May 14, 2008

பிங்க் சிட்டி பயங்கரவாதம்!ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூர் நேற்றைய தினம் பயங்கரவாதிகளின் ஆக்டோபஸ் கரங்களுக்கு இரையானது. இரவு 7.15 மணியளவில் 12 நிமிடங்களுக்குள் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி அப்பாவி மக்கள் 60 பேரின் உயிரை பலிகொண்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புச் செயல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சைக்கிள்களில் அபாயகரமான குண்டுகளைப் பொருத்தி வெடிக்கச் செய்துள்ளனர். இந்த செயலுக்கு பின்னல் எந்த பயங்கரவாத அமைப்பு இருந்தாலும் அதனை கடுமையாக தண்டிக்க வேண்டும். சர்வதேச சமூகம் இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக விழிப்புடன் இருந்து போராட வேண்டிய கட்டத்தில் உள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்கு ஒவ்வொரு முறையும் சாதாரண மக்களை குறிவைத்தே இயக்கப்படுகிறது. மும்பையில் இரயில் குண்டு வெடிப்பின்போதும் இதைத்தான் பார்க்க முடிந்தது. மேலும் இந்தியாவில் வகுப்பு மோதலை தூண்டும் வகையில் இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தி வருகின்றனர். ஆனால் இந்திய மக்கள் பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அடையாளம் கண்டுக் கொண்டதால் அவர்களது செயல் இதுவரை வெற்றிபெறவில்லை. மும்பையாகட்டும் - ஜெய்பூராகட்டும் அனைத்து பகுதி மக்களும் ஒன்றினைந்து இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக கைகோர்த்து நிற்பதை காண முடிகிறது. இத்தகைய ஒற்றுமை அனைத்துவிதமான மதஅடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் கைகோர்க்க வேண்டியுள்ளது.
மேலும் இந்திய உளவுத்துறை இதுபோன்ற பயங்கரவாதிகளின் செயல்களை - நடமாட்டங்களை கண்காணிப்பதில் செயலிழந்த தன்மையில் உள்ளதைத்தான் இக்குண்டு வெடிப்புகள் காட்டுகிறது. நமது போலீசும் - உளவுத்துறையும் எதிர்கட்சிகளின் பேச்சுக்களை எல்லாம் ஒட்டுக் கேட்பதில் உள்ள வல்லமை - இந்த பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்டு பிடிக்காத ஏமாளித்தனத்தை என்னவென்று சொல்வது!
பயங்கரவாதம் மக்களுக்கு எதிரானது அது எத்தகைய கொள்கையைக் கொண்டிருந்தாலும் அது மக்களுக்கு எதிரானதே! எனவே இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக இந்திய மக்கள் மேலும் - மேலும் விழிப்போடு செயலாற்ற வேண்டும். நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சங்பரிவாரத்தின் வெளிப்படையான மதவாத பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் அதே நேரத்தில் மறைமுகமாக செயல்படும் உள்நாட்டு - வெளிநாட்டு இசுலாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வெகுவாக போராட வேண்டும். மதத்தின் பெயரால் மக்களின் உயிர்களை கொல்வது பேதைத்தனமானது.
மேலும் பயங்கரவாதம் என்பது ஜனநாயகத்திற்கே எதிரானது அதைத்தான் நாம் பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் உயிரை பறித்தபோது பார்த்தோம். பயங்கரவாதக் கொள்கை என்பது மனித உயிரைப் பறிக்கும் காட்டுமிராண்டிக் கொள்கையே! இதற்கு எதிராக நமது ஒற்றுமை எனும் ஆயுதத்தை உயர்த்திப் பிடிப்போம்! பயங்கரவாதிகளை வேரறுப்போம்!

2 comments:

Anonymous said...

"இந்திய மக்கள் பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அடையாளம் கண்டுக் கொண்டதால் அவர்களது செயல் இதுவரை வெற்றிபெறவில்லை. மும்பையாகட்டும் - ஜெய்பூராகட்டும் அனைத்து பகுதி மக்களும் ஒன்றினைந்து இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக கைகோர்த்து நிற்பதை காண முடிகிறது."????? People are dying like chickens and still we are patting ourself. What it can do?? Unless otherwise we dont do some storng action against these terrorist, we can have more such incidents...

ஏகலைவன் said...

///"இந்திய மக்கள் பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அடையாளம் கண்டுக் கொண்டதால் அவர்களது செயல் இதுவரை வெற்றிபெறவில்லை. மும்பையாகட்டும் - ஜெய்பூராகட்டும் அனைத்து பகுதி மக்களும் ஒன்றினைந்து இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக கைகோர்த்து நிற்பதை காண முடிகிறது."????? People are dying like chickens and still we are patting ourself. What it can do?? Unless otherwise we dont do some storng action against these terrorist, we can have more such incidents...///

இதுவரை இங்கே நடைபெற்றுள்ள இது போன்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் (விசாரித்து முடிக்கப்பட்ட வழக்குகள் உட்பட) மீண்டுமொருமுறை பொதுமக்கள் முன்னிலையில் பொதுவிசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரனை என்று இவர்கள் நான்கு சுவர்களுக்குள் நடத்துகின்ற நாடகங்கள் வெறும் கேலிக்கூத்து. ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் பின்புலமாகச் செயல்படும் இருவேறு மதவெறி முகாம்களையும் வேறோடு பிடுங்கியெறியும் தைரியமுள்ளவர்கள்தான் இதுபோன்ற கலவரங்களை விசாரிக்கத் தகுதியானவராவர்.

பொதுமக்கள் முன்பு வைத்து விசாரித்தால்தான் மறைக்கப்பட்ட சாட்சிகளும், தப்புவிக்கப்பட்ட குற்றவாளிகளையும் அம்பலப்படுத்திட முடியும். இந்நாட்டில் மும்பாயும் ஜெய்பூரும் மட்டும் இல்லை தென்காசியும் இங்கேதான் இருக்கிறது.

இஸ்மாயிலாக வந்து காந்தியைக் கொன்ற கோட்சேயின் வாரிசுகள் எந்தெந்த 'அல்' முகாம்களில் ஒளிந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.

"ஆட்சியைப் பிடிப்பதற்கு எங்களுக்கு இராமபுராணம் போதவில்லை, அதனால் தான் இத்தகைய கலவரங்களும் குண்டுவெடிப்புகளும்" இது தென்காசியில் குண்டுவைத்து பிடிபட்ட இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்ற பாடம். நினைவில் கொள்வோமாக.


ஏகலைவன்.