August 26, 2008

கலாச்சார பாசிசம்!






பாசிசம் சகிப்புத்தன்மையற்றது. அது ஒரு இனத்தின் மீது அல்லது வேற்று மதத்தின் மீது அல்லது வேற்று நாட்டு மக்கள் மீது எப்போதும் நெருப்பையும் - வெறுப்பையும் உமிழ்ந்துக் கொண்டிருக்கும். குறிப்பாக இந்த பாசிசஸ்ட்டுகள் கலாச்சாரத்துறை மீதுதான் அளவுகடந்த வெறுப்பை கக்குவார்கள். கல்வித்துறை, கலை, இலக்கியம் என்று எதையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

இந்தியாவில் இந்துத்துவ பாசிசம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இல்லாவிட்டாலும் அதன் பாசிச வெறிச் செயல் மண்டையில் ஆழமாக ஊறியுள்ளதால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி தங்களது வெறித்தனத்தை காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் சஹமத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச ஓவிய கண்காட்சியில் புகுந்து எம்.எப். ஹுசைனின் ஓவியங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

சர்வதேச அளவிலான ஓவிய கண்காட்சி இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய கலை மாநாடு 2008 என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் 35 அரங்கங்களில் 400க்கும் மேற்பட்ட ஓவிய மற்றும் கலை கண்காட்சிகளை அமைத்திருந்தனர். சர்வதேச புகழ்பெற்ற ஓவியர்கள் இதில் பங்கேற்று தங்களது பண்பாடு, கலை மற்றும் அழகியல் வெளிப்பாடுகளை அற்புதமாக அமைத்திருந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில்தான் இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹுசைனின் ஓவியமும் இடம் பெற்றிருந்தது.

சீரி ராம் சேனா என்ற சங்பரிவார - ஆர்.எஸ்.எஸ். கொலைவெறிக் கூட்டம் பார்வையாளர்கள் போன்று 10 பேர் உள்ளே நுழைந்து திட்டமிட்டு எம்.எப். ஹுசைனின் ஓவியத்தை சேதப்படுத்தியுள்ளனர். உடைத்துள்ளனர். கிழித்தெறிந்துள்ளனர். தலைநகர் டெல்லியிலேயே சங்பரிவாரம் இத்தகைய கோர மதவெறித்தனத்தை காட்டுகிறது என்றால் நாட்டின் மற்ற இடங்களில் அதன் வெறித்தனத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்.

சில மாதங்களுக்கு முன்பு இதே டெல்லியில்தான் மதவெறியர்கள் - பாசிச சன்னியாசி கும்பல் ஒன்று சி.பி.எம். அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. டெல்லியில் உள்ள போலீசாருக்கும், உளவுத்துறையினரும் சங்பரிவாரத்தின் நடவக்கைகளை கண்காணிக்கிறார்களா? இல்லையா? என்ற சந்தேகமே மேலெழுகிறது. இவையெல்லாம் அரசியல் நடவடிக்கை என்று வேடிக்கை பார்க்கிறார்களா? இந்த பாசிச மதவெறியர்களின் செயலினை மத்திய அரசும், மாநில அரசுகளும் வேடிக்கை பார்ப்பது அதன் மதவெறித்தனத்திற்கு மறைமுகமாக தீனி போடுவதாகவே ஆகும்.

ஏதே இந்த மதவெறியர்கள் இசுலாமியரான ஹுசைனுக்கு எதிராக மட்டும்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த பாசிச சங்பரிவார கும்பல் ஏற்கனவே சாயாஜீ சரபோஜீராவ் ஓவிய கல்லூரின் இறுதித் தேர்விலி சந்திரமோகன் என்ற ஓவிய கல்லூரி மாணவன் வைத்த ஓவியங்களை அடித்து நொறுக்கியதோடு. அந்த அப்பாவி மாணவன் மீதும் தாக்குதல் நடத்தியது. எனவே பாசிசம் என்பது எதிர் கருத்தை ஒருபோதும் அனுமதியாது. அதற்கு ஜனநாயக வடிவம் என்றால் என்னவென்றே தெரியாதுது. அவர்களிடம் நாம் ஜனநாயகத்தை ஒருபோதும் எதிர்பார்க்க கூடாது.

 இந்த மதவெறியர்களின் பாசிச நடவடிக்கைகளை இந்த ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள யேல் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற விமர்சகர் ராபர்ட் ஸ்டோர் கடுமையாக கண்டனம் செய்துள்ளார். அவர் கூறும் போது, சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும் இதுபோன்ற கலை நடவடிக்கைகளை கூட அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மதச்சார்பற்ற கொள்கைகளுக்காக நிற்பதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இதர ஜனநாயக சக்திகளோ இந்த இந்துத்துவ மதவெறியர்களுக்கு எதிராக தங்களது சுண்டு விரலைக் கூட நீட்ட வில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளதோடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கலாச்சார பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள ஓவியர்கள் ஓரணியில் திரள வேண்டும். இவர்களால் எத்தனை ஓவியங்களை சிதைக்க முடியும். உங்களது தூரிகைகள் இந்த வெறியர்களின் முகத்திரையை மக்கள் முன் அம்பலப்படுத்துவதாக அமையட்டும். ஒரு ஓவியர் ஒரு ஓவியம் என்று இந்த மதவெறியர்களுக்கு எதிராக படைத்து அதனை அனைத்து மீடியாக்களிலும் இடம் பெறச் செய்ய வேண்டும். சாலையோரங்களில், வலைப்பதிவுகளில், பத்திரிகைகளில்... என்று அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த பாசிச வெறியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

புதிய தசரதனின் பதவித் துறப்பு

பழ. நெடுமாறன்

கம்பன் எழுதிய காவியத்தின் தனிச் சிறப்பாகக் கருதப்படுவது ஒவ்வொரு பாத்திரத்தின் பண்பு நலன்களைச் சில சொற்களால் சுட்டிக்காட்டுவதே ஆகும்.

