May 08, 2008

உத்தப்புரத்தில் பிரகாஷ் காரத்




உத்தப்புரத்தில் உற்சாகப் பெருவெள்ளம்
அவமானச் சின்னம் அகற்றப்பட்டது பிரகாஷ் காரத் பெருமிதம்

உத்தப்புரம் கிராமத்திற்கு மட்டுமல்ல தமிழக வரலாற் றிலும் இன்று ஒரு பொன் னா ளாகும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் பிரகாஷ் காரத் கூறினார். புதனன்று உத்தப்புரம் மக்களிடையே பேசிய அவர் கூறியதாவது:-கடந்த 18 ஆண்டுக ளுக்கும் மேலாக நிறுவப்பட் டிருந்த அவமானச்சின்னம் அகற்றப்பட்டுள்ளது. மக்களை சாதி ரீதியாக பிரித்து வைத் திருந்த, சாதிய ஒடுக்கு முறையின் சின்னமாக விளங் கிய தீண்டாமைக் கொடுமை யின் உச்சமாக காட்சியளித்த சுவரின் ஒரு பகுதி தகர்த்தெறி யப்பட்டுள்ளது. சுவரின் ஒரு பகுதியை தகர்த்து பொதுப்பாதை அமைத்த மாநில அரசையும் இதற்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணி வீரர் களையும் நெஞ்சாரப் பாராட் டுகிறேன்.கட்சியின் மாநில செயற் குழு கூட்டத்தில் பங்கேற் பதற்காக சென்னை வந்திருந்த போது மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்களை பிரித்து ஒதுக்குவ தற்காக கோட்டைச்சுவர் கட் டப்பட்டிருப்பதாக தகவல் தெரி விக்கப்பட்டது. இது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. தீண் டாமைச்சுவரை அகற்றக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவது என்று கட்சி முடிவு செய்தது. அந்த இயக்கத்தில் நானே நேரடியாக வந்து பங்கேற்கிறேன் என்று தெரிவித்தேன். இந்த நிலை யில் தான் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு பொதுப்பாதை திறக்கப்பட்டுள்ளது.நாடு சுதந்திரம் பெற்று 61 ஆண்டுகள் ஆகியும் இன்ன மும் சாதியக்கொடுமையும். ஒடுக்குமுறையும் நீடிப்பது வெட்கப்படத்தக்கது. இன்ன மும் தேசத்தின் பல கிராமங் களில் தீண்டாமை எனும் மனி தத் தன்மையற்ற செயல் நீடிப்பது விடுதலைப்போராட்ட உணர்வுகளுக்கு மாறானது. நாடு விடுதலை பெற்ற பிறகு நமது நாட்டின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது அனைத்துவகையான சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சட்ட விதிகள் உரு வாக்கப்பட்டது. ஆனால் தீண் டாமைக் கொடுமை நீடிக்கிறது.சமூக அநீதிக்கு எதிரான துவக்கமாக இன்றைக்கு உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப் பட்டுள்ளது ஒரு நல்ல துவக்க மாகும். இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.நமது நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய முக்கிய சிற்பியான டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் அனைத்து மக்களுக்கும் அரசி யல் சமத்துவம் மட்டுமின்றி சமூக பொருளாதார சமத் துவமும் உறுதிப்படுத்த வேண் டும் என்று கூறினார். சாதிய ஒடுக்குமுறைக்கு முற்றாக முடிவுகட்டவேண்டுமென்பதே அவரது கனவாகும்.இன்றைக்கு உத்தப்புரத் தில் தீண்டாமைச்சுவர் இடிக் கப்பட்டுள்ள செய்தியை நாட் டின் அனைத்து பகுதிக ளுக்கும் முன்னெடுத்துச் செல் வோம். சாதிய ஒடுக்குமுறை எந்த வகையில் நீடித்தாலும் அதை தகர்த்தெறிவோம்.உத்தப்புரம் கிராமத்தில் திறந்தவெளி சாக்கடை தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இது மூடிய சாக்கடையாக மாற்றப் பட்டு ஊருக்கு வெளியே கொண்டு செல்லப்படவேண்டும்.இங்குள்ள மக்கள் கட வுளை நம்புகிறவர்கள். கட வுள் அனைவருக்கும் பொது வானவர் என்று கூறப்படுகி றது. அதைப்போல கோவில் என்பதும் அனை வருக்கும் பொதுவான ஒன்று தான். தலித் பகுதி மக்களும் கோவிலுக்கு சென்று கட வுளை வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். அதே போன்று இந்த கிராமத் தின் அனைத்து பகுதி மக்க ளுக்கும் அடிப் படை வசதிகள் செய்து தரப் படவேண்டும்.சமுதாயத்தின் ஒரு பகுதி மக்களை ஒடுக்குவதன் மூலம் மற்றொரு பகுதி மக்கள் ஒடுக்குமுறையின்றிவாழ்ந்துவிட முடியாது. அனைத்து பகுதி மக்களும் சமத்துவமாக வாழ வேண்டும். சுவருக்கு அந்தப்பக்கம் உள்ள மக்கள் சுவர் இருப் பதுதான் தங்களுக்கு பாது காப்பானது என்று கருது வார்களேயானால் அந்த தவ றான எண்ணத்தை கைவிட வேண்டும். ஒரு பகுதி மக் களை ஒடுக்குவதில்தான் தங் களது பாதுகாப்பு இருப்பதாக அவர்கள் கருதக்கூடாது.பொருளாதார அடக்கு முறைகளுக்கு எதிராக பாதிக் கப்படும் அனைத்துபகுதி மக்க ளும் தோளோடு தோள் நின்று போராட முன்வரவேண்டும். அதன் மூலம்தான் அனைத் துப்பகுதி மக்களும் முன்னேற முடியும்.மே 6ம் தேதி ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள் ளது. புதிய பாதை திறக்கப்ப ட்டுள்ளது. இது நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. ஜனநாயகமும், சமத்துவமும் நிலவுகிற உத்தப்புரம் அமைய வேண்டும் என வாழ்த்துகி றேன். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக் களை தெரிவித்துக்கொள்கிறேன்.தீண்டாமைக்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு துவக்கம்தான். தேசத் திற்கே அவமானமாக உள்ள இக்கொடுமைக்கு முற்றாக முடிவுகட்டுவோம். இதற்கு உத்வேகம் அளிப்பதாக உத் தப்புரம் அமையட்டும்.இவ்வவாறு காரத் பேசினார்.அவரது ஆங்கில உரையை மத்தியக்குழு உறுப் பினர் உ.ரா.வரதராசன் தமி ழாக்கம் செய்தார்.





எழுச்சி... மகிழ்ச்சி... நெகிழ்ச்சி...!




மதுரை மாவட்டம் பேரை யூர் தாலுகா உத்தப்புரம் கிரா மத்தில் கட்டப்பட்டுள்ள தீண் டாமைச்சுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் (மே-7)புதனன்று பார்வையிட்டார்.தீண்டாமை ஒழிப்பு முன் னணி மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்களில் நடத்திய கள ஆய்வில் பல்வேறு வடிவங் களில் தீண்டாமைக்கொடுமை இருப்பது தெரியவந்தது. உத்தப்புரத்தில் தலித் மக்கள் மற்ற பிரிவினர் வாழும் பகுதிக்கு செல்வதை தடுத்து சுவர் வைக்கப்பட்ட விபரம் வெளி வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தது. கடந்த 29 ஆம் தேதி பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு சுவர் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மே மாதம் 7 ஆம் தேதி உத்தப்புரம் கிராமத்திற்கு வந்து மக்களை சந்திக்க ஏற் பாடு செய்யப்பட்டது.தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் மே 6 அன்று கிராமத்தில் பொதுப் பாதையை மறித்து கட்டப்பட் டிருந்த தீண்டாமைச்சுவரின் ஒரு பகுதியை மாவட்ட நிர் வாகம் அகற்றி அங்கு பாதை யையும் அமைத்தது.இந்நிலையில் மே 7 புதனன்று அகிலஇந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உத்தப்புரம் கிராமத் திற்கு சென்றார். கிராமத்தில் தீண்டாமைச்சுவர் கட்டப்பட் டுள்ள பகுதியையும், பொதுப் பாதை ஏற்படுத்திக்கொடுத் துள்ள பகுதியையும் அவர் பார்வையிட்டார். பின் கொளுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாது அங்கு கூடியிருந்த மக்களிடையே பிரகாஷ்காரத் பேசினார்.பிரகாஷ் காரத்துடன், மாநிலச்செயலாளர் என். வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர் உ.ரா. வரதராசன், மாநில செயற்குழு உறுப்பினர் கள் பி. சம்பத், எம்.என்.எஸ். வெங்கட்டராமன், என். சீனி வாசன், ஏ. லாசர், மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் பொ.மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் என். நன் மாறன், கே. பாலபாரதி, மது ரை புறநகர் மாவட்டச் செய லாளர் வெ. சுந்தரம், மாநகர் மாவட்டச்செயலாளர் இரா. அண்ணாதுரை, விருதுநகர் மாவட்டச்செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், தூத்துக் குடி மாவட்டச்செயலாளர் கனகராஜ், மாநிலக்குழு உறுப் பினர்கள் தே. லெட்சுமணன், இரா. ஜோதிராம், மதுக்கூர் இராமலிங்கம், ச. தமிழ்ச் செல்வன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சுவாமிநாதன், சிபிஎம் மாவட்டத்தலைவர்கள் உடன் சென்றிருந்தனர்.உத்தப்புரம் கிராமத்தின் சார்பில் பி.பொன்னையா, சங் கரலிங்கம், ஊராட்சித்தலை வர் புஷ்பம் ஆகியோர் பிர காஷ்காரத், என்.வரதராஜன், பி.சம்பத் ஆகியோருக்கு சால் வை அணிவித்து கௌரவித் தனர். இறுதியாக கிராமத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், தீண் டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய ஊர் பெரிய வர் பொன்னையா, தலித் மக்கள் உடைகளை சலவை செய்வது, முடி திருத்தம் செய் வது போன்ற விஷயங்களிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படு கிறது. இப்பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற் கும் தலைவர்கள் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.முன்னதாக மதுரை விமான நிலையத்தில் பிரகாஷ் காரத்தை மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.





