August 22, 2008

ஆற்காடு வீராசாமியின் அரசியலுக்கு ஹார்வர்டு யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம்!தமிழக அரசியல் கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துள்ளது. தி.மு.க. - இடதுசாரிகளிடையே நடந்து வரும் அறிக்கை போர் உண்மையை நாட்டு மக்களுக்கு உரைப்பதாக உள்ளது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற கருணாநிதி தனது பேனா முனையில் உதிர்த்த கவிதை அவரது உளவியல் அரசியலை படம் போட்டு காட்டியுள்ளது.
"அவாள் நமக்கு எப்போதும் சவால்தான் என்ற உண்மை!" என்று கூறியதோடு இறுதியில் "நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!" என்று முடித்துள்ளார்!

கருணாநிதிக்கு அவாள் என்ற வார்த்தை ஒன்றும் புதிதல்லவே! அவருக்கு எதிராக இந்து பத்திரிகை எழும் போதெல்லாம் இதே பல்லவியைத்தான் அவர் தொடர்ந்து பாடுவார். அதாவது இவரது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவாளாக இருந்தாலும், இவாளாக இருந்தாலும் அவருக்கு அடக்கமாகவும், அவரது விருப்பத்திற்கு ஏற்பவும் நடனம் ஆட வேண்டும். அவ்வடி இருந்தால் அவர் அவாளை தலையில் கூட சுமந்து செல்வார்.

அதைவிட முக்கியமானது கருணாநிதிக்கு பதவி கிடைக்கும் என்றால் அத்வானிக்கு கூட காவடி தூக்குவர். அதைத்தான் 1996-ல் பா.ஜ.க.வோடு நான்கரை ஆண்டுக்காலம் பதவியில் அமர்ந்து அனுபவித்து விட்டு பின்னர் கொள்கை பேசி காங்கிரஸ் பக்கம் தாவி இன்னொரு நான்காண்டுக்காக பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளார்.

தற்போது இருக்கும் பதவியை காப்பாற்றிக் கொள்ள பாபர் மசூதி இடிப்பு குறித்து பேசுகிறார். மதவாதம் ஆபத்து என்று முழங்குகிறார். தோழமை தேவை என்று உதட்டில் உதிர்க்கிறார். 1992 இல் பாபர் மசூதி இடிப்பு குறித்து பேசும் கருணாநிதி குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த மதக்கலவரம் பற்றி வாயே திறக்க மாட்டேன் என்கிறார்! எதற்காக அப்போது அவர் பா.ஜ.க.வின் இணை பிரியாத சங்பரிவார ஒட்டுண்ணி. இப்போதெல்லாம் பா.ஜ.க. இந்துத்துவா கொள்கையை அமலாக்கும் போது இவருக்கு திராவிட கொள்கை என்ற அவாள் எதிர்ப்பு சித்தாந்தம் மறந்துப் போய்விடுகிறது. அது இவருக்கு அடிக்கடி ஏற்படும் நினைவு மறதி நோய்தான்.

இப்போது இவரது அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு தோழர் ரங்கராஜன் போன்ற சி.பி.எம். தலைவர்கள் இணங்கவில்லை என்பதால் நன்றியில்லா நட்பு - நாய்கள் கூட சிரிக்குமய்யா என்கிறார். நாய்கள் சிரிப்பது கிடக்கட்டும் இவரது மதவாத எதிர்ப்பு என்ற கொள்கை வேட்டியைக் கண்டு கோமணம் கூட சிரிப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அடுத்து இவரின் மனசாட்சியாம் ஆற்காடு வீராசாமி இவரது அரசியல் சிந்தனை எப்படிப்பட்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. அது ஊருக்கே வெளிச்சம். இவரை 1975 இல் எமர்ஜென்சியில் கைது செய்து போலீசார் அடித்த போது எப்போதும் போலீசாலின் மேசை காலுக்கும், போலீசாலின் பூட்ஸ் காலுக்கும் அடியில் அழுதுக் கொண்டேயிருபாராம்... அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சிறைக்குள்ளும் போலீஸ் சித்திரவதையை எதிர்த்து போராடிய வரலாறு அனைவரும் அறிந்ததே.