தசரத மன்னன் தனது மூத்த மைந்தன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்த சூழ்நிலையை மிக அற்புதமாகப் பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறார்.

மன்னனே யவனியை மகனுக்கீத்து நீ

பன்னருந் தவம்புரி பருவ மீதெனக்

கன்ன மூலத்தினிற் கழற வந்தென

மின்னெனக் கருமை போய் வெளுத்ததோர் மயிர்

""மூத்த மகனாகிய இராமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சிறப்புமிக்க தவ வாழ்வை மேற்கொள்வதற்கு ஏற்ற முதிர்ந்த பருவம் அடைந்துவிட்டாய் என்பதை அவனது காதோரத்தில் ரகசியமாகக் கூற வந்ததைப் போல மயிர் ஒன்று மின்னலைப்போல வெளுத்து நரைத்துத் தோன்றலாயிற்று' என பாடுகிறான் கம்பன்.

கண்ணாடியின் முன் நின்ற தசரதன் காதோரத்தில் ஒரேயொரு முடி நரைத்துக் காட்சியளித்ததைப் பார்த்தவுடனேயே முதிய பருவத்தை அடைந்து விட்டதை உணர்கிறான். உடனடியாக அரியணையில் இருந்து இறங்கித் துறவுக் கோலம் பூணுவது குறித்து சிந்திக்கிறான். குலகுருவான வசிட்ட மாமுனிவரையும், அமைச்சர்களையும் அழைக்கிறான். அவர்களும் விரைந்து வந்து கூறுகிறார்கள். அப்படிக் கூடியவர்கள் நடுவே தனது மனக் கருத்துகளை தசரதன் வெளியிடுகிறான். இந்த இடத்தில் தசதரனின் மிக உயர்ந்த பண்பு நலன்களைச் சுட்டிக்காட்டும் வண்ணம் கம்பனின் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.

இறந்திலன் செருக்கலத் திராமன் தாதைதான்

அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்

துறந்தில னென்பதோர் சொல்லுண் டாயபின்

பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ

""இராமனின் தந்தையான தசரதன் போர்க்களத்தில் இறந்தானில்லை. முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் பற்றுகளைத் துறந்தானில்லை என்பதாகிய ஒரு பழிச்சொல் உண்டான பிறகும் வாழ்வது சரியோ' என்கிறான்.

ஒரேயொரு நரை மயிர் தோன்றியதைக் கண்டவுடனேயே முதுமை அடைந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்க மைந்தனுக்கு முடி சூட்ட நினைக்கிறான் தசரதன். இன்னும் பற்றுகளைத் துறக்காத பாவியாக அரியணையில் தொடர்ந்து அமர்ந்திருக்க அவன் விரும்பவில்லை. தசரதனின் உயர்ந்த பண்பு நலன்களை இவ்வாறு சுட்டிக்காட்டி வியக்கிறான் கம்பன்.

கம்பன் கண்ட தசரதன் அவன். ஆனால், இன்று புதிய தசரதனாக முதல்வர் கருணாநிதி காட்சி தருகிறார்.

'5' முறை முதலமைச்சராக இருந்து விட்டேன். இனி அடுத்த முறை முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை' யெனத் திடீரென அறிவித்திருக்கிறார். இதுபோன்ற வேளைகளில் அவர் வழக்கமாக பேசும் பேச்சா? அல்லது உண்மையிலேயே அப்படிக் கூறுகிறாரா? என்பது விவாதத்திற்கு உரியதாகும். 1993 ஆம் ஆண்டில் கழகத்திலிருந்து வைகோவும் அவரது தோழர்களும் விலக்கப்பட்ட வேளையில் அரசியலிலிருந்தே நான் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தவர் கருணாநிதியே ஆவார். ஒரு வாரம் கழித்து வழக்கம் போல தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்.

2001 ஆம் ஆண்டில் இதுதான் நான் கடைசியாக நிற்கும் தேர்தல் எனக் கூறினார். ஆனால், 2006 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் போட்டியிட்டார். 2008 ஆம் ஆண்டில் தனக்குப் பிறந்தநாள் விழா வேண்டாம் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல கழகத் தொண்டர்கள் அலறியடித்துக்கொண்டு அய்யோ அப்படிக் கூறாதீர்கள் நாடு தாங்காது. நாங்களும் தாங்க மாட்டோம் எனக் கெஞ்சினார்கள். பிறகு அவரது பிடிவாதம் தளர்ந்தது. உங்களுக்காக எனக் கூறி பிறந்தநாள் விழாவுக்கு ஒப்புக்கொண்டார். இது அவருக்கே ஆகி வந்த கலையாகும்.

ஆனால் மீண்டும் முதல்வர் பதவி ஏற்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறிய பிறகு நாட்டிலும், கழகத்திலும் எத்தகைய பிரளயமும் ஏற்பட்டுவிடவில்லை. இது ஏன்?

