March 15, 2006

நோபல் பரிசுக்கு பொருத்தமானவர் ஜெயலலிதா!

உலகத் தமிழ் இளைஞர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அத்துடன் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை ஜெயலலிதா தினமாக கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபள் பரிசு! ஜெயலலிதா எந்த அமைதிக்காக பாடுபட்டார் என்று நாமும் அலச வேண்டியுள்ளது.

1. 2000 இசுலாமிய மக்களை கொலை செய்த பாசிச வெறியன் நரேந்திர மோடி பதவியேற்புக்கு சென்று தன்னுடைய ஆதரவை தெரிவித்தாரே ஜெயலலிதா, இதற்காக நோபல் பரிசு கொடுக்கலாம் என்கிறாரா? பிரபாகர். (உலகமே மோடி என்ற அருவருப்பான முகத்தையும், சங்பரிவாரின் ரத்தவெறித்தனத்தையும் கண்டித்து கொதித்து எழுந்த போது மோடியை ஆதரித்தன் மூலம் தன் பாசிச சுய உருவத்தை வெளிக்காட்டிக் கொண்டாரே ஜெயலலிதா இதை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஒரு வேளை நோபல் பரிசு கழகம் மறந்திருக்குமோ?)

2. ஒரே கையெழுத்தில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வேலையில் இருந்து விரட்டினாரே! இது ஒரு உலக சாதனை என்று விமர்சகர்களால் கூறப்பட்டது. (அரசு ஊழியர்கள் மட்டுமல்ல; எந்த ஊழியரும் எனக்கு எதிராக போராடினால் இந்த கதிதான் ஏற்படும் என்று தன் அடக்குமுறை சிந்தனையை வெளிப்படுத்தினாரே! ஒரு வேளை உலக முதலாளிகள் வேண்டுமானால் ஜெயலலிதாவின் இந்தச் செயலுக்காக புகழ் பாடலாம் - நோபல் பரிசு வழங்கலாம். மக்கள் வழங்கப் போகும் பரிசு தேர்தலில் தெரியும். ஒருவேளை அரசு ஊழியர்களிடம் ஏற்பட்ட மயான அமைதிக்காக நேபால் பரிசு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)

3. மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கியுள்ளார் இது என்ன சாதாரண சாதனையா? ஆம்! கிராமங்களில் சைக்கிள் வழங்கிய ஜெயலலிதா அதை ஓட்டுவதற்கு மட்டும் லைசன்° வழங்க மறந்து விட்டார்! (நேத்து வரைக்கும் கால்ல செருப்பு போடாம போன புள்ளைங்க... இப்போ சைக்கிள்ல போவதா? என்று மேல் ஜாதிக்காரர்களின் ஏளனத்திற்கும், ஏச்சும், கேலிக்கும் உள்ளான அந்த மாணவிகளின் உள்ளங்களில் அமைதியை ஏற்படுத்தினாரோ?)

4. பாப்பா பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகச்சியேந்தல் இந்த பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்தி பெரும் ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்தி - அந்த மக்களிடையே அமைதியை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு நிச்சயம் கொடுத்தேயாக வேண்டும்! (5 ஆண்டு காலமாக ஒரு ஊராட்சியில் கூட தலித் மக்களை மனுசனாக நிமிர வைக்க முடியாத ஜெயலிதாவுக்கு நோபல் பரிசு - நல்ல ஜோக்குடா சாமி! அய்யோ இத்தோடு இதையும் சேத்துக் கொள்ளுங்கள் நம்ம திருமா! அவருடைய வீரம் என்ன, விவேகம் என்ன, சூரத்தனம் என்ன இப்ப என்னடான்னா... எல்லாம் அம்மாதான். தேர்தல் முடியும் முன்னே ஒருவேளை திருமாவே பரிந்துரைத்தாலும் பரிந்துரைப்பார்)

