August 26, 2008

ஒரிசாவில் மதக்கலவரத்தை தூண்டும் சங்பரிவாரம்!


சங்பரிவாரத்தின் முக்கிய அமைப்பான விஸ்வ ஹீந்து பரிஷத் நாடு முழுவதும் மதக்கலவரத்தை தூண்டும் நடவடிக்கையில் முன்னணியில் நிற்கும் அமைப்பு. அது தற்போது ஒரிசாவை குறிவைத்து தனது தாக்குதலை துவக்கியுள்ளது.

ஒரிசாவில் உள்ள பார்கார்க் மாவட்டத்தில் திங்கட்கிழமை (25.08.2008) கிறித்துவ மிஷீனரியால் நடத்தப்பட்டு அநாதை ஆசிரமத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் அந்த ஆஸ்ரமத்தில் சமையல் வேலை செய்து வந்த 45 வயது பெண் உடல் கருகி இறந்துள்ளார். இந்த கொலை பாதக செயல் விஸ்வ ஹீந்து பரிஷத்துக்கு புதியது அல்ல என்பதை நாடு அறியும்.

1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது மகனையும் ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரோடு எரித்த பாசிச வெறியர்கள்தான் இந்த சங்பவரிவார கும்பல். அத்துடன் ஒரிசாவில் உள்ள பல்வேறு கிறித்துவ சர்ச்சுக்களையும் இடித்ததோடு, கன்னியாஸ்திரிகளை கற்பழித்து தங்களது இந்துத்துவ கலாச்சாரம் எவ்வளவு உயர்வாது என்பதை காட்டியவர்கள்தான் இந்த மோடித்துவவாதிகள்.

தற்போது அதே பாணியில் ஒரிசாவில் கிறித்துவர்களை தாக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்ற வி.எச்.பி. மதவாதத் தலைவர் கடந்த பல ஆண்டுகளாக மத மாற்றத்திற்கு எதிராகவும், பசு வதைக்கு எதிராகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்துள்ளார். அதாவது சிறுபான்மை கிறித்துவ மதத்திற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை நடத்தி வந்துள்ளார். காந்தமால் மாவட்டத்தில் பல முறை இவரால் மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 28 அன்று இவரும் இவருடன் நேர்ந்து நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு மாவோயிஸ்ட்டுகள் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை காரணமாக வைத்துக் கொண்டு ஒரிசாவில் பந்த் என்ற பெயரால் சிறுபான்மை சர்ச்சுகளையும், சிறுபான்மையினர் மீதும் கொலை வெறித் தாக்குதலை தொடுத்துள்ளது வி.எச்.பி. 2002 ஆம் ஆண்டு இதேபோல்தான் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டதாக கூறி குஜராத்தை ரணகளமாக்கி 2000க்கும் மேற்பட்ட இசுலாமியர்களை படுகொலை செய்தது. இசுலாமிய பெண்களை கற்பழித்தது. கர்ப்பினிகளை கொலை செய்தது. மசூதிகளை இடித்து தரை மட்டமாக்கியது மோடித்துவா என்கிற இந்துத்துவா.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற மதக்கலரவங்களை இந்துத்துவாதிகள் திட்டமிட்டு ஆங்காங்க நடத்துவார்கள். மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்துவதன் மூலம்தான் தங்களால் ஆட்சிக்கு வர முடியும் என்று கனவு கன்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காஷ்மீரில் அமர்நாத் நிலப் பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் இசுலாமிய மதத்திற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை நடத்தி வரும் பா.ஜ.க. மற்றும் சங்பவரிவாரம் தற்போது கிறித்துவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். எனவே இந்த மதவெறி பாசிசத்திற்கு எதிராக விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டியது மதச்சார்பற்ற - ஜனநாயக - இடதுசாரி சக்திகளின் கடமையாகிறது.

14 comments:

மாசிலா said...

இந்த வி.எச்.பி இதுவரைக்கும் செய்து வந்த அநியாயங்களால் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கோபத்துக்கு ஆளாகிவருகிறோம். இப்போது கிறித்துவமா? போச்சு போங்க. இனி நம்ம பெரிய அண்ணன் கோபத்துக்கும் ஆளாகவேண்டியதுதான். இந்த கையாலாகாத வி.எச்.பி காரவங்களால் பொது மக்கள் அமைதிதான் கெடும்.

Robin said...