""நியாயம் தானே! முதிய வயதில் இனி அவர் ஓய்வெடுத்துக் கொள்வது நாட்டுக்கும் நல்லது அவருக்கும் நல்லது' என நினைத்து அனைவரும் அமைதிகாத்து விட்டார்களா? முதுமையின் காரணமாக இவ்வாறு கூறியுள்ளாரே தவிர பதவிப் பற்றினை வெறுத்தோ, இளைய தலைமுறைக்கு வழிவிட்டு கழகத்தில் தான் முன்மாதிரியாகத் திகழ்ந்தால் மற்றவர்களும் அதன்படி அமைச்சர் பதவிகளிலிருந்தும், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலக முன்வருவார்கள் என நினைத்தோ இவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்சினைகள், ஈழத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கச்சதீவுப் பிரச்சினை, சேது கால்வாய் பிரச்சினை போன்ற உண்மையான மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நிலைமையில் இவ்வாறு கூறினாரா? அல்லது தீராத இப்பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இவ்வாறு கூறினாரா? என்பதும் புரியாத புதிர்தான்.

சக அமைச்சர்கள் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் அடுக்கடுக்காக எழுப்பப்படும் ஊழல் புகார்களைக் கண்டு மனம் நொந்த நிலையில் பதவி விலக முடிவெடுத்திருக்க முடியாது. ஏனெனில் இவரது குடும்ப அதிகார மையங்களின் ஊழலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அமைச்சர்களையும் விஞ்சிவிட்டது.

தவறுகளை இடைவிடாது சுட்டிக்காட்டிய பா.ம.க.வை கூட்டணியிலிருந்து வெளியேற்றியாகிவிட்டது. கம்யூனிஸ்டுகளும் வெளியேறத் தயாராகி வருகிறார்கள். எஞ்சியிருக்கும் காங்கிரஸ் கட்சியிலோ பல்வேறு குழுக்களின் ஓய்வு ஒளிச்சல் இல்லாத மோதல்! மனிதர் பாவம் வயதான நிலையில் என்னதான் செய்வார்? அதனால் இந்த முடிவெடுத்தாரா என்பது அவருக்கு மட்டுமே புரியக் கூடியது.

அடுத்த தேர்தலில் திமு. காவுக்கு பெரும்பான்மை கிடைத்து கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்க முற்படும்போது தான் மீண்டும் முதல்வராக வர விரும்பவில்லை என பேச வேண்டிய பேச்சை இப்போது பேச வேண்டியது எதற்காக? என்ன நோக்கத்திற்காக?

அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட இவருடன் கூட்டுச் சேருமா வேறு கட்சிகளைத் துணைக்கு அழைக்குமா என்ற நிலையில் தி.மு.க.வின் வெற்றி பெரிய கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மீண்டும் முதல்வராக வர விருப்பமில்லை என்று கூறுவது நகைப்புக்கிடமானது.

ஒருவேளை முதல்வர் பதவியைத் துறக்க நேரிட்டாலும், கழகத் தலைவர் பதவியை ஒருபோதும் உதறித் தள்ளத் துணியமாட்டார்.அப்போதுதான் ஆட்சியும், கழகமும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்ற சூட்சுமத்தை அறியாதவரா அவர்?

இராமாயண கால தசரதனுக்கு இந்த சூட்சுமங்கள் புரிந்திருக்கவில்லை. எனவேதான் காதருகே ஒரேயொரு மயிர் நரைத்ததைப் பார்த்தவுடன் ஆட்சியைத் துறக்கத் துணிந்தான். தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான். இவ்வளவுக்கும் பரம்பரை பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்ட மரபுப்படி அவனுக்குக் கிடைத்த அரியணை அது. அவன் தலை சாயும் வரை அமர்ந்திருக்கலாம். யாரும் அவனைக் கீழிறங்கச் செய்ய முடியாது. ஆனால், தசரதன் தானே முன் வந்து அரியணையைத் துறக்க முற்படுகிறான்.

ஆனால் ஜனநாயக நாட்டில் புதிய தசரதனுக்குப் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும் மற்றவர்களுக்குப் போக்குக்காட்டி ஏமாற்றவும் தெரியும். எனவே அவர் பதவி நாற்காலியில் தொடர்கிறார்.


ஒரிசாவில் மதக்கலவரத்தை தூண்டும் சங்பரிவாரம்!


சங்பரிவாரத்தின் முக்கிய அமைப்பான விஸ்வ ஹீந்து பரிஷத் நாடு முழுவதும் மதக்கலவரத்தை தூண்டும் நடவடிக்கையில் முன்னணியில் நிற்கும் அமைப்பு. அது தற்போது ஒரிசாவை குறிவைத்து தனது தாக்குதலை துவக்கியுள்ளது.

ஒரிசாவில் உள்ள பார்கார்க் மாவட்டத்தில் திங்கட்கிழமை (25.08.2008) கிறித்துவ மிஷீனரியால் நடத்தப்பட்டு அநாதை ஆசிரமத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் அந்த ஆஸ்ரமத்தில் சமையல் வேலை செய்து வந்த 45 வயது பெண் உடல் கருகி இறந்துள்ளார். இந்த கொலை பாதக செயல் விஸ்வ ஹீந்து பரிஷத்துக்கு புதியது அல்ல என்பதை நாடு அறியும்.

