தமிழ்மணச் சங்கிலியில் என்னை இணைத்து விட்டவர் முத்து (தமிழினி) அவருக்கு என் நன்றிகள். தமிழ் வலைப்பதிவர்களிடையே ஆழமான பினைப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த சங்கிலித் தொடர் என்றால் மிகையாகாது. இந்த சங்கிலியில் சுழலில் சிக்குவது இன்பமயமானது.
தாக்கத்தை ஏற்படுத்திய நான்கு நாவல்கள்
ஏழை படும் பாடு - விக்டர் யூகோ
சிவந்த நிலம் - கிஷன் சந்தர்
பகல் கனவு - கீஜூபாய் பாகே
முதல் ஆசிரியன் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்
(ஐய்யா உள்ளூர் நாவலை படிப்பதே இல்லையா என்று கேட்காதீர்கள். எனக்கு இலக்கிய
ஆர்வம் குறைவுதான். இந்த ஆர்வத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.)
பிடித்த புத்தகம் நான்கு
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - மார்க்ஸ், ஏங்கெல்ஸ்
இயற்கை சமுதாய விஞ்ஞானம் - கிருஷ்ணகுமார்
சுந்தரய்யா வாழ்க்கை வரலாறு - சுந்தரய்யா
இயக்கவியல் பொருள் முதல்வாதம் - ஸ்டாலின்
பிடித்த உலகத் தலைவர்கள்
காரல் மார்க்ஸ்
லெனின்
சேகுவேரா
கிராம்சி
பிடித்த உள்ளூர் தியாகிகள்
பகத்சிங்
சந்திரசேகர் ஆசாத்
உத்தம் சிங்
திருப்பூர் குமரன்
பிடித்த உள்ளூர் தலைவர்கள்
இந்திரா காந்தி
ஜோதிபாசு
சுர்ஜித்
ஜீவானந்தம்
பிடித்த உணவு வகைகள்
நூடுல்ஸ்
இடியாப்பம்
தோசை
தயிர் சாதம் (உடன் உருளைக் கிழங்கு கூட்டு இருக்கணும்)
மனதில் பதிந்த (பிடித்த) படங்கள்
மின்சார கனவு
நான் போகும் பாதை
பாஷா
குருதிப்புனல்
பிடித்த நடிகர்கள்
ரகுவரன்
கமல்ஹாசன்
ரஜினிகாந்த் (இவர் படத்திற்கு காமெடியனே தேவையில்லை - இவரது நடிப்பு குழந்தைதனம்
- குறும்பு - கோபம் - சிரிப்பு என பலமுனைகளில் வெளிப்படுத்தும்? இவரெல்லாம் ஒரு
நடிகரா? என்று கேட்காதீர்!)
விக்ரம் (காசி திரைப்படத்தில் குருடன் பாத்திரம் மிக சிறப்பானது)
தினமும் பார்க்கும் இணையதளங்கள்
தட்ஸ் தமிழ்
கூகுள் நியூஸ்
என்.டி. டி.வி.
பிடித்த (பார்க்கும்) வலைப்பதிவுகள்
(தமிழ் வலைப்பதிவில் முதல் நண்பர் - என் வலைப்பதிவை
மேம்படுத்த மிக முக்கியமான உதவிகளைச் செய்தவர். சிறந்த விஷங்களை சமூகப்
பார்வையோடு, அவருக்கே உரித்தானி பாணியில் பதிவது.)
முத்துக்குமரன்
(பல தளங்களில் செயல்பட்டு வருகிறார். கவிதை, கட்டுரை, இலக்கியம் என்று. நல்ல
சமூகப் பார்வையோடு விஷயங்களை பதிவிடுகிறார்.)
சமுத்ரா
(என்னுடைய பதிவுகளின் பின்னூட்டங்களில் பெரும்பாலானவை சமுதராவினுடையது. மாற்றுக்
கருத்துக் கொண்டிருந்தாலும், இவருடன் விவாதிப்பது பயனுள்ளது)
நான்காவது இதயத்தில் இடமுள்ள அனைத்து தமிழ் வலைப்பதிவுகளும்.
பிடித்த டி.வி. சேனல்கள்
பொதிகை
என்.டி. டி.வி.
நியூஸ் சானல்
சன் டி.வி. (முரண்பாடாக தோன்றும் வேறு வழியில்லை. அதற்காக மற்ற சேனல்களையெல்லாம்
பார்ப்பதில்லை என்று அர்த்தமில்லை.)
கவர்ந்த விளையாட்டு வீரர்கள்
ராகுல் டிராவிட் - கிரிக்கெட் (மிக நேர்த்தியான -
பொறுமையான பேட்ஸ்மேன்)
சானியா மிர்சா - டென்னிஸ்
விஸ்வநாத ஆனந்த் - செஸ்
தன்ராஜ் பிள்ளை - ஹாக்கி
பிடித்த சுற்றுலா தளங்கள் (மிகக் குறைவாகத்தான்
சென்றுள்ளேன்.)
கன்னியாகுமரி (இயற்கை வளமும், நீர் வளமும் பொருந்திய
சூழல்)
ஊட்டி (இங்கெல்லாம் ரொம்ப நாள் இருக்க முடியாது)
மகாபலிபுரம் (இதுதான் எங்க ஊர். அதனாலேயே ரொம்ப பிடிக்கும்.)
பெங்களூர் (மிதமான வெப்பநிலை கொண்ட சூழல் - அதன் சாலைகள் - ஏற்ற இறக்கமாக
இருப்பது.)
