September 20, 2007

போலி மெடலும் விவசாயிகள் தற்கொலையும்!


போலி என்கவுன்டர். போலி பத்திரம். போலி ரூபாய் நோட்டு என போலிகள் வரிசையில் கடைசியாக சேர்ந்திருப்பது போலி மெடல்.

என்ன ஆசிரியமாக இருக்கிறதா? ஆமாங்க! இந்த போலி மெடலை வழங்கியது வேற யாரும் இல்ல. சாட்சாத் நம்ம மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுதான்.

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா என்றாலே விவசாயிகள் தற்கொலைதான் ஞாபகத்திற்கு வரும். அதாவது நம்ம ஐயா நரசிம்மராவ் - வாஜ்பாய் - மன்மோகன் சிங் வகையறாவின் உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் அவர்கள் முடிவை அவர்களே தேடிக்கொள்வது என்ற தற்கொலை வடிவம்.

விவசாயிகளின் பாரம்பரிய விவசாயத்திற்கு மூட்டை கட்டி விட்டு. அந்த இடத்தில் பணப் பயிரான பருத்தியை விளைவிக்கச் சொல்லி - விவசாயிகளுக்கு ஆசை காட்டி ஒரே வருடத்தில் நீங்கள் மில்லினியராக ஆகிவிடலாம் என்று கதைக்கட்டி கடைசியில் இருக்கின்ற கோவணத்தையும் விட்ட கதையாக அந்த விவசாயிகள் கடன் தொல்லை தாள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது மிசச் சாதாரண விசயமாக மாறி விட்டது மகாராஷ்டிராவில். 2002 முதல் இதுவரை 5000 விவசாயிகள் இதுபோன்று தற்கொலை செய்துக் கொண்டதாக இந்து பத்திரிகை கூறுகிறது.

அப்படிப்பட்ட இடத்தில் ஒரு விவசாயி தாதாஜி என்பவர் அரும்பாடு பட்டு விவசாயத்தில் சாதனை படைத்து விட்டார். அதுவும் புது ரக நெல் விளைச்சலில் சாதனை படைத்து விட்டார். இந்த விவசாயியின் அரிய சாதனையை கெளரவிக்க கிரிசி பூஷன் விருது வழங்கப்படும் என அறிவித்தது. இந்த விருது 14 கராட் தங்கத்தால் 50 கிராம் எடையுடன் கூடியது என அறிவித்தது. இதன் விலை ரூ 32,250. விருது வழங்கும் விழா மகாராஷ்டிர கவர்னர் மாளிகையில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இது போன்ற விருதினை பலருக்கும் வழங்கியது. நம்ம விவசாயி தாதாஜி தற்போது விவசாயத்தில் நட்டம் அடந்து விட்டதால் அந்த விருதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது என்ற முடிவுக்கு வந்து. அதை விற்பதற்காக ஒரு ஜிவல்லரிக்கு சென்றபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது அந்த மெடல் வெறும் விலை குறைந்த வெள்ளியால் செய்யப்பட்டதாம். அதன் மேல் வெறும் கோல்டு எனாமல் பூச்சு மட்டும் பூசப்பட்டுள்ளதாம். மொத்தத்தில் அதன் விலை ரூ. 500 க்கு மேல் போகாது என கூறிவிட்டார்.

ஆஹா இவர்கள் அல்லவா விவசாயிகளை காக்க வந்த மகா உத்தமர்கள்! காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் முழி பிதுங்கி நிற்கிறார்!

14 comments:

வவ்வால் said...

அரசியல்வாதிகள் திருந்த மாட்டார்கள். கிடைக்கும் வரை சுரண்டுபவர்கள் தானே, அதான் விவசாயிகளுக்கு கொடுத்த மெடலிலும் சுரண்டி விட்டார்கள்.

மாகிகோ என்ற மகாராஷ்டிர விதை நிறுவனம் தமிழ் நாட்டிலும் விதைகளை விற்கிறது பெரும்பாலும் அவை விதை முளைப்பு திறன் அற்றவையாக இருக்கிறது , அதனை தான் நம்ம ஊரு அரசாங்க அதிகாரிகளும் வாங்க சொல்லி , வாங்கியும் தருகிறார்கள் , கமிஷன் கிடைக்கும் போல!

கார்த்திக் பிரபு said...

hi pls add my googlepages in your blog frends list or favorites

its a page for tamil ebooks , free downloads.

thanks for addding

url - http://gkpstar.googlepages.com/

ILA (a) இளா said...

பொணத்தோட நெத்தியில இருக்கிற காசையும் அமுக்கிட்டு போக நினைக்கிறவங்க தான் அரசியல்வாதிகள்.

சந்திப்பு said...

நன்றி வவ்வால் மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பொதுவாக அரசியல்வாதிகள் என்று குறிப்பதை விட மக்கள் விரோத அரசியல்வாதிகள் என்று குறிக்கலாம். மக்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் அல்லவா!

