September 17, 2007

மணலை கயிராக திரிக்கும் பா.ஜ.க.


சேது சமூத்திர திட்டம் தமிழக மக்களின் 150 ஆண்டு கனவு. மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டி அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்ட திட்டம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் - தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களின் வேலை வாய்ப்புக்கும் - வளர்ச்சிக்கும் உதவும் திட்டம்.
பா.ஜ.க.வின் விரக்தி அரசியலுக்கு கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டுதான் ராமர் பாலம் விவகாரம். ஆதம் பாலம் என அழைக்கப்படும் இடத்தில் உள்ள மணல் திட்டுப் போன்ற பகுதி ராமரால் கட்டப்பட்டது என்று மணலை கயிராக திரித்து தங்களது மதவாத அரசியலுக்கு மெருகூட்ட முனைந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு. இந்திய அகழ்வாய்வுத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு - ஆதம்பாலம் என்பது இயற்கையாக உருவானது. அது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. அதற்கான எந்த ஆதாரம் அங்கு இல்லை என்று நிறுவியுள்ளது.
வரலாற்று ரீதியாகவும். இலக்கிய ஆதாரங்களின்படியும் கூட ராமர் பாலத்திற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜ.க. இந்த விசத்தை மக்கள் நம்பிக்கை என கயிராக திரித்து - மத உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட முனைகிறது.
இராமாயணம் - மகாபாரதம் போன்றவைகள் இந்திய இலக்கியத்தின் ஒரு பகுதிதானே ஒழிய அதற்கும் வரலாற்றறிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இது குறித்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். தந்தை பெரியார் இது குறித்து கூறும் போது இவைகள் எல்லாம் வரலாற்று புரட்டும் - குப்பையும்தான் என கூறியதே இந்நேரத்தில் நிள னைவுக்கு வருகிறது.
நாடு முழுவதும் அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட உடன்பாடு சுடான விவாதத்தை தூண்டிக் கொண்டிருக்கையில். அந்த விசயத்தில் அம்பலப்பட்டுப் போயுள்ள பா.ஜ.க. ராமர் பாலம் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திசை திருப்ப முனைகிறது.
தேசத்தின் மீதான இவர்களது அக்கறை போலித்தனமானது என்பது வெளிப்பபடையானது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இதனை சங்பரிவாரம் மேற்கொண்டு வருகிறது. மொத்தத்தில் சங்பரிவார வேர்களை வேரறுக்கும் வரையில் இந்திய நாட்டின் வளர்சிக்கு விடிவுகாலம் இல்லை.

8 comments:

Unknown said...

//மொத்தத்தில் சங்பரிவார வேர்களை வேரறுக்கும் வரையில் இந்திய நாட்டின் வளர்சிக்கு விடிவுகாலம் இல்லை.//
ஆம். சங்பரிவாரங்களை வேரறுக்கும் வரை விடிவுகாலம் இல்லவே இல்லை.

Anonymous said...

//தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் - தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களின் வேலை வாய்ப்புக்கும் - வளர்ச்சிக்கும் உதவும் திட்டம்.//

அண்ணாத்தே.. இது கண்டி ஒன்னியும் பிரில. கொஞ்சம் பிரியரா மேரி சொல்லேன்

Anonymous said...

They are asking for a realignment of the route, not objecting to the project. Centre has asked for three months time to arrive at an amicable solution.So what harm is there if there is a realignment without damaging Ramar bridge.Is
respecting sentiments of Hindus is
a crime. For the left yes, for most Indians it is not. You can join hands with DMK and DK but
Central govt. knows that it cannot afford to ignore the sentiments of
Hindus.So even if you team with
DK,DMK and your favorite minority
communities, you will fail in
attempts to destroy it. Time and
again you are revealing your real
'secular' colors.

Anonymous said...

They want the route to be changed without affecting Ramar Setu. Many Hindus who may not agree with BJP on most issues also want the centre to realign the route without damaging the Ramar Setu.
Why is that the CPI(M) cannot even understand this fact. If you think that only BJP is concerned about Ramar Setu you are a big fool.
Hindus should teach a lesson to the left parties.

சந்திப்பு said...

நன்றி சுல்தான். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் எந்த மூலையில் எந்த மத - இன - ஜாதி அடிப்படையில் இயங்கினாலும் அவர்களை வேறுரறுப்பதே மனித குலத்தின் வளர்ச்சிக்கு உரியதாக இருக்கும். அந்த அடிப்படையில் நம்முடைய சங்பரிவாரங்களையும் அவர்களது தத்துவத்தையும் இந்திய மண்ணிலிருந்து அகற்ற வேண்டியது மதச்சாரபற்ற - ஜனநாயக - இடதுசாரிகளின் கடமையாகும்.

சந்திப்பு said...

மக்கு பசங்களுக்கு எல்லாம் என்னால புரிய வைக்க முடியாது.

சந்திப்பு said...

ஐயா அனானி மிகவும் புத்திசாலித்தனமாக தங்களது வாதத்தை வைத்துள்ளீர்கள். பிரச்சனையின் துவக்கமே அங்கே மனிதனால் அல்லது நீங்கள் கூறுவது போல் (கடவுளால் - கற்பனை) கட்டப்பட்ட பாலம் என ஒன்று இல்லவே இல்லை என்பதே உண்மை. அப்படியிருக்கையில் தற்போது இருக்கும் திட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கேட்பதே சரியானதில்லை என்பதே என்னுடைய எண்ணம். மேலும் சி.பி.எம். உட்பட இந்துக்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டே - அறிந்து கொண்டே உள்ளோம். பல கோடிக்கணக்கான இந்துக்கள் இந்த திட்டம் தற்போது உள்ள நிலையிலேயே வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதை சங்பரிவாரமும் - பா.ஜ.க. போன்ற மதவாத சக்திகளும்தான் உணர்வதில்லை. இவர்களுக்கு ராமரை விட்டால் வேறு அரசியலே தெரியாது. எனவே இவர்களது நோக்கம் ராமர் மீதான பக்தியல்ல. ராமரை பந்தையத்தில் வைத்து அரசியல் தாயத்தை உருட்டுவதுதான்.

Anonymous said...

சரத்குமார் சேது திட்டத்தைப் பற்றி விமர்சனம் சொல்லியதாக பாலா என்பவர் எழுதியுள்ளார். நான் அங்கு இட்ட கருத்துக்களை பிரசுரிக்க மறுத்து விட்டார்.இங்கு எழுதலாமா?

கருணாநிதியை மஞ்சள்துண்டு என்று விமர்சித்துவிட்டு இப்போது இப்படி சொல்லலாமா?

ஏன் சரத்குமார் பின்னால் ஒளிகிறீர்கள்? உங்கள் கருத்து என்றே கூறலாமே?

மாலன் பாணியில் ஆரம்பித்துவிட்டீர்களா?

என்று மூண்றே கேள்வி தான்.பிரசுரிக்கவில்லை.கருத்து சுதந்திரம் கருதி இதை அனுமதிக்கவும்