இந்த கொள்கை கோமாளிதான் இப்போது சொல்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் - இடதுசாரிகள் சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறார்களாம், சீன பொருட்கள் எல்லாம் இந்திய சந்தையில் குவிகிறதாம்! இதை கேட்டவுடன் பன்றி கூட சிரிக்கத்தான் செய்யும். கடந்த 10 ஆண்டு காலமாக பா.ஜ.க. - காங்கிரஸ் மந்திரி சபையில் முக்கிய இலாக்களில் உட்கார்ந்துக் கொண்டு ஆட்சி செய்யும் தி.மு.க.வின் பொருளாதார கொள்கைதான் சீனாவை மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாய்களைக் கூட உள்ளே கொண்டு வந்துள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் போய் சீனர்களை அழைத்த வர முடியுமா? அதற்கான அதிகாரம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டா? இந்த அடிப்படை அறிவுகூட கிடையாத ஆற்காட்டார்தான் சீனாவுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள் என்று ஊளையிடுகிறார்.

ஹார்வர்டு யூனிவர்சிட்டிக்கு இந்த விவரம் தெரியுமேயானால் உடனடியாக கூப்பிட்டு அரசியல் அறிவிலிக்கான டாக்டர் பட்டத்தை நிச்சயம் ஆற்காட்டாருக்கு வழங்கும்.

இடதுசாரிகள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்! அடேயப்பா என்னா பெரிய கண்டுபிடிப்பு! தமிழகத்திலிருந்து இடதுசாரிகளுக்கு வெறும் நான்கு சீட்டுகள்தான் டெல்லிக்கு போகிறது. மற்ற இடத்திலிருந்து 56 சிட்டுக்கள் குறிப்பாக மேற்குவங்கம், கேரளா, திரிபுராவிலிருந்து... என்ற அரசியல் கணக்காவுது ஆற்காட்டாருக்கு தெரியுமா? அல்லது தி.மு.க. என்ன அகில இந்திய கட்சி என்ற அந்தஸ்தை பெற்று விட்டது என்ற மணக்கணக்கா? என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

சி.பி.ஐ., சி.பி.எம், பா.ம.க., காங்கிரஸ் என்று பெரி மெகா கூட்டணி வைத்திருந்தபோதே தி.மு.க.வை மக்கள் நம்பவில்லை. அதனால்தான் இன்னும் மைனாரிட்டியாக தி.மு.க. தனியாக உள்ளது. காங்கிரஸ் தயவில் ஒட்டிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இடதுசாரிகளும் - பா.ம.க.வும் இல்லாத நிலையில் யார் காணாமல் போவார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கும். அதுவரை ஆற்காட்டார் இதுபோன்ற அரைவேக்காடான அறிக்கைகளை விடாமல் காத்திருக்க வேண்டும்.

அடுத்து எதிர்கால முதல்வர் என்ற கனவில் மிதக்கும் மு.க. ஸ்டாலின் தொழிலாளர்கள் பிரச்சினையில் குறிப்பாக ஏழை எளிய - தலித் கூலி விவசாயிகள் மத்திய அரசின் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் இந்த ஏழை மக்களிடம் ரூ. 80 ஒரு நாளுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றால் ரூ. 40ம் அதற்கு கீழேயும் கொடுத்து விட்டு இந்த அப்பாவி மக்களை ஏமாற்றும் கொள்ளைப் பேர்வழிகளிடம் இருந்து மக்களை காப்பதற்காக உரிமைக்கு குரல் கொடுத்தால் கம்யூனிஸ்ட்டுகள் புரோக்கர் தொழில் செய்கிறார்கள் என்கிறார். இவர்தான் எதிர்கால முதல்வராம்! சாதாரண மக்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் தொடர்ந்து புரோக்கர் வேலை செய்வார்கள் அதில் பெருமிதமும் கொள்வார்கள். ஆனால் உங்களது கொள்கை மூலம் யாருக்கு புரோக்கர் வேலை செய்கிறீர்கள் என்பதுதான் நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி!

14 comments:

முத்து தமிழினி said...

if communists are going to join ADMK for a few MP seats by giving some nondi saakku then they also have no moral rights to criticize karuna.