தேசத்தின் கவனத்தை ஈர்த்த வருகை...


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் புதனன்று உத்தப்புரம் கிராமத்திற்கு வருகை தந்தார். அவரது இந்த வருகை மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் கவனத்தை ஈர்த்தது. விமான நிலையத்திலேயே 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். உத்தப்புரம் கிராமத்திற்குச் சென்று தீண்டாமை கோட்டைச் சுவரையும், செவ்வாயன்று அமைக்கப்பட்ட பொதுப்பாதையையும் அவர் பார்வையிட்டார். அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். தேசிய அளவிலான தொலைக்காட்சிகள் இதை நேரடியாக ஒளிபரப்பின. தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் பெருந்திரளான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் பங்கேற்று உடனுக்குடன் செய்தியை ஒளிபரப்பினர்.

20 comments:

Anonymous said...

சுத்த சுயம்பர பரிசுத்த சந்திப்பு அவர்க்ளே இந்த பிளாக் திறந்த பொழுது இதை ஏதோ மிகப் பெரிய ஜனனாயகவாதி போல வரவேற்றாயே இப்ப எங்க போச்சு வீர காம்ரேட் உங்க ஜனனாயகம், நீங்க உண்மையான நேர்மையான கம்யூனிஸ்டு என்பதெல்லாம் அடுத்து முதல்ல இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அடுத்து பதிவு போடுரவன் மானமுள்ள மனிதன், அடுத்து நீங்க கம்யூனிஸ்டா என்பது பற்றி விவாதிப்போம்.

இதையும் உங்கள் பதிவில் போடுவேன் இதையும் போடலேன்னு வச்சுக்கோங்கோ நன்னா கேப்பேன். . .

Anonymous said...

ஆக, நம்ம சந்திப்பு அவர்களும் அவர் சார்ந்த கட்சியினரும் நெசமாத் தீண்டாமைக்கு எதிரானவர்கள்தான் போலிருக்கு!!!!!

நான்வேற தப்பா நெனச்சிப் புட்டேன். பார்ப்பனீயத்த ஒருபக்கம் ஆதரிச்சாலும், இதுபோன்ற ஆதிக்க சாதியினரை எதிர்ப்பதில் எந்தவிதமான சமரசமுமின்றி போராட இவர்கள் என்றுமே தயங்கியது கிடையாது!!!!!

பிரகாஷ்காரத் வரும் சேதிதான், இந்த சுவரை அரசாங்கம் இடிக்கக் காரணம் என்று இவர்கள் சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே புல்லரிக்குது காம்ரேட்!!!!!

அப்படியானால் பிரகாஷ்காரத் தமிழ்நாட்டுலயே கொஞ்சநாளைக்குத் தங்கியிருந்து தீண்டாமைய முழுமையா ஒழிச்சிபுட்டுப் போவச்சொல்வீர்களா? கொஞ்சம் பெரியமனசுப் பன்னி அவர்காதுல எடுத்துச் சொல்லுங்களேன்.


பொறுமையுடன் காத்திருக்கும்,
'உத்தபுரத்தில் காரத்' கதைப்பட இரசிகர் மன்றத் தலைவன்,
'காரத்'மணி.

ஏகலைவன் said...

நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.

குறிப்பாக இந்துவெறி பாசிச நடவடிக்கைகள், எமது அமைப்பின் தோழர்களால் தொடர்ந்து மக்கள் மத்தியில் திரைகிழிக்கப்பட்டு, தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.

இவ்வாறான எமது நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ளத் திராணியற்ற இந்துவெறி பாசிஸ்டுகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் நம்மை இழிவுபடுத்தும் நோக்கில், கம்யூனிசத்தை அவதூறு செய்து வருகின்றனர்.

இணையத்தில் வெகுவாக ஆக்கிரமித்திருந்த இந்துவெறிக் கும்பலின் மிச்ச சொச்சங்களான, அரவிந்தன் நீலகண்டன், அதியமான், ஜடாயு போன்ற அம்பிகளும், அமெரிக்க பூட்ஸ் நக்கி 'டாலர்'செல்வனும் கூட்டாக இணைந்து தமிழ்மணி என்ற பெயருக்குள் ஒளிந்துகொண்டு இங்கே கம்யூனிச அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்.

கம்யூனிஸ்டுகளையும் திராவிட இயக்கத்தோழர்களையும் மோதவிடும் நோக்கில் பலமுறை இவர்கள் எழுதிவந்தனர். இவர்களின் இத்தகைய சதிவேலைகளை சம்பூகன் என்ற தோழர், அவர்களின் வார்த்தைகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்து, இது மேற்கண்ட பார்ப்பனக் கும்பலின் சதிவேலைதான் என்று தெளிவாக அம்பலப்படுத்திவிட்டார்.

அதற்கு பதில் சொல்லப் பயந்து, பதுங்கி இணையத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்த இந்த அம்பிகள், நேபாள மக்கள் எழுச்சியின் விளைவாக நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மைபெற்று, அங்கிருந்த இந்துராச்சியத்தை அடித்து வீழ்த்தியதன் விளைவை பொறுக்கமாட்டாமல், தமது அவதூறு கருத்துக்களை மீண்டும் அள்ளித் தெளிக்க இங்கே ப்ரசன்னமாகியிருக்கின்றனர்.

அவர்கள் தம்மை பொதுவாக கம்யூனிச எதிரி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டாலும், அவர்களுடைய நிரந்தர இலக்கு நாம் தான் என்பது அவர்களுடைய தொடர் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களை ஆதரித்த இவர்கள், இப்போது போலிகம்யூனிஸ்டு முகாமைச் சேர்ந்த சந்திப்புடன் கரம் கோர்த்திருக்கிறார்கள்.

மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து கம்யூனிச ஆசான்களையும் வசைமாறி பொழிந்து இழிவுபடுத்தியதுமில்லாமல், நமது தோழர்களையும் அமைப்பையும் வெளிப்படையாக கொச்சைப்படுத்திவந்த இவர்களுக்கு, சி.பி.எம். என்ற போலி கம்யூனிஸ்டு கட்சி மிகவும் உகந்ததாம். அக்கட்சியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவருகின்றனவாம்.

இதிலிருந்தே இவர்கள் எந்த அடிப்படையிலானவர்கள் என்பது தெளிவாக விளங்கும். போலிகளின் அடையாளத்தை இதைவிட யாரும் தெளிவாக அம்பலப்படுத்திவிட முடியாது.

இவர்கள் கரம் கோர்த்து செயல்படுவதுதான், நாமும் நம்முடைய பாதையும் சரியானது என்பதை உரக்கச் சொல்லும் சான்றுகள்.

இவ்வளவு சொல்லியும், "அப்படியெல்லாம் கிடையாது, எமது சந்திப்பு அவர்களும், அவர் சார்ந்த இயக்கமும்! சொக்கத் தங்கம்" என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் உம்முடைய சொக்கத் தங்கம் இன்றுவரை தமிழ்மணியின் தொடர்ச்சியான கம்யூனிச அவதூறுகளுக்கு ஒரு எழுத்தில் கூட பதில் சொல்லாதது ஏன்?

சி.பி.எம்.மை ஆதரித்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, கம்யூனிச ஆசான்களை இரண்டு பக்கத்துக்கு வசைபாடினால் நம்ம சந்திப்புக்கும் அவருடைய கட்சிக்கும் எதுவுமே உரைக்காதா?

இதுவரை எமது பல கேள்விகளுக்கு பதில் சொல்லாத சந்திப்புக்கு இன்னுமொரு கேள்வியை இதன் வாயிலாக வைக்கலாமென்று நினைக்கிறேன்.

