August 10, 2007

தஸ்லீமாவை தாக்கிய இசுலாமிய காட்டுமிராண்டி கூட்டம்!


வங்கதேச புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வங்க மொழியில் எழுதிய ஷூத் என்ற நாவல் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு செல்லுக்கு செல்லு என்ற பெயரில் நேற்றைய தினம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர் மையத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஸ்லீமா நஸ்ரினும் கலந்து கொண்டார்.


இந்நிலையில் மஜிலீஸ் இத்திஹதுல் முஸ்லீமன் என்ற இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அப்சல்கான். அஹமத் பாசா. மோசம் கான் புத்தக வெளியீட்டு அரங்கத்திற்குள் நுழைந்து மிக மோசமான. தகாத வார்த்தைகளால் தஸ்லீமா நஸ்ரினை திட்டியதோடு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அரங்கத்தில் இருந்த பத்திரிகையாளர்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தலையிடாமல் இருந்திருந்தால் அவர்கள் கொலையும் செய்தீருப்பார்கள் போலும். அந்த அளவிற்கு கொலை வெறித்தனத்தோடு அதுவும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் குண்டர் படையாக மாறி கையில் கிடைத்த பூத்தொட்டிகள். புத்தகம். சேர் என அனைத்தையும் தூக்கி வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் தஸ்லீமா நஸ்ரின் படுகாயம் அடைந்துள்ளார். அத்துடன் நிகழ்ச்ி ஏற்பாடு செய்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தஸ்லீமாவின் புத்தகம் இசுலாமுக்கு எதிரானது என்ற பெயரில் புனித தாக்குதல் நடத்தியுள்ள இந்த பாசிச குண்டர்களின் செயல் காட்டு மிராண்டித்தனமானது. அதுவும் ஒரு பெண்ணைப் போய் தாக்குவதற்கு துணிந்த இந்த பேடிகளை - கேடிகளை கழுவில் ஏற்ற வேண்டும்.


பாசிசம் இந்து மதத்தின் வடிவில் மட்டுமல்ல அது இசுலாமிய மதத்தின் அடிப்படையிலும் வரலாம். மொத்தத்தில் எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது மனித குலத்திற்கே விரோதமானது. இந்த விசயத்தில் சிறுபான்மை - பெரும்பான்மை என்று பார்க்க கூடாது.


தஸ்லீமா மீது தாக்குதல் தொடுத்த இந்த காட்டு மிராண்டிகளின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக சட்டரீதியான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும்.


ஜனநாயக இந்தியாவில் ஒரு கருத்துக்கு எதிராக மாற்றுக் கருத்தை முன் வைத்தால் அதை கருத்து ரீதியாக எதிர் கொள்ள திராணியற்ற பாசிஸ்ட்டுகள் வன்முறையை கையிலெடுப்பது - கொலை வெறியோடு பாய்வது போன்ற நடவடிக்கைகள் அவர்களது இரத்தத்தில் ஊறியது.

இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இந்த காட்டு மிராண்டிகள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் - வெளிப்பாட்டு உரிமைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இத்தகைய காட்டு மிராண்ட எம்.எல்.ஏ.க்களை இந்திய அரசியல் சாசனத்தை மீறய குற்றத்திற்காகவும் - பொது இடத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். பல விசயங்களில் மூக்கை நுழைக்கும் நீதித்துறை இந்த விசயத்தில் வேடிக்கை பார்க்காமல் களத்தில் இறங்குமா?


இப்படித்தான் குஜராத்தில் சந்திர மோகன் என்ற மாணவனின் ஓவிய சுதந்திரத்திற்கு எதிராக சங்பரிவார பாசிஸ்ட்டுகள் தாக்குதலை தொடுத்தனர்.
பாசிச சிந்தனை வளர்ச்சிக்கு எதிரான என்பது மட்டும் அல்ல ஜனநாயகத்திற்கும் - மனித நேயத்திற்கும் கூட எதிரான. இத்தகைய பாசிஸ்ட்டுகளை கலைஞர்கள் - ஜனநாயக எண்ணம் கொண்டோர் மற்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றினைந்து வலுவாக எதிர்க வேண்டும்.

