்சாமல், தன் பொண்டாட்டிய சிவனடியாருக்கு கூட்டிக் கொடுத்தாரு.


கொழந்தையிலேயே கொய்யாப் பழமான திருஞான சம்பந்தரு, ‘கடவுள் இல்லைன்னு சொல்றவன் பொண்டாட்டிக் கூட நான் படுக்கனும்னு’ அற்புதமான தமிழால், ரொம்ப நாகரீகமாக பாட்டெழுதினாறு.


இன்னும் கோயில் சிற்பங்களில் உடல் உறவுக் காட்சிகளை தத்ரூபமாக சித்தரிச்சி, எங்க புனிதத்தை நாங்களை உடைச்சிருக்கோம். உலகத்தில வேறு எந்த மதக் கோயிலாவது இதை பார்க்க முடியுமா? நீங்கள் என்ன பெரிய மஞ்சள் கலர் எழுத்தாளர்? எங்க ஆண்டாளு, ‘என் உடல் முழுதும் திருமாலுக்கே’ என பச்சைக் ‘கலர்ல’ பாட்டெழுதி இருக்காங்க.

இப்படி மிகப் பழமை வாய்ந்த கலை, இலக்கியத்துக்கு வாரிசா இருக்கிறஇந்தியாவில் இருந்துகொண்டு படைப்பு சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்புற மாதிரி ஒரு முஸ்லிம் வரைந்தார் என்ற ஓரே காரணத்தால் குறுக்கு சால் ஓட்ட நினைக்கும் மதவெறியர்களே திருந்துங்கள்.

சந்திப்பு said...

நன்றி விடுதலை... இவர்களது படைப்புக் கண்ணோட்டம் அழிவுக் கண்ணோட்டம் உடையது.

Anonymous said...

ஆங்கில அனானி நன்பரே டென்மார்க்சில் முகம்மது குறித்து கார்ட்டூன் வெளியிட்டதற்காக எழுந்த பிரச்சினையில் எங்களைப் போன்றவர்கள் அந்த கலை"ரின் பக்கம்தான் நின்றோம்.

சந்திப்பு, சி.பி.எம் அப்போது
எப்படி நடந்து கொண்டது
என்பது எங்களுக்கும் தெரியும்.
சி.பி.எம் முஸ்லீம்களுக்கு
ஆதரவாக இருந்தது, கருத்து
சுதந்திரத்தை எதிர்த்தது.
தஸ்லீமாவை துரத்தியது
சி.பி.எம் அரசுதான்.
உங்கள் பொய்களை ஒரளவோடு
நிறுத்திக் கொள்ளுங்கள்.

Anonymous said...

சந்திப்பு பதிவு எழுதும் கருத்துச் சுதந்திரம் பேசும் நாய்களா. தினமலர் தெரியாமல் வெளியிட்ட கார்டூன்களால் வேலூரில் ஏற்பட்டது என்ன ? அமைதிப்போராட்டமா ?

கலாச்சாரப் பாசிசம் என்றால் என்ன என்பதை இஸ்லாம் போன்ற ஒரு அரபு ஏகாதிபத்தியத்தைப் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

சந்திப்பு said...

கம்யூனிஸ்ட்டுகளை காயடிக்கும் அனானி

தினமலர் தெரியாமல் வெளியிட்ட கார்டூன்களால் வேலூரில் ஏற்பட்டது என்ன? அமைதிப்போராட்டமா?


தினமலர் தெரியாமல் வெளியிட்டு விட்டது என்று உங்களைப் போன்ற கேனைகளால்தான் சொல்ல முடியும்!

காஷ்மீரில் துவங்கி, ஒரிசாவில் ரத்த ஆறு ஓடவிட்டு தற்போது தமிழகத்தை நோக்கி இந்துத்துவ பயணம் தொடங்கியுள்ளது அமைதியை கெடுப்பதற்காக அதன் முதல் அடிதான் தினமலரின் திட்டமிட்ட கார்ட்டூன். கம்யூனி்ஸ்ட்டுகளை காயடிப்பதற்கு முன்பாக உங்களது கொள்கைகளை நாயடிப்பதுபோல் அடிப்பார்கள் தமிழக மக்கள்.