முத்து தமிழினி said...

if communists are going to join ADMK for a few MP seats by giving some nondi saakku then they also have no moral rights to criticize karuna.

சந்திப்பு said...

நன்பர் முத்துவுக்கு வணக்கம்.

தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது ஒரு விசயம் மட்டும் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது, பா.ஜ.க. மற்றும் காங்கிரசுடன் கூட்டணியுள்ள கட்சிகளுடன் சி.பி.எம். தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்ளாது.

மேலும், தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் அமையவுள்ள கூட்டணி என்பது ஒரு குறைந்தபட்ச கொள்கையின் அடிப்படையைக் கொண்டதாக இருக்கும். அது வெறும் கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக இருக்காது. எனவே, இந்த அடிப்படையில் தமிழகத்தில் பொருத்தமானவர்களுடன் தொகுதி உடன்பாடு செய்வோம்.

மதவாத பா.ஜ.க.வை தீண்டத்தகாத கட்சி அல்ல என்று சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்றவர் கருணாநிதி என்பது அனைவருக்கும் தெரியும். இவரது திராவிட கொள்கை அல்லது அவாள் கொள்கையெல்லாம் எவ்வளவு உண்மையானது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர்.

எனவே, தமிழகத்தில் அதிமுகவும் தீண்டத்தகாத கட்சியல்ல. அதே சமயம் அதிமுக தமிழகத்தில் ஒரு சாப்ட் இந்துத்துவ கொள்கையைக் கொண்ட தலைமையாக உள்ளது. அதன் தொண்டர்கள் அப்படியில்லை. குறிப்பாக சேது சமுத்திரம், மோடி வரவேற்பு, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு, தொழிலாளர் விரோத கொள்கை இவையெல்லாம் இந்த கட்சியின் மீது இடதுசாரிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இது குறித்தெல்லாம் அதிமுக தெளிவுபடுத்த வேண்டும். எனவே தற்போது சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. இணைந்து தமிழகத்தில் மாற்றுக் கொள்கைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். அது அணுசக்தி ஒப்பந்தம் எதிர்ப்பு, விலைவாசி உயர்வு எதிர்ப்பு என்ற பதாகையை ஏந்திச் செல்கிறது.

சில எம்.பி. சீட்டுக்காக நாங்கள் நொண்டிச் சாக்கு சொல்லத் தேவையில்லை.

கடந்த காலத்தில் இதே கருணாநிதிதான் சி.பி.எம்.க்கு இதயத்தில் இடம் உண்டு. எம்.பி. சீட்டு கிடையாது என்று சொன்னவர். அப்போது கூட நாங்கள் எங்களுக்கு வலுவாக உள்ள மதுரை, வடசென்னையில் நின்றோம். மற்ற இடத்தில் தி.மு.க.வை ஆதரித்தோம். கொள்கைவழியில்.

எனவே சீட்டுக்காக ஒட்டிக் கொள்ளும் அல்லது சங்பரிவாரத்துடன் உறவு கொள்ளும் திராவிட கலாச்சாரம் எங்களிடம் அறவேயில்லை. இதை கேட்க வேண்டியது கருணாநிதியிடம்தான். மேலும், தமிழகத்தில் நாங்கள் உடன்பாடு வைத்தால்கூட எங்களது பலத்திற்கு உட்பட்டுதான் நாங்கள் சீட்டு வாங்க முடியும். அல்லது நிற்க முடியும். 40 இடத்தில் கூட நிற்கலாம் அதனால் என்ன இலாபம்? எனவே அகலக்கால் வைப்பது அல்லது எந்தக் கொள்கை நாட்டை வழிநடத்த வேண்டும். அதற்கு எது உதவும் என்று பார்க்க வேண்டும். எனவே சீட்டுக் கணக்குப் போட்டு கூட்டணி கொள்வது இடதுசாரிகளின் கனவும் அல்ல ஆசையும் அல்ல. உங்களுடையது தவறான புரிதல்.

