March 09, 2006

அண்ணாயிசத்துக்கு புது மெருகூட்டும் கருணாநிதி

திமுக - காங்கிரசு கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டது. காங்கிரசுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிசுட்டு கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் பா.ம.க.வுடனும், மார்க்சிசுட்டு கட்சியினுடனும் தொகுதி உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது - இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்கு நியாயமான தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டு வருகின்றன.

பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக தலைமையில் உருவாக்கப்பட்டதுதான் ஜனநாயக முற்போக்கு கூட்டணி (DPA). மதிமுக விலகி விட்ட சூழலில், இந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி தொடர்கிறதா? என்பதை திமுக தலைவர்தான் விலக்க வேண்டும். ஏற்கெனவே கம்யூனி°ட்டுகள் தங்களை ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அங்கமாக கூறிக்கொள்ளவில்லை என்பதை நோக்க வேண்டியுள்ளது. அல்லது திமுக கூட்டணிக்கு கருணாநிதி வேறு பெயர் சூட்டுவாரா? என்றும் தெரியவில்லை.

இந்த ஆராய்ச்சி ஒரு புறம் நடந்தாலும், காங்கிரசுக்கு எந்த அடிப்படையில் 48 தொகுதிகள் ஒதுக்கினர் என்பது ஆச்சரியமாக உள்ளது. தமிழகத்தில் காங்கிரசுக்கு அடிமட்ட தொண்டர்களே கிடையாது. அதில் வெறும் தலைவர்கள் மட்டுமே உள்ளனர். எங்காவது கிராமங்களில் காங்கிரசு இருக்கிறது என்று சொன்னால் அதுவும் வார்டு அடிப்படையில் கொடுக்கப்பட்ட பொறுப்பாகத்தான் இருக்கும். மேலும் காங்கிரசுக்குள் எத்தனை கோஷ்டிகள் உள்ளன என்று காங்கிரசு தலைவர்களுக்கே தெரியாது!இத்தகைய ஒரு கட்சிக்கு 48 தொகுதி என்பது சற்று அதிகமாகவே தெரிகிறது. மேலும் காசு இல்லாமல் வேலை செய்யும் தொண்டர்களைக் கொண்ட கம்யூனி°டுகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் கஞ்சத்தனம் காட்டும் கருணாநிதி காங்கிரசிடம் தாராளமாக நடந்துக் கொண்டதின் ரகசியம் என்ன? மத்தியில் காபினட் மந்திரிகளாக உலா வருகிறார்களே திமுகவினர் அதற்கு கைமாறா? இது என்றும் புரியவில்லை.

சரி! ஏற்கெனவே காங்கிரசு கூட்டணி ஆட்சி என்று பல்லவி பாடிக் கொண்டிருக்கும் பின்னணியில் திமுக தனித்த மெஜராட்டி வருமா? என்பதும் ஆருடமாகவே இருக்கிறது. அறிஞர் அண்ணா 1967இல் காங்கிரசை தமிழகத்தில் இருந்து ஓட, ஓட விரட்டினார். அந்த காங்கிரரோடு - திமுக கரம் கோர்த்து அண்ணாயிசத்துக்கு புது மெருகூட்டுமா?
பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல என்று கூறி அதனை கட்டி அணைத்து - அதனோடு கொஞ்சி, குலாவி திராவிட கொள்கைகளெல்லாம் காலத்திற்கு ஒவ்வாதது என்று பெரியாரின் கொள்கைக்கு சமாதி கட்டியதையும் மக்கள் மறக்கவில்லை.

தேர்தல் கூட்டணிக்கு புது விளக்கம் கொடுத்துள்ள வைகோ - தொகுதி உடன்பாட்டில் திமுகவின் நியாயமற்ற போக்கு - அதிமுகவின் அராஜக ஆட்சி!

இத்தகைய சூழ்நிலையில் மக்களின் மனங்களே எதிர்கால ஆரோக்கிய அரசியலுக்கு வழிகாட்டியாக அமையும்! வாழ்க ஜனநாயகம்!!

11 comments:

Muthu said...

சந்திப்பு,

ரொம்ப டென்சனாக இருக்கறீர்கள்..ஆனால் காங்கிரசுக்கு 48 தொகுதி என்பதையும் உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பது என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.
அப்படிபார்த்தால் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்றனவா என்ற கேள்வி வரும்....தனித்து போட்டியிட்டால் எத்தனை தொகுதிகளில் அவர்களால் ஜெயிக்க முடியும்?

இரண்டு கம்யூணிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 25 தொகுதிகள் என்பது சிறிது அதிகம் தான் என்பது என் கருத்து.

