Showing posts with label VHP. Show all posts
Showing posts with label VHP. Show all posts

August 26, 2008

ஒரிசாவில் மதக்கலவரத்தை தூண்டும் சங்பரிவாரம்!


சங்பரிவாரத்தின் முக்கிய அமைப்பான விஸ்வ ஹீந்து பரிஷத் நாடு முழுவதும் மதக்கலவரத்தை தூண்டும் நடவடிக்கையில் முன்னணியில் நிற்கும் அமைப்பு. அது தற்போது ஒரிசாவை குறிவைத்து தனது தாக்குதலை துவக்கியுள்ளது.

ஒரிசாவில் உள்ள பார்கார்க் மாவட்டத்தில் திங்கட்கிழமை (25.08.2008) கிறித்துவ மிஷீனரியால் நடத்தப்பட்டு அநாதை ஆசிரமத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் அந்த ஆஸ்ரமத்தில் சமையல் வேலை செய்து வந்த 45 வயது பெண் உடல் கருகி இறந்துள்ளார். இந்த கொலை பாதக செயல் விஸ்வ ஹீந்து பரிஷத்துக்கு புதியது அல்ல என்பதை நாடு அறியும்.

1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது மகனையும் ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரோடு எரித்த பாசிச வெறியர்கள்தான் இந்த சங்பவரிவார கும்பல். அத்துடன் ஒரிசாவில் உள்ள பல்வேறு கிறித்துவ சர்ச்சுக்களையும் இடித்ததோடு, கன்னியாஸ்திரிகளை கற்பழித்து தங்களது இந்துத்துவ கலாச்சாரம் எவ்வளவு உயர்வானது என்பதை காட்டியவர்கள்தான் இந்த மோடித்துவவாதிகள்.

தற்போது அதே பாணியில் ஒரிசாவில் கிறித்துவர்களை தாக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்ற வி.எச்.பி. மதவாதத் தலைவர் கடந்த பல ஆண்டுகளாக மத மாற்றத்திற்கு எதிராகவும், பசு வதைக்கு எதிராகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்துள்ளார். அதாவது சிறுபான்மை கிறித்துவ மதத்திற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை நடத்தி வந்துள்ளார். காந்தமால் மாவட்டத்தில் பல முறை இவரால் மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 28 அன்று இவரும் இவருடன் நேர்ந்து நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு மாவோயிஸ்ட்டுகள் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை காரணமாக வைத்துக் கொண்டு ஒரிசாவில் பந்த் என்ற பெயரால் சிறுபான்மை சர்ச்சுகளையும், சிறுபான்மையினர் மீதும் கொலை வெறித் தாக்குதலை தொடுத்துள்ளது வி.எச்.பி. 2002 ஆம் ஆண்டு இதேபோல்தான் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டதாக கூறி குஜராத்தை ரணகளமாக்கி 2000க்கும் மேற்பட்ட இசுலாமியர்களை படுகொலை செய்தது. இசுலாமிய பெண்களை கற்பழித்தது. கர்ப்பினிகளை கொலை செய்தது. மசூதிகளை இடித்து தரை மட்டமாக்கியது மோடித்துவா என்கிற இந்துத்துவா.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற மதக்கலரவங்களை இந்துத்துவாதிகள் திட்டமிட்டு ஆங்காங்க நடத்துவார்கள். மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்துவதன் மூலம்தான் தங்களால் ஆட்சிக்கு வர முடியும் என்று கனவு கன்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காஷ்மீரில் அமர்நாத் நிலப் பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் இசுலாமிய மதத்திற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை நடத்தி வரும் பா.ஜ.க. மற்றும் சங்பவரிவாரம் தற்போது கிறித்துவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். எனவே இந்த மதவெறி பாசிசத்திற்கு எதிராக விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டியது மதச்சார்பற்ற - ஜனநாயக - இடதுசாரி சக்திகளின் கடமையாகிறது.