June 30, 2006

உலகின் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போரை நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதம் என்றால் என்ன? என்ற கேள்வி மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது. பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக சித்தரித்து அமெரிக்கா இசுலாமிய நாடுகளை பாடாத பாடு படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள பாதிக்கப்பட்ட விவாயிகளை சந்தித்து, அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். விதர்பாவில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 600 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல; ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா என இந்தியாவில் முக்கியமான விவசாய மாநிலங்களில் இது பெருவாரியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 5000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இது குறித்த விரிவான அலசலை நேற்றைய தினம் இரவு 10.30 மணிக்கு சி.என்.என்.ஐ.பி.என். தொலைகாட்சியும், என்.டி.வி.யும் வழங்கின.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தற்கொலை என்பது தலைப்புச் செய்திகளாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மீடியாக்கள் இந்த விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தாலும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை தினந்தோறும் பக்கம், பக்கமாக படத்தை போட்டு ஏதோ இந்தியாவில் எதிர் புரட்சி நடப்பதுபோல் சித்தரித்த பத்திரிகை - மீடியா உலகம், இந்திய விவசாயிகளின் தற்கொலையை கண்டு கொள்வதேயில்லை. இதுதான் இவர்களின் மீடியா தர்மம்.

சரி! இதற்கு என்ன காரணம், உலக வர்த்தக அமைப்பின் கட்டளையை ஏற்று இந்தியா முழுவதும் பணப் பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்ததே இந்த சோக நிலைக்கு இந்திய விவசாயிகளை தள்ளியுள்ளது. போல்கார்ட்டு என்றுச் சொல்லக்கூடிய பருத்திகளை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள், தற்போது தங்களது நிலத்தில் வேறு எந்த பயிரையும் விளைவிக்க முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். அது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைகள் கிடைக்கவில்லை. ஏன் அவர்கள் செலவிட்டதில் பாதி தொகை கூட கிடைக்காத சூழ்நிலையில் அவர்களது எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. இந்த சூழலில் அவர்களுக்கு தற்கொலையை தவிர இந்திய அரசும் - மாநில அரசும் வேறு மாற்று வழியை இதுவரை காட்டவில்லை.
மறுபுறம் இந்தியா உலகின் வல்லரசு நாடாக போகிறதாகவும், ஐ.நா.வில் நிரந்தர இடம் பெறப்போவதாகவும், அது அணு ஆயுதத்தில் வல்லமைப் படைக்கப்போவதாகவும் கூக்குரல் எழுப்பும் ஓநாய்களின் குரலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஓநாய்களின் சத்தம் அதிகமாக இருப்பதால், தற்கொலை செய்துக் கொள்ளும் இந்திய விவசாயிகளின் இறுதி முனுமுனுப்புகள் யார் காதிலும் விழுவதில்லை.
நாள்தோறும் தற்கொலை கணக்கை - புள்ளி விவரமாக வெளியிட்டு வரும் மகாராஷ்டிரத்தில் உள்ள நாக்பூர் இன்றைக்கு மேல்தட்டு மக்களின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. ஆம்! அங்குதான் சங்பரிவாரின் தலைமையமும் இருக்கிறது. என்.டி.டி.வி. நிருபர் காபி கபேவில் இருந்து ஒரு மனித பன்றியை பேட்டி கண்டபோது, அது கூறியது இந்த தற்கொலை சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று!

இவர்கள்தான் இந்தியாவை ஒளிமயமாக்கப்போவதாக கூறிக் கொண்டு கொழுப்பெடுத்து திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு உல்லாச விடுதிகளும், கேளிக்கை மையங்களும் இன்னும் பல உல்லாச விஷயங்களிலும் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் கொழுப்பெடுத்து தெரியும் மனித பன்றிகள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், சதையை மட்டும் போட்டுக் கொண்டு எதைச் சாதிக்கப்போகிறார்கள்!

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பயங்கரவாத சம்பவங்களில் நடைபெறும் கொலைகளை விட, மிக அதிகமான பேரை இந்தியாவில் கொன்று வருவது உலக வங்கியின், உலக வர்த்தக அமைப்புன், உலகமயமாக்கலின் கொள்கையே! எனவே உலகின் மிக அபாயகரமான பயங்கரவாத அமைப்பான உலக வர்த்தக அமைப்பை வீழ்த்தாமல் மக்களின் வாழ்க்கைக்கு விடிவு இல்லை.