"நன்றாக உபசரித்து விதம்விதமான பலகாரங்களுடன் விருந்து பரிமாறிவிட்டு இலையின் ஓரத்தில் ஒருதுளி பீயை வெச்சா சாப்புடுவியா?" என்று கிராமத்தில் சொரனையை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லாடல் உண்டு. நான் அதுபோல சந்திப்பைக் கேட்கமாட்டேன். இந்த தமிழ்மணி கும்பல் நம்ம சந்திப்புக்கு விருந்து உபசரிக்கும் முறை இதற்கு நேரெதிரானது அல்லவா?

அதனால், "இலை முழுவதும் பீயையும் எருமைச் சாணியையும் வைத்துவிட்டு அவற்றுக் கிடையில் ஒரு துண்டு (சி.பி.எம். பாராட்டு என்ற) திருநெல்வேலி அல்வாவை வைத்தால், அதை ஏற்றுக்கொள்வீரா???"

சந்திப்பு அவர்களே, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்க்கிறோம்.

இதற்கு மேலும் உமது சொரனையற்ற தன்மை தொடருமேயானால் என்ன செய்வது என்பதை வாசகரின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.


ஏகலைவன்.

தமிழ்மணி said...

நண்பர் ஏகலைவன்,

நீங்கள் என்னைப்பற்றி கூறும் அவதூறுகளுக்கு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை. விவாதம் என்னைப் பற்றியதல்ல. விவாதம் கம்யூனிஸம் பற்றியது. அதனை விவாதியுங்கள். உங்கள் கும்பல் விவாதத்தில் தோற்கிறது என்று உணர்ந்ததும், அவதூற்றை ஆரம்பித்துள்ளீர்கள். ஆகவே அவற்றை உதாசீனம் செய்கிறேன்.

சிபிஎம்- சிபிஐ போன்ற கட்சிகள் மீது எனக்கு எந்தவிதமான பாசமும் இல்லை.
ஆனால், மக இக போன்ற கட்சிகளை என்னை போன்ற பொதுமக்கள் வெறுப்பது போன்று அவைகளை வெறுப்பதில்லை. சிபிஎம் சிபிஐ போன்றவைகள் நந்திகிராமத்தில் வெறியாட்டம் ஆடுகின்றன என்று நான் விமர்சித்திருக்கிறேன். நான் மட்டுமா விமர்சித்திருக்கிறேன்? ஏராளமான இடதுசாரி சிந்தனையாளர்களே விமர்சித்துள்ளார்கள்.

ஆனால், வன்முறையே வழி என்று சொல்லும் மக இக, எஸ் ஓ ஸி, சிபிஐ எம் எல் மாவோயிஸ்டு ஏ பி சி டி போன்றவைகளுக்கு சிபிஎம்மை விமர்சிக்க அருகதை உண்டா?

சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் ஒரு காலத்தில் வன்முறையில் இருந்திருக்கலாம். தற்போது வன்முறை வழியை விட்டுவிட்டு, மக்களிடம் பிரச்சாரம், பாராளுமன்ற வழியில் உடனடி மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது என்று இறங்கியுள்ளார்கள். அதனை அவர்கள் "இந்திய சூழ்நிலைக்கு" ஏற்ப நடைமுறைக்கு கொண்டுவருவது என்று கூறுகிறார்கள். அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். ஆனால், அவர்கள் வன்முறையை தங்களது முக்கியமான வழிமுறையாக கட்சி திட்டத்தில் ஏற்காதவரை அவர்களது தலைவர்கள், தொண்டர்கள் செய்யும் தவறுகளை மன்னித்தே ஆகவேண்டும். அவர்கள் வன்முறையில் இறங்கினால், அவர்களது குற்றங்களை இந்தியாவின் நீதிமன்றங்கள் விசாரிக்கவேண்டும். தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். சிபிஎம் தொண்டர் செய்த கொலைக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது வழிமுறைக்காக நன்றி செலுத்தவே வேண்டும். ஆனால் நக்ஸல்கள் செய்யும் கொலைகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லத்தயாரா?

இல்லாத பொற்காலத்துக்காக பிரச்சாரம் செய்வது மன்னிக்கக்கூடியது. இல்லாத பொற்காலத்துக்காக இன்று இருக்கும் ஆட்களை கொல்லுவது மன்னிக்கவே முடியாதது.

மேலும் நான் ஏற்கெனவே விவாதத்தில் கலந்துகொள்ள சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவரை நீங்கள் நிர்பந்திக்க முடியாது. எந்த நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும், எந்த நேரத்தில் தன் தனிப்பட்ட வேலையை பார்க்கவேண்டும் என்று அவருக்கு தெரியும் அல்லவா? ஆகவே விவாதத்தில் கலந்துகொள்ள என்ன முறைகள், எவ்வாறு அவதூறுகள் இல்லாமல் விவாதிப்பது என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். வெறும் அவதூறுகளும் அசிங்கமான திட்டுகளுமே விவாதங்கள் ஆகாது. அது உங்கள் பக்கம் ரொம்ப வீக் என்னும் எண்ணத்தைத்தான் படிப்பவர்களின் மனத்தில் தோற்றுவிக்கும்.

நன்றி
தமிழ்மணி

Anonymous said...

புல்லரிக்கிறது 'தோலர்' சந்திப்பு அவர்களே.

'நன்பர்' தமிழ்மணி + 'தோலர்' சந்திப்பு.. அருமை அருமை. சிபிஎம் + அதிமுக கூட்டனியை விட பிரம்மாதமாக பிரகாசிக்கும் வாய்ப்புள்ள கூட்டனி தான். உங்களிருவரையும் வாழ்த்துகிறேன் - சேர்ந்தே 'வளருங்கள்' - புண்ணியமா போகட்டும்!! ( அட.. மார்க்ஸியத்துக்கு தாங்க)

உங்கள் தேர்தல் "ஜனநாயக" சர்க்கஸ் கூத்தை மெச்சிப் போற்றுவது யார் என்று கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள் அப்போது புரியும் உங்கள் நடைமுறையில் என்ன கோளாறு என்று.. இன்னும் சரியா புரியவில்லை என்றால் அப்படியே கீழைக்காற்று வரைக்கும் ஒரு நடை போய் 'ஒரு கம்யூனிஸ துரோகியின் மரண சாசனம்' அப்படின்னு ஒரு புக் விக்கு்து வாங்கிப் படிச்சுப் பாருங்க - ஒரு வேளை புரியலாம்.

சில நாட்கள் முன்பு ம.க.இ.க வின செயல் திட்டம் இது தான் என்று ஏதோ புத்தகத்தில் இருந்து பிய்த்துப் பிய்த்துப் போட்டு எழுதிக் கொண்டிருந்தீர்களே அந்தப் பதிவுகளைப் படித்தேன். வாயால் சிரிக்க முடியவில்லை - தமிழ்மணி கிட்டே டியூஷன் போனீர்களோ என்னவோ என்று பயந்தே விட்டேன்.

உங்க பேஸ்மெண்ட் எந்தளவுக்கு வீக் என்பதை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டிய பதிவுகள் அவை தான்..

அந்தப் பதிவுகளில் எங்கேயோ தானே சொன்னனீர்கள் - சுசி ஒரு நக்சல்பாரி அமைப்பு என்று? வெளங்கீரும் போங்க..

அப்பாலிக்கா உங்க 'நன்பருக்கு' ஒரு வார்த்தை

//இல்லாத பொற்காலத்துக்காக இன்று இருக்கும் ஆட்களை கொல்லுவது மன்னிக்கவே முடியாதது.//

என்னா 'நன்பரே'... ஸந்திப்பு ஸொல்லிக் கொடுத்தாரா? பாவம்டா அம்பி நீ.. இன்னுமா ம.க.இ.க = காடு = துப்பாக்கி =கொலை அப்படிங்கற பார்முலாவை வைத்து கணக்குப் போட்டிண்டிருக்கே? அந்த பார்முலாவே தப்புடா அம்பி. obviously.. ஒனக்குக் கிடைச்ச விடையும் தப்பு தான்.

ஆனா ஒன்னு இப்ப என்ன பண்ணிண்டிருக்கியோ அதை தவறாம தொடர்ந்து பண்ணு. நம்ம தோலர் எப்படில்லாம் நெளியறாருன்னு பார்க்க ஆவலா காத்துட்டு இருக்கோம்

Anonymous said...

தமிழ்மணி, ம.க.இ.க வன்முறை அமைப்பல்ல.. அந்த இயக்கம் தொடங்கப்பட்ட வரலாற்றுப் பின்னனி குறித்து இந்த பதிவில் இருக்கிறது -

http://athirai.blogspot.com/2008/05/blog-post.html

அதிலிருந்து சில வரிகள் -

//அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள் விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள்.பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள்.நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள்.முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள்.இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு.ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது சித்தாந்தமல்ல.மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக் இருக்கும் என முரண்பட்டு நின்றவர்கள்.நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு s.ஷீ.நீ என்றழைக்கப்படும் மார்க்ஸிய லெனினிய சித்தாந்த அடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியை நிறுவினார்கள்.ஆயுதங்களை சுமந்து திரியும் சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய் மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்டுகிறார்கள்.//

ஏகலைவன் said...