அதேபோல் இந்திய ஆட்சியாளர்கள் உலகவங்கி - உலக வர்த்தக அமைப்பில் இணைந்துள்ளதால் அவர்களது நலனைக் காத்திடவே முனைகின்றனர். குறிப்பாக ஆட்சியில் இருக்கும் கட்சிகள். அது காங்கிரஸ் - பா.ஜ.க. - தி.மு.க. - அதிமுக என எந்தவிதமான வித்தியாசமும் இவர்களிடம் இல்லை. இதுபோன்ற மலட்டு விதைகளால்தான் நம்முடைய இந்திய விவசாயம் தற்போது திவாலாகி வருகிறது. அப்புறம் என்ன அந்த நிலங்களை எல்லாம் ரியல் எஸ்ட்டேட் அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தாரை வார்த்துவிடலாம் அல்லவா!

எனவே இதுபோன்ற உலக வங்கி அடிமைகளுக்கு எதிராக விழிப்புடன் இருந்து போராட வேண்டியுள்ளது.

சந்திப்பு said...

நன்றி காத்திக் பிரபு. தங்களது தளத்தை என்னுடைய லிங்கில் உடனே இணைக்கிறேன். மேலும் தங்களது முயற்சி சிறப்பானது. தொடரட்டும். வெற்றிநடை போடுங்கள்.

சந்திப்பு said...

இளா மிகச் சரியாக குறிப்பிட்டீர்கள். நம்முடைய அரசியல்வாதிகள் எல்லாம் சாதாரண அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் கார்ப்பரேட் எஜமானர்களின் எடுபிடிகள். பத்திரிகையாளர் சாய்நாத் ஒரு விசயத்தை சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது.

அதாவது. சுனாமி பேரிடர் ஏற்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் மரணமடைந்த பின்னணியில். பல நாடுகள் கிட்டத்தட்ட 13 நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு - பொருளாதார பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில் - வாழ்வு சீரழிக்கப்பட்ட நிலையில் நம்முடைய சென்ஸ் செக்ஸ் குறியீட்டு எண் மட்டும் உயர்ந்த நிலையே நோக்கp சென்றுக் கொண்டே இருந்ததாம். இதைதான் நீங்கள் சொல்லும் பிணத்தின் மீது பார்வையை செலுத்தும் கழுகுகண் முதலாளித்துவம் என்பது. நன்றி இளா

Anonymous said...

மாகிகோ என்ற மகாராஷ்டிர விதை நிறுவனம் தமிழ் நாட்டிலும் விதைகளை விற்கிறது பெரும்பாலும் அவை விதை முளைப்பு திறன் அற்றவையாக இருக்கிறது ,

If so go to consumer court or relevant legal forum and claim
damages. If the seeds are certified to meet standards
complain with the certifying
authority. Such producers can be blacklisted and penalised for selling sub-standard seeds.

இதுபோன்ற மலட்டு விதைகளால்தான் நம்முடைய இந்திய விவசாயம் தற்போது திவாலாகி வருகிறது.

There is no மலட்டு விதை as such but some seeds can be of poor quality and may not germinate. Even hybrids do give some yield in the second generation.

அதேபோல் இந்திய ஆட்சியாளர்கள் உலகவங்கி - உலக வர்த்தக அமைப்பில் இணைந்துள்ளதால்
FYKI, china and Vietnam are members of WTO.

கார்த்திக் பிரபு said...

thanks for adding my page :)

Anonymous said...

அதாவது. சுனாமி பேரிடர் ஏற்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் மரணமடைந்த பின்னணியில். பல நாடுகள் கிட்டத்தட்ட 13 நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு - பொருளாதார பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில் - வாழ்வு சீரழிக்கப்பட்ட நிலையில் நம்முடைய சென்ஸ் செக்ஸ் குறியீட்டு எண் மட்டும் உயர்ந்த நிலையே நோக்கp சென்றுக் கொண்டே இருந்ததாம். இதைதான் நீங்கள் சொல்லும் பிணத்தின் மீது பார்வையை செலுத்தும் கழுகுகண் முதலாளித்துவம் என்பது.

If sensex goes up it only means that investors are optimistic.
Do you want Sensex to fall whenever there is a natural calamity like tsunami. Do you
want panic reactions everywhere
when there is a tsunami.Try to
understand some basics of economics and financial markets.

வவ்வால் said...

அனானி ,

படித்தவர்களே தங்களுக்கு ஒரு சேவையில் குறைபாடு என்று வரும் போது எத்தனை பேர் நுகர்வோர் நீதிமன்றம் போவார்கள். அப்படி இருக்க படிக்காத பாமர விவசாயிகள் அலைச்சளுக்கு ஆளாகணுமா?

தெளிவான சிந்தனையோடு தான் பேசுறிங்களானு சந்தேகமா இருக்கு! ஒரு வேளை வெளிநாட்டுக்காரார் ஆக இருப்பிங்க அதான் நம்ம ஊரு நீதிமன்றங்களின்(நுகர்வோர் நீதிமன்றமும் தான்) செயல்பாடு தெரியாம இருக்கிங்க!

சந்திப்பு said...