1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது மகனையும் ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரோடு எரித்த பாசிச வெறியர்கள்தான் இந்த சங்பவரிவார கும்பல். அத்துடன் ஒரிசாவில் உள்ள பல்வேறு கிறித்துவ சர்ச்சுக்களையும் இடித்ததோடு, கன்னியாஸ்திரிகளை கற்பழித்து தங்களது இந்துத்துவ கலாச்சாரம் எவ்வளவு உயர்வாது என்பதை காட்டியவர்கள்தான் இந்த மோடித்துவவாதிகள்.

தற்போது அதே பாணியில் ஒரிசாவில் கிறித்துவர்களை தாக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்ற வி.எச்.பி. மதவாதத் தலைவர் கடந்த பல ஆண்டுகளாக மத மாற்றத்திற்கு எதிராகவும், பசு வதைக்கு எதிராகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்துள்ளார். அதாவது சிறுபான்மை கிறித்துவ மதத்திற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை நடத்தி வந்துள்ளார். காந்தமால் மாவட்டத்தில் பல முறை இவரால் மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 28 அன்று இவரும் இவருடன் நேர்ந்து நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு மாவோயிஸ்ட்டுகள் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை காரணமாக வைத்துக் கொண்டு ஒரிசாவில் பந்த் என்ற பெயரால் சிறுபான்மை சர்ச்சுகளையும், சிறுபான்மையினர் மீதும் கொலை வெறித் தாக்குதலை தொடுத்துள்ளது வி.எச்.பி. 2002 ஆம் ஆண்டு இதேபோல்தான் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டதாக கூறி குஜராத்தை ரணகளமாக்கி 2000க்கும் மேற்பட்ட இசுலாமியர்களை படுகொலை செய்தது. இசுலாமிய பெண்களை கற்பழித்தது. கர்ப்பினிகளை கொலை செய்தது. மசூதிகளை இடித்து தரை மட்டமாக்கியது மோடித்துவா என்கிற இந்துத்துவா.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற மதக்கலரவங்களை இந்துத்துவாதிகள் திட்டமிட்டு ஆங்காங்க நடத்துவார்கள். மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்துவதன் மூலம்தான் தங்களால் ஆட்சிக்கு வர முடியும் என்று கனவு கன்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காஷ்மீரில் அமர்நாத் நிலப் பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் இசுலாமிய மதத்திற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை நடத்தி வரும் பா.ஜ.க. மற்றும் சங்பவரிவாரம் தற்போது கிறித்துவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். எனவே இந்த மதவெறி பாசிசத்திற்கு எதிராக விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டியது மதச்சார்பற்ற - ஜனநாயக - இடதுசாரி சக்திகளின் கடமையாகிறது.

August 22, 2008

ஆற்காடு வீராசாமியின் அரசியலுக்கு ஹார்வர்டு யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம்!



தமிழக அரசியல் கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துள்ளது. தி.மு.க. - இடதுசாரிகளிடையே நடந்து வரும் அறிக்கை போர் உண்மையை நாட்டு மக்களுக்கு உரைப்பதாக உள்ளது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற கருணாநிதி தனது பேனா முனையில் உதிர்த்த கவிதை அவரது உளவியல் அரசியலை படம் போட்டு காட்டியுள்ளது.
"அவாள் நமக்கு எப்போதும் சவால்தான் என்ற உண்மை!" என்று கூறியதோடு இறுதியில் "நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!" என்று முடித்துள்ளார்!

கருணாநிதிக்கு அவாள் என்ற வார்த்தை ஒன்றும் புதிதல்லவே! அவருக்கு எதிராக இந்து பத்திரிகை எழும் போதெல்லாம் இதே பல்லவியைத்தான் அவர் தொடர்ந்து பாடுவார். அதாவது இவரது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவாளாக இருந்தாலும், இவாளாக இருந்தாலும் அவருக்கு அடக்கமாகவும், அவரது விருப்பத்திற்கு ஏற்பவும் நடனம் ஆட வேண்டும். அவ்வடி இருந்தால் அவர் அவாளை தலையில் கூட சுமந்து செல்வார்.

அதைவிட முக்கியமானது கருணாநிதிக்கு பதவி கிடைக்கும் என்றால் அத்வானிக்கு கூட காவடி தூக்குவர். அதைத்தான் 1996-ல் பா.ஜ.க.வோடு நான்கரை ஆண்டுக்காலம் பதவியில் அமர்ந்து அனுபவித்து விட்டு பின்னர் கொள்கை பேசி காங்கிரஸ் பக்கம் தாவி இன்னொரு நான்காண்டுக்காக பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளார்.

தற்போது இருக்கும் பதவியை காப்பாற்றிக் கொள்ள பாபர் மசூதி இடிப்பு குறித்து பேசுகிறார். மதவாதம் ஆபத்து என்று முழங்குகிறார். தோழமை தேவை என்று உதட்டில் உதிர்க்கிறார். 1992 இல் பாபர் மசூதி இடிப்பு குறித்து பேசும் கருணாநிதி குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த மதக்கலவரம் பற்றி வாயே திறக்க மாட்டேன் என்கிறார்! எதற்காக அப்போது அவர் பா.ஜ.க.வின் இணை பிரியாத சங்பரிவார ஒட்டுண்ணி. இப்போதெல்லாம் பா.ஜ.க. இந்துத்துவா கொள்கையை அமலாக்கும் போது இவருக்கு திராவிட கொள்கை என்ற அவாள் எதிர்ப்பு சித்தாந்தம் மறந்துப் போய்விடுகிறது. அது இவருக்கு அடிக்கடி ஏற்படும் நினைவு மறதி நோய்தான்.