Anonymous said...

//
காஷ்மீரில் துவங்கி, ஒரிசாவில் ரத்த ஆறு ஓடவிட்டு தற்போது தமிழகத்தை நோக்கி இந்துத்துவ பயணம் தொடங்கியுள்ளது அமைதியை கெடுப்பதற்காக அதன் முதல் அடிதான் தினமலரின் திட்டமிட்ட கார்ட்டூன்.
//

ஹா ஹா ஹா! அப்ப ஹுசைன் போன்ற பன்னாடை செய்தது திட்டமிட்ட இந்துமதத் துவேஷம் என்று சொல்லும் இந்துத்வாவாதிகளுக்கும் உங்களைப் போன்ற கம்யூனிஸ்டு நாய்களுக்கும் என்ன வித்தியாசம்?

கருத்துச் சுதந்திரம் எல்லாம் துலுக்கனுக்குத் தானா? இந்துக்களுக்கு இல்லையா?

//
கம்யூனி்ஸ்ட்டுகளை காயடிப்பதற்கு முன்பாக உங்களது கொள்கைகளை நாயடிப்பதுபோல் அடிப்பார்கள் தமிழக மக்கள்.
//

தமிழக மக்கள் யாரை காயடிப்பார்கள், யாரை நாயடிப்பது போல் அடிக்கப்போகிறார்கள் என்று பொருத்திருந்து பாருங்கள் நாய்களே. எலக்ஷனில் தெரியும் கம்யூனிஸ்டுகள் சீட்டைத் தக்கவைத்துக்கொள்கிறார்களா இல்லை இழக்கப்போகிறார்களா என்று.

தமிழகத்தில் ஏழைகள் இருக்கும்வரை தானடா கம்யூனிஸ்டுநாய்களுக்கெல்லாம் எலும்புத்துண்டு கிடைக்கும். ஏழைகள் இல்லாத நாட்டில் கம்யூனிஸ்டு நாய்களை காயடிப்பார்கள் பின்பு நாயை அடித்துத் துரத்துவது போலவே துரத்துவார்கள்.

Anonymous said...

உப்புப் போட்டு சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லீமும் தின மலரை புறக்கணிக்கவேண்டும் என்று அரைக்கூவல் விடும் ஜிஹாதிகளை எதிர்த்து ஒன்றும் சொல்லாமல் இருக்கும் நீங்கள் எல்லாம் சோறு தான் தின்கிறீர்க்ளா ? இல்லை வேறு ஏதாவது சாப்பிடுகிறீர்களா ?

Anonymous said...

தினமலருக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா, தினமலர் நிர்வாகம்
மன்னிப்புக் கேட்ட பின்னும்
முஸ்லீம்கள் தினமலரை குறி வைப்பது ஏன்.ஹுசைன் ஒவியங்களை தாக்குவதை
கண்டிப்பவர்கள் கருத்து சுதந்திரத்தில்
உண்மையில் நம்பிக்கை இருந்தால்
தினமலரை ஆதரிக்க வேண்டும்.

இந்துக்கள் மனதைப் புண்படுத்தினால்
அது கலை என்பதுதான் சிபிஎம் என்ற முஸ்லீம் ஆதரவு கட்சியின் நிலைபாடு. மதசார்ப்பின்மை என்பதை சிபிஎம் மிடம் எதிர்பார்க்க
முடியாது.ஏனென்றால் முஸ்லீம்கள்
ஒட்டிற்காக என்ன வேண்டுமானாலும்
செய்யும் சீரழிவு அரசியல் சக்திதான்
சிபிஎம். அடுத்த தேர்தல்களில் இடதுசாரிகள் தோற்க்கடிக்கப்பட
வேண்டும்.