5. கடைசியா! இப்போ சிறுசேரி நிலம் விற்பனை விவகாரத்தில் - அவசர, அவசரமாக ஒப்பந்தத்தை ரத்து செய்தாரே ஜெயலலிதா! தமிழக மக்களின் மனசாட்சியாக - நியாயமாக நடத்துக் கொண்டாரே அதற்காக நிச்சயம் நேபால் பரிசு கொடுத்தேயாக வேண்டும்.
6. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக அடிக்கடி ஜெயலலிதா கூறுவார்! அதாங்க போலீசுக்கே முழு அதிகாரம் கொடுத்து 10க்கும் மேற்பட்டவர்களை என்கவுன்டர் செய்தார்களே! அது என்ன சாதாரண விஷயமா? நீதியை போலீசுக்கே வழங்கியதன் மூலம் அல்லவா ஜெயலலிதா தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றி விட்டார்!

அருந்ததி ராய்க்கு சாகித்திய அகாடமி பரிசு கொடுத்ததும், அதை அவர் வாங்க மறுத்து பெரிய கடிதம் எழுதினார். ஒரு வேளை இனிமேல் யாருக்காவது நோபல் பரிசு கொடுக்க முன்வந்தால் அதை யாராவது வாங்க முன்வருவார்களோ? ஒரு வேளை நோபல் பரிசு வழங்குவது ஜெயலலிதாவுக்கே கடைசி என்று அவரே அறிவித்துக் கொள்வாரோ!

7 comments:

விடாதுகருப்பு said...

அருமையான அலசல். பதிவுக்கு நன்றி. நானும் பதிவு போட்டு இருக்கிறேன்.

barathee|பாரதி said...

ஜெயலலிதாவிற்கு நோபல் என்பது அடிமுட்டாள்தனமானது. தன்னையன்றி வேறெதையும் சிந்திக்கத்தெரியாததன்மைக்கு வேண்டுமானால் நோபல் கொடுக்கலாம்.

jawahar said...

What happened to that prize?
Why people are thinking and acting like this?
Will it happen?
Anything can happen as barathee says.

வெங்காயம் said...

தென்னாப்பிரிக்காவிலோ உகாண்டாவிலோ சென்று ரோட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தவர்களைப் பிடித்து காசு கொடுத்து "தங்கத்தாரகை" விருது வாங்கி வந்தார்களே?! அதேபோல காசு கொடுத்து நாய்ப்பல்... மன்னிக்கவும் நோபல் பரிசு வாங்கிவர நடக்கும் ஒரு விந்தை முயற்சி இது. தமிழகத்தைக் காப்பாற்ற ஆண்டவன் மட்டுமல்ல, நோபல் அவர்களாலும் காப்பாற்ற முடியாது.

சந்திப்பு said...

ஆம் வெங்காயம் கூறியிருப்பது போல் எப்படியாவது நோபல் பரிசினை வாங்கத் துடிக்கலாம் ஜெயலலிதா. அவர்களுடைய இலக்கு நோபல் பரிசு வாங்குவதை விட மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டுமே! அதற்காகவாவது நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘மா மங்கை’ என்று தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு, மகுடி ஊதலாம் என்று நினைக்கலாம். மக்கள் தங்களின் நோபல் ஓட்டுக்கள் இவர்களுக்கு எதிராக நிச்சயம் எதிர்வினையாற்றும்.
நன்றி பாரதி, ஜவஹர், விடாது கருப்பு.

தமிழன் said...

எம். ஜி. ஆரின் “சின்னவீடு“ என்ற பட்டம் மட்டும் அவருக்கு போதுமானது. அதற்கு மேல் அவருக்கு தகுதியில்லை
ஏன் இதையும் வெளியிடவேண்டியதுதானே!

politically_incorrect_guy said...

Comrade, dont feel bad. We will write a letter to the Nobel prize committee, recommending Nobel Prize for peace for Fidel Castro and Hugo Chavez ... and Kim Junior (the ruler of Korea). That should make you happy.