இப்போது இவரது அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு தோழர் ரங்கராஜன் போன்ற சி.பி.எம். தலைவர்கள் இணங்கவில்லை என்பதால் நன்றியில்லா நட்பு - நாய்கள் கூட சிரிக்குமய்யா என்கிறார். நாய்கள் சிரிப்பது கிடக்கட்டும் இவரது மதவாத எதிர்ப்பு என்ற கொள்கை வேட்டியைக் கண்டு கோமணம் கூட சிரிப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அடுத்து இவரின் மனசாட்சியாம் ஆற்காடு வீராசாமி இவரது அரசியல் சிந்தனை எப்படிப்பட்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. அது ஊருக்கே வெளிச்சம். இவரை 1975 இல் எமர்ஜென்சியில் கைது செய்து போலீசார் அடித்த போது எப்போதும் போலீசாலின் மேசை காலுக்கும், போலீசாலின் பூட்ஸ் காலுக்கும் அடியில் அழுதுக் கொண்டேயிருபாராம்... அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சிறைக்குள்ளும் போலீஸ் சித்திரவதையை எதிர்த்து போராடிய வரலாறு அனைவரும் அறிந்ததே.

இந்த கொள்கை கோமாளிதான் இப்போது சொல்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் - இடதுசாரிகள் சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறார்களாம், சீன பொருட்கள் எல்லாம் இந்திய சந்தையில் குவிகிறதாம்! இதை கேட்டவுடன் பன்றி கூட சிரிக்கத்தான் செய்யும். கடந்த 10 ஆண்டு காலமாக பா.ஜ.க. - காங்கிரஸ் மந்திரி சபையில் முக்கிய இலாக்களில் உட்கார்ந்துக் கொண்டு ஆட்சி செய்யும் தி.மு.க.வின் பொருளாதார கொள்கைதான் சீனாவை மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாய்களைக் கூட உள்ளே கொண்டு வந்துள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் போய் சீனர்களை அழைத்த வர முடியுமா? அதற்கான அதிகாரம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டா? இந்த அடிப்படை அறிவுகூட கிடையாத ஆற்காட்டார்தான் சீனாவுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள் என்று ஊளையிடுகிறார்.

ஹார்வர்டு யூனிவர்சிட்டிக்கு இந்த விவரம் தெரியுமேயானால் உடனடியாக கூப்பிட்டு அரசியல் அறிவிலிக்கான டாக்டர் பட்டத்தை நிச்சயம் ஆற்காட்டாருக்கு வழங்கும்.

இடதுசாரிகள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்! அடேயப்பா என்னா பெரிய கண்டுபிடிப்பு! தமிழகத்திலிருந்து இடதுசாரிகளுக்கு வெறும் நான்கு சீட்டுகள்தான் டெல்லிக்கு போகிறது. மற்ற இடத்திலிருந்து 56 சிட்டுக்கள் குறிப்பாக மேற்குவங்கம், கேரளா, திரிபுராவிலிருந்து... என்ற அரசியல் கணக்காவுது ஆற்காட்டாருக்கு தெரியுமா? அல்லது தி.மு.க. என்ன அகில இந்திய கட்சி என்ற அந்தஸ்தை பெற்று விட்டது என்ற மணக்கணக்கா? என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

சி.பி.ஐ., சி.பி.எம், பா.ம.க., காங்கிரஸ் என்று பெரி மெகா கூட்டணி வைத்திருந்தபோதே தி.மு.க.வை மக்கள் நம்பவில்லை. அதனால்தான் இன்னும் மைனாரிட்டியாக தி.மு.க. தனியாக உள்ளது. காங்கிரஸ் தயவில் ஒட்டிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இடதுசாரிகளும் - பா.ம.க.வும் இல்லாத நிலையில் யார் காணாமல் போவார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கும். அதுவரை ஆற்காட்டார் இதுபோன்ற அரைவேக்காடான அறிக்கைகளை விடாமல் காத்திருக்க வேண்டும்.

அடுத்து எதிர்கால முதல்வர் என்ற கனவில் மிதக்கும் மு.க. ஸ்டாலின் தொழிலாளர்கள் பிரச்சினையில் குறிப்பாக ஏழை எளிய - தலித் கூலி விவசாயிகள் மத்திய அரசின் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் இந்த ஏழை மக்களிடம் ரூ. 80 ஒரு நாளுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றால் ரூ. 40ம் அதற்கு கீழேயும் கொடுத்து விட்டு இந்த அப்பாவி மக்களை ஏமாற்றும் கொள்ளைப் பேர்வழிகளிடம் இருந்து மக்களை காப்பதற்காக உரிமைக்கு குரல் கொடுத்தால் கம்யூனிஸ்ட்டுகள் புரோக்கர் தொழில் செய்கிறார்கள் என்கிறார். இவர்தான் எதிர்கால முதல்வராம்! சாதாரண மக்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் தொடர்ந்து புரோக்கர் வேலை செய்வார்கள் அதில் பெருமிதமும் கொள்வார்கள். ஆனால் உங்களது கொள்கை மூலம் யாருக்கு புரோக்கர் வேலை செய்கிறீர்கள் என்பதுதான் நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி!

August 15, 2008

கமலாலய காவிக் கம்பத்தில் தேசிய கொடி!