///நீங்கள் என்னைப்பற்றி கூறும் அவதூறுகளுக்கு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை. விவாதம் என்னைப் பற்றியதல்ல. விவாதம் கம்யூனிஸம் பற்றியது. அதனை விவாதியுங்கள். உங்கள் கும்பல் விவாதத்தில் தோற்கிறது என்று உணர்ந்ததும், அவதூற்றை ஆரம்பித்துள்ளீர்கள். ஆகவே அவற்றை உதாசீனம் செய்கிறேன். ///

அய்யா பார்ப்பன 'டும்மி'மணி அவர்களே,

உங்களோடு போதுமான அளவுக்கு விவாதங்களை நடத்தியாகிவிட்டது. சம்பூகன் உம்மைத் திரைகிழித்து காட்டிய பிறகு, இதுவரை அவற்றுக்கு பதில் சொல்லாத நீ இங்க வந்து ஒப்பாரி வக்கிறத்து கேவலமா இருக்குது. என்ன செய்யறது ஒனக்கும் இந்த சி.பி.எம். கோமாளியவிட்டா வேறுயாரும் ஒத்தாசைக்குக் கிடையாது பாவம்.

///ஆனால், வன்முறையே வழி என்று சொல்லும் மக இக, எஸ் ஓ ஸி, சிபிஐ எம் எல் மாவோயிஸ்டு ஏ பி சி டி போன்றவைகளுக்கு சிபிஎம்மை விமர்சிக்க அருகதை உண்டா?///

மகஇக, வன்முறையே வழி என்று செயல்படுவதாக உன்னிடத்தில் சொன்ன அந்த கேனையப் போயி கேளு மாப்ள.

ஆர்.எஸ்.எஸ். ஷாகா வைப் போன்று, மகஇக குண்டர்படை தயாரிப்புப் பிரிவு என்று எதுவும் நடத்துகிறதா?

குஜராதில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் என்ன, மோடியும் இந்துத்துவ ரவுடிகளும் பூப்பந்து விளையாட்டின்போது இடையில் மாட்டி இறந்து போனார்களா?

//சிபிஎம்மை விமர்சிக்க அருகதை உண்டா?//

இந்த ஒரு வரி போதும்யா, ஒங்களோட கூட்டுக் களவானித்தனத்த அம்பலப்படுத்த.
(மேலும் தோழர் கார்க்கி மிக அற்புதமாக இதனைக் கோடிட்டுக் காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறார்.)

//தற்போது வன்முறை வழியை விட்டுவிட்டு, மக்களிடம் பிரச்சாரம், பாராளுமன்ற வழியில் உடனடி மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது என்று இறங்கியுள்ளார்கள்.///

எந்த வழியிலயாவது போய்த் தொலைக்கட்டும். தாம் ஆளாத மாநிலங்களில் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதுவும்!!!, ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களைத் தீர்பதுவும் எவ்வளவு அற்(ப)புதமான கொள்கை போங்கள்.

// அதனை அவர்கள் "இந்திய சூழ்நிலைக்கு" ஏற்ப நடைமுறைக்கு கொண்டுவருவது என்று கூறுகிறார்கள். ///

அதாவது பனம்பழம் கனிந்து விழும்போது காக்கையைப் போல வருவார்கள், அப்படித்தானே?!

///அவர்கள் வன்முறையில் இறங்கினால், அவர்களது குற்றங்களை இந்தியாவின் நீதிமன்றங்கள் விசாரிக்கவேண்டும். தண்டனை வழங்கப்பட வேண்டும்.//

நீதிமன்றம் என்ன பரம யோக்கியமா? வெறும் நாற்பதாயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, குஜராத் மாநில அகமதாபாத் நீதிமன்ற நீதிபதி இந்திய ஜனாதிபதிக்கே (ஜனாதிபதியின் யோகியதை ஒருபுறம் இருக்கட்டும்) வாரண்ட் பிறப்பிக்கவில்லையா?

அரசியல்வாதிகள் அதிகாரிகளைக்காட்டிலும் லஞ்சத்தில் ஊறித்திளைப்பவர்கள் இந்த நீதிபதிகள் என்பது பல கோணங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சொல்லும் தீர்ப்பைத்தான் மதிக்கவேண்டுமாம்.

///நக்ஸல்கள் செய்யும் கொலைகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லத்தயாரா?///

இந்திய ஆளும்வர்க்க ஆதரவோடும், இந்துவெறி பாசிசவாதிகளின் ஒத்துழைப்போடும் செயல்பட்டுவரும் ரண்வீர்சேனா குண்டர்களையும், சல்வாஜூடும் குண்டர்களையும் கண்டிக்க நீங்கள் தயாரா அம்பி?

அப்பாவி மக்களைக் கொன்று குவித்துவிட்டு நக்சல்கள்தான் செய்ததாக ஜோடிக்கும் இந்த பேடிகளைப் பற்றி உமக்குத் தெரியுமா அம்பி? இவர்களை அம்பலப்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்ட 'பிநாயக்சென்' என்பவரைப்பற்றியாவது தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார கும்பல் பொதுமக்களை (அவர்கள் இந்துவானாலும் முசுலீமானாலும்)கொன்று குவித்ததை தெகல்கா அம்பலப்படுத்தியதே, அதைக் கண்டிக்கத் துப்பில்லாத நீ, நக்சல்களைப் பற்றி பேசலாமா?
(நக்சல்கள் மீதான எமது விமர்சனங்களை மேலேயுள்ள annoy தோழர் எளிமையாக சுட்டியிருக்கிறார், கவனிக்கவும்.)

///இல்லாத பொற்காலத்துக்காக பிரச்சாரம் செய்வது மன்னிக்கக்கூடியது. இல்லாத பொற்காலத்துக்காக இன்று இருக்கும் ஆட்களை கொல்லுவது மன்னிக்கவே முடியாதது. //

உன்னைப் பொறுத்தவரை அது இல்லாத பொற்காலமாகவே இருக்கலாம், அதுபற்றி நீ மல்லுகட்டிக்கொண்டு எழுதித் தீர்ப்பது ஏன்? அதற்குபதில் நீ, இப்போ இருக்கிற இந்துவெறி பாசிசத்தையும் கொஞ்சம் எழுதிக் கிழிக்கலாமே!? நீ எழுதமாட்ட ஏனென்றால் அதில்தான் உனது பூணூல் இழைப் பின்னல் ஒளிந்திருக்கிறது.

///மேலும் நான் ஏற்கெனவே விவாதத்தில் கலந்துகொள்ள சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவரை நீங்கள் நிர்பந்திக்க முடியாது. எந்த நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும், எந்த நேரத்தில் தன் தனிப்பட்ட வேலையை பார்க்கவேண்டும் என்று அவருக்கு தெரியும் அல்லவா?///

இதை அவரே சொல்லலாமே, நீர் என்ன அவருக்கு எடுப்பாடா அம்பி?

///ஆகவே விவாதத்தில் கலந்துகொள்ள என்ன முறைகள், எவ்வாறு அவதூறுகள் இல்லாமல் விவாதிப்பது என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். வெறும் அவதூறுகளும் அசிங்கமான திட்டுகளுமே விவாதங்கள் ஆகாது. அது உங்கள் பக்கம் ரொம்ப வீக் என்னும் எண்ணத்தைத்தான் படிப்பவர்களின் மனத்தில் தோற்றுவிக்கும்.///

இதப்பத்தி நீ சொல்றதுதான் வேடிக்கை. பழைய அனானி, பஞ்சாங்க அனானி, பொறுக்கி அனானின்னெல்லாம் பெயர் வச்சிக்கிட்டு நீரே வந்து அவதூறு பிரச்சாரங்களை போட்டுக் கொள்வது, மிகவும் யோக்கியமான விவாதத் தந்திரமாடா அம்பிகளா?
விவாதத்தைப் பற்றிப் பேச ஒங்க கூட்டத்துக்கு எதுவும் யோக்கியதை உண்டா?
மொதல்ல நீ சம்பூகனின் கேள்விக்கு போயி பதிலச்சொல்லிட்டு வாடா அம்பி,
பொறவு பேசுவோம் நெறயா.

ஏகலைவன்.

Anonymous said...

//ஆர்.எஸ்.எஸ். ஷாகா வைப் போன்று, மகஇக குண்டர்படை தயாரிப்புப் பிரிவு என்று எதுவும் நடத்துகிறதா?//

தோழர், நம்ம 'டும்மி'மணியோட ஆர்.எஸ்.எஸ் பூலவாக்கு 'நன்பர்களெல்லாம்' என்னத்த கம்பு சுத்தி என்னத்த பிரகார் மார் அடிச்சி என்னத்த தண்ட பயிற்சி செய்து.... ஒரு பிரயோசனமும் இல்லையே..