பாசிச தாக்குதலின் இன்னொரு முகம்

கலாச்சார பாசிசத்தின் நிர்வாண சிந்தனை!

3 comments:

Anonymous said...


தஸ்லிமா மீது தாக்குதல் முஸ்லிம் அறிஞர்கள் கண்டனம்


வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது; காட்டு மிராண்டித்தனமானது என முஸ்லிம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்ட தனது நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஐதராபாத் வந்திருந்தார். விழாவின்போது மஸ்ஜித் இத்திகாதுல் அமைப்பை சேர்ந்தவர்கள் தஸ்லிமாவை தாக்கினர். இத்தாக்குதல் சம்பவத்தில் 3 எம்எல்ஏக்களும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

எழுத்தாளர் தஸ்லிமா மீது நடந்த தாக்குதல் குறித்து பாடல் ஆசிரியரும் எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் கூறுகையில், நாகரிக சமுதாயத்தில் நடந்த இத்தாக்குதல் வெட்ககேடானது; கொடூரமானது என்றார். மதவாதிகள் மிக தைரியமாக இத்தாக்கு தலை நடத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தேசிய சிறுபான்மையினர் கமிஷனின் முன்னாள் தலைவர் தாகிர் மகமூத் கூறுகையில், 3 எம்எல்ஏக்கள் தலைமையில் எழுத் தாளர் தஸ்லிமா மீது நடந்த தாக்குதல் ஏற்க முடியாதது, மதச் சார்புள்ளவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

தஸ்லிமா மீது தாக்குதல் நடத்தி மதவாத அமைப்புகள் சந்தோஷப்பட்டுக் கொண்டுள்ளன என்று வரலாற்றுத் துறை நிபுணர் இர்பான் ஹபீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தஸ்லிமா மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்


ஐதராபாத்தில் மத தீவிர வாதிகள் வங்கதேச எழுத் தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீது நடத்திய தாக்குதலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கண் டனம் செய்துள்ளது.

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீது நடத் தப்பட்ட தாக்குதலை சிபிஎம் அரசியல் தலைமைக் குழு கண் டிக்கிறது. இந்திய மக்களின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சங்களுக்கு முரணாக இத்தாக்குதல் நடைபெற் றுள்ளது. தஸ்லிமா நஸ்ரீன் எழுத்துக்கள் அல்லது மற்றவர் களின் எழுத்துக்கள் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கருத்து வேறுபாடு களை வெளிப்படுத்த வன்முறை ஒரு பொருத்தமான வழியல்ல. கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல் இது என்று அரசியல் தலைமைக்குழு விடுத்த அறிக்கை கூறுகிறது.

மாசிலா said...

இத்தாகுதல் மிகவும் கண்டனத்திற்கு உரியதே.

இக்காட்டுமிராண்டி கூட்டத்திற்கு சட்டம் தகுந்த தண்டனையை கொடுத்து கலங்கப்படுத்தப்பட்ட எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை பூச்சிகள் பூராண்களிடமிடருந்து மீட்டு நமது ஜனநாயகம் நல்வழிகாட்டுமென நம்புவோம்.

சந்திப்பு said...

நன்றி மாசிலா. சரியாகச் சொல்லியுள்ளீர்கள். தஸ்லீமாவை தாக்கிய இந்த காட்டுமிராண்டி கூட்டத்திற்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். மாநில அரசு இதனை மேற்கொள்ளுமா? என்பது தெரியவில்லை. மாறாக தஸ்லீமா மீதே வழக்கை தொடுத்துள்ளது காங்கிரசு அரசு. ஜனநாயகம் என்பதற்கு இரு பக்கம் கத்தி என்று எடுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.