August 02, 2007

பா.ம.க. மந்திரியின் அதிகார வர்க்க குரல்!

சென்னை புறநகர் இரயில் போக்குவரத்தில் தென்னக இரயில்வே நிர்வாகம் செய்த குளறுபடியால் திருவள்ளுர் - சென்னை. கும்மிடிப்பூண்டி - சென்னை இரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கும். அவதிக்கும் உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாகவே இரயில்கள் சரியான நேரத்திற்கு புறப்படுவதும் இல்லை. வருவதும் இல்லை. மேலும் சிக்னல் என்ற பெயரில் பல மணி நேரம் இரயில்கள் நிறுத்தப்படுவதால் வேலைக்கு செல்லும் ஊழியர்களும். பள்ளி - கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


இரயில்வே நிர்வாகத்தின் இத்தகைய போக்கை கண்டித்து பயணிகள் தினந்தோறும் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தென்னக இரயில்வே நிர்வாகம் உரிய தீர்வினை மேற்கொள்ளாததால் இன்னும் பிரச்சினை நீடிக்கிறது.


இந்நிலையில் பா.ம.க.வைச் சேர்ந்த மத்திய இரயில்வே இணையமைச்சர் வேலு இன்றைய தினம் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணுவதற்கு மாறாக. பயணிகளை மிரட்டியுள்ளார். இனிமேல் பயணிகள் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் உள்ளது. பா.ம.க. தன்னை ஒரு ஜனநயாக இயக்கம் என்று காண்பித்துக் கொண்டு போராடி வருகிற இந்நேரத்தில் அக்கட்சியை சார்ந்த இரயில்வே அமைச்சர் வேலுவின் பேச்சு அதிகாரவர்க்கத் தொனியில் ஒலிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மாறாக அவர் மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண்பேன் என்று சொல்லியிருந்தால் மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஐ.ஏ.எஸ் போன்ற பதவியில் இருந்தவர்களை அரசியல்வாதிகளாக மாற்றினால் என்ன விளைவு உண்டாகும் என்பதற்கு வேலுவின் பேச்சே சாட்சி! மக்களின் உணர்வுக்கு துளிகூட மதிப்பளிக்காத இந்த அதிகார வர்க்க குரலுக்கு எதிராக வலுவாக கண்டனங்கள் எழவேண்டும்.


பா.ம.க. கடந்த காலத்தில் நடத்திய போராட்டங்களின் வரலாறு வேலுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதா? அல்லது தற்போது ரஜினிக்கு எதிராகவும் விஜயகாந்துக்கு எதிராகவும் நடத்திய போராட்டங்கள் என்ன ஜனநாயகத் தன்மை வாய்ந்ததா? அல்லது குஷ்புவுக்கு எதிராக நடத்திய அராஜக செயல்கள் எத்தனை? இதையெல்லாம் வேலு விமர்சிப்பாரா? மக்கள் போராட்டத்துக்காக வாழ்பவர்கள் அல்ல. வாழ்க்கையே போராட்டமாக மாறும் போது போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. இதையெல்லாம் ஐ.ஏ.எஸ். படிப்பில் வேலுவுக்கு யாரும் கற்றுத் தந்ததில்லை போலும்.


இராமதாஸ் இந்த இரயில் பயணிகள் பிரச்சினைக்கு என்ன சொல்லப் போகிறார்?

9 comments:

சிவபாலன் said...

சந்திப்பு,

நல்ல கேள்விகள்!

மக்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு ஆவன் செய்ய வேண்டும். மக்கள் என்ன எப்பொழுதுமா மறியல் செய்கிறார்கள்? பிரச்சனை இருப்பதால் மறியல் செய்கிறார்கள்!

மருத்துவர் அய்யா இதில் மவுனம் சாதிப்பது ஏனோ?

திகிலன் said...