14 comments:

இரா.சுகுமாரன் said...

///பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போரை நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதம் என்றால் என்ன? என்ற கேள்வி மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது. பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக சித்தரித்து அமெரிக்கா இசுலாமிய நாடுகளை பாடாத பாடு படுத்தி வருகிறது.///

ஒரு திருடன் திருடிட்டு ஓடினானம் மக்கள் திருடன் திருடன் அப்படின்னு அவன துரத்தினாங்க. முன்ன போன திருடனும் திருடன் திருடன் அப்படின்னு சொல்லிகிட்டே ஓடி அந்த கூட்டதோடயே ஓடி நல்லவன் போல நடிச்சானாம்.

அவன் தான் அமெரிக்கா.

திருடன் திருட்ட கண்டுபிடிக்க முயல்வது மக்களை ஏமாற்ற என்பது மக்களுக்கு தெரியும்.

அசுரன் said...

//இவர்கள்தான் இந்தியாவை ஒளிமயமாக்கப்போவதாக கூறிக் கொண்டு கொழுப்பெடுத்து திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு உல்லாச விடுதிகளும், கேளிக்கை மையங்களும் இன்னும் பல உல்லாச விஷயங்களிலும் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் கொழுப்பெடுத்து தெரியும் மனித பன்றிகள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், சதையை மட்டும் போட்டுக் கொண்டு எதைச் சாதிக்கப்போகிறார்கள்!

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பயங்கரவாத சம்பவங்களில் நடைபெறும் கொலைகளை விட, மிக அதிகமான பேரை இந்தியாவில் கொன்று வருவது உலக வங்கியின், உலக வர்த்தக அமைப்புன், உலகமயமாக்கலின் கொள்கையே! எனவே உலகின் மிக அபாயகரமான பயங்கரவாத அமைப்பான உலக வர்த்தக அமைப்பை வீழ்த்தாமல் மக்களின் வாழ்க்கைக்கு விடிவு இல்லை.//

சிறப்பான பதிவு. கொழுப்பெடுத்து திரியும் மனித பன்றிகள் சமூக அழுத்தத்தின் வெடிச் சிதறலில் தடித்த தங்களது மேல் ஓடுகள் உருகி வெளிவருவார்கள் என்று நம்புவோம்.

இங்கே சில பார்ப்பன இந்துத்துவ பயங்கரவாதிகள் மூன்று கை அரக்கன் என்று சரம் சரமாக ரீல் விட்டுக் கொண்டிருக்கும் பொழுது உண்மையான உலக பயங்கரவாதி பற்றி எழுதியுள்ளேர்கள். காலத்தின் தேவையை உணர்ந்த கட்டுரை. அப்படியே அந்த பயங்கரவாதத்தை முறியடிக்கும் வழி பற்றியும் ஒரு சின்ன hint வைத்து கட்டுரையை முடித்திருந்தால் படிக்கும் மக்கள் அதை பரிசீலிக்க வாய்ப்புள்ளது. அதை விடுத்து வெறுமே பிரச்சனையை மட்டும் பிரச்சாரம் செய்வது அவர்களை பின்வருமாறு சொல்ல வைக்கும்:
"நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான், ஆனா ஒன்னும் செய்ய முடியாதே." பிறகு அந்த மக்கள் இந்த பயங்கரவாதத்துக்கு பழக்க்மாகிவிடுவார்கள்.

அப்புறம், தங்களை ஆறு விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வாய்ப்பு இருந்தால் ஆறு போடவும்.

வாழ்த்துக்கள்,
அசுரன்.

மருதநாயகம் said...

மிக யதார்த்தனமான ஒரு கட்டுரை

Muthu said...

//என்.டி.டி.வி. நிருபர் காபி கபேவில் இருந்து ஒரு மனித பன்றியை பேட்டி கண்டபோது, அது கூறியது இந்த தற்கொலை சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று!//

சந்திப்பு,

ரொம்ப கோபமாக இருக்கீங்களா? கடுமை அதிகமாக உள்ளதே

சந்திப்பு said...