இஸ்லாமிய தீவிரவாதிகளைவிட பயங்கரமானவர்கள் வீஹெச்பி, பஜ்ரங்தல் போன்ற ஹிந்து தீவிரவாதிகள். கலவரம் என்ற பெயரில் மாற்ற மதத்தினரை கொன்று குவிக்கும் இவர்களுக்கு அரசாங்கம் மற்றும் மீடியாவின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு உண்டு. ஒரிஸ்ஸாவில் நடக்கும் கலவரத்தை போலீஸ் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. அம்மாநில முதல்வர் ஒரு மதவெறியனைப் போல நடந்து கொள்கிறார்.

கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் said...

மிஷ நரி களின் மதம் மாற்ற விளையாட்டினால் தான் வி.எச். பி எல்லாம் ஒரிஸாவில் வலுப்பெருகிறது.சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதியை கொன்றது யார் ?

ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்த எண்பது வயது துறவி, சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி மற்றும் அவர் நடத்திவந்த ஆசிரமத்தில் பயிலும் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று இரவு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட் கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தவர்.

மதவெறியாலும் மாவோயிஸ வெறியாலும் மானுடத்தன்மையை இழந்த இருட்சக்திகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மிஷ நரி களை ஓட ஓட விரட்டி சுட்டுத்தள்ளினால் போதும். மிஷ நரி களின் பண முதலீட்டில் தான் ஒரிஸா மாவோயிஸத் தோழர்கள் "புரட்சி" செய்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

Robin said...

//மிஷ நரி களின் மதம் மாற்ற விளையாட்டினால் தான் வி.எச். பி எல்லாம் ஒரிஸாவில் வலுப்பெருகிறது.// - மிஷனரிகளின் உழைப்பினால் தான் ஏராளமான ஆதிவாசிகள் தற்ப்போது கல்வி அறிவு பெற்று நாகரீகமாக வாழ்கின்றனர் என்பதை மதவெறி பிடிக்காத பகுத்தறிவு உள்ளவர்கள் எவரும் ஒத்துக் கொள்வார்கள். இன்று கொலை வெறியுடன் திரியும் வீஹெச்பீ மிருகங்கள் இந்த மக்களை ஒரு காலத்தில் சக மனிதர்களாககூட மதிக்காதவர்கள். தற்போது இவர்கள் மதம் மாறியவுடன் இந்த காவி மிருகங்களுக்கு பயம் வந்து விட்டது. கிறிஸ்த்தவம் ஏற்கனவே பல இன்னல்களைக் கடந்து வெற்றி பெற்ற மதம். ஒரு சில மனிதமிருகங்களால் கிறிஸ்த்தவர்களை அழிக்க முடியாது.

குரங்கு said...

====
இந்த வி.எச்.பி இதுவரைக்கும் செய்து வந்த அநியாயங்களால் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கோபத்துக்கு ஆளாகிவருகிறோம். இப்போது கிறித்துவமா? போச்சு போங்க. இனி நம்ம பெரிய அண்ணன் கோபத்துக்கும் ஆளாகவேண்டியதுதான். இந்த கையாலாகாத வி.எச்.பி காரவங்களால் பொது மக்கள் அமைதிதான் கெடும்.
====

you are true...

accepting.

சுவனப்பிரியன் said...

சந்திப்பு!

//read my posting on this matter//

உங்கள் பதிவையும் படித்தேன். இதற்கு பெயர் தீவிரவாதமா அல்லது இதற்கு வேறு பெயர் ஏதும் சூட்டப் போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Anonymous said...

மதக்கலவரத்தை தூண்டி விட்டது சுவாமி லக்ஷ்மானந்தாவை கொலைச்
செய்தவர்கள்.அதற்கு எதிர்வினையாக
செய்யப்பட்ட வன்முறை கண்டிக்கப்பட
வேண்டும்.நீங்கள் அவர் மீதும் குற்றம்
சாட்டுகிறீர்கள்.மத மாற்றம்தான் இந்த சிக்கலின் மூல வேர்.கிறித்துவ அமைப்புகள் பழங்குடியினரை மதம்
மாற்றும் முயற்சிகளை நிறுத்தினால்
அது அனைவருக்கும் நல்லது.

Vajra said...

The Evangelical Project in Orissa

The Case Against Proselytization

இந்தப்பதிவுகளில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் தங்கள் எதிர்வினை என்ன என்பதை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.