கருணாநிதியை விமர்சனம் செய்வதற்கு எங்களை விட சிறப்பானவர்களை தமிழகத்தில் காட்ட முடியுமா? கிராமப்புற விவசாயி முதல் விவசாய தொழிலாளி முதல் அணிதிரட்டப்படாத தொழிலாளர் முதல் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர் மாணவர், மாதர் என பல்முனைகளில் இயக்கம் நடத்தும் நாங்கள் தொடர்ந்து இந்த ஆட்சியாளர்களின் கையாலாகத்தனத்தை எதிர்த்து வருகீறோம். அந்த அனுபவத்தில் கேள்வி எழுப்புகிறோம்.

Anonymous said...

வரும் தேர்தலில் இடதுசாரிகள் அதிமுகவுடன் சேர
வாய்ப்பு அதிகம்.2001ல் கூட்டணி
அமைத்து அவரை முதல்வராக
அமர்த்தினீர்கள். அது போல்
இம்முறை நீங்கள் அவர் இந்திய
அரசியலில் உயர உதவப் போகிறீர்கள்.
மாயாவதியும்,ஜெ.யும் உங்கள் உழைப்பில் பலன் பெறுவார்கள்.
அப்புறம் முதுகில் குத்துவார்கள்.

தேர்தலுக்குப் பின் ஜெ. பாஜக அல்லது காங்கிரஸ் பக்கம் போகலாம்.
அப்போது உங்களால் ஒன்றும் செய்ய
முடியாது.காங்கிரஸ்/பாஜகவுடன் திமுக இல்லை என்றால் மீண்டும் திமுகவுடன் சேருவீர்கள்.
இப்படித்தான் பல ஆண்டுகளாக
உங்களுடைய ‘முற்போக்கு' கூட்டணி
அமைகிறது. இதற்கெல்லாம் கொள்கை விளக்கம் கொடுப்பது கொடிய நகைச்சுவை.

Anonymous said...

Dear Santhipu,

Could you CPM promise that in future after 10 or 50 years you wont join DMK, or Congress.

You CPM, CPI are also oppurtunities.

In this Parliamentary Politics All are oppurtunities.

You CPM not having guts to honesty.


Thairiyamaana aatkalaai neengal irunthaal ini jenma jenmathukkum DMK, or ADMK udan sera maattom endru sollunga paarppom.

Mudiyaathulla.

Appa kammunu saaththikine iru.

சந்திப்பு said...

அனானி நன்பரே யாரையும் முதல்வர் பதவியில் அமர்த்தி வைக்கக்கூடிய நிலையில் எங்கள் பலம் இல்லை. அந்தக் காலகட்டத்தில் நிலவும் அரசியல் நிலைமைக்கேற்பவே மக்கள் ஆளும் கட்சியை தேர்வு செய்கிறார்கள். காலத்துக்கு ஒவ்வாதவர்களை மக்கள் எப்போதும் நிராகரித்து விடுவார்கள். எனவே ஏதோ ஒரு கட்சியால்தான் இதுவெல்லாம் முடியும் என்பது போல தாங்கள் நினைத்துக் கொண்டிருப்பது வேடிக்கையானது. அதே ஜெயலலிதா 2006 தேர்தலில் மண்ணைக் கவ்வினார். எதற்காக அவரது மக்கள் விரோத போக்கு அவ்வளவுதான். எனவே மக்களின் எதிரிகள் யாரும் ஆட்சிக் கட்டிலுக்கு வர முடியாது. (குஜராத் ஒரு அபத்தம்)

மேலும் ஜெயலலிதாவின் முடிவு குறித்து நான் எதுவும் சொல்வதற்கு இல்லை.


இறுதியாக கருணாநிதியின் மக்கள் விரோத போக்கால்தான் 2001 இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வர முடிந்தது என்பதையும் சேர்த்துப் பாருங்கள். அப்போது அவர் பா.ஜ.க.வின் இணை பிரியாத பங்காளி.

சந்திப்பு said...