நன்றி சுகுமாறன். நீங்கள் கூறியிருப்பது சரிதான். அமெரிக்கா என்ற உலக கொலைக்காரன் மற்றவர்கள் மீதெல்லாம் இந்த பழியை சுமத்திவிட்டு தப்பித்துக் கொண்டே இருக்கிறான். மறுபுறம் அவனுக்கான சமாதியையும் அவன் எழுப்பிக் கொண்டே இருக்கிறான்.

போனபர்ட் மிக்க நன்றி: ஆம் பிரச்சினையை மட்டும் கூறிவிட்டு தப்பிப்பது ஏற்கத்தக்கதல்ல. சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். உலகமயத்துக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை நாம் பிரான்சில் கண்டோம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா என்றாலே வேப்பம் காயாக கசக்கிறது. ஒரு இடதுசாரி திருப்புமுனை அங்கே ஏற்பட்டுள்ளது. ஈராக் - ஈரான் விஷத்தில் அமெரிக்கா உலகம் முழுவதும் தனிமைப்பட்டு நிற்கிறது. இந்தியாவிலும் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் மக்கள் இடதுசாரிகளுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்து உள்ளனர். இது போராட்ட சக்தியாக - மக்கள் எழுச்சியாக உருவாகும். அதனை உருவாக்குவது நம் பொறுப்பு. அந்த அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிiந்து இந்த உலகமயமாக்கல் என்ற பேரரக்கனை எதிர்ப்போம்.

நன்றி மருத நாயகம்.

முத்து! கோபம் உலகமயத்தின் மீது. இதையெல்லாம் தெரிந்துக்கொள்ளாத புனிதர்களாக இருப்பதும், உலகிற்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் ஏதோ தாங்களே பெரும் சேவகம் செய்வது போல் ஒரு பாவ்லா காட்டுவதும்தான் அவர்கள் மீது அத்தகைய வார்த்தை பிரயோகிக்க வேண்டி வந்தது.

Anonymous said...

எனவே உலகின் மிக அபாயகரமான பயங்கரவாத அமைப்பான உலக வர்த்தக அமைப்பை வீழ்த்தாமல் மக்களின் வாழ்க்கைக்கு விடிவு இல்லை.

Go and tell this in Tirupur and
Ludhiana.You will be kicked out.
Marx favored free trade.liberalisation of
trade in textiles has made
all the difference in
those cities.China is
for WTO and liberalisation.
The left in India never tells
this.Why China is still with
WTO.Dont blame WTO for all the
ills of farmers in India.

சந்திப்பு said...

நன்றி சுகுமாறன். நீங்கள் கூறியிருப்பது சரிதான். அமெரிக்கா என்ற உலக கொலைக்காரன் மற்றவர்கள் மீதெல்லாம் இந்த பழியை சுமத்திவிட்டு தப்பித்துக் கொண்டே இருக்கிறான். மறுபுறம் அவனுக்கான சமாதியையும் அவன் எழுப்பிக் கொண்டே இருக்கிறான்.

போனபர்ட் மிக்க நன்றி: ஆம் பிரச்சினையை மட்டும் கூறிவிட்டு தப்பிப்பது ஏற்கத்தக்கதல்ல. சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். உலகமயத்துக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை நாம் பிரான்சில் கண்டோம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா என்றாலே வேப்பம் காயாக கசக்கிறது. ஒரு இடதுசாரி திருப்புமுனை அங்கே ஏற்பட்டுள்ளது. ஈராக் - ஈரான் விஷத்தில் அமெரிக்கா உலகம் முழுவதும் தனிமைப்பட்டு நிற்கிறது. இந்தியாவிலும் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் மக்கள் இடதுசாரிகளுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்து உள்ளனர். இது போராட்ட சக்தியாக - மக்கள் எழுச்சியாக உருவாகும். அதனை உருவாக்குவது நம் பொறுப்பு. அந்த அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிiந்து இந்த உலகமயமாக்கல் என்ற பேரரக்கனை எதிர்ப்போம்.

நன்றி மருத நாயகம்.