இப்படி திட்டமிட்ட பயிற்சி எதுவுமே எடுக்காத உங்கள் ம.க.இ.க தோழர்கள் சென்னை உயர் நீதி மன்ற வளாகத்துல ஆர்.எஸ்.எஸ் காரர்களை சங்கராச்சாரிக்கு ஆதரவா தோழர்களை கம்புகளால் அடிக்க வந்த போது சொம்மா சொழட்டி சொழட்டி அடிச்சித் தொரத்தினாங்களே.. அதான் தமிழ்நாடே பார்த்ததே.

தோழர் சந்திப்பு, நீங்க அடிக்கடி சொல்கிறீர்களே.. உங்க கட்சி தான் பெரிய கம்யூனிஸ்டுக் கட்சியென்று.. உங்க தலிவருங்கெல்லாம் தொண்டர்களை போட்டு சாத்தின பா.ஜ.க தலைவர்களை நன்பர்கள் என்கிறார்கள்.. பார்க்க வரவில்லையே என்று மூக்கை சிந்திக்கொள்கிறார் உங்க புத்ததேவு.. ஆனா, உங்க வார்த்தைப் படியே இருப்பதிலேயே சின்னஞ்சிறிய அமைப்பான, தமிழநாடு என்னும் கிணற்றுக்குள் துள்ளும் தவளையான ம.க.இ.க கட்சித் தொண்டர்களோ அதிகார வர்க்கத்தின் ஆதரவில்லாத நிலையில்; எந்த சண்டைப் பயிற்சியும் இல்லாத நிலையில் மதவெறியர்களை விரட்டியடித்திருக்கிறார்களே - இது தாங்க புரட்சிகர உணர்வு என்பது..
தேர்தல் கம்யூனிஸ்டுக் கட்சியான பிறகு உங்கள் புரட்சிகர உணர்வு மொக்கையாகி விட்டது என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.


தமிழ்மணி, புரட்சிகர அரசியல் என்பது உங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருக்கும் கம்புகளை விட; நீங்கள் தென்காசியிலும் மற்ற பகுதிகளிலும் வெடித்து வருகிறீர்களே அந்த குண்டுகளை விட பலம் வாய்ந்தது. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

ஏகலைவன், ஆயுதங்கள் கூட எடுக்காத உங்க அமைப்பைப் பார்த்து இந்து பயங்கரவாதிகளில் இரு்ந்து தேர்தல் கம்யூனிஸ்டுக் கட்சி வரை ஏன் பயப்படுகிறார்கள் தெரியுமா? ஏன் தமக்குள் கள்ளக் கூட்டு கட்டிக் கொள்கிறார்கள் தெரியுமா? அது உங்கள் அரசியலின் புரட்சிகரத் தன்மையினால் தான்.. உங்கள் விவாதச் சண்டைகளை கவனித்து தான் வருகிறேன்.. ஒவ்வொரு பதிலிலும் ஒளிந்திருக்கும் அந்தக் கூர்மையான தாக்குதல் அருமை..தொடருங்கள்

ஏகலைவன் said...

மேலே பின்னூட்டமிட்டுச் சென்றிருக்கின்ற annoy தோழரின் கருத்துக்களுக்கு நன்றி!

மகஇகவின் பலம் அதன் சித்தாந்த ரீதியிலான செயல்முறையிலேதான் அடங்கியிருப்பதாக மிகவும் அருமையாக தெரிவித்திருக்கிறீர்கள். அதுதான் இந்துவெறி பயங்கரவாதிகளை குலைநடுங்க வைக்கிறது.

பார்ப்பன சொறிநாய் சுஜாதாவின் சாவுக்கெல்லாம் பதிவு போட்ட நமது யோக்கிய சிகாமணி சந்திப்பு, இதோ சில நாட்களுக்கு முன் ஜெய்பூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு படுகொலைகளுக்குக்கூட (தினமணி, தினமலர் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகளின் மொழிநடையில்)'பிங்க் சிட்டி பயங்கரவாதம்' என்று பதிவிடமுடிகிற இவர், தமிழ்மணி என்கிற பார்ப்பன இந்துவெறிக் கும்பல் கம்யூனிசத்தை அவதூறு செய்து எழுதுவதையும், இழிவுபடுத்துவதையும் எதிர்த்துக் கேட்கத் திராணியற்று, ஒரு கள்ளத்தனமான அமைதியோடு இருக்கிறார்.

தமிழ்மணியோ சந்திப்பின் சார்பாக நம்மிடம் பேசுகிறான். "இப்படியெல்லம் நீங்கள் சந்திப்பை நிர்பந்திக்க முடியாது" என்று வக்காலத்து வாங்குகிறான். பொதுவாக தம்மைக் கேள்விக்குள்ளாக்குகிற எந்த பின்னூட்டத்தையும் பதிப்பிக்காமல் இருட்டடிப்பு செய்துவரும் சந்திப்பு, அந்த பார்ப்பனமணியின் பின்னூட்டங்களை முழுமனதுடன் பதிப்பிக்கிறார். அவர் அப்படி பதிப்பிப்பதை தவறென்று நான் சொல்லவில்லை. அவற்றுக்கு பதிலலிக்கும் விதமாக இதுவரை சந்திப்பு எதையுமே செய்யாதது ஏன்? என்பதுதான் நமது கேள்வி.


தோழமையுடன்,
சந்திப்பு.

ஏகலைவன் said...

இது தமிழ்மணி என்ற முகமூடியோடு இணையத்தில் எழுதிவரும் பார்ப்பனமணியின் தளத்திலே எமது எதிர்வினை....

********************************

///முதலில் எந்த அடிப்படையில் இந்த அரசியலை நடத்துகிறீர்களோ அந்த அடிப்படையை பற்றி பேசுவோம்

அது சரியானதா, அது அறிவியற்பூர்வமானதா என்று பேசுவோம்.

பிறகு இன்றைய பிரச்னைகள் அதனை தீர்க்கும் வழிகள் என்று பேசுவோம்.///

எல்லாவற்றையும் விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம், தொடர்ந்தும் விவாதிப்போம். ஆனால் அதற்கு முன்பாக உமது பார்ப்பன முகமூடியை, பொதுப்புத்தியிலிருந்து பேசுபவனாக சொல்லிக்கொள்வதைச் சற்று கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் பிறகு பேசுவோம். அல்லது உமது பார்ப்பன பயங்கரவாத பின்புலத்தை அம்பலப்படுத்துகிற சம்பூகனின் கேள்விகளுக்காவது அறிவு நாணயத்தோடு பதில் சொல்லிவிட்டு வாருங்கள், பிறகு பார்ப்போம்.

அதைவிடுத்து நீர் எவ்வளவுதான் சந்திப்பின் துணை கொண்டு கம்யூனிசத்தை வசைபாடினாலும், அவை மேலும் மேலும் உமது பார்ப்பன அரிப்பையே வெளிக்காடுவதாகவேதான் இருக்கும்.

///உங்களது தீர்ப்பும், பிரச்னையை புரிந்துகொள்ளும் உங்களது அடிப்படைகளும் குப்பை என்பதுதான் இந்த தளத்தின் வாதம்.///

நீரும் உமது பார்ப்பனீயத்தில் ஆழத் தோய்த்தெடுத்த கம்யூனிச அவதூறுகளும், சம்பூகனின் பதிலடிக்குப் பிறகு குப்பைத்தொட்டியிலேதான் வீசப்பட்டிருக்கின்றன, இந்த லட்சனத்துல இதுவேற, த்த்தூ....

ஏகலைவன்.

**********************************

சந்திப்பு said...

தீரனின் தீராத மானத்தை பாராட்டியே அகவேண்டும்! அவரது மானத்தை கண்டு நெசமாகவே அகமகிழ்ந்து விட்டேன். ஆனால் அவர் கேட்ட கேள்விதான் என்ன என்பதை அந்த மானமிக்க அனானி தீரன்தான் பதிலுரைக்க வேண்டும். இல்லாட்டி அவர் நன்னா கேட்பாராம்... மறைமுக பார்ப்பனீத்தை நன்னாவே பிராக்டிஸ் பன்றார் தீரான்... நான் கம்யூனிஸ்ட்டா இல்லை என்பதற்காக ஒருபோதும் உங்களிடம் சர்டிபிகேட் கேட்கவில்லையே? அட! நாங்களெல்லாம் போலி கம்யூனிஸ்ட்டுகள் என்பதுதானே உங்களது பார்வை! அப்புறம் எப்படி உங்களிடம் நாங்கள் ஒரிஜீனல் என்று நிரூபிப்பது! ரொம்பத்தான் குழம்பியிருக்கீங்க தீரன். அது சரி அது உங்க தப்பு இல்லை. ஏன்னா உங்க தலைமையே (எஸ்.ஓ.சி.) இன்னும் தங்களை கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாக கூறத் தயங்கும் போது நீங்கள் ஒரிஜீனல்களை வெளியேத்தான் தேட வேண்டி வரும்! நன்னா கேளுங்கோ... உங்களுடைய எஸ்.ஓ.சி. மறைமுக பார்ப்பனீத் தலைமையைப் பார்த்து? ஏன் நாம இவ்வளவு நாளா மறைவாக - ஒளிந்துக் கொண்டிருக்கிறோம் என்று.

