March 10, 2006

தேசத்தின் வலிமை அணு குண்டுகளில் அல்ல!

இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவையே உலுக்கிய குக்கர் குண்டு வெடிப்பின் மூலம் 22க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின் இந்த சதிச்செயல் கோழைத்தனமானது.

பயங்கரவாதிகளின் இந்த செயலை நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களும் ஒருமித்த குரலில் கடும் கண்டனம் செய்துள்ளதோடு, இந்திய அரசும் இத்தகைய பயங்கரவாத இயக்கங்களை ஒழிப்பதற்கு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவதிற்கு காஷ்மீர் பயங்கரவாத இயக்கம் -லஷ்கர் இ ககார்- என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரில் நூற்றுக்கணக்கான தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய தேசத்தின் ஒற்றுமையை சிதைப்பதில் தொடர்ந்து இந்த இயக்கங்கள் செயலாற்றி வருகின்றன.

இந்த முறை இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் வாரணாசியில் - அதுவும் ஒரு இந்துக் கோவிலில் வெடி குண்டை வைத்து வெடிக்கச் செய்ததின் மூலம் பயங்கரவாதிகளின் நோக்கம் பல உயிர்களைக் கொல்வது மட்டுமல்ல; இதன் மூலம் பெரும் கலகம் இந்தியாவில் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளடங்கியிருப்பதாக தெரிகிறது. இத்தகைய பயங்கரவாதிகளின் பின்னால் எத்தகைய உள்நாட்டு - வெளிநாட்டு தொடர்புகள் இருந்தாலும் அதனையும் முழுமையாக வேறறுப்பதோடு முழுமையாக அதனை கண்டு பிடித்து இந்திய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற குண்டு வெடிப்புகள் - இரயில் எரிப்புச் சம்பவங்கள் போன்று உணர்ச்சிகளை தூண்டி விடும் சம்பவங்கள் நிகழும் போது, மக்களின் சேவகர்களாக செயல்படும் தேசிய - மாநில அரசியல் கட்சிகள் மிகப் பொறுப்புணர்வோடு மக்களிடையே எந்தவிதமான பதட்டமும் ஏற்படாமல் காப்பதோடு, அவர்களுக்குள் மோதல் ஏற்படாமல் ஒற்றுமை காப்பதற்கு பாடுபட வேண்டும்.

மத்தியில் 7 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பொறுப்பான கட்சி பா.ஜ.க. இந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போதே மக்கள் ஒற்றுமையை காப்பதற்கு தவறியதால்தான் - இந்திய ஒளிர்கிறது என்று கூறினாலும் மக்கள் இவர்களை ஆட்சிக் கட்லில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளார்கள்.

இதிலிருந்து எந்தவிதமான பாடத்தையும் கற்காமல் வாரணாசி சம்பவத்தை பயன்படுத்தி பா.ஜ.க. தலைவர் அத்வானி ரதயாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதன் நோக்கம் என்ன? அமைதியை ஏற்படுத்துவதா? ஏற்கெனவே அத்வானி ரதயாத்திரை போனபோதெல்லாம் நடைபெற்ற சம்பவங்கள் துன்பத்தையும் - இரத்த ஆறறையும் அல்லவா ஏற்படுத்தியது? ஏன் இப்படியொரு நடவடிக்கை? பா.ஜ.க.வின் சரிந்து வரும் செல்வாக்கையும், அத்வானியின் பெயர் மறைந்து வருவதையும் இதன் மூலம் சரிகட்டுவதற்கு மக்களது ஒற்றுமையை சமாதியாக்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பா.ஜ.க. தலைமை சிந்திக்கிறதா? புதிய தலைவர் ராஜ்நாத் சிங்கும் இதைத்தான் எதிர்பார்க்கிறாரா?

சமீபத்தில்தான் குஜராத் சபர்மதி இரயில் எரிந்த சம்பவமும் - அது குறித்த பானர்ஜி கமிஷனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. பானர்ஜி கமிஷன் அது ஒரு விபத்து என்று தெளிவாக கூறியுள்ளது. அன்று குஜராத்தில் நடந்தது என்ன? ஏதோ வெளியில் இருந்து இசுலாமிய தீவிரவாதிகள் இராம பக்தர்களை உள்ளே வைத்து எரித்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்து 2000 உயிர்களை மாய்த்தது போதாதா? இந்த 2000 உயிர்களை இந்த மதம் திரும்பக் கொடுக்கப்போகிறது? அல்லது மோடித்தான் இதனை ஈடுகட்டுவாரா? இட்லரை மிஞ்சம் இந்த சம்பவத்தின் பின்னணி போலியானது என்று கூறிபின்னும் பதவி விலக மறுக்கும் பா.ஜ.க.வும் - மோடியும் மனிதர்கள்தானா?

இந்திய நாட்டில் செயல்படும் எந்த பயங்கரவாத குழுக்களாக இருந்தாலும் சரி! உங்களுடைய நோக்கம் நியாயமானது என்று நீங்கள் எதைக் கூறிக்கொண்டாலும் அதை வெடி குண்டுகள் மூலம் தீர்க்க முடியாது! மேலும் இதனை பயன்படுத்திக் கொண்டு வலதுசாரி பயங்கரவாதங்கள் இந்தியாவில் தலைதூக்குவதற்குத்தான் பயன்படும். எனவே பயங்கரவாத இயக்கங்கள் குறித்தும் - மக்கள் ஒற்றுமை குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது வலைப்பதிவர்களது கடமைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். நமது தேசத்தின் வலிமை அணு குண்டுகளில் அல்ல! மக்கள் ஒற்றுமையிலேயே உள்ளடங்கியிருக்கிறது.

