November 30, 2005


உதிரும் தாமரைசன்னியாசி உமா பாரதி பா.ஜ.க.வின் °டண்ட் மா°டர் என்பதை நாம் அறிவோம்! மத்திய பிரதேச மாநிலம் ஒரு வருடத்தில் மூன்று முதல்வர்களை கண்டுள்ளது; உமாபாரதி, பாபுலால் கவுர், சிவராஜ் சிங் சவுகான். “உமா பாரதி நான் சன்னியாசியாக இருந்தாலும், நானும் மனிதன்தான்” எனக் கூறியுள்ளார். அவரது பதவியாசையை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பா.ஜ.க. கட்டுப்பாடான கட்சி, தூய்மையான கட்சி, சிறந்த நடத்தைகளை கொண்ட கட்சி என்று நீண்ட காலமாக கூறிவந்தாலும், அதனுடைய ஆதரவாளர்களே இன்று அதை மறுப்பார்கள்! பா.ஜ.க.வும் சுயநல, ஊழல், ஜனநாயகமற்ற, தலைமைக்கு கட்டுப்படாத தொண்டர்களைக் கொண்ட கட்சி என்பதை நாடே அறிந்து கொண்டது.

நானே உண்மையான பா.ஜ.க. என்று உமா பாரதி கூறியுள்ளார்; ஆடிக்கொண்டிருக்கும் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அத்வானி விழிபிதுங்கி நிற்கிறார். ரத யாத்திரை மூலம் மதக்கலரவரங்களை தூண்டுவதில் புகழ்பெற்ற அத்வானி “ராம்-ரொட்டி யாத்திரை” எங்களுடைய அதிகாரப்பூர்வமான யாத்திரையல்ல என்று அறிவிக்கிறார். அவருக்கு தெரியும் இது வெறும் “பதவி பித்து யாத்திரை” என்று. இந்தியா ஒளிர்கிறது என்று கூறிய உமாபாரதிக்கு “ரொட்டி”கூட கிடைக்கவில்லை என்ற நிதர்சனத்திற்கு இப்போதுதான் வந்திருக்கிறார்!

பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் கட்டுக் கட்டாக பணம் பெற்றபோதே அவர் மீது எந்தவிதமான சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாகத்தான் வாஜ்பாய் ஆட்சி இருந்தது. தற்போது உமா பாரதி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறுவதெல்லாம் பா.ஜ.க.வின் நாடகமே தவிர வேறல்ல!

சமீபத்தில் ஆர்.எ°.எ°. தலைவர் சுதர்சன் “இந்துப் பெண்கள்” அதிகமான பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மு°லீம் மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். ஒரு வேளை ஆர்.எ°.எ°.க்கு உமா பாரதி போன்ற பெண்கள் சன்னியாசிகளாக இருப்பது வருத்தமாகக் கூட இருக்கலாம். ஆர்.எ°.எ°.சில் பெண்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வதில்லை என்பதில் இருந்தே அது எந்தளவிற்கு ஆணாதிக்க அமைப்பு என்பது புரியும்.


இதே உமா பாரதி ஒரு முறை பகிரங்கமாக “பா.ஜ.க. உயர் சாதியினர் கட்சி” என்று குற்றம் சாட்டினர். இந்துத்துவா என்ற பெயரில் வர்ணாசிர கொடுமையை மீண்டும் நிலை நாட்டுவதற்கு துடித்துக் கொண்டு இருக்கும் அமைப்பே பா.ஜ.க. எனவே இவர்களுக்கு பெண்கள் முதல்வர் போன்ற உயர் பொறுப்பு வகிப்பது எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும்!

“இந்துத்துவா இந்துக்களின் தத்துவம்” என்று கூறிக்கொள்ளும் ஆர்.எ°.எ°. - பா.ஜ.க. - வி.எச்.பி. கும்பல் ஹரியானாவில் ஐந்து தலித்துக்களை பசுமாட்டை கொன்றார்கள் என்று கூறி கல்லால் அடித்தே கொன்றது. இதுதான் இவர்களின் இந்துத்துவா - உண்மையில் இந்துத்துவா என்றால் பிராமண மேலாதிக்கம் என்பதைத் தவிர வேறென்ன?

தாமரையின் இதழ்கள் உதிர ஆரம்பித்து விட்டதன் அடையாளமே உமா பாரதி - அத்வானி - வெங்கய்யா - வாஜ்பாய் மோதல்களின் வெளிப்பாடு. பாசிச சக்திகளின் கருத்தியலுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்துவதன் மூலம், இவர்களை இந்திய மண்ணில் இருந்து வேறோடு வீழ்த்திட இதுவே தருணம்!

நாமனைவரும் இந்திய மக்கள் - நமது அண்டை நாடுகளில் இருப்போர் நமது சகோதரர்கள் உலக உழைக்கும் மக்களை ஒன்றினைப்போம் பாசிச சக்திகளை - கருத்தாக்கத்தை வீழ்த்துவோம்!

1 comment:

V. Meenakshisundaram said...

Yes! All this game is only a Drama. These are all in BJP Communal politics.

Thanks