அனானி இது கொஞ்சம் அப்பாவித்தனமாகத் தெரியவில்லையா? மகாராஷ்டிராவிலும். ஆந்திராவிலும். பஞ்சாபிலும் என்ன நடக்கிறது. பணப் பயிரான பருத்தி விவசாயம் செய்தால் பணம் கொட்டும் என்று சொல்லித்தான் - விவசாயிகளை பாரம்பரிய விவசாயத்திலிருந்து திசை திருப்பினார்கள். தற்போது அந்த விவசாயிகள் பருத்தி அரசியலுக்கு தினந்தோறும் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி நீங்கள் பத்திரிகையில் பார்க்கவில்லையா? நமது ஆட்சியாளர்களும் காதை மூடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். இதுதான் உலகவங்கிக்கு அடிமையாகும் அடிமைத்தனம் என்பது. இதற்கெல்லாம் கோர்ட்டுக்கு போக கூடாது. ரோட்டுக்கதான் போகணும்.

ஹைபிரிட் விதை என்பதெல்லாம் சும்மா. புளுகுதான்... மேலும் நம்முடைய விவசாய முறையில் விதையை திரும்பத் திரும்ப பயன்படுத்தும் முறையிருந்தது. அதனை தற்போது பிடிங்கிக் கொண்ட பன்னாட்டு கார்ப்பரேட்டுகள். விதைக்காக அவர்களிடம் பிச்சை கேட்க தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. வியட்நாமும் - சீனாவும் - இந்தியாவும் பின்பற்றும் கொள்கைகள் ஒன்றா? நாம் நம்முடைய நாட்டிற்கு ஏற்பதான் கொள்கைகளை வகுக்க வேண்டும். அவர்களால் அந்த பகாசுரர்களால் மோத முடியும். நாம்!... கோழி குஞ்சு போல அமுக்கி விடுவான்... அதான்யா சொல்றாம்...

சந்திப்பு said...

நன்றி வவ்வால் மிகச் சரியாக குட்டியுள்ளீர்கள். அவர்கள் படித்த மேதைகள். அமெரிக்க பத்திரிகைகள் வாந்தியெடுப்பதை மட்டுமே இங்கு கக்குவார்கள்.

அடுத்து அனானி சுனாமி போன்ற பேரிடர் ஏற்படும் போது கூட அதனால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பல்வேறு கட்டமைப்புகளை முன்வைத்தே தங்களது பணத்தை கொட்டி சுதாடுகிறார்கள். அவர்களுக்கு மக்களை பற்றிய அக்கறையை விட பணப் பை மீதான அக்கைறதான் அதிகம். தங்களது பொருளாதார அறிவை உங்களது நன்பர்களுக்கு - மனிதாபிமானத்தோடு நடந்துக் கொள்ள அறிவுரை கூறுங்களேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த இடுகையின் சில பகுதி குமுதம் 12.12 தேதி இதழில் வெளிவந்திருக்கிறது என நினைக்கிறேன்..ஆனா சமூக சேவகன் என்று பிழையாக பெயர் இட்டிருக்கிறார்களோ என்றுசந்தேகம்.. நீங்கள் பார்த்தீர்களா?

சந்திப்பு said...

நன்றி முத்துலட்சுமி.

தாங்கள் கூறிய பிறகு. உடனடியாக குமுதத்தை எடுத்து புரட்டிப் பார்த்தபோது. அதே விஷயத்தை அதன் உயிர்நாடியான பிரச்சனையை மட்டும் எடுத்துவிட்டு (உலகமயம். அதன் விளைவு - நரசிம்மராவ் - வாஜ்பாய் - மன்மோகன் கொள்கைகளே இதற்கு காரணம்) என்ற விஷயங்களை மட்டும் எடிட் செய்து விட்டு (மறைத்துவிட்டு) குமுதம் (12.12.2007) 93ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளார்கள். இதில் அவர்கள் குறைந்தபட்சம் சந்திப்பு வலைப்பதிவில் இருந்துதான் எடுத்தோம் என்பதையாவது போட்டிருக்கனும் அதைச் செய்யவில்லை. பத்திரிகை தர்மம் என்பது என்பது இதுதானோ என்ற கேள்வி எழாமல் இல்லை? இருப்பினும் இந்த பிரச்சனையை பரந்த மக்கள் பகுதிக்கு கொண்டுச் சென்றதற்காக குமுதத்திற்கு நிச்சயம் நன்றி சொல்லியா ஆகவேண்டும். இனிமேல் சந்திப்புக்கு - சமூக சேவகன் என்ற புனைப் பெயரையும் கொடுத்தற்காக கூடுதல் நன்றியையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இது குறித்து நான் குமுதம் குழுமத்திற்கு தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் என்னுடைய கைப்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர். பிறகு தகவல் கொடுப்பதாக கூறியுள்ளனர். என்ன நடக்கிறது என்பதை என்னுடைய பதிவின் மூலமே தகவல் கொடுக்கிறேன். மீண்டும் நன்றி முத்துலட்சுமி