1989 தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிக்கு மேல் தனித்து போட்டியிட்டு ஜெயித்தது நினைவிருக்கலாம்.விடுங்க..வாழ்ந்துட்டு போறாங்க..

ஜனநாயக முற்போக்கு கூட்டணியப்பத்தி நீங்க சொல்றது ஏதோ ஜெயா டிவி பாத்துட்டு சொல்ற மாதிரி இருக்கு...

(காங்கிரஸ் மேல கடுப்பு எல்லார்க்கும் இருக்கு.. ஆனால் இந்த தேர்தலை மட்டும் பாருங்கப்பு)

சந்திப்பு said...

முத்து டென்சனாக இருப்பது உண்மைதான். அதை நான் மறைக்கவில்லை. இன்றையச் சூழ்நிலையில் எந்த கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 4 அல்லது 5 சீட்டுக்கூட தேற மாட்டார்கள் என்பதுதான் இன்றைய எதார்த்தம். மதிமுக 1996, 2001 தேர்தல்களில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியதை நாம் அறிவோம்.
அதே சமயம் மதிமுக, பா.ம.க., இடதுசாரிகள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் கட்சியாக செயல்படுகிறார்கள். செயலாற்றுவதற்கு தொண்டர்கள் இருக்கிறார்கள்? ஆனால் காங்கிரசுக்கு? அதுதான் என்னுடைய வருத்தம்!
கருணாநிதியை நம்பி மத்திய அரசு இருக்கக்கூடிய சூழலில் காங்கிரசை நிர்ப்பந்திக்கலாம். அதற்காக மற்றவர்களை பாதிப்படையச் செய்யக்கூடாது என்பதே என்னுடைய வாதம்.

krishjapan said...

May be MK got the assurance of leaving VaiKo at centre and no Kootani atchi even if DMK doesnt get single majority.. Also, They got more centre ministers than their strength, need to be rewarded. By pleasing Congress High command, MK gets more clout at centre and state. By pleasing communists, he doesnt get anything. He will give as much less as possible to communists.

சந்திப்பு said...

கிருஷ்ணா தங்களது கணிப்பு சரியானது என்றே நினைக்கிறேன். மத்திய யூ.பி.ஏ. அரசு பதவியேற்கும் போது தாங்கள் விரும்பிய கேபினட் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு நாள் கழித்துதான் டிமான்ட் செய்து திமுக அமைச்சர்கள் பதவியேற்றது தற்போது நினைவுக்கு வருகிறது. தனக்கு சாதூரியமாக வளைத்துப் போடுவதில் கெட்டிக்காரர்தான் கலைஞர்!

krishjapan said...

But, peopel say MK is not Arasiyal Chanakyar...

சந்திப்பு said...

Good joke! Nice

krishjapan said...

Ippo konjam santhoshama santhippu sir...

சந்திப்பு said...

Thanks ஏன்? எப்படி? எதற்கு? said...

Yes I enjoy now... Krishna. How ever my argument against congress is still same position.

siva gnanamji(#18100882083107547329) said...

congress thanithu pottiyidum ovvru muraiyun 27 idangalil jeyikkinradu.(77 il cpi udabum 89 il dr krisnaswamy udanum koottu)
police station kku edho oru karanamaga poikkondirundhaldhan katchiya?paraparappu arasiyaldhan arasiyala? congressirkku thondar palam illai engireergal, well adhan committed following neengal ariveergala?
kadandha 40 anugalil katchi marigalin ennikkai endha katchigalil adhigam?
pandarangaludan piragu kttani vaithavargalin ninaivu ulladha?
vajbai yai officeby akkuven enravargal enna aanargal?
mla seat ukkaga idam marum arasiyalil andha katchi maththappu vida venduma?

பட்டணத்து ராசா said...

its really a blow to dmk alliance. And if the congress get seats of south tamilnadu(probably this is what going to happnen since north will be shared with pmk). there is strong possiblity of losing 60 -70% of seats since admk alliance are strong in the south.

dmk need to win nearly all the seats and so pmk also. if not ..

krishjapan said...

I feel, now MK will have the upper hand in deciding which seats to each party. Having given due consideration to the numbers, he will show his cleverness in allotting some tough seats to congress and it wont/cant object...

Pattinathu rasa, if there is a sweep, then it wont matter. if not, it is better for congress to lose the seats which are oppositions strong (meaning south, strength of ADMK/MDMK) and PMK/DMK to win the strong seats.

One more, any assurance of Rahul/Priyanka campaigning from congress he might have got?