சந்திப்பு said...

காரத் மணியின் புலம்பலை படிக்கும் யாராலும் கண்டுக் கொள்ள முடியும். அங்கே வெறும் பொறாமைதான் மி;"சுகிறது. என்ன இந்த விசயத்தில் சி.பி.எம். தலையிட்டு விட்டதே! சிதம்பரம் தீட்சிதர் விசயத்தில் நாமதானே ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேட் வாங்கியிருந்தோம். அதுபோல முடியலையே என்ற எண்ணமே மி;"சுகிறது. அந்த அனானி காரத் மணிக்கு... சொந்த தெருவில என்ன நடக்குது என்று கவலைப்படாத இந்த காரத் மணிகள்... இணையத்தில் வந்து குப்பை கொட்டுவதை பார்க்கும் போது எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை!

சந்திப்பு said...


நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.


ஏகலைவா வெட்கமா இல்லை இப்படி கூசாம பொய் சொல்லுவதற்கு. உங்களுடைய தலைமை இன்னான்னா இந்தியாவை அரை காலனி நாடு - நான்கு நாட்டு அடிமை என்று புலம்புகிறது. ஆனால் நீங்கள் உங்கள் தலைமைக்கு எதிராக பேசுவதை நான் வரவேற்கிறேன். அதாவது மறு காலனி என்கிறீர்கள். இல்லையென்றால் மறந்து டைப் பண்ணிட்டீங்களா? என்று உங்களுடைய சுய புத்தியை சோதித்துக் கொள்ளுங்கள். காலனி நாடு - மறு காலனி நாடாகி விட்டது இந்தியாவில்தான் முதல் முறையாக நடந்துள்ளது. அரை காலனியை ஒழிக்க முடியாத வாய்வீச்சுக்காரர்கள். இப்போது மறு காலனிக்கு எதிராக குரல் கொடுக்கிறீர்கள் நல்ல கொள்கைப்பா... அப்புறம் பார்ப்பன பயங்கரவாதம்... இந்தியாவில் தப்போது மக்கள் மத அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் தருணத்தில் அதனை அடிப்படை கொள்கையாக வைத்திருக்கும் இந்துத்துவ பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராடுகின்றனர். நீங்கள் இதனை பார்ப்பன பயங்கரவாதம் என்று திசை திருப்புவது யாரை ஏமாற்ற?


தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.


ஊரே சிரிக்கிறது! எத்தனை தெருக்களில் நீங்கள் இருக்கீறீர்கள்?


சி.பி.எம். என்ற போலி கம்யூனிஸ்டு கட்சி மிகவும் உகந்ததாம். அக்கட்சியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவருகின்றனவாம்.


என்ன உங்கள் அமைப்பை அவர்கள் இருகரம் கூப்பி வரவேற்றிருந்தால் இந்நேரத்தில் நீங்கள் இரத்தனக் கம்பளம் போட்டு வரவேற்று கொண்டாடி இருப்பீர்கள்... என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதைத்தானே அத்வானியை நீங்கள் நந்திகிராமில் செங்கொடி ஏந்தி வரவேற்றதை பார்த்தார்கள் மேற்குவங்க மக்கள். இப்போதும் உங்களது புனித கூட்டு யாருடன்?


சி.பி.எம்.மை ஆதரித்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, கம்யூனிச ஆசான்களை இரண்டு பக்கத்துக்கு வசைபாடினால் நம்ம சந்திப்புக்கும் அவருடைய கட்சிக்கும் எதுவுமே உரைக்காதா?


நன்பரே ஏககலைவா? இவ்வாறான வாதங்கள் உண்மையை தேட உதவாது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாசிசம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கு முதல் எதிரி. அதை யார் ஆதரித்தாலும் - பேசினாலும் அவர்கள் மக்கள் விரோதிகளே. இதில் உங்களுக்கு ஏதாவது கருத்து வித்தியாசம் இருந்தால் சொல்லுங்கள். அந்த அடிப்படையில் தமிழ்மணியின் இந்துத்துவ ஆதரவு கருத்துக்களுக்கு நான் வர்க்க எதிரி! கொள்கைக்குதான் எதிரியே தவிர சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு எதிரியல்ல! நீங்கள் உட்பட!

மேலும் உங்களது தன்மான சொரனையை பாராட்டுகிறேன்.

சந்திப்பு said...

தமிழ் மணி உங்களுக்கு பதில் கூறியுள்ளார். இதில் நுழைய விரும்பவில்லை. என்னுடைய பதிவு சம்பந்தப்பட்டதாக இருப்பின் அது குறித்து நான் கருத்து சொல்லத் தயார். மேலும் விவாதம் என்பது ஒருவரோடு ஒருவர் மண்டையை உடைத்துக் கொண்டு தீர்வு கண்ட பின்தான் அடுத்த கட்டத்திற்கு செல்வேன் என்பது அடமண்ட் (அடிமுட்டாள்தனம்) ஒரு குறிப்பிட்ட பதிவில் -
குறிப்பிட்ட கருத்தில் எதில் வித்தியாசப்படுகிறோம் என்பதை அவரவர் கருத்தை கூறுவதுதான் விவாதத்தின் மைப்புள்ளி. ஒருவர் கருத்திற்கு ஒருவர் எதிராக நிற்கிறார் என்பதால் நான் அந்தப் பக்கமே தலை வைக்க மாட்டேன் என்பது குழந்தைதனம். தமிழ் மணி உட்பட பலருக்கும் என்னுடைய பதிவு குறித்து அவர்கள் கருத்தை தெரிவிக்கும் போது நான் உரிய எதிரிவினையாற்றியிருக்கிறேன். ஒரு சிலவற்றிற்கு பதில் அளிக்காமல் இருக்கலாம். எனவே இணையத்தில் கருத்தை பலமூட்டுவதாக நம்முடைய விவாதங்கள் அமையட்டும். நபர்களுக்கு அடையாளம் சுட்டி அவர்களை அப்புறப்படுத்தும் மறைமுக பார்ப்பனீயத்தை யார் கையாண்டாலும் விட்டு ஒதுங்குங்கள்.

சந்திப்பு said...

நன்பர் கார்க்கி நீங்களும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைதானே! உங்களிடமும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. சரி விடுவோம்! சமூகத்தில் நிகழும் - உருவாகும் கூட்டணிகளை பற்றி விவாதியுங்கள். ஏன் உங்கள் அமைப்பு இந்திய அடிமைத்தனத்தை விரட்ட சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருக்கிறதே? அது யாருடன் கூட்டணி அமைத்துள்ளதை என்பதை சற்று சிந்தியுங்கள். எந்த எந்த மாநிலத்தில் எந்தெந்த அமைப்புகளோடு ஐக்கிய முன்னணி அமைத்துள்ளது. தமிழகத்தில் எப்படிப்பட்ட ஐக்கிய முன்னணியை கட்டிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் ம.க.இ.க.-பு.மா.இ.க.-பு.தொ.மு.-பு.தொ.வி.மு என எல்லாம் சேர்ந்து சென்னையில் கும்பமேளா நடத்தினால் கூட 500 பேர் தேற மாட்டேங்குது. எனவே அதைப் பற்றி பற்று யோசியுங்கள். அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வாருங்கள்.


சில நாட்கள் முன்பு ம.க.இ.க வின செயல் திட்டம் இது தான் என்று ஏதோ புத்தகத்தில் இருந்து பிய்த்துப் பிய்த்துப் போட்டு எழுதிக் கொண்டிருந்தீர்களே அந்தப் பதிவுகளைப் படித்தேன். வாயால் சிரிக்க முடியவில்லை -


கார்க்கி நீயொரு முண்டம்னு சொல்ல மாட்டேன். ஏதே ஒரு புத்தகம் என்று சொல்லியிருக்கிறீயே முதல்ல உங்க அமைப்பை பற்றியாவது தெரிந்து கொள்ள முற்படுங்கள். உங்களது மேற்கண்ட கூற்றை கேட்டால் உங்களது அமைப்பினரே வாயால் சிரிக்க மாட்டார்கள். இதுவரை உங்க ஆளுங்கே எதற்கும் முறையாக எதிர் சொல்லவில்லை என்ற உண்மையையாவது தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் சூத்தால் சிரிக்க முற்படுங்கள்....


ம.க.இ.க. நண்பர்களே முதலில் சி.பி.எம்.ஐய திட்டுவதற்கு பயிற்சி கொடுப்பதற்கு முன்பாக உங்கள் அமைப்பை பற்றி மேற்கண்ட அம்பிக்கு கொ;"சம் பயிற்சி கொடுங்கள்.

சந்திப்பு said...


இந்த ஒரு வரி போதும்யா, ஒங்களோட கூட்டுக் களவானித்தனத்த அம்பலப்படுத்த.
(மேலும் தோழர் கார்க்கி மிக அற்புதமாக இதனைக் கோடிட்டுக் காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறார்


பூம் பூம் மாடாகி விட்ட ஏகவலைவா கார்க்கியின் கருத்தில் நீங்களும் உடன்படுகிறீர்கள் என்றால் அப்புறதம்தான்... நல்ல தலையாட்டுங்கள் த;"சாவூரு பொம்மைகளே!

ஏகலைவன் said...

இணைய கோமாளியின் பதில்!!களை வரவேற்கிறேன்.

உமது பித்தலாட்ட அரசியலை நாங்கள் இனிமேல் எதுவும் புதுசாச் சொல்லி அம்பலப்படுத்தத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கெனவே உமது கூட்டாளி 'பார்ப்பன'மணி என்கிற தமிழ்மணி அம்பலப்படுத்தியது போக, இப்போது உமது மேற்கண்ட பதில்களும் மிச்சமீதியையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.

உமது பதில்களில், இயலாமையும், பார்ப்பனமணியை ஒரு வரியில் கூட கண்டிக்க முடியாத கயமைத்தனமுமே தெளிவாகத் தெரிகிறது. ஏகவசனமும் ஆத்திரமும் உமது கேனைத்தனத்தை மேலும் மெருகூட்டிக் காட்டுகிறதேயொழிய வேறொன்றும் உமது பின்னூட்டங்களில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

///அவற்றுக்கு பதிலலிக்கும் விதமாக இதுவரை சந்திப்பு எதையுமே செய்யாதது ஏன்? என்பதுதான் நமது கேள்வி./// என்பது எனது முந்தைய பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டது. இந்தவரிதான் உமது பொறுமையினை வெகுவாகச் சோதித்துவிட்டது போலும். அதனால்தான் பொங்கியெழுந்துவிட்டீர்கள் போலிருக்கு!

சந்திப்பு, உமது ஏகவசனமெல்லாம் கெடக்கட்டும், தமிழ்மணியின் அவதூறுகளுக்கு உமது பதில் எங்கய்யா? அதச் சொல்லு மொதல்ல. "அதென்ன, மகஇகவைத் திட்டுவதற்குத்தான் எனக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள், நான் எதுக்கு தமிழ்மணிக்கெல்லாம் பதில் சொல்லனும்?!!!" என்று நீர் கேட்பது எமது காதுகளுக்கு கேட்காமலில்லை.

இருப்பினும், நீ யோக்கியமான கம்யூனிஸ்டு இல்லன்னு நாஞ்சொல்லுறேன்(அது எல்லோருக்கும் தெரியும்), நீ அதெல்லாம் இல்லையின்னு சொல்லிக்கிட்டு இங்க அம்மனமா நின்னு வாதாடுற, அதனாலதான் கேட்கிறேன், தமிழ்மணியினால் இழிவுபடுத்தப்பட்ட கம்யூனிச ஆசான்களின் சார்பாக உமது பதில் எங்கேயின்னு????

ஏகலைவன் said...

///அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் தருணத்தில் அதனை அடிப்படை கொள்கையாக வைத்திருக்கும் இந்துத்துவ பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராடுகின்றனர். நீங்கள் இதனை பார்ப்பன பயங்கரவாதம் என்று திசை திருப்புவது யாரை ஏமாற்ற?///

இந்த கேனைத்தனமான பதிலுக்காகத்தான் பெரியாரிடம் செருப்படி பட்டீர்கள். பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் பிரித்துப்பார்க்கும் உமது மொன்னைத்தனத்தை என்னவென்பது.
இதேபானியில்தான் காங்கிரசும் மதவெறி பயங்கரவாதத்தை எதிர்கிறான். பார்ப்பன இந்துத்துவ பயங்கரவாதத்தை காங்கிரசின் பானியில் எதிர்ப்பதுவும், மறுகாலணியாக்கம் எனும் உலகமயமாக்கலை பாஜக வின் வார்த்தைகளில் பொழிப்பதுவும் உமது வழக்கத்திலும் வழக்கமான நடைமுறை.

உமது போலித்தனத்தை பச்சையாக வெளிக்காடும் விதமாக, மதவெறிக்கெதிரான உமது கருத்துக்களும், வர்க்க முரன்பாடுகளும் பார்ப்பனீயத்திடம் எப்போதுமே மண்டியிட்டுக் கிடக்கின்றன. இந்த லட்சனத்துல மகஇகவின் பார்ப்பனத் தலைமை என்கிற தேய்ய்ய்ய்ய்ய்ந்துபோன ரெக்கார்டுவேற.

ஏகலைவன் said...

1. ///ஏன்னா உங்க தலைமையே (எஸ்.ஓ.சி.) இன்னும் தங்களை கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாக கூறத் தயங்கும் போது ////

2. ///உங்களுடைய எஸ்.ஓ.சி. மறைமுக பார்ப்பனீத் தலைமையைப் பார்த்து? ///

3. ///ஏன் நாம இவ்வளவு நாளா மறைவாக - ஒளிந்துக் கொண்டிருக்கிறோம் என்று.///

4. ///ஊரே சிரிக்கிறது! எத்தனை தெருக்களில் நீங்கள் இருக்கீறீர்கள்?///

5. ///அதைத்தானே அத்வானியை நீங்கள் நந்திகிராமில் செங்கொடி ஏந்தி வரவேற்றதை பார்த்தார்கள் மேற்குவங்க மக்கள்.///

6. ////மொத்தத்தில் ம.க.இ.க.-பு.மா.இ.க.-பு.தொ.மு.-பு.தொ.வி.மு என எல்லாம் சேர்ந்து சென்னையில் கும்பமேளா நடத்தினால் கூட 500 பேர் தேற மாட்டேங்குது.///

மெற்கண்டவையெல்லாம் நமது சந்திப்பு, இதோ இன்னைக்கிக் காலையில புத்தம்புதுசா நம்மைப் பற்றி கண்டுபிடித்து எழுதியுள்ள புலனாய்வு முடிவுகள்!

ஏற்கெனவே அரைத்தரைத்து, நைந்துபோன, புளித்துப் புழுத்துப் போன மாவை, புதுப்பானையில் எடுத்துவந்து அவரது வாசகர்களுக்கு!!! பரிமாறுகிறார்.

நமக்கோ எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி, அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டதே என்று களைத்துப் போகிற நிலைமை. இதைத்தான் தோழர் அசுரன், சந்திப்பின் அரசியல் பின்புலம் அவரது தோலைத் தடிப்பாக்கி சொரனையற்றதாக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

நம்முடைய மறைமுக அரசியல் என்பதைத் திரைகிழித்து தோழர் தியாகு போன்றவர்கள், சந்திப்புக்கு பதில் சொல்லியதோடு நிற்காமல் தத்தமது தளங்களில் தனிப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்கள். எமது அலுவலக முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் கைபேசி எண் என அனைத்தையும் எமது பத்திரிக்கைகள் முதல் துண்டு பிரசுரங்கள் வரை தெளிவாகக் குறிப்பிட்டே வந்திருக்கிறோம்/வருகிறோம். இருப்பினும் சந்திப்பின் பழைய பல்லவி தொடருவது ஏன் என்பதை அவர்தான் சொல்லவேண்டும்.

*************************************

அடுத்து, பார்ப்பனத் தலைமை என்கிற வறட்டு வாதம். "உங்களோடு நாங்களும் இணைந்து போராடவேண்டுமென்றால், நீங்கள் பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று 'இழிவு'படுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்று கேட்டு எமது தோழர்கள் கடுமையாக மறுத்ததால், சிதம்பரம் போராட்டத்திலிருந்து முதலாகவும் கடைசியாகவும் 'ஜகா' வாங்கிய மானங்கெட்ட அமைப்பு சி.பி.எம். பார்ப்பனீயத்தைத் தனது ஒவ்வொரு படைப்பிலும், ஒவ்வொரு பேச்சிலும் குலைநடுங்கவைக்கும் எமது தலைமையைப் பற்றி இவ்வளவு தரக்குறைவான விமர்சணத்தை தொடர்வது ஏன்?

***************************************

அடுத்து நம்மை பயங்கரவாதிகள் என்றும் தலைமறைவானவர்கள் என்பது, மக்களோடு தொடர்பற்றவர்கள் என்பது போன்ற இவர்களது புரளிகளுக்கு தோழர் அருள் எழிலன் எழுதிய கட்டுரையில் சுட்டி இது (http://yekalaivan.blogspot.com/2008/05/blog-post_1952.html) முடிந்தால் சந்திப்பு இக்கட்டுரைக்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம்.

**************************************

நந்திகிராமில் இவர்களின் கட்சியினைச் சார்ந்த குண்டர்கள், குஜராத்துக்கு நிகராக, சாதாரண உழைக்கும் பெண்கள் மீது ஏவிவிட்ட பாலியல் வக்கிரங்களும், பச்சைப் படுகொலைகளையும் பற்றி, அந்த சம்பவங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட 'மக்கள் தீர்ப்பாய'த்தின் அறிக்கை தெளிவாகச் சொல்லுகிறது.
(அந்த முழுமையான விசாரணை அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டு
'விடியல்' பதிப்பகத்தின் மூலமாக ஒரு தனிநூலாக விற்பனைக்கு வந்திருக்கிறது. அந்நூல் கீழைக்காற்று புத்தகக் கடையில் விற்பனைக்கும் உள்ளது.)