முத்து! கோபம் உலகமயத்தின் மீது. இதையெல்லாம் தெரிந்துக்கொள்ளாத புனிதர்களாக இருப்பதும், உலகிற்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் ஏதோ தாங்களே பெரும் சேவகம் செய்வது போல் ஒரு பாவ்லா காட்டுவதும்தான் அவர்கள் மீது அத்தகைய வார்த்தை பிரயோகிக்க வேண்டி வந்தது.

அசுரன் said...

ஒன்றினைந்து இந்த உலகமயமாக்கல் என்ற பேரரக்கனை எதிர்ப்போம்.

வாழ்த்துக்கள்,
அசுரன்.

சீனு said...

//மறுபுறம் இந்தியா உலகின் வல்லரசு நாடாக போகிறதாகவும், ஐ.நா.வில் நிரந்தர இடம் பெறப்போவதாகவும்...//

அடுத்த மனிதன் பசியால் செத்துக்கொண்டிருக்கும் பொழுது நாம் வல்லரசு என்று அறிவித்துக்கொள்வது என்பது "F**king for Virginity".

சந்திப்பு said...

அனானி உலகில் சுதந்திர வர்த்தகம் தேவைதான். ஆனால் அது அடுத்த நாட்டையும், அடுத்த நாட்டின் சொத்தையும் கொள்ளையடிப்பது போல் இருக்க கூடாது. உலகமய ஆதரவாளர்கள் வழக்கமாக கூறும் சீனாவும் இதில் பங்கெடுத்துள்ளதே என்ற கூற்றுதான் உங்களிடமும் வெளிப்பட்டுள்ளது. சீனா விஷயத்திலும் என்ன நடைபெறுகிறது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகள், கம்பளிகள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் குவிந்து கிடக்கிறது. ஆனால் அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா மறுக்கிறது. இப்போது சொல்லுங்கள் உங்களது சுதந்திர வர்த்தகம் நடைபெறுகிறதா? என்று? இன்னும் இந்தியாவைப் போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் முதலுக்கே மோசம் என்பார்களே அதுதான் நிலைமை. அங்கே செல்லுபடியாத பொருட்களையெல்லாம் நம் தலையில் கட்டுகிறார்கள். சமீபத்தில் கோதுமை இறக்குமதி இதற்கு உதாரணம். அதே சமயம் இந்தியாவின் குட்டைப் பாவடைக்கு தடை. கேட்டால் தரம்!

Anonymous said...

You are confused and know little about WTO.Except when there is
dumping no country can restrict textile imports from other countries.If China resorts to
dumping that becomes an issue.
Still China is using the free trade in textiles effectively.
For countries like Vietnam and
Bangla Desh textiles exports are
important in terms of export and
jobs.Quality is an important aspect in trade.India exports so much and if some consignments are below quality the problem is with
India.China, vietnam and all the former east european countries are
for WTO and trade under WTO rules.
Think why they are willing to be
part of WTO than remain outside.
Dont blame WTO for agrarian crisis
in India. There are other factors
as well.Either you read and understand the issue or dont write
like this.Rhetoric is no substitute
for knowledge.

அசுரன் said...

WTO-அனானி அவர்களே,

நிரம்ப கொதித்து போயிருக்கிறேர்கள் கொழுப்பு கறைந்து விடப் போகிறது.

உங்களுக்கு WTO பற்றியும், Agrarian crisis பற்றியும் நிரம்பத் தெரியும் என்றால் எமக்கு எதிர் பதிவு போட வேண்டியதுதானே...

அல்லது குறைந்த பட்சம் ஆதாரப்பூர்வமாக இங்கு பின்னூட்டத்திலேயே பதில் சொல்லலாமே...

//Rhetoric is no substitute for knowledge.//

Ofcourse true...But the above mentioned is that the problem of people who strive for knowledge but definetly not the problem for you.....

technology, quality, profit, foreign exchange....I feel these are the rhetorics of you people..

You have no worry about society, country, future of the world and finally your own kids.....

சந்திப்பு is correct in saying: "கொழுப்பெடுத்து தெரியும் மனித பன்றிகள்"

நன்றி,
அசுரன்

enRenRum-anbudan.BALA said...

சந்திப்பு,
நல்ல பதிவு, தங்கள் ஆதங்கம் மிக மிக நியாமானதே.

WTO-வை அழிப்பது தான் தீர்வா என்பது தெளிவாக இல்லை.

விவசாயிகளின் பிரச்சினை தீர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது !