
நெருப்பே
ஏன் இந்த கோபம்!
தண்ணீர்தான் உனக்கு
வில்லன் என்பதாலா?
வனங்களிளும், மக்கள் வாழும்
இடங்களிலும் உன் தீண்டல்
செல்லுபடியாகலாம்...
இங்கு
உன் சக்தி விரயமாய்...
ஆக்கலுக்கு துணை நில்
அடக்கமாய்...
அழிவுக்கு துணைபோனால்
அடங்கிப் போவாய்...
எது ஏமாற்றம்! ஏமாற்ற முடியுமா!!
எங்கள் பகுதியில் 9வது ஆண்டு பொங்கல் விழா - விளையாட்டு போட்டி - கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். இதற்காக நன்கொடை வாங்க கொடை வள்ளல்கள் சிலரிடம் சென்றோம். அதில் ஒருவர் நடந்த நிகழ்ச்சியை கூறினார். ரசிக்க முடிந்தது -
கருத்தாகவும் இருந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதை சிறு கதையாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.
(நன்கொடை கொடுத்த நன்பர் இந்த உண்மை சம்பவத்தையும் கூறி, எங்களுக்கு நன்கொடையும் கொடுத்து அனுப்பினார். அவர் உதிர்த்த தத்துவ முத்து : நாம் இந்த உலகத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது! - அவருக்கு தெரியாது இந்த உலகத்தில் ஏமாற்றாமல் (மன்னிக்கவும் சுரண்டாமல்) வாழ முடியாது என்று! இது என் கருத்து!)
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒழுக்கம்!
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒழுக்கம்!பா.ஜ.க.வின் புதிய தலைவராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுள்ளார். வாஜ்பாய், அத்வானி தவிர வேறு யாரும் இரண்டு வருடங்களுக்கு மேல பா.ஜ.க.வில் தலைவராக பொறுப்பில் நீடிக்கவில்லை என்பது பா.ஜ.க.வின் வரலாறு. முரளி மனோகர் ஜோஷி, குஷாபாவ் தாக்ரே, பங்காரு லட்சுமணன், வெங்கய்யா நாயுடு இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர்தான் ராஜ்நாத் சிங்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் பொறுப்பேற்றபோது, இந்திய மீடியாக்களில் இளமையான தலைவர் என்று பத்திரிகைகளில் இடம் பிடித்தார். அவரது வரலாறுகள் தீவிரமாக அலசப்பட்டது. கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் கூட எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை.
இந்தப் பின்னணியில்தான் RSS-சும் பா.ஜ.க.விற்கு ஒரு இளமையான தலைவர் தேவை என்ற ஆலோசனையை முன்வைத்து அத்வானியின் காலை வாறுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. பா.ஜ.க. தலைவர் பதவிக்கு பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி... என பலரது பெயர்கள் தீவிரமாக அடிபட்டன.
ஆனால் RSS-க்கு நம்பகமானவரான ராஜ்நாத் சிங்க்கு தற்போது மகுடம் சூட்டப்பட்டுள்ளது.இதன் மூலம் எதிர் வரும் ஆண்டுகள் இந்திய நாட்டிற்கு மதவாத தலைவலி ஆரம்பமாகும் என்ற சிக்னலை சுளுளு விடுத்துள்ளது. அவர்களது நீண்டநாள் கனவான அயோத்தி ராமர் கோவில், காஷ்மீர் விவகாரம், கலாச்சார தேசியம் என பல வழிகளில் மக்களை மதஅடிப்படையில் மோதவிடக்கூடிய செயல்களில் ஈடுபடுவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளனர்.
அதே சமயம் உத்திரபிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் வெளிப்படையாக ராஜ்நாத் சிங் ஒரு கிரிமினல், இவருக்கு பிரபர மாபியா கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்து நிரூபித்தால் நான் முதல்வர் பதவியில் இருந்தே விலகுகிறேன் என்று சவால் விடுத்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் பா.ஜ.க.வின் தலைவர் பதவியில் அழுக்கேறிய கரைபடிந்த கரங்களே அதிகாரப் பீடத்தில் ஏறியிருக்கிறது என நம்பலாம்.
RSS - பா.ஜ.க.விடம் இருந்து ஒழுக்கமானவரையும், ஊழலற்றவரையும், நடத்தையில் சிறப்பானர்களையும் கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்றே கடந்த கால அனுபவம் நிரூபித்துள்ளது. எனவே ராஜ்நாத் சிங்கின் பதவிக்காலம் எத்தனை நாட்களோ தெரியவில்லை! விபரம் தெரிந்தவர்கள் கூறலாம்.