Dharan said...

//கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் said... //

கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட் கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தவர்.//


தாய் மதமா? அபப்டின்னா என்ன? பண்டாரங்களின் அதிகாரபிச்சை பிழைப்பிற்கு வலுசேர்க்கும் மதத்திற்கு பெயர் தாய் மதமா? நல்ல காமெடி.

Anonymous said...

இந்த சிக்கல்களுக்கு ஒரு தீர்வு இருக்கிறது.மதமாற்ற முயற்சிகளை
கிறித்துவ அமைப்புகள் கைவிட வேண்டும், குறிப்பாக பழங்குடியினரை மதமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.சமூகசேவை என்பதை
மதமாற்றத்திற்கு பயன்படுத்தக்
கூடாது. இஸ்லாமிய,கிறித்துவ
அமைப்புகள் பிற மதத்தினரை,
பழங்குடியினரை மத மாற்றம்
செய்யும் முயற்சிகளை நிறுத்த
வேண்டும்.இதை இடதுசாரிகள்
வலியுறுத்துவார்களா.

கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் said...

//
dharan said...

தாய் மதமா? அபப்டின்னா என்ன?
//

http://www.tamilhindu.com/

தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களின் தாய் மதம் இந்து தர்மம் தான்.

திராவிட நாய்களைக் காயடிப்போர் சங்கம் said...

//
பண்டாரங்களின் அதிகாரபிச்சை பிழைப்பிற்கு வலுசேர்க்கும் மதத்திற்கு பெயர் தாய் மதமா? நல்ல காமெடி.
//

கண்ட கண்ட கண்டார ஓளிகளின் அதிகாரபிச்சை பிழைப்பிற்கு வலுசேர்க்கும் "கொள்கை" (மதம்) யில் நம்பிக்கை வத்திருக்கும் நாதாரிகள் எல்லாம் இப்படிப் பேசி காமடி செய்ய அருகதையற்றவர்கள்.

Robin said...

//கிறித்துவ அமைப்புகள் பழங்குடியினரை மதம்
மாற்றும் முயற்சிகளை நிறுத்தினால்
அது அனைவருக்கும் நல்லது//- அனைவருக்கும் அல்ல, ஆதிக்க சக்திகளுக்கு நல்லது. மதம் மாறாவிட்டால் அவர்களை அடிமைகளாகவே வைக்க முடியும். மதம் மாறிவிட்டால் கல்வி அறிவும் பெற்று விடுவார்கள். அதன் பின்பு மற்றவர்களுடன் சரிநிகர் சமானமாக மாறிவிடுவார்கள். இதை எப்படி மநுஸ்மிரிதியை பின்பற்றும் ஆதிக்க சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியும்.

கம்யூனிஸ்டுப் பன்னாடைகளை தூக்கிப்போட்டு மிதிப்போர் சங்கம். said...

//
அதன் பின்பு மற்றவர்களுடன் சரிநிகர் சமானமாக மாறிவிடுவார்கள். இதை எப்படி மநுஸ்மிரிதியை பின்பற்றும் ஆதிக்க சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியும்.
//

ராபின் அவர்களே, ஒரிஸாவில் ஆதிக்கசாதியினருக்கும் கீழ் சாதிக் கிருத்துவர்களுக்கும் பிரச்சனை வெடிக்கவில்லை. கீழ் சாதி இந்துக்களுக்கும் அவர்கள் சாதியில் மதம் மாறிய கிருத்துவர்களுக்கும் இடையில் தான் பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா ?

மதம் மாறியவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள், வெளி நாட்டுப் பணத்தால் அவர்கள் அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஆடும் ஆட்டம் அதனால் வரும் சோசியோ எகனாமிக் பிரச்சனைகள் தான் மதக்கலவரமாக வருகிறது.

இப்படிப்பட்ட காம்ப்ளிகேட்டட் உண்மையெல்லாம் ஆதிக்கவர்க்கம், அடங்கிப்போகும் வர்க்கம் என்று வர்க்கப்போராட்டம் பேசும் மார்க்ஸீய ஈயத்தால் அடைபட்ட மூளையில் இறங்காது. விட்டுவிடுங்கள். உங்கள் மூளையும் அதனனைச் சார்ந்த பகுதிகளும் மார்க்ஸீய கிருமி தாக்கி செல்லரித்துவிட்டது என்பது எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டாதீர்கள்.