பிடித்த பொழுது போக்கு
கிரிக்கெட் விளையாடுவது
ஓவியம் வரைவது
குழந்தைகளுடன் அரட்டையடிப்பது
அரசியல் பேசுவது
ஹலோ மூச்சு வாங்குதா? எனக்கும்தான் இன்னும் இருக்கு... இப்போதைக்கு இது போதும்.
8 comments:
yaarungka antha jeevaanantham!
என் லிங்குல நான்காவது ஆளான நீங்களும் எழுதியது குறித்து மகிழ்ச்சி...என் விரிவான பின்னூட்டம் நாளை..
iam just wondering after reading your choice of films..
நன்றி சந்திப்பு,
இயல்பான பதிவு. ஒளிவு மறைவின்றி உங்களுக்கு பிடித்தமானவற்றை பதிவு செய்திருக்கிறீர்கள்.
பிடித்த(பார்க்கும்) வலைப்பதிவாக எனது வலைப்பதிவை குறிப்பிட்டமைக்கு எனது நன்றிகள்...
கென்ய இலக்கியவாதி(காலணிய எதிர்ப்பு போராளி) கூகி வா தியாங்கோ எழுதி இருக்கும் அடையாள மீட்பு( தமிழில் அ.மங்கை, வல்லினம் பதிப்பகம்)புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள்.
மிக அற்புதமான புத்தகம் அது. இப்போதுதான் வாசித்து வருகிறேன்.
நன்றி
Ungalukk Pavakkai Pidikkatha
Ungalukk Pavakkai Pidikkatha??????...
//இந்திரா காந்தி
ஜோதிபாசு
சுர்ஜித்
ஜீவானந்தம்//
அது சரீங்க...
மூணு பேரு ஓ.கே...
ஆனா...
முதலிடம் கொடுக்கப்பட்டவர் தான் நெருடலா இருக்கு...
//சமுத்ரா
(என்னுடைய பதிவுகளின் பின்னூட்டங்களில் பெரும்பாலானவை சமுதராவினுடையது. மாற்றுக்
கருத்துக் கொண்டிருந்தாலும், இவருடன் விவாதிப்பது பயனுள்ளது)
//
அப்படி பொடுங்க அறுவாள!
:)
நன்றி சிங். செயக்குமார்: ஜீவானந்தம் தமிழக சுதந்திரப்போராட்ட முன்னோடிகளில் ஒருவர். சிறந்த பொதுவுடைமைவாதி. எளிமையானவர். பெரியாரை பொதுவுடைமை பக்கம் ஈர்ப்பதற்கு ம. சிங்காரவேலரும், ஜீவானந்தமும் முக்கியமானவர்கள். ஆனால் பெரியார் அப்பாதையை தொடரவில்லை என்பது வருத்தமான விஷயம். சிறந்த தமிழ் இலக்கியவாதி. அவரது வாழ்க்கை படிக்கப்பட வேண்டிய ஒன்று. சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கூட ஒரு வேட்டிக்கு மேல் மாற்றுத் துணியில்லாமல் எளிய வாழ்க்கையை மேற்கொண்ட கொள்கைவாதி.... இன்னும்... ஏராளம்...
நன்றி முத்து: தங்களுடைய விரிவான கருத்துக்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நேரம் இருந்தால் எழுதுங்கள்.
நன்றி முத்துக்குமரன்: தாங்கள் குறிப்பிட்ட ---அடையாள மீட்பு--- புத்தகத்தை நிச்சயம் வாசிக்கிறேன். தங்களிடம் இருந்து மேலும் நல்ல கருத்துக்களை கட்டுரை வடிவில் எதிர்பார்க்கிறேன்.
அனானி எனக்கு கசப்பு என்றால் அலர்ஜி. மருந்துக்கு அதை உட்கொள்ளலாமே தவிர பிடித்த ஐட்டத்தில் அதை குறிப்பிட முடியாது.
நன்றி பாலபாரதி: இந்திராகாந்தியின் அரசியல் குறித்து மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும், என்னுடைய அப்பா கட்சி சாராத காங்கிர°காரல், எங்கள் வீட்டிலேயே கொடி கம்பம் வைத்து சுதந்திரத்தினத்தின்போதும், குடியரசு தினத்தின் போதும் கொடியேற்றுவார். எனக்கு 7 அல்லது 8 வயது இருக்கும் போதிலிருந்து இந்த வழக்கம் தொடர்ந்தது. அதே பகுதியில் காங்கிரசு கட்சி சார்பில் கூப்பிட்டால்கூட போக மாட்டார். அதையொட்டி காங்கிரசு மீதும், இந்திரா மீதும் ஆரம்பகால நட்பு பரிச்சியமானது. அந்த நேரத்தில் ஒரு ஈர்ப்பு கொண்ட பெண் தலைவராக இருந்தது என்னை கவர்ந்தது அவ்வளவுத்தான். மற்றபடி இந்திரா ஒரு சர்வாதிகாரி என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.
நன்றி சமுதரா: எனக்கு பாசிச கொள்கைதான் எதிரியே தவிர. பாசிச கட்சியில் உள்ள மனிதர்கள் மீது அல்ல. அதேபோல்தான் மாற்றுக் கருத்துக்களை தாங்கள் கொண்டிருந்தாலும், நமக்குள் போராட்டம் கருத்து மட்டுமே!
Post a Comment