தமிழ்நாட்டைத்தவிற வேறெங்கும் எமது அமைப்பு விரிவடையவில்லை என்று பேச்சுக்குப் பேச்சு சொல்லும் சந்திப்பு, அத்வானி விசயத்தில் மட்டும் நம்மை மே.வ. வரை வளர்ப்பார்!

அத்வனியை புத்ததேவு கொல்லைப்புறமாக அழைத்தும் வரமறுத்துப் போன அத்வானியை நினைத்து கண்ணீர்விட்டதுவும் ஊர் சிறித்த பிறகும் சிறிதும் சொரனையற்று பேசிவரும் சந்திப்பை என்னவென்பது??!!

****************************************

அடுத்து, அவர் வழக்கமாகச் சொல்லும் கும்பமேளா வசனம்: எமது பொதுக்கூடங்களும், தஞ்சையில் நடைபெறும் இசைவிழாவும் எப்படி நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இதுவரை சிபிஎம் அலுவலகத்தின் வாயிலைத்தாண்டி வெளியில் வராத கிணற்றுத் தவளையான இந்தக் கேனை அதை கும்பமேளா என்று விமர்சிப்பது பற்றி எமக்கொன்றும் ஆச்சர்யமில்லை.


ஏகலைவன்.

Anonymous said...

//நன்பர் கார்க்கி நீங்களும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைதானே! உங்களிடமும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. சரி விடுவேதம்! சமூகத்தில் நிகழும் - உருவாகும் கூட்டணிகளை பற்றி விவாதியுங்கள்//

எருமைத்'தோலர்' சந்திப்பு அவர்களே, "சமூகத்தில் நிகழும் - உருவாகும் கூட்டனி" குறித்து
முன்பு கேட்ட போதெல்லாம் உங்கள் வாயை எங்கே வைத்திருந்தீர்கள் என்று எனக்குத்
தெரியவில்லை. உங்கள் கட்சியின் தலைவர்கள் தலைவர்கள் சோம்நாத்தில் இருந்து,
ஜெயலலிதாவே வெட்கப்படும் அளவுக்கு 'நான் முதலில் பார்ப்பான் அப்புறம் தான் காமரேடு' என்று பீத்திக்கொண்ட மே.வா அமைச்சர், சங்கராச்சாரி பேண்ட இலையைக் கூட
பொறுக்கத் துணிந்த உங்கள் கேரள காம(கோடி)ரேடுகள் குறித்தெல்லாம் கேட்ட போது இந்த
ரோசம் எங்கே போனது? இந்தச் சீற்றம் எங்கே போனது? சேது சமுத்திர திட்டம் குறித்து
உங்கள் யெச்சூரி பேசியது குறித்து நாங்கள் எழுதியதற்கெல்லாம் என்ன விளக்கத்தை
கொடுத்து விட்டீர்கள் என்று இப்போது இந்தக் குதி குதிக்கிறீர்கள்?

நடைமுறையில் நீங்கள் சோரம் போனதைக் கேட்ட போது பொத்திக் கொண்டு தானே
இருந்தீர்கள். இப்போதென்னடா வென்றால்.. "இனையத்தில் நாங்கள் நக்கிக் கொள்வோம்
கண்டுக்காதே சமூகத்தில் நாங்கள் புடுங்கிக் கத்தை கட்டியதைப் பற்றி கேள்" என்று எந்த
முகத்தை வைத்துக் கொண்டு கேட்கிறீர்கள்?

//மெதத்தத்தில் ம.க.இ.க.-பு.மா.இ.க.-பு.தெத.மு.-பு.தெத.வி.மு என எல்லாம் சேர்ந்து சென்னையில் கும்பமேளா நடத்தினால் கூட 500 பேர்//

நீங்கள் குறிப்பிட்ட அமைப்புகளில் இன்றைக்கு ஆட்கள் குறைவாக இருக்கலாம்.. ஆனால்
எண்ணிக்கை தான் பிரதானம் என்றால் இன்றைக்கு புரட்சி நடத்த தகுதியானவர்கள்
விஜயகாந்தும், ரஜினிகாந்தும், டாக்டர் விஜயும் தான். எண்ணிக்கையில் பெரிய கட்சியான,
எல்லா மாநிலங்களிலும் 'புரட்சிகர' கூட்டு வைத்துள்ள உங்கள் கட்சி கிழித்தது என்ன?
போயும் போயும் கம்யூனிஸ்டுகளை கொன்றொழித்த சலீம் குழுமத்துக்கு சொம்பு தூக்கித்
திரிவது தானே?

//முதல்ல உங்க அமைப்பை பற்றியாவது தெரிந்து கெதள்ள முற்படுங்கள். உங்களது மேற்கண்ட கூற்றை கேட்டால் உங்களது அமைப்பினரே வாயால் சிரிக்க மாட்டார்கள். இதுவரை உங்க ஆளுங்கே எதற்கும் முறையாக எதிர் செதல்லவில்லை என்ற உண்மையையாவது தெரிந்து கெதள்ளுங்கள். பின்னர் சூத்தால் சிரிக்க முற்படுங்கள்....//


தமிழ்மணி ரேஞ்சுக்கு நீங்கள் 'விவாதித்திருப்பதை'யெல்லாம் விளக்கிக் கொண்டிருக்கத்
தேவையில்லை சந்திப்பு. நடைமுறை தான் தத்துவத்தின் உறைகல் என்பார்கள் - முதலில்
நாம் நடைமுறை குறித்து விவாதிப்போம் அப்புறமாக தத்துவம் குறித்துப் பேசுவோம்.

//ம.க.இ.க. நண்பர்களே முதலில் சி.பி.எம்.ஐய திட்டுவதற்கு பயிற்சி கெதடுப்பதற்கு முன்பாக உங்கள் அமைப்பை பற்றி மேற்கண்ட அம்பிக்கு கெத;"சம் பயிற்சி கெதடுங்கள்//

ஹைய்யோ ஹைய்யோ.. உங்களைப் பற்றி நீங்களே பெரிய பருப்பு என்கிற என்னம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்க கிட்டே பேச பெரிய தத்துவப் படிப்பெல்லாம் தேவையே இல்லை சந்திப்பு. பத்தாப்புப் பையனே உன் டவுசரைக் கயட்டி காயப்போட்டு விடுவான். உங்கள் கட்சியின் பேச்சுக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடுகளை பத்திக் கேள்வி கேட்க மார்க்சியம் தெரிந்திருக்க வேண்டும் என்று
கூட அவசியமில்லை. உங்கள் கட்சியின் பாசிச நடைமுறை குறித்துக் கேள்வி எழுப்ப, சிங்கூரிலும், நந்திகிராமிலும் நீங்கள் ஆடிய ரத்தவேட்டை
குறித்துக் கேள்வி கேட்க கொஞ்சம் இதயத்தில் ஈரமும் மக்கள் மேல் அன்பும் இருந்தாலே போதும்.

தினசரி பேப்பர் வாசிக்கும் எவர் வேண்டுமானாலும் அத்துவானியும் புத்ததேவும் கொஞ்சிக் குலாவிக் கொள்வதன் முரண்பாட்டை புரிந்து கொள்ள
முடியும். தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் தான் நம்மைக் கேள்வி கேட்க முடியும் என்கிற இறுமாப்பை முதலில் தூக்கி வீசுங்கள்
எருமைத்'தோலர்' சந்திப்பு அவர்களே..

சாமானிய மக்களிடம் போய்க் கேளுங்கள் உங்கள் யோக்கியதையை - 'இந்தக் கொக்கிக் கட்சிக்காரவுக ஒருக்கா கருணாநிதிக்கு ஓட்டுக் கேட்டு வருவாக.. ஒருக்கா செயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்டு வருவாக. நெலையா இருக்க மாட்டாக " என்று தெளிவாக நீங்கள் மாறி மாறி சொம்படித்துக் கொண்டிருப்பதை மிக எளிமையாக சொல்லிவிடுவார்கள்.. அதனால் தான் நீங்கள் இன்னைக்கும் தி.மு.கவிடமும் ஆ.தி.மு.கவிடமும் மாறி மாறி
ஒட்டுண்ணி உறவு வைத்துக் கொள்ள வேண்டிய செல்வாக்கற்ற நிலையில் உங்களை மக்கள் வைத்திருக்கிறார்கள்.

பெரிய கட்சி என்று பீத்திக் கொள்கிறீர்களே தமிழ் நாட்டில் தனியே நின்றால் உங்கள் டெப்பாசிட்டைக் கூட உங்களால் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதால் தானே மாறி மாறி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பல்லக்குத் தூக்குகிறீர்கள். அது தானே உங்கள் யோக்கியதைக்கு
மக்கள் வழங்கியுள்ள பரிசு? அவர்களெல்லாம் எஸ்.ஓ.சியின் செயல் திட்டத்தைப் படித்தவர்களா? இல்லை ம.க.இ.க தொண்டர்களா?

ஒரே காமெடியா கீதுபா