நம் தேசத்தின் 61வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வரும் வேளையில், தேசிய கட்சியான பா.ஜ.க.வின் மாநில அலுவலகமான கமலாலயத்தில் இன்று காவிமயமான (காவி - பச்சை நிறக் கம்பம்) பா.ஜ.க. கொடி கம்பத்திலேயே தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். அதன் மாநிலத் தலைவர் இல. கணேசன் உட்பட பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
தேசிய கொடியை உபயோகிப்பது குறித்து 2002 ஆம் ஆண்டு 'இந்திய கொடிச் சட்டம் 2002' கொண்டுவரப்பட்டது. அதாவது, தேசிய கொடியை அதற்கே உரிய கண்ணியத்தோடும், விசுவாசத்தோடும், மரியாதையோடும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளது. குறிப்பாக அதனை கண்ட நேரத்தில், கண்ட இடங்களில் எல்லாம் பயன்படுத்தக்கூடாது என்றும், ஏன் சட்டையின் டிசைனாகவோ அல்லது நிறுவனங்களின் விளம்பரங்களிலோ பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளதோடு, அது ஏற்றப்படும் கொடிக்கம்பம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
தேசிய கொடியை பயன்படுத்துவது சம்பந்தமான சட்டத்தை கீழ்க்கண்ட இணையதளத்தில் படித்துக் கொள்ளலாம்.
http://india.gov.in/outerwin.htm?id=http://mha.gov.in/pdfs/flagcodeofindia.pdf
ஆறு ஆண்டுக்காலம் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதுதான் இந்த சட்டமே கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழக பா.ஜ.க. தலைமை இது குறித்து எந்தவிதமான கவலையும் படாமல் பா.ஜ.க. கொடி கம்பத்திலேயே தேசிய கொடியை ஏற்றியுள்ளது. தேசிய கொடியை அவமதித்த பெரும் குற்றமாகும்!
இந்த தேசிய கொடியை அவமதித்த குற்றத்திற்காக பா.ஜ.க. தலைமை மீது நம்முடைய நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்குமா? எடுக்க வேண்டும்!


அகண்ட பாரத இந்து தேசியம் பற்றி மட்டுமே கனவு கண்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் அருமை தெரியுமா? என்ற கேள்விதான் எழுகிறது!

August 13, 2008

சிங்காரவேலர் சிந்தனைக் கழகம்
நடத்தும் டி.டி. கோசாம்பி நூற்றாண்டு சிறப்பு கூட்டம்

இன்று மாலை (13.08.2008) புதன் கிழமை 06.00 மணி

ஒளவை கலைக் கழகம்
15/9, சோமு செட்டித் தெரு, 4வது தெரு, இராயபுரம் சென்னை - 13.
(இராயபுரம் காவல் நிலையம் எதிரில்)
(இராயபுரம் சுழல் மெத்தை அருகில்)

கோசாம்பி பார்வையில்வரலாறும் சமுதாய மாற்றமும்
தோழர் வ. கீதா

கோசாம்பி பார்வையில்அறிவியலும் - பண்பாடும்
தோழர் என். குணசேகரன்

அனைவரும் வருக!

"நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் அல்ல; ஆனால், ஒரு அரசியல் செயற்பாட்டாளன் என்ற எனது இந்திய இந்திய வரலாறு பற்றிய புரிதலுக்கு நான் டி.டி. கோசாம்பியை நாடினேன்."
-இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

August 11, 2008

இந்தியாவுக்கு முதல் தங்கம்!


115 கோடி இந்தியர்களின் நீண்ட நாள் கனவு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கப் பதக்கம் கூட கிடைக்காதா? என்று. அந்த கனவு தற்போது குறிதவறாது சுட்டதில் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் பிந்தரா 10 மீட்டர் தூரத்திற்கு சுடும் போட்டியில் முதல் தங்கத்தை இந்தியாவுக்காக ஈட்டிக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.
உலகில் எவ்வளவோ விளையாட்டுப் போட்டிகள் இருந்தாலும் இந்திய இளை"ர்களின் கனவு என்னவோ டெண்டர்கர் போல வரவேண்டும் என்பதுதான். ஏனென்றால் இதில் கிடைக்கும் புகழும், பணமும்தான். மொத்தத்தில் இந்திய மண்டைகளை கிரிக்கெட் மொத்தமாக வழித்து விட்டது.
எதிர்கால இளை"ர்கள் இனியாவது அபினவ் பிந்தரா பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு!
ஆனால் நம்முடைய முதுலாளித்துவ - கார்ப்பரேட் தாதாக்கள்தானே யார் எதை விளையாட வேண்டும்? அந்த விளையாட்டின் மூலம் தங்களுக்கு என்ன இலாபம் என்றுப் பார்த்தல்லவா ஸ்பான்ஸர் செய்கின்றனர்.
இந்திய அரசோ, விளையாட்டுத்துறையோ ஏதோ சிலரை வெளிநாடுகளுக்கு சுற்றுலாச் கொண்டுச் சென்று வந்தோம் என்ற திருப்தி மனப்பான்மையோடுதான் செயல்படுகிறது.
எப்படியோ ஒரு மானமுள்ள இளை"னால் நமக்கு பதக்கம் கிட்டியுள்ளது. அவர் இந்தியா திரும்பிய உடன் மானமில்லாத முதலாளித்து விளம்பரதாரர்கள் அவரை தனதாக்கிக் கொள்வார்கள். இதுதான் உண்மையான அரசியல் விளையாட்டு!

August 09, 2008

பாசிசத்துடன் கள்ள உறவு கொள்ளும் நக்சலிசம்!