ஊருக்குத்தான் உபதேசம் இதுவே TRபாலு செய்திருந்தால் மருத்துவர் அய்யா கொதித்தெழுந்து கொடிபிடித்திருப்பார், "குழல்" ஊதுபவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியபோகிறது?

சந்திப்பு said...

நன்றி சிவபாலன். திகிலன். இராமதாஸ் வேற 2001 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தப் போவதாக சபதம் ஏற்று இருக்கிறார். எல்லாப் பிரச்சினைக்கும் முந்திக் கொண்டு கருத்தைச் சொல்லும் டாக்டர் ஐயா இந்த இரயில் பிரச்சினையில் வாயை மூடிக் கொண்டு இருப்பது ஏனோ?

மஸ்கிட்டோ மணி said...

போராட்டம் என்ற பெயரில் ஊரெல்லாம் மரம் வெட்டி சாலையை மறித்த வரலாறு கொண்டவர்கள் இன்று மக்களுக்கு நன்னடத்தை போதிப்பது வியப்பு தான்!

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

// பா.ம.க. தன்னை ஒரு ஜனநயாக இயக்கம் என்று காண்பித்துக் கொண்டு போராடி //

:-))

அவர்கள் தங்களை "ஒரு ஜனநயாக இயக்கமாக " காண்பித்துக் கொள்ளவே போராடி வருகிறார்கள். ஜனநாயக இயக்கமாக இருப்பதும் அப்படி இருப்பதாகக் காண்பிப்பதும் வெவ்வேறு. வேலு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.செயல்பாடுகள் இப்படி இருப்பதினாலேயேதான் அவர்கள் தங்களை "ஒரு ஜனநயாக இயக்கமாக " காண்பிக்க போரட வேண்டியுள்ளது.

***
ஜனநாயகக் கட்சி-- அப்படி என்று ஏதாவது ஒரு கட்சி இங்கே உள்ளதா? ரொம்ப காமெடி போங்க :-)


***
மருத்துவர் போராட்டம் நடத்தினால் கலைஞர் குறைந்த பட்சம் அதற்கு பதிலாவது சொல்கிறார். இங்கே வேலு போராட்டமே கூடாது என்கிறார்.மனுப்போட்டால் பதில் உடனே வருமா?
பா.ம.க ஆட்சி வந்தால் ஒரு வேளை அப்போதுதான் கலைஞரின் ஆட்சியின் மதிப்பு தெரியுமோ? :-((

பாபு மனோகர் said...

'ஐ.ஏ.எஸ் போன்ற பதவியில் இருந்தவர்களை அரசியல்வாதிகளாக மாற்றினால் என்ன விளைவு உண்டாகும் என்பதற்கு வேலுவின் பேச்சே சாட்சி! மக்களின் உணர்வுக்கு துளிகூட மதிப்பளிக்காத இந்த அதிகார வர்க்க குரலுக்கு எதிராக வலுவாக கண்டனங்கள் எழவேண்டும்'

நிச்சயம் சிந்திக்க வேண்டிய விசயம்.

ஒரு அரசியல் கட்சி தலைமையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் மக்கள் போராட்டங்கள் நடக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. தன்னிச்சையான மக்கள் போராட்டங்களை அவர்கள் விரும்புவதில்லை.ஆனால் மக்கள் உணர்வுகள் தானாக வெடித்து கிளம்பும்.

Anonymous said...

Mr.Velu is only a conferred I.A.S. Hence the question of learning the art of managing the people during the IAS training does not arise.

அன்பன் said...

இவர்கள் ஜனநாயகத்தை மிரட்டி பணியவைக்கும் போலிகள் , வேடதாரிகள்

G.Sankar said...

//வேலு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.செயல்பாடுகள் இப்படி இருப்பதினாலேயேதான் அவர்கள் தங்களை "ஒரு ஜனநயாக இயக்கமாக " காண்பிக்க போரட வேண்டியுள்ளது.
//
நெத்தியடி தலைவா...