ஆங்கில அனானி தி.மு.கவிலும், அதிமுகவிலும் தமிழக மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக 25 - 40 சதவிகிதம் பேர் இந்த இரண்டு கட்சியில்தான் திரண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை அங்கீகரித்திருக்கிறார்கள். அதாவது உங்கள் கூற்றுப் படி நாங்கள் மக்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டும் என்று சொல்கிறீர்கள். அது முடியாது. தமிழகத்தில் ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மூட்டைக் கட்டிக் கொண்டு 30 வருடம் ஆகி விட்டது. மக்கள் இவர்களை முற்றாக நிராகரித்து விட்டார்கள். எனவே நாங்கள் ஒருபோதும் அவர்களோடு போக மாட்டோம். (கூட்டணி) குறிப்பாக தமிழகத்தில் இடதுசாரி - ஜனநாயக மாற்று அரசியல்தான் எதிர்காலத்தில் சிறந்த மாற்றைக் கொடுக்கும். மேலும் திராவிட இயக்கத்தின் அரசியல் நாளுக்கு நாள் திவாலாகி வருகிறது. அநேகமாக தி.மு.க.வுக்கு இதுவே கடைசி காலமாக இருக்கும் என்று நம்பலாம். இதற்கு பிறகு தி.மு.க. என்ற கட்சி எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது? எனவே இந்த திராவிட இயக்கத்தை மக்கள் நிராகரிக்கும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது.

கரிகாலன் said...

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிப்பது, தமிழ்நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆந்திர நிறுவனங்களுக்கும் தரகுக்கூலி வாங்கிக்கொண்டு கூறுபோட்டு விற்பது இவை மட்டும்தான் தற்போதைய தி.மு.க. ஆட்சியின் தலையாயப்பணி.

மேற்குறிப்பிட்டவைகள் வெளிப்படையாக பொதுமக்களுக்கும் தன்னுடைய கட்சிக்காரர்களுக்கும் தெரியக்கூடாது என்பதற்காக மோடிமஸ்தான் வித்தைகள்தான் இலவச திட்டங்கள்.

தமிழ்நாட்டைச்சுரண்ட மாநிலபொறுப்பு, மாவட்டத்தைச் சுரண்ட மாவட்டப்பொறுப்பு, ஒன்றியங்களை சுரண்ட ஒன்றிய பொறுப்பு இதற்காகத்தான் அவர்களும் கட்சியில் இருக்கிறார்கள் அல்லது அப்படிப்பட்டவர்கள்தான் அப்படிப்பட்ட பொறுப்புகளுக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் தி.மு.க. வின் முப்பெரும்விழாவில் வழங்கப்படும் அண்ணாவிருதுக்கு ஆற்காட்டார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான அளவுகோள் என்ன என்பது முத்தமிழையும் விற்றவருக்குத்தான் தெரியும்...

தி.மு.க.வளர்ச்சியாலும் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகளாலும் தமிழ்நாட்டில் மூன்று மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை:

1. கொண்ட கொள்கைக்காக கைநிறைய பொருளைக் கொண்டுவந்து இயக்கத்திற்காக செலவு செய்து உழைத்தவர்கள் ஓட்டாண்டியாக ஆனார்கள்.

2. வெற்றுக்கையுடன் கிடைத்ததை சுருட்ட நினைத்தவர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து அதிகாரம் பெற்று பலாயிரங்கோடிக்கு அதிபதியானார்கள்.

3.தமிழரல்லாதோரிடம் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டது.

கருணாநிதியும் அவரது கூட்டத்தினரும் பொருள்முதல்வாதிகளோ கருத்துமுதல்வாதிகளோ அல்ல சுரண்டல்வாதிகள்

Anonymous said...

'எனவே இந்த திராவிட இயக்கத்தை மக்கள் நிராகரிக்கும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது'

ஆனால் அதற்கு மாற்றாக உங்களை
முன்னிலைப் படுத்த நீங்கள் தயாரில்லை.அந்தக் கழகம்,அதைவிட்டால் இன்னொரு கழகம் என்று மாறி மாறி கூட்டு சேர்கிறீர்கள். விஜயகாந்த்திற்கு இருக்கும் தைரியம் உங்களுக்கு இல்லை.இப்போது காங்கிரஸ்,
திமுகவை விட்டுவிட்டு அதிமுகவுடன்
சேருவீர்கள்,கூட்டணிக்காக உழைப்பீர்கள்.தேர்தலுக்குப் பிறகு?.நீங்கள் யாரை ஆதரித்தீர்களோ அவர்கள் உழைக்கும் வர்க்கத்தின் முதுகில்
குத்துவார்கள்.
இது அபத்தமாக இல்லையா?