நக்சலிசம் வழக்கொழிந்த சித்தாந்தம். இதன் சீரழிந்த நடைமுறை அரசியலால் பல பிரிவுகளாக சிதறுண்டுப் அடிச்சுவடு தெரியாமல் மறைந்து வருகிறது. மேலும் இந்த அதிதீவிர புரட்சியாளர்கள் நடைமுறையில் ஒரு அரை பாசிச பயங்கரவாத செயலையே மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான அடிப்படை ஆதரம் தற்போது நக்சலிச - மாவோயயிஸ்ட்டு முகாமிலிருந்தே கிடைத்துள்ளது.
மும்பையில் செயல்பட்டு வந்த சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) நக்சலைட் அருண் தாமஸ் பெரைரோ என்பவனை கடந்த ஆண்டு (மே 8, 2007) மும்பையில் பிடிபட்டான். இவரிடம் இருந்து நக்சலிச தலைவர்கள் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நார்கோ அனலிசஸ் என்ற சோதனை மூலம் பல்வேறு உண்மைகள் அப்போதே தெரியவந்தது. தற்போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இந்த மாவோயிச நக்சலிசவாதிகள் இந்துத்துவ பயங்கரவாத - பாசிச அமைப்பான சிவசேனாவிடம் இருந்து நிதி பெறுவதாகவும், குறிப்பாக அதன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. மற்றும் சாம்னா பத்திரிகை நிர்வாகிகள் மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்ரே உட்பட பலரிடம் இருந்தும் மறைமுகமாக தங்களது நடவடிக்கைகளுக்காக நிதி பெறுவதாக பெங்களூரில் நடத்தப்பட்ட இரண்டாவது நார்கோ அனலிசசில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிவசேனா பால்தாக்கரே ஆரம்பகாலத்தில் தமிழர்களுக்கு எதிராகவும், தென்னிந்தியர்களுக்கு எதிராகவும் பாசிச இரத்தவெறித் தாக்குதலை தொடுத்து - அதன் மூலம் மதவெறியையும் - இனவெறியையும் பயன்படுத்தி அரசியலில் தன்னை தக்க வைத்துக் கொண்ட பாசிச அமைப்பு. மேலும் இதன் அடிப்படை நோக்கமே கம்யூனிசத்திற்கு எதிரானது. குறிப்பாக மும்பையில் உழைக்கும் மக்ளுக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சாலைகளில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வலுவாக வளர்ந்த வந்த சுழலில் - கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் நடவடிக்கை அதிகரித்த நிலையில் குட்டி முதலாளித்துவவாதிகள் இந்த பால்தாக்கரே மூலம் கம்யூனிஸ்ட்டுகளையும் வேட்டையாடினான். ஏன் சி.பி.ஐ.-யைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரைக் கூட படுகொலை செய்த அமைப்புதான் இந்த சிவசேனா.
தற்போது வடமாநில மக்களுக்கு எதிராகவும், குறிப்பாக பீகாரிகளுக்கு எதிராக ரத்தவெறியாட்டம் போட்டதை யாரும் மறக்க முடியாது. இத்தகைய இனவெறி பிடித்த - மதவெறிப்பிடித்த - கம்யூனிச விரோதியான சிவசேனாவிடம் இருந்து நிதி பெற்று தன்னுடைய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ளும் இந்த அதிதீவிர நக்சலிசவாதிகளின் கொள்கைக எப்படி சீரழிந்துள்ளது என்பதற்கு இது இரண்டாவது நிகழ்வு.
நந்திகிராமில் சி.பி.ஐ.(எம்)க்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பா.ஜ.க., மமதா, இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் கைகோர்த்து அத்வானியை நக்சலிச செங்கொடி கொண்டு வரவேற்றபோதே இவர்களது உண்மையான முகமூடி நாட்டு மக்களுக்கு தெரியவந்தது.
தமிழகத்தில்கூட இந்த மாவோயிஸ்ட்டுகளின் தவறான நிலைபாட்டை ஏற்காக அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள். மாவோயிசம் தமிழகத்திற்கு ஒத்துவராது என்று அந்த அமைப்பை விட்டு விலகி வேறு அமைப்பைத் துவக்கி விட்டனர். மொத்தத்தில் மக்களுக்குள் மக்களாக வேலை செய்யாத எந்த அமைப்பும் கற்பனாவாத வாய்வீச்சு புரட்சிகர அமைப்பாக மட்டுமே இருக்க முடியும். அல்லது இதுபோல் யாருடைய தயவிலாவது நிதி பெற்றுக் கொண்டு முதலாளித்துவத்திற்கு சேவகம் செய்ய மட்டுமே பயன்படும்.
நக்சலிசம் என்பது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை திசை திருப்புவதற்கான முதலாளித்துவ ஆயுதம் என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது.
இது குறித்த செய்திகள் இன்றைய தினம் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. அச்செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Narco Shocker: Thackeray, Sena Funded Naxals !
Mumbai, Aug 8: The narcoanalysis report of suspected naxalite Arun Ferreira has thrown up revelations that could leave the prosecution rather flummoxed.
So far two narco tests have been conducted on Bandra resident Ferreira who was arrested from Nagpur on May 8, 2007 for suspected naxal activities. The last one by Bangalore Forensic Science Laboratory was in September last year and has been cited as ground to keep Ferreira in custody for prosecution.
According to this narco report, a copy of which is with this newspaper, when Ferreira was asked about the funding of CPI(Maoist) activity in Mumbai, he said Bal Thackeray, the Shiv Sena, and the BJP student wing Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) had funded naxal activities in the city.
Specifically, the report signed by FSL assistant director Dr Malini Subramaniam says: “...He (Ferreira) said political parties will never support the naxal organisations. ABVP has given them funds for their activities. Bal Thakeray (sic) and his party Shiv Sena members had given them funds for their activities in Mumbai.”
The sensational revelation buried between other disclosures like Ferreira's position in the CPI (Maoist) and how he had never participated in any of the jungle Naxalite programme has left cops somewhat red-faced. “Such revelations are a matter of investigation. But one has to understand that narco reports are not admissible in the court as evidence. They only help in the investigations.