7 comments:

Anonymous said...

Excellent article.
Hats off!!

-Akilan from bangalore

முத்து(தமிழினி) said...

சந்திப்பு,
குண்டு வெடிச்ச மறுநாளே நாடாளுமன்றத்தில் இவங்க பண்ணுண கலாட்டா ரொம்ப ஆபாசமா இருந்துச்சி.குண்டு வெச்ச பயங்கரவாதிகளுக்கு மூளையில்லைனா இவங்க அதுக்கு மேல.
உத்தர பிரதேசத்தை மூன்று மாநிலமாக பிரிக்கவேண்டும்.

தமிழக தேர்தலில் பா.ஜ.க கூட்டணி இன்னும் முடியவில்லையாம்.(நீங்கள் இரண்டு நாட்களுக்கு முன் சொன்னது தவறு).பல கட்சிகளுடன்(?) பேசி வருகிறார்களாம்.விஜயகாந்த் கூட தூக்கிவீசும் அளவிற்கு என்னங்க ஆச்சு?

சந்திப்பு said...

Thanks Akilan.

சந்திப்பு said...

முத்து பாராளுமன்றத்தை இவங்க எப்போதும் மதிக்கிறதே இல்லை. ஜனநாயகம் என்றாலே இவர்களுக்கு ரொம் கசப்பு. அதான் அமெரிக்கா போன்ற தேர்தல் முறையை இங்கே கொண்டு வரனும்னு இவங்க முயற்சி பண்ணி காணாம போயிட்டாங்க. ஏன் மன்மோகன் சிங் அரசின் முதல் பட்ஜெட்டையே புறக்கணித்து விட்டு, புறக்கடை வழியாக எங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாக ஒரு அறிக்கையை மன்மோகன் சிங்கிடம் சமர்பிக்க, அதை அவர் வாங்க மாட்டேன் என்றதும் வெறும் கையுடன் திரும்பி வந்தவங்க தானே!

அதெல்லாம் கிடக்கட்டும் - பா.ஜ.க.வுடன் கூட்டணி இன்னும் முடியவில்லையாம்! ஆமாம் முத்து, நான்கூட இன்றைக்கு கமலாலயம் (பா.ஜ.க. மாநில அலுவலகம்) பக்கம் வரும் போது, அவங்க தொண்டர்கள் வெளியில் இருந்து சத்தமாக பேசிக் கிட்டது! ஏய் உனக்கு எந்த தொகுதி வேணும்? நீ எங்க வேணும்னாலும் போட்டியிடலாம்... சீட்டு உனக்குத்தான்....

politically_incorrect_guy said...

If a nation's strength is not in Atomic weapons, why is China having lots of atomic weapons? Why did the erstwhile Soviet Union spend 30% of its budget in building a Nuclear Defense shield?

Vajra said...

பானர்ஜீ கமிஷன் விட்டால் 9/11 கூட "தண்ணி அடித்துவிட்டு" விமானம் ஓட்டியதால் நடந்த "விபத்து" என்று அறிக்கையில் "தெளிவு" படுத்திவிடுவார்...

அவரை எல்லாம் நம்பச் சொல்கிறீர்களா...? அவர் கமிஷன் report ல் எக்கச் செக்க ஓட்டைகள்...லாலு அந்த கமிஷன் அமைத்தது இஸ்லாமிய வோட்டு வங்கிக்காக...பாவம் அவரே தோற்றுவிட்டார்...அதைப் பிடித்துக் கொண்டு நீங்கள் ஏன் தொங்குகிறீர்கள்..!!

"தேசத்தின் வலிமை அணு குண்டுகளில் அல்ல!" இதை நீங்கள் பாகிஸ்தானிலோ அல்லது சீனாவிலோ போய் உறக்கச் சொன்னீர்கள் என்றால் உத்தமமாக இருக்கும்..

வஜ்ரா ஷங்கர்.

Vajra said...

பானர்ஜீ கமிஷன் விட்டால் 9/11 கூட "தண்ணி அடித்துவிட்டு" விமானம் ஓட்டியதால் நடந்த "விபத்து" என்று அறிக்கையில் "தெளிவு" படுத்திவிடுவார்...

அவரை எல்லாம் நம்பச் சொல்கிறீர்களா...? அவர் கமிஷன் report ல் எக்கச் செக்க ஓட்டைகள்...லாலு அந்த கமிஷன் அமைத்தது இஸ்லாமிய வோட்டு வங்கிக்காக...பாவம் அவரே தோற்றுவிட்டார்...அதைப் பிடித்துக் கொண்டு நீங்கள் ஏன் தொங்குகிறீர்கள்..!!

"தேசத்தின் வலிமை அணு குண்டுகளில் அல்ல!" இதை நீங்கள் பாகிஸ்தானிலோ அல்லது சீனாவிலோ போய் உறக்கச் சொன்னீர்கள் என்றால் உத்தமமாக இருக்கும்..

வஜ்ரா ஷங்கர்.