இந்த இரு கழகங்களும் தொழிலாளர்-விவசாயி நலனில் அக்கறை கொண்டவை அல்ல.இரண்டும் பெரும்
முதலாளிகள், தனியார்மயத்தை,உலக
மயத்தை ஆதரிப்பவை.எனவே இரண்டையும் இனி ஆதரிக்கமாட்டோம் என்று சொல்லும் தைரியம் இல்லை.
தனியாக நின்று உங்கள் பலத்தைக்
காட்டுங்கள்.தேர்தல் அரசியலை
விட இயக்கத்தை வலுப்படுத்தவதில்
அக்கறை காட்டுஙகள்.

Anonymous said...

Santhipu,

athaavathu eppadiyaavathu 10 , 15 MLA , 4,5 MP Seat tamilnattula vaanganum.

So election appo kootaniya maathi kinu vesham poduveenga!!!

Appuram summa 4 varusham pozhaippai Otta vendiyathu.
5 varusha aarambathil adutha electionukku ready . So koottani udaippu & new Koottai ready !!!

Kolgai, Makkal Virodham ellam summa udaans !!!

Adhaaney neenga solla varreenga !!!

Adap poyaa ? Unga pozhaippu (CPI,CPM) oorey Naaruthu?

Karunanidhi, jayalalitha molla maaringannu theriyum.
Aana enna seyyurathunnu ?

ithaiye sollikinu iru?

2050, 2100 layum india vula communism varaathu? CPM,CPI irunthaal?by English Anony

சந்திப்பு said...

நன்றி கரிகாலன் மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். இவர்கள் அப்பட்டமான சுரண்டல்வாதிகளே!

சந்திப்பு said...

அனானி நன்பரே இடதுசாரிகள் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு நானும் உடன்படுகிறேன். அநேகமாக இதுதான் அதற்கு சரியான தருணமாக இருக்கும் என்று கருதுகிறேன். நன்றி வாழ்த்துக்கள்

சந்திப்பு said...

அன்புள்ள ஆங்கில அனானி சி.பி.எம். - சி.பி.ஐ. இருந்தால் 2100-ல் கூட கம்யூனிசம் வராது என்று ஆரூடம் கூறியுள்ளீர்கள். நல்லது இது ஆரூடம் மட்டுமே. கிறித்துவர்கள் 2000த்தில் இயேசு வருகிறார் என்றார்கள். அதுபோல்தான் உங்களதும். சி.பி.எம். - சி.பி.ஐ. செய்யும் தவறுகளை சுட்டுங்கள். அல்லது வேறு என்ன மாற்று உள்ளது என்பதை சொல்லுங்கள். வெறுமனே இது வராது என்று சொல்லுவதால் அது வெறும் இடதுசாரிகள் மீதுள்ள தங்களது வெறுப்புதான் வெளிப்படுத்த உதவிடும். அல்லது நீங்கள் விரும்புவது போல் கிணற்றுத் தவளையாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத்தான் வெளிப்படுத்துகிறது.
நன்றி கமெண்ட்டுக்கு.

அவனும் அவளும் said...

******ஜெயலலிதா 2006 தேர்தலில் மண்ணைக் கவ்வினார். எதற்காக அவரது மக்கள் விரோத போக்கு அவ்வளவுதான். எனவே மக்களின் எதிரிகள் யாரும் ஆட்சிக் கட்டிலுக்கு வர முடியாது.

குஜராத் ஒரு அபத்தம்

*********

மேற்குவங்கம் மாதிரியா ?

மக்கள் நல்ல தீர்ப்பு சொல்லுவாங்க அப்படிங்கறது உங்க முடிவுனா, அதுலாயாவது ஒரு ஸ்திரமா நிக்கணும். அத விட்டுட்டு கலைஞர் மாதிரி "அபத்தம்" அப்படின்னு சால்ஜாப்பு சொல்லக்கூடாது.