August 11, 2008

இந்தியாவுக்கு முதல் தங்கம்!


115 கோடி இந்தியர்களின் நீண்ட நாள் கனவு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கப் பதக்கம் கூட கிடைக்காதா? என்று. அந்த கனவு தற்போது குறிதவறாது சுட்டதில் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் பிந்தரா 10 மீட்டர் தூரத்திற்கு சுடும் போட்டியில் முதல் தங்கத்தை இந்தியாவுக்காக ஈட்டிக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.
உலகில் எவ்வளவோ விளையாட்டுப் போட்டிகள் இருந்தாலும் இந்திய இளை"ர்களின் கனவு என்னவோ டெண்டர்கர் போல வரவேண்டும் என்பதுதான். ஏனென்றால் இதில் கிடைக்கும் புகழும், பணமும்தான். மொத்தத்தில் இந்திய மண்டைகளை கிரிக்கெட் மொத்தமாக வழித்து விட்டது.
எதிர்கால இளை"ர்கள் இனியாவது அபினவ் பிந்தரா பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு!
ஆனால் நம்முடைய முதுலாளித்துவ - கார்ப்பரேட் தாதாக்கள்தானே யார் எதை விளையாட வேண்டும்? அந்த விளையாட்டின் மூலம் தங்களுக்கு என்ன இலாபம் என்றுப் பார்த்தல்லவா ஸ்பான்ஸர் செய்கின்றனர்.
இந்திய அரசோ, விளையாட்டுத்துறையோ ஏதோ சிலரை வெளிநாடுகளுக்கு சுற்றுலாச் கொண்டுச் சென்று வந்தோம் என்ற திருப்தி மனப்பான்மையோடுதான் செயல்படுகிறது.
எப்படியோ ஒரு மானமுள்ள இளை"னால் நமக்கு பதக்கம் கிட்டியுள்ளது. அவர் இந்தியா திரும்பிய உடன் மானமில்லாத முதலாளித்து விளம்பரதாரர்கள் அவரை தனதாக்கிக் கொள்வார்கள். இதுதான் உண்மையான அரசியல் விளையாட்டு!

4 comments:

Sen22 said...

Wowww... Congrats Abhinav...

செய்திக்கு மிக்க நன்றி...

தென்றல் said...

வாழ்த்துக்கள், அபினவ் பிந்தரா!

FunScribbler said...

என் நாடு எந்த ஒரு பதக்கத்தையும் இது வரை வாங்கவில்லை. இருந்தபோதிலும், ஒரு இந்தியர் ஒலிம்பிக்ஸில் வென்று இருக்கிறார் என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி இந்த இந்தியருக்கும்!:)

♥ மனிதன்@சென்னை ♥ said...

(இந்திய) கிரிக்கெட் கிறுக்காட்டத்திற்கு ஒலிம்பிக் குழு இடம் கொடுப்பதில்லை என்ற உண்மையையும் உரக்கச் சொல்லுங்கள! தொழரே!!