Everything revealed in the test may not be true,” said Pradip Deshpande, superintendent of police, Gondia, who had taken custody of Ferreira for his alleged naxalite activities in the district, and to whom a copy of Ferreira's narco report was sent. In fact the case against Ferreira that is coming up for trial is for his role in the Gondia case.
Arun Ferreira
When contacted Shiv Sena spokesperson Sanjay Raut said there was no question of the Sena supporting any group promoting terrorism. Questioning the legality of narcoanalysis tests he termed them as childish. "A drugged person can say anything why should we give it credence?"
Ferreira's lawyer in Nagpur, Surendra Gadling said, "The police keep citing narco reports in the court to get custody extended saying these revelations need time to investigate. We will raise the issue whether these (Ferreira's comments about Thackeray and Shiv Sena and ABVP's role) revelations were also investigated."
While Bangalore FSL assistant director Dr Malini Subramanium was not available for quote, an official from the institution said on condition of anonymity, "We have submitted a report to the police. Now it is the prerogative of the police to investigate the revelations. We are not a competent authority to comment."
Some other Revelations
The report also claims Ferreira having made revelations about his association with Vishnu and Vernon, two top suspected naxal leaders, who were arrested from the city in August last year.
Ferreira was arrested last year in Nagpur for alleged naxal activities He has also revealed several names of naxal operatives in the state and city as also details of naxal operations in the city.
He has said, the report claims, that he was in constant touch with organisations like Vidyarthi Pragati Sangathan, Nav jawan Bharati Sabha, Niwala Hak Suraksha Samiti and other human rights organisations and was helping them raise funds for their activities.
He said people would come to committee office and would give them Rs 10-50 from their salary to help them carry out their activities.
He also said that he used to meet Vishnu at Hotel Pallavi in Bandra, says the report.
Another revelation made during this narco analysis was that the naxalites were infiltrating the network of Mumbai's dabbawallas. However, police investigations later showed that the term dabbawala was actually a code for naxal conduits in Chandrapur.
‘Naxalite’ names Shiv Sena as sympathiser
MUMBAI, Aug 8: A suspected Naxalite, Arun Thomas Pereira, a resident of Bandra (West) Mumbai, who was twice given narco-tests, suggested that the violent Naxalite movement in the state was being aided and funded by the Shiv Sena and its volunteers. Although he did not take the name of Sena chief Mr Bal Thackeray, Pereira is believed to have named some other public figures which forensic experts refused to confirm. A flat and instant refutation of the charges came from Saamna’s executive editor Mr Sanjay Raut ~ a Rajya Sabha member of the Shiv Sena. He questioned the veracity of such narco-tests which, he said, did not hold up in courts. Mr Raut said the Sena was a staunch national-level Hindu organisation and a champion of the Marathi people in Maharashtra. Mr Pereira was nabbed in Nagpur on 8, May 2007 and is now in the custody of Gondia district SP Mr Pradeep Deshpande. The revelations made by him during narco-tests were confirmed by forensic laboratory assistant director Ms Malini Subramaniam. The tests were primarily conducted to extract information about the whereabouts of top Naxalites active in Gondia, Gadchiroli, Chandrapur and Nanded, the districts bordering Andhar Pradesh. The suspected Naxalite is believed to have named Vishnu and Berman as his contacts. The state police are hunting for these two top Naxalites already on their list. Pereira also gave information about how some prominent persons were funding the Naxalite movement. He named BJP youth outfit Akhil Bharatiya Vidhyarthi Parishad other than Vidharthi Pragati Sanghatana, Navjawan Bharti Sabha and Niwara Hakka Suraksha Samiti as the top Naxalite sympathisers in the state.

August 05, 2008

டி.டி. கோசாம்பி நூற்றாண்டு சிறப்பு கூட்டம்

சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் நடத்தும்
டி.டி. கோசாம்பி நூற்றாண்டு சிறப்பு கூட்டம்


13.08.2008, புதன் கிழமை
மாலை 06.00 மணி


ஒளவை கலைக் கழகம்

15/9, சோமு செட்டித் தெரு,
4வது தெரு, இராயபுரம்
சென்னை - 13.


இராயபுரம் சுழல் மெத்தை அருகில்

கோசாம்பி பார்வையில்வரலாறும் சமுதாய மாற்றமும்
தோழர் வ. கீதா


கோசாம்பி பார்வையில்அறிவியலும் - பண்பாடும்
தோழர் என். குணசேகரன்


அனைவரும் வருக!

"நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் அல்ல; ஆனால், ஒரு அரசியல் செயற்பாட்டாளன் என்ற எனது இந்திய இந்திய வரலாறு பற்றிய புரிதலுக்கு நான் டி.டி. கோசாம்பியை